search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Dam projects"

    • நீர் வழிப்பாதையிலுள்ள ஓடைகளில், புதிய குளம், குட்டைகள் அமைக்க வேண்டும்.
    • அனைவருக்கும் உடனடியாக மின் இணைப்பு வழங்க வேண்டும்.

    உடுமலை:

    உடுமலை அருகேயுள்ள கரட்டுமடத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க ஒன்றிய மாநாடு நடந்தது. ஒன்றிய தலைவர் ராஜகோபால் தலைமை வகித்தார். மாவட்டத்தலைவர் மதுசூதனன், மாவட்டச்செயலாளர் குமார், ஒன்றியச்செயலாளர் பால தண்டபாணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.இதில், ஆனைமலையாறு- நல்லாறு அணை திட்டங்களை நிறைவேற்றி, பி.ஏ.பி., பாசன திட்டத்தை முழுமைப்படுத்த வேண்டும்.

    தென்னை விவசாயிகள் பாதிக்கப்படுவதை தடுக்க, கொப்பரை கிலோ ரூ.150க்கும், பச்சை தேங்காய், கிலோ ரூ.50க்கும் கொள்முதல் செய்ய வேண்டும். கூட்டுறவு சங்கங்கள் வழியாக மாட்டுப்பால் ரூ.42க்கும், எருமைப்பால் ரூ.50க்கும் கொள்முதல் செய்யவும், தக்காளி உள்ளிட்ட காய்கறிகளுக்கு உரிய விலை கிடைக்கவும், பல மடங்கு உயர்ந்துள்ள உர விலையை கட்டுப்படுத்தவும், நீர் வழிப்பாதையிலுள்ள ஓடைகளில், புதிய குளம், குட்டைகள் அமைக்க வேண்டும்.

    உடுமலை தினசரி மார்க்கெட்டில் விவசாயிகள் கொண்டு வரும் காய்கறிகளுக்கு இட வசதியும், வாகனங்கள் நிறுத்தவும் ஆடு, மாடு சந்தை கூடுவதற்கான இடவசதியும் சுங்கம், நுழைவு வரியை வரைமுறைப்படுத்த வேண்டும்.விவசாய மின் இணைப்பு கோரி விண்ணப்பித்துள்ள அனைவருக்கும் உடனடியாக மின் இணைப்பு வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    ×