என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "dalit Women"
- எங்களை தண்ணீர் கூட எடுக்க விடாமல் தடுக்கிறார்கள் சார் என்று அப்பெண் அந்த வீடியோவில் ஆதங்கப்படுகிறார்.
- அவர்களின் திருமணத்திற்கு எங்களை அழைப்பார்கள், ஆனால் குப்பை தொட்டி அருகில் எங்களை அமர சொல்வார்கள்.
இந்திய ஒற்றுமை நீதி பயணத்தில் மத்தியப்பிரதேச மாநிலம் புந்தேல்கண்டில் உள்ள பட்டியலின பெண்களிடம் காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி உரையாடிய பழைய வீடியோ வைரலாகியுள்ளது.
அந்த வீடியோவில், செருப்பு இல்லாமல் நாங்கள் கிராமத்திற்குள் நுழைந்தால் எங்களை 'கெட்ட சகுணம்' என கூறுவார்கள். செருப்பு இல்லாமல் ஏன் எங்கள் கிராமத்திற்குள் நுழைகிறீர்கள்?' என கேட்பார்கள் என ஒரு பெண் கூறுகிறார்.
அதற்கு, உங்கள் சமூகத்தில் மொத்தம் எத்தனை பேர்? என்று ராகுல்காந்தி கேட்கிறார். மொத்தம் 4 குடும்பங்கள் உள்ளன என அப்பெண் பதில் அளிக்கிறார்.
மேலும், தண்ணீர் இறைக்க கிணற்றுக்கு சென்றால் கூட மணிக்கணக்கில் காத்திருக்க சொல்வார்கள். தூரமா சென்று உட்கார் என துரத்துவார்கள் எங்களை தண்ணீர் கூட எடுக்க விடாமல் தடுக்கிறார்கள் சார் என்று அப்பெண் அந்த வீடியோவில் ஆதங்கப்படுகிறார்.
அதற்கு, யார் உங்களை இப்படி செய்கிறார்கள்? என்று ராகுல்காந்தி கேள்வி கேட்க, உயர்சாதியை சேர்ந்த மக்கள் தான். பிராமணர்கள், தாகூர், அகிர் சமூகத்தினர் தான் எங்கு சென்றாலும் எங்களை தடுப்பார்கள்.
அவர்களின் திருமணத்திற்கு எங்களை அழைப்பார்கள், ஆனால் குப்பை தொட்டி அருகில் எங்களை அமர சொல்வார்கள். இல்லையென்றால் கால்வாய் அருகே அமர சொல்வார்கள். சேரில் அமர்ந்து சாப்பிட்டால் எங்களை அங்கிருந்து விரட்டி அடிப்பார்கள். எப்படி நாங்கள் சாப்பிடுவது சார். எங்கள் இதயம் முழுவதும் துக்கம் தான் நிறைந்துள்ளது
இந்த வலிகளை எல்லாம் நாங்கள் தாங்கி கொண்டோம். ஆனால் எங்கள் குழந்தைகளால் தாங்க முடியாது. எல்லா திசைகளிலும் எங்களுக்கு பிரச்சனைகள் உள்ளது. இது சுதந்திர நாடு என சொல்கிறார்கள். ஆனால் இன்னும் நாங்கள் மோசமான நிலையில் தான் உள்ளோம். அனைத்து வகையிலும் மிகவும் மோசமான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறோம்.
நீங்கள் என்னை செருப்பு அணிய அனுமதித்தால் அதை அணிவேன்... இல்லையென்றால் கையிலேயே வைத்திருக்கிறேன் என அப்பெண் சொல்ல, செருப்பை அணிந்து கொள்ளுங்கள் என்று அப்பெண்ணுக்கு ராகுல்காந்தி செருப்பு அணிவிக்கிறார்.
இறுதியில் எங்கள் பிரச்சினைகளை நீங்கள் தான் தீர்க்க வேண்டும் என்று அப்பெண் ராகுல்காந்தியிடம் கோரிக்கை வைக்கிறார்.
வட மாநிலங்களில் உள்ள பட்டியலின மக்களின் மோசமான நிலையை இந்த வீடியோ நமக்கு எடுத்து காட்டுகிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்