என் மலர்
முகப்பு » dangerous place for women
நீங்கள் தேடியது "dangerous place for women"
பெண்களுக்கு மிகவும் ஆபத்து நிறைந்த நாடுகள் பட்டியலில் இந்தியா முதலிடத்தில் இருப்பதாக வெளியிடப்பட்ட ஆய்வறிக்கைக்கு தேசிய பெண்கள ஆணையம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. #NationalCommissionforWomen
புதுடெல்லி :
உலக அளவில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்து வரும் நிலையில், பாலியல் ரீதியாக பெண்களுக்கு ஆபத்தான நாடுகள் குறித்து 550 பேரை உள்ளடக்கிய உலகளாவிய வல்லுநர்கள் குழு கருத்துக்கணிப்பு ஒன்றை நடத்தியது.
இந்த கருத்துக்கணிப்பு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டுள்ளன. இதில் உலகிலேயே பெண்களுக்கு மிகவும் ஆபத்தான நாடாக இந்தியா பட்டியலிடப்பட்டுள்ளது. பெண்களுக்கு மிகவும் ஆபத்தான முதல் 10 நாடுகளில் இந்தியா முதலிடத்தில் உள்ளது.
போரினால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள ஆப்கானிஸ்தான் இரண்டாம் இடத்தில் உள்ளது. சிரியாவும் அமெரிக்காவும் மூன்றாமிடத்தில் உள்ளன. சோமாலியா, சவுதி அரேபியா அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.
இந்த ஆய்வு குறித்து தேசிய பெண்கள் ஆணையத்தின் தலைவர் ரேகா ஷர்மா பேசுகையில், 'இந்தியாவில் உள்ள பெண்களுக்கு அவர்களின் உரிமைகள், செயல்முறை மற்றும் சட்டப்படி எவ்வாறு பிரச்சனைகளை கையாள வேண்டும் என்பது குறித்து நன்றாக தெரியும். இந்தியாவிற்கு அடுத்து வரிசைப்படுத்தப்பட்டுள்ள நாடுகளில் சிலவற்றில் பெண்கள் பொது இடங்களில் பேச கூட தடை விதிக்கப்பட்டுள்ளது. பெண்கள் மற்றும் சிறுமிகளிடையே தேசிய மற்றும் பெண்கள் ஆணையம், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் மீடியா வாயிலாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது' என அவர் கூறினார்.
இந்த கருத்துக்கணிப்பின் முடிவு பலரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து சமூக ஊடகங்களில் கருத்துக்கள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. #NationalCommissionforWomen
உலக அளவில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்து வரும் நிலையில், பாலியல் ரீதியாக பெண்களுக்கு ஆபத்தான நாடுகள் குறித்து 550 பேரை உள்ளடக்கிய உலகளாவிய வல்லுநர்கள் குழு கருத்துக்கணிப்பு ஒன்றை நடத்தியது.
இந்த கருத்துக்கணிப்பு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டுள்ளன. இதில் உலகிலேயே பெண்களுக்கு மிகவும் ஆபத்தான நாடாக இந்தியா பட்டியலிடப்பட்டுள்ளது. பெண்களுக்கு மிகவும் ஆபத்தான முதல் 10 நாடுகளில் இந்தியா முதலிடத்தில் உள்ளது.
போரினால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள ஆப்கானிஸ்தான் இரண்டாம் இடத்தில் உள்ளது. சிரியாவும் அமெரிக்காவும் மூன்றாமிடத்தில் உள்ளன. சோமாலியா, சவுதி அரேபியா அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.
இந்நிலையில், கருத்துக்கணிப்பில் இந்தியா முதலிடம் உள்ளதாக அறிவிக்கப்பட்டதை ஏற்றுக்கொள்ள முடியாது என தேசிய பெண்கள் ஆணையம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது குறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில், ஆணையம் இந்த ஆய்வை ஏற்க மறுக்கிறது. ஏனென்றால் இந்தியா மிகப்பெரிய நாடு. இங்கு 1.3 பில்லியன் மக்கள் தொகை உள்ளது. ஆனால் குறிபிட்ட சிலரை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட ஆய்வு மொத்த நாட்டிற்கும் பொருந்தாது எனக் குறிப்பிட்டிருந்தது.
இந்த கருத்துக்கணிப்பின் முடிவு பலரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து சமூக ஊடகங்களில் கருத்துக்கள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. #NationalCommissionforWomen
×
X