என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Dean Elgar"
- முதல் போட்டியில் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்று தொடரில் முன்னிலை வகிக்கிறது.
- பவுமா காயம் காரணமாக 2-வது டெஸ்ட் போட்டியில் இருந்து விலகி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜோகன்னஸ்பர்க்:
தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், தொடக்க ஆட்டக்காரருமான டீன் எல்கர் 2012-ம் ஆண்டு சர்வதேச போட்டியில் அறிமுகமானார். இதுவரை 84 டெஸ்ட் போட்டியில் விளையாடி 13 சதம், 23 அரைதம் உள்பட 5,146 ரன்கள் எடுத்துள்ளார். 19 டெஸ்ட் போட்டிகளுக்கு கேப்டனாகவும் இருந்து இருக்கிறார். 2018-ம் ஆண்டுடன் ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஒதுங்கிய அவர் 8 ஒருநாள் போட்டியிலும் ஆடியுள்ளார்.
36 வயதான டீன் எல்கர் இந்த தொடருடன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இது குறித்து டீன் எல்கர் கூறுகையில், 'கிரிக்கெட் ஆடுவது எப்போதும் எனது கனவாக இருந்து வந்தது. ஆனால் உங்கள் நாட்டு அணிக்காக விளையாடும் வாய்ப்பை பெறுவது ஆகச்சிறந்ததாகும்.இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடருடன் அழகான விளையாட்டில் இருந்து ஓய்வு பெற முடிவு செய்துள்ளேன். உலகில் எனக்கு மிகவும் பிடித்தமான மைதானமான கேப்டவுனில் எனது முதல் ரன்னை எடுத்தேன். அதே மைதானத்தில் எனது கடைசி ஆட்டத்திலும் ஆடுகிறேன்' என்றார்.
ஓய்வு அறிவிக்கப்பட்ட நிலையில் இந்தியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் எல்கர் கேப்டனாக செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. அவரின் ஓய்வுக்கு மரியாதை கொடுக்கும் பட்சத்தில் தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் வாரியம் இதனை தெரிவித்துள்ளது.
பவுமா காயம் காரணமாக 2-வது டெஸ்ட் போட்டியில் இருந்து விலகி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- இந்திய அணி முதல் இன்னிங்சில் 245 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
- தென் ஆப்பிரிக்கா அணி 2வது நாள் முடிவில் 11 ரன்கள் முன்னிலை வகிக்கிறது.
செஞ்சூரியன்:
தென் ஆப்பிரிக்கா, இந்தியா மோதும் முதல் டெஸ்ட் போட்டி செஞ்சூரியன் நகரில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி, முதலில் களமிறங்கிய இந்திய அணி முதல் இன்னிங்சில் 245 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 14 பவுண்டரி, 4 சிக்சருடன் சதமடித்து 101 ரன்களில் கே.எல்.ராகுல் ஆட்டமிழந்தார்.
தென் ஆப்பிரிக்கா சார்பில் ரபாடா 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதையடுத்து, தென் ஆப்பிரிக்கா அணி முதல் இன்னிங்சை தொடர்ந்தது. தொடக்க ஆட்டக்காரர் மார்க்ரம் 5 ரன்னில் அவுட்டானார். சோர்சி 28 ரன்னிலும், பீட்டர்சன் 2 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
4வது விக்கெட்டுக்கு டீன் எலருடன் ஜோடி சேர்ந்த டேவட் பெடிங்காம் அரை சதம் கடந்து 56 ரன்னில் வெளியேறினார். டீன் எல்கர் பொறுப்புடன் ஆடி சதமடித்து அசத்தினார்.
இறுதியில், தென் ஆப்பிரிக்கா அணி 66 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 256 ரன்கள் சேர்த்த நிலையில் போதிய வெளிச்சமின்மை காரணமாக ஆட்டம் நிறுத்தப்பட்டது. டீன் எல்கர் 140 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.
இந்தியா சார்பில் பும்ரா, சிராஜ் தலா 2 விக்கெட்டும், பிரசித் கிருஷ்ணா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
- இதுவரை 84 டெஸ்ட் போட்டியில் விளையாடி 13 சதம், 23 அரைதம் உள்பட 5,146 ரன்கள் எடுத்துள்ளார்.
- 2018-ம் ஆண்டுடன் ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஒதுங்கிய அவர் 8 ஒருநாள் போட்டியிலும் ஆடியுள்ளார்.
ஜோகன்னஸ்பர்க்:
தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், தொடக்க ஆட்டக்காரருமான டீன் எல்கர் 2012-ம் ஆண்டு சர்வதேச போட்டியில் அறிமுகமானார். இதுவரை 84 டெஸ்ட் போட்டியில் விளையாடி 13 சதம், 23 அரைதம் உள்பட 5,146 ரன்கள் எடுத்துள்ளார். 19 டெஸ்ட் போட்டிகளுக்கு கேப்டனாகவும் இருந்து இருக்கிறார். 2018-ம் ஆண்டுடன் ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஒதுங்கிய அவர் 8 ஒருநாள் போட்டியிலும் ஆடியுள்ளார்.
36 வயதான டீன் எல்கர் வருகிற 26-ந் தேதி முதல் ஜனவரி 7-ந் தேதி வரை சொந்த மண்ணில் நடைபெறும் 2 ஆட்டங்கள் கொண்ட இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடருடன் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக நேற்று அறிவித்தார்.
இது குறித்து டீன் எல்கர் கூறுகையில், 'கிரிக்கெட் ஆடுவது எப்போதும் எனது கனவாக இருந்து வந்தது. ஆனால் உங்கள் நாட்டு அணிக்காக விளையாடும் வாய்ப்பை பெறுவது ஆகச்சிறந்ததாகும். சர்வதேச கிரிக்கெட்டில் 12 ஆண்டுகள் ஆடியதை கவுரவமாகவும், பாக்கியமாகவும் கருதுகிறேன். இது நம்பமுடியாத ஒரு அருமையான பயணமாகும். எல்லா நல்ல விஷயங்களும் ஒருநாள் முடிவுக்கு வரும். அதுபோல் இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர் எனக்கு கடைசி போட்டியாகும். ஏனெனில் இந்த அழகான விளையாட்டில் இருந்து ஓய்வு பெற முடிவு செய்துள்ளேன். உலகில் எனக்கு மிகவும் பிடித்தமான மைதானமான கேப்டவுனில் எனது முதல் ரன்னை எடுத்தேன். அதே மைதானத்தில் எனது கடைசி ஆட்டத்திலும் ஆடுகிறேன்' என்றார்.
- கிரிக்கெட் வீரர்களுக்கு காபா மைதானம் பாதுகாப்பற்ற சூழலில் இருந்தது என்று நான் நடுவர்களிடம் பேசினேன்.
- இது போன்ற மைதானங்களில் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்றால் அது பார்வையாளர்களுக்கும் சலிப்பை உண்டாக்கும்.
தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணியானது 3 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுவதற்காக ஆஸ்திரேலிய நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டியானது கடந்த டிசம்பர் 17-ஆம் தேதி காபா மைதானத்தில் துவங்கிய வேளையில் போட்டியின் இரண்டாம் நாளே ஆட்டம் முடிவுக்கு வந்தது அனைவரது மத்தியிலும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த போட்டியின் முதல் இன்னிங்சில் தென் ஆப்பிரிக்கா அணி 152 ரன்களை குவித்தது.பின்னர் தங்களது முதல் இன்னிங்சை விளையாடிய ஆஸ்திரேலியா அணி 218 ரன்கள் குவித்தது. பின்னர் இரண்டாவது இன்னிங்சை விளையாடிய தென்னாப்பிரிக்க அணி 99 ரன்களில் ஆல் அவட்டானதால் ஆஸ்திரேலிய அணி தங்களது கடைசி இன்னிங்சில் நான்கு விக்கெட்டுகளை மட்டும் இழந்து 35 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்நிலையில் போட்டி துவங்கி ஒன்றரை நாளிலேயே 34 விக்கெட்டுகள் வீழ்த்தப்பட்டு போட்டி முடிவுக்கு வந்தது அனைவரது மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே பாகிஸ்தானில் உள்ள ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானம் டெஸ்ட் கிரிக்கெட்டிற்கு உகந்த மைதானம் இல்லை என்ற குற்றச்சாட்டுகள் எழுந்த வேளையில் தற்போது ஆஸ்திரேலியாவில் உள்ள காபா மைதானமும் டெஸ்ட் போட்டியை நடத்த ஏதுவான மைதானம் கிடையாது என்று தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் டீன் ஏல்கர் கடுமையாக விமர்சித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில்:-
கிரிக்கெட் வீரர்களுக்கு காபா மைதானம் பாதுகாப்பற்ற சூழலில் இருந்தது என்று நான் நடுவர்களிடம் பேசினேன். இது போன்ற ஆடுகளத்தில் பேட்ஸ்மேன்களால் எதுவும் செய்ய முடியாது. பழைய பந்துகள் கூட இங்கு நன்றாக பவுன்ஸ் ஆகி வருவதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இது போன்ற மைதானங்களில் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்றால் அது பார்வையாளர்களுக்கும் சலிப்பை உண்டாக்கும். ஒன்றரை நாட்களிலேயே 34 விக்கெட்டுகள் விழுந்தது அதிர்ச்சியாக இருக்கிறது. போட்டி ஆரம்பித்த உடனே முடிந்து விட்டது. இந்த இரண்டு நாட்களில் என்ன நடந்தது? என்பது குறித்து எனக்கு ஒன்றும் புரியவில்லை. இது மாதிரியான ஆடுகளத்தை நான் பார்த்ததே கிடையாது.
என்று அவர் கடுமையாக விமர்சித்துள்ளார்.
பாகிஸ்தானுக்கு எதிரான 2-வது டெஸ்டின் போது தென்ஆப்பிரிக்க அணி மெதுவாக பந்து வீசிய புகாரில் சிக்கியது. இது குறித்து விசாரணை நடத்திய ஐ.சி.சி. போட்டி நடுவர், தென்ஆப்பிரிக்க கேப்டன் பாப் டு பிளிஸ்சிஸ்க்கு ஒரு டெஸ்டில் விளையாட தடை விதித்தார்.
இதனால் பாகிஸ்தானுக்கு எதிராக ஜோகன்னஸ்பர்க்கில் நாளை தொடங்கும் கடைசி டெஸ்டில் தென்ஆப்பிரிக்க அணியை வழிநடத்தப்போவது யார்? என்ற கேள்வி எழுந்தது.
இந்த நிலையில் கடைசி டெஸ்டுக்கான தென்ஆப்பிரிக்க அணியின் பொறுப்பு கேப்டனாக தொடக்க ஆட்டக்காரர் டீன் எல்கர் செயல்படுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வலது கால் தொடையில் ஏற்பட்ட காயத்தால் தொடக்க ஆட்டக்காரர் மார்க்ராம் அவதிப்படுவதால், அதை கருத்தில் கொண்டு புதுமுக பேட்ஸ்மேன் பீட்டர் மாலன் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளார். #DeanElgar #SouthAfrica #Pakistan
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்