என் மலர்
நீங்கள் தேடியது "De Cock"
- முதலில் ஆடிய ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவரில் 151 ரன்கள் எடுத்தது.
- டி காக் அதிரடியில் கொல்கத்தா 153 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது.
கவுகாத்தி:
ஐ.பி.எல். 2025 சீசனின் 6-வது போட்டி அசாம் மாநிலம் கவுகாத்தியில் நடைபெற்றது. இதில் ராஜஸ்தான் ராயல்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற கொல்கத்தா நைட் டைரஸ் பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 151 ரன்கள் எடுத்தது.
துருவ் ஜுரேல் 28 பந்தில் 33 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஜெய்ஸ்வால் 29 ரன்னும், ரியான் பராக் 25 ரன்னும், சஞ்சு சாம்சன் 13 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
கொல்கத்தா அணி சார்பில் வைபவ் அரோரா, ஹர்ஷித் ராணா, மொயீன் அலி, வருண் சக்கரவர்த்தி ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
இதையடுத்து, 152 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் மொயீன் அலி 5 ரன்னிலும், கேப்டன் ரகானே 18 ரன்னிலும் அவுட்டாகினர்.
3வது விக்கெட்டுக்கு டி காக், ரகுவன்ஷி ஜோடி சேர்ந்தது. டி காக் அதிரடியாக ஆடி அரை சதம் கடந்தார். இந்த ஜோடி பொறுப்புடன் ஆடி அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றது.
இறுதியில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 17.3 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 153 ரன்களை எடுத்து வென்றது. இதன்மூலம் நடப்பு ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணி முதல் வெற்றியைப் பதிவு செய்துள்ளது. டி காக் 97 ரன்னும், ரகுவன்ஷி 22 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.
ராஜஸ்தான் அணி தான் விளையாடிய 2 போட்டிகளிலும் தோல்வி அடைந்துள்ளது.
- முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்கா 194 ரன்கள் குவித்தது.
- அந்த அணியின் டி காக் 74 ரன்கள் எடுத்தார்.
ஆன்டிகுவா:
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் குரூப் ஸ்டேஜ் போட்டிகள் நேற்று முன்தினத்துடன் முடிவடைந்தது. இன்று முதல் சூப்பர் 8 போட்டிகள் நடைபெறுகின்றன.
இன்றைய முதல் போட்டியில் அமெரிக்கா, தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன. இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் அமெரிக்கா டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, தென் ஆப்பிரிக்கா அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் டி காக் அதிரடியில் மிரட்டினார். ஹென்ரிக்ஸ் 11 ரன்னில் வெளியேறினார்.
2-வது விக்கெட்டுக்கு டி காக்குடன் மார்கிரம் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி ரன்ரேட்டை உயர்த்தியது. 2வது விக்கெட்டுக்கு 110 ரன்கள் சேர்த்த நிலையில் டி காக் 40 பந்தில் 74 ரன்கள் குவித்து அவுட்டானார். மார்கிரம் 32 பந்தில் 46 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
இறுதியில், தென் ஆப்பிரிக்கா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 194 ரன்கள் குவித்துள்ளது. கிளாசன் 36 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.
அமெரிக்கா சார்பில் நேத்ரவால்கர் 2 விக்கெட் வீழ்த்தினார்.
இதையடுத்து, 195 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் அமெரிக்க அணி களமிறங்குகிறது.
- முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்கா 163 ரன்களை எடுத்தது.
- டி காக் 38 பந்தில் 4 சிக்சர், 4 பவுண்டரி உள்பட 65 ரன் குவித்தார்.
செயிண்ட் லூசியா:
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று இரவு நடைபெறும் சூப்பர் 8 சுற்று போட்டியில் இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து பவுலிங் தேர்வு செய்தது.
அதன்படி, தென் ஆப்பிரிக்கா அணி முதலில் களமிறங்கியது. ஹென்ரிக்ஸ், டி காக் ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக இறங்கினர்.
இருவரும் ஆரம்பம் முதல் அதிரடியாக ஆடினர். டி காக் அரை சதம் அடித்து அசத்தினார். முதல் விக்கெட்டுக்கு 86 ரன்கள் சேர்த்த நிலையில் ஹென்ரிக்ஸ் 19 ரன்னில் அவுட்டானார். டி காக் 38 பந்தில் 4 சிக்சர், 4 பவுண்டரி உள்பட 65 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
கிளாசன் 8 ரன்னிலும், மார்கிரம் ஒரு ரன்னிலும் அவுட்டாகினர். கடைசி கட்டத்தில் அதிரடி காட்டிய டேவிட் மில்லர் 28 பந்தில் 43 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
இறுதியில், தென் ஆப்பிரிக்கா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 163 ரன்களை எடுத்துள்ளது.
இதையடுத்து, 164 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி களமிறங்குகிறது.