என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Dayalu Ammal"
- தயாளு அம்மாளுக்கு நேற்று திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.
- தயாளு அம்மாள் டாக்டர்களின் தொடர் கண்காணிப்பில் சிகிச்சை பெற்று வருகிறார். தற்போது அவரது உடல் நிலை தேறி வருகிறது.
சென்னை:
கருணாநிதியின் மனைவியும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் தாயாருமான தயாளு அம்மாள் (வயது 90) வயது முதிர்வு காரணமாக சென்னை கோபாலபுரம் இல்லத்தில் வசித்து வருகிறார். கடந்த 9-ந் தேதி அன்று அவருடைய 90 வது பிறந்த நாளை குடும்பத்தினர் சிறப்பாக கொண்டாடினார்கள்.
இந்த நிலையில் தயாளு அம்மாளுக்கு நேற்று திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. சாப்பிட்ட உணவு ஒவ்வாமை காரணமாக வயிற்றுப்போக்கு ஏற்பட்டது.
இதையடுத்து அவர் சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார். தனது தாயார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட தகவல் அறிந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆஸ்பத்திரிக்கு சென்று அவரது உடல்நலம் குறித்து டாக்டர்களிடம் கேட்டறிந்தார். தயாளு அம்மாள் டாக்டர்களின் தொடர் கண்காணிப்பில் சிகிச்சை பெற்று வருகிறார். தற்போது அவரது உடல் நிலை தேறி வருகிறது.
- தாயாருக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.
- உணவு ஒவ்வாமையால் அவரது உடல்நலம் பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை:
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் தாயார் தயாளு அம்மாள் மருத்துவமனையில் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உணவு ஒவ்வாமையால் அவரது உடல்நலம் பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாயார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதையடுதது, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மருத்துவமனைக்கு சென்றார். அங்கு தாயாரிடம் நலம் விசாரித்த அவர், தாயாருக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.
- கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள் கோபாலபுரம் வீட்டில் வசித்து வருகிறார்.
- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மு.க.அழகிரி இருவரும் கோபாலபுரம் வீட்டில் சுமார் 1 மணி நேரம் பேசிக் கொண்டிருந்தனர்.
சென்னை:
மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள் (வயது 90) கோபாலபுரம் வீட்டில் வசித்து வருகிறார்.
வயது முதிர்வு காரணமாக வீட்டிலேயே இருக்கும் அவரை அவ்வப்போது அவரது மகன்களான மு.க.அழகிரி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மு.க.தமிழரசு ஆகியோர் தனித்தனியாக நேரம் கிடைக்கும்போது வந்து பார்த்து செல்வது வழக்கம்.
இந்தநிலையில் இன்று தயாளு அம்மாளுக்கு 90-வது பிறந்தநாள் என்பதால் கோபாலபுரம் வீட்டில் குடும்பத்தினர் அனைவரும் ஒன்று சேர்ந்து பிறந்தநாளை கொண்டாடினார்கள்.
இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அவரது அண்ணன் மு.க.அழகிரி, தம்பி மு.க. தமிழரசு, செல்வி, கனிமொழி, தயாநிதிமாறன், அமிர்தம் ஆகியோர் குடும்பத்துடன் பங்கேற்றனர்.
இவர்களுடன் அமைச்சர் உதயநிதி, நடிகர் அருள்நிதி ஆகியோரும் கலந்து கொண்டனர்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மு.க.அழகிரி இருவரும் கோபாலபுரம் வீட்டில் சுமார் 1 மணி நேரம் பேசிக் கொண்டிருந்தனர்.
- முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் தாயார் தயாளு அம்மாளுக்கு முதுமை காரணமாக கடந்த 3-ந் தேதி உடல்நலக்குறைவு ஏற்பட்டது.
- ஆயிரம் விளக்கு கிரீம்ஸ் ரோட்டில் உள்ள அப்பல்லோ ஆஸ்பத்திரியில் தயாளு அம்மாள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
சென்னை:
மறைந்த முதல்-அமைச்சர் கருணாநிதியின் மனைவியும், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் தாயாருமான தயாளு அம்மாளுக்கு முதுமை காரணமாக கடந்த 3-ந் தேதி உடல்நலக்குறைவு ஏற்பட்டது.
இதையடுத்து ஆயிரம் விளக்கு கிரீம்ஸ் ரோட்டில் உள்ள அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று தயாளு அம்மாளை பார்த்தார். சிகிச்சை தொடர்பாக டாக்டர்களிடமும் கேட்டறிந்தார்.
இந்த நிலையில் சிகிச்சை முடிந்து நேற்று இரவு 8.30 மணி அளவில் தயாளு அம்மாள் வீடு திரும்பினார். கோபாலபுரத்தில் உள்ள வீட்டில் வசித்து வரும் தயாளு அம்மாள் அங்கு ஓய்வெடுத்து வருகிறார்.
- தயாளு அம்மாள் அப்பல்லோவில் உள் நோயாளியாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
- தயாளு அம்மாளுடன் அவரது மகள் செல்வி மற்றும் குடும்பத்தினர் உடன் இருந்து கவனித்து வருகின்றனர்.
சென்னை:
மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் மனைவியும், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் தாயாருமான தயாளு அம்மாள் கோபாலபுரம் இல்லத்தில் வசித்து வந்தார்.
அவருக்கு வயது முதிர்வு காரணமாக திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் நேற்று காலை அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் பரிசோதனை மேற்கொண்டு சிகிச்சை அளித்தனர்.
தகவல் கிடைத்ததும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று ஆஸ்பத்திரிக்கு சென்று தாயார் தயாளு அம்மாளுக்கு மேற்கொள்ளப்பட்டு வரும் சிகிச்சைகள் குறித்து டாக்டர்களிடம் கேட்டறிந்தார்.
அப்போது டாக்டர்கள் தாயாளு அம்மாள் 2 நாட்கள் ஆஸ்பத்திரியில் இருந்து சிகிச்சை பெற்றால் நன்றாக இருக்கும் என்றனர்.
இதைத்தொடர்ந்து தயாளு அம்மாள் அப்பல்லோவில் உள் நோயாளியாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இப்போது அவரது உடல் நிலை பரவாயில்லை என்று டாக்டர்கள் தெரிவித்தனர்.
தயாளு அம்மாளுடன் அவரது மகள் செல்வி மற்றும் குடும்பத்தினர் உடன் இருந்து கவனித்து வருகின்றனர்.
- மு.க.ஸ்டாலினின் தாயார் தயாளு அம்மாள்.
- தயாளு அம்மாளுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது.
சென்னை :
மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் மு.கருணாநிதியின் மனைவியும், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் தாயாருமான தயாளு அம்மாள், கருணாநிதியின் மறைவுக்கு பிறகு, சென்னை கோபாலபுரத்தில் உள்ள இல்லத்தில் வசித்து வருகிறார்.
கருணாநிதியின் மறைவின் போதே, அவர் உடல்நலக்குறைவோடுதான் இருந்தார். அதன் பிறகும் அவ்வப்போது உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று திரும்பி வந்தார். அந்தவகையில் கடந்த மார்ச் மாதம் உடல் நலக்குறைவால் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு, பின்னர் வீடு திரும்பினார்.
முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு, அவ்வப்போது கோபாலபுரத்துக்கு சென்று தாயாரை அவர் சந்தித்து வருகிறார்.
இந்த நிலையில் சென்னை கோபாலபுரம் இல்லத்தில் இருந்த தயாளு அம்மாளுக்கு நேற்று மீண்டும் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து, சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அவர் அனுமதிக்கப்பட்டார்.
இதுகுறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும் உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது. சென்னை தலைமை செயலகத்தில் இருந்த அவர், சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட தாயார் தயாளு அம்மாளை பார்ப்பதற்காக அப்பல்லோ ஆஸ்பத்திரிக்கு நேற்று பிற்பகல் 12.40 மணியளவில் வந்தார்.
அப்போது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுடன், அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, எ.வ.வேலு உள்பட முக்கிய நிர்வாகிகளும் உடன் இருந்தனர். மருத்துவமனைக்கு வந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், தாயார் தயாளு அம்மாளுக்கு மேற்கொள்ளப்பட்டு வரும் சிகிச்சைகள் குறித்து சிகிச்சை அளிக்கும் டாக்டர்களிடம் கேட்டறிந்தார். மேலும் அருகில் இருந்து தாயாரை கவனித்துக்கொண்டார். சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேல் அங்கிருந்துவிட்டு, மு.க.ஸ்டாலின் இல்லத்துக்கு புறப்பட்டு சென்றார்.
மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள் சில மாதங்களாக வயோதிகம் காரணமாக வீட்டிலேயே ஓய்வு எடுத்து வந்தார். கருணாநிதி மறைவை தொடர்ந்து அவர் துயரத்தில் இருந்தார்.
இந்தநிலையில் நேற்றிரவு தயாளு அம்மாள் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டார். இதனையடுத்து சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டதாக தெரிகிறது.
தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு கடந்த மாதம் இறுதியில் திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது.
கழுத்தில் பொருத்தப்பட்டு இருந்த செயற்கை சுவாச கருவியை மாற்றிய பிறகு அவருக்கு காய்ச்சல் அடித் தது. அதன் பிறகு கடந்த மாதம் 28-ந்தேதி மூச்சு திணறல் ஏற்பட்டது.
இதையடுத்து கருணாநிதி சென்னை ஆழ்வார் பேட்டையில் உள்ள காவேரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. மூச்சு திணறல் உடனடியாக சரியான நிலையில் மறுநாள் அவருக்கு ரத்த அழுத்த குறைவு ஏற்பட்டது.
இதன் காரணமாக கருணாநிதியின் உடல்நலத்தில் கடும் பின்னடைவு ஏற்பட்டது. தமிழ்நாடு முழுவதும் இருந்து பல்லாயிரக்கணக்கான தி.மு.க. தொண்டர்கள் காவேரி ஆஸ்பத்திரி முன்பு திரண்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
3 நாட்களுக்கு தொண்டர்கள் காவேரி மருத்துவமனை முன்பு திரண்டு நின்று, எழுந்துவா தலைவா எழுந்துவா” என்று கண்ணீர் மல்க கோஷமிட்டனர். நிறைய தொண்டர்கள் இரவு-பகல் பாராது ஆஸ்பத்திரி முன்பே தூங்கி எழுந்தனர்.
அடுத்த 2 நாட்களில் கருணாநிதியின் உடல்நிலையில் முன்னேற்றம் காணப்பட்டது. இதையடுத்து டாக்டர்கள் கருணாநிதி உடல்நிலை சீராகி விட்டதாக தெரிவித்தனர். துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கருணாநிதியை நேரில் பார்த்து நலம் விசாரிக்கும் புகைப்படங்கள் வெளியிடப்பட்டன.
இதன் காரணமாக தி.மு.க.வினர் நிம்மதி பெருமூச்சு விட்டனர். காவேரி ஆஸ்பத்திரி முன்பிருந்து கிளம்பி சென்றனர். இதைத் தொடர்ந்து கருணாநிதியை 24 மணி நேரமும் டாக்டர்கள் குழுவினர் கண்காணித்து வருகிறார்கள். இன்று 10-வது நாளாக அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
கருணாநிதி கழுத்தில் பொருத்தப்பட்டுள்ள டிரக் கியாஸ்டமி எனும் செயற்கை சுவாச கருவி வழியாக அவர் சுவாசித்து வருகிறார். சில சமயம் தானாகவே சுவாசித்து வருகிறார்.
இந்த நிலையில் வயது முதிர்வு காரணமாக கருணாநிதி உடல்நிலையில் ஏற்றமும்-இறக்கமுமாக காணப்படுவதாக டாக்டர்கள் சொல்கிறார்கள். கடந்த வாரம் கருணாநிதிக்கு கல்லீரலில் பிரச்சனை ஏற்பட்டது.
2 தினங்களுக்கு முன்பு கருணாநிதியின் கல்லீரலில் ஏற்பட்ட பிரச்சனை அதிகரித்தது. லண்டனைச் சேர்ந்த டாக்டர் முகமதுரேலா வரவழைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆலோசனைப்படி டாக்டர்கள் குழு தற்போது கருணாநிதிக்கு சிகிச்சை அளிக்கிறது.
ஆனால் கருணாநிதி உடலில் உள்ள இதர உறுப்புகளிலும் பிரச்சனைகள் எழுந்துள்ளதால் கல்லீரலில் ஏற்பட்டுள்ள பிரச்சனைக்கு அளிக்கப்படும் சிகிச்சைக்கு தாமதமாக பலன் கிடைப்பதாக கூறப்படுகிறது.
கல்லீரல் செயல்பாட்டில் திருப்தி இல்லாததால் கருணாநிதிக்கு நேற்று முதல் மஞ்சள் காமாலை ஏற்பட்டு இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர். அவரது ரத்தத்தில் உள்ள தட்டணுக்களிலும் (ப்ளெட்லெட்ஸ்) குறைவு ஏற்பட்டுள்ளது. இந்த பிரச்சனைகளை தீர்க்க டாக்டர்கள் குழு தீவிர சிகிச்சைகளை அளித்து வருகிறது.
இந்த நிலையில் இன்று காலை அவரது நாடி துடிப்பிலும் சற்று தொய்வு ஏற்பட்டதாக ஒரு தகவல் வெளியானது. ஆனால் அந்த தகவலை உறுதி செய்ய இயலவில்லை.
கருணாநிதி உடல் நிலையில் பின்னடைவு ஏற்பட்டு இருப்பது தி.மு.க. தொண்டர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கருணாநிதியின் குடும்பத்தினர் அனைவரும் இன்று மருத்துவமனைக்கு விரைந்தனர். அவரது மனைவி தயாளு அம்மாள் முதன் முதறையாக கருணாநிதியைக் காண இன்று காவேரி மருத்துவமனைக்கு வந்தார்.
ராஜாத்தி அம்மாள், மு.க.ஸ்டாலின், கனிமொழி, செல்வி ஆகியோர் மருத்துவமனையில் உள்ளனர். துரை முருகன் உள்ளிட்ட தி.மு.க. மூத்த தலைவர்களும் இன்று மதியம் மருத்துவமனைக்கு வந்தனர்.
தி.மு.க. மூத்த தலைவர்கள் அடுத்தடுத்து ஆஸ்பத்திரிக்கு சென்றதால் தி.மு.க. நிர்வாகிகளும் காவேரி ஆஸ்பத்திரிக்கு சென்றுள்ளனர். இதனால் காவேரி மருத்துவமனை முன்பு போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
கருணாநிதி உடல்நிலை பற்றி விசாரிக்க மத்திய மந்திரி நிதின்கட்காரி இன்று இரவு சென்னை வருகிறார். #DMKLeader #Karunanidhi #KauveryHospital
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்