என் மலர்
நீங்கள் தேடியது "Dalits"
- லேட்டரல் என்ட்ரி முறையில் இதுவரை 63 பேர் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர்.
- லேட்டரல் என்ட்ரி முறைக்கு ராகுல்காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசின் இணைச் செயலாளர்கள், இயக்குநர்கள், துணைச் செயலாளர்கள் போன்ற முக்கிய பதவிகளை ஐஏஎஸ், ஐபிஎஸ் போன்ற யுபிஎஸ்சியில் தேர்ச்சி பெற்றவர்களையும், குரூப் ஏ சேவை அதிகாரிகள் மூலமே நிரப்பப்பட்டு வந்தன.
ஆனால் கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் லேட்டரல் என்ட்ரி என்ற அரசுப் பணியில் அல்லாத துறை சார்ந்த வல்லுநர்களை கொண்டு மத்திய அமைச்சகத்தின் முக்கிய பதவிகளில் நியமனம் செய்யும் முறையை பாஜக அரசு தொடங்கியது. இந்தத் திட்டத்தில் இதுவரை 63 பேர் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர்.
இந்நிலையில், லேட்டரல் என்ட்ரி முறையில் மத்திய அமைச்சகங்களில் காலியாகவுள்ள 10 இணைச் செயலாளர்கள் மற்றும் 35 இயக்குநர்கள் / துணைச் செயலாளர்கள் பதவிகளை நிரப்புவதற்கான விளம்பரத்தை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டது.
மத்திய அரசின் இந்த அறிவிப்புக்கு மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அவரது எக்ஸ் பதிவில், "லேட்டரல் என்ட்ரி என்பது தலித், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் ஆதிவாசிகள் மீதான தாக்குதல் ஆகும். பாஜகவின் திரிக்கப்பட்ட ராம ராஜ்ஜியம், அரசியலமைப்பை அழிக்கவும், தாழ்த்தப்பட்டோரிடம் இருந்து இடஒதுக்கீட்டை பறிக்கவும் முயல்கிறது" என பதிவிட்டுள்ளார்.
- தினமுன் சமூக நீதி பேசும் தமிழ்நாட்டில் தினமும் தலித்துகளுக்கு எதிரான வன்முறைகளும் தொடர்கின்றன.
- இன்றளவும் சாதிய ஏற்றத் தாழ்வுகள் உள்ளன, சமூகநீதியை பாதுகாக்க வள்ளலாரை பின்பற்ற வேண்டும்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் நடைபெற்ற வள்ளலார் அறக்கட்டளை நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்றார்.
நிகழ்ச்சிக்கு பிறகு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியதாவது:-
60 ஆண்டுகளாக இரவும் பகலும் சமூக நீதி பேசும் தமிழ்நாட்டில் தொடர்ந்து தலித்துகள் ஒதுக்கப்படுகிறார்கள்.
தினமும் சமூக நீதி பேசும் தமிழ்நாட்டில், தினமும் தலித்துகளுக்கு எதிரான வன்முறைகளும் தொடர்கின்றன.
இன்றளவும் சாதிய ஏற்றத் தாழ்வுகள் உள்ளன, சமூகநீதியை பாதுகாக்க வள்ளலாரை பின்பற்ற வேண்டும்.
வள்ளலார் சனாதன தர்மத்தை மீட்டுள்ளார். ஆங்கிலேயர் காலத்தில் ஆங்கில மொழி மேம்படுத்தப்பட்டது, சமஸ்கிருதத்தை அழிக்கப் பார்த்தனர்- வள்ளலார் அதனை மீட்டார்.
தலித்துகள் தொடர்ந்து ஒடுக்கப்படுவது எனக்கு வலியை தருகிறது.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
இத்தகைய கொடூர செயல்களில் ஈடுபட்ட அந்த மனித மிருகங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் குரல் கொடுத்து வருகின்றனர்.
இந்தநிலையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் கூறி இருப்பதாவது:-
மராட்டிய மாநிலம் ஜல்கோன் மாவட்டத்தில் 2 தலித் சிறுவர்கள், ஆடையின்றி ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டு தாக்கப்பட்டுள்ளனர். அவர்கள் செய்த தவறு, மற்றொரு சாதியினருக்கு சொந்தமான கிணற்றில் குளித்ததுதான்.
ஆர்.எஸ்.எஸ்., பா.ஜனதாவின் மனுதர்மம் பரப்பிய இத்தகைய நச்சுத்தன்மை நிறைந்த வெறுப்புணர்வு அரசியலை நாம் எதிர்க்காவிட்டால், வரலாறு நம்மை மன்னிக்காது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார். #RahulGandhi #Dalit Boys
கர்நாடக மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தல் பிரசாரம் இன்று மாலையுடன் நிறைவு பெறுகிறது. பா.ஜ.க. சார்பில் இன்று 23 தலைவர்கள் இறுதிக்கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் கர்நாடக பா.ஜ.க.வின் எஸ்.டி., எஸ்டி, ஓ.பி.சி. மற்றும் ஸ்லம் மோர்ச்சா தொண்டர்களிடையே நமோ ஆப் வாயிலாக மோடி உரையாற்றினார். அப்போது காங்கிரஸ் கட்சியை அவர் தாறுமாறாக விமர்சித்தார்.

பல்வேறு திட்டங்களை நடைமுறைப்படுத்துவதன் மூலம் அம்பேத்கரின் கனவை நிறைவேற்ற பா.ஜ.க. முயற்சி செய்கிறது. சமூக நீதி மற்றும் சமத்துவத்தை உறுதி செய்ய பா.ஜ.க. அரசு தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளது’ என மோடி பேசினார். #karnatakaelection2018 #Modi