search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Death toll rises"

    • ரூ.30,000 கோடி மதிப்புள்ள கள்ளச்சாராய பொருளாதாரம் பீகாரில் இயங்கி வருகிறது.
    • பீகாரின் மூலை முடுக்கெங்கும் மதுக்கடைகளை திறந்த நிதிஷ்குமார் தற்போது மகாத்மா வேஷம் போடுகிறார்.

    பீகார் மாநிலத்தில் கள்ளச்சாராயம் குடித்ததால் இதுவரை 37 பேர் உயிரிழந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து முதல்வர் நிதிஷ்குமாரை எதிர்க்கட்சி தலைவர் தேஜஸ்வி யாதவ் கடுமையாக விமர்சித்துள்ளார்.

    தேஜஸ்வி யாதவ் அவரது எக்ஸ் பதிவில், "பூரண மதுவிலக்குதான் நிதிஷ்குமாரின் மிகப்பெரிய ஊழல். சுமார் ரூ.30,000 கோடி மதிப்புள்ள கள்ளச்சாராய பொருளாதாரம் பீகாரில் இயங்கி வருகிறது. நிதிஷ்குமாரின் கட்சியினர்தான் இதன்மூலம் அதிக பலன்களை பெற்று வருகின்றனர். தனது முதல் இரு ஆட்சிக்காலத்தில் பீகாரின் மூலை முடுக்கெங்கும் மதுக்கடைகளை திறந்தவர் தற்போது மகாத்மா வேஷம் போடுகிறார்.

    தேசிய குடும்ப சுகாதார ஆய்வு அறிக்கையின்படி, பீகாரில் மது தடை செய்யப்பட்டிருந்தாலும், மகாராஷ்டிராவை விட பீகாரில் அதிகமானோர் மது அருந்துகின்றனர்.

    தற்போது பீகாரில் 15.5 சதவீதம் பேர் மது அருந்துகின்றனர். மது விற்பனைக்கு தடை இல்லாத மகாராஷ்டிராவில் வெறும் 13.9 சதவீதம் பேர் தான் மது அருந்துகின்றனர்.

    பீகாரில் கள்ளச்சாராயம் தொடர்பாக சராசரியாக ஒவ்வொரு மணி நேரத்துக்கும் 275 ரெய்டுகள் நடத்தப்படுகின்றன. அதாவது பீகார் காவல்துறையும் மதுவிலக்கு துறையும் ஒவ்வொரு மாதமும் சுமார் 2 லட்சம் இடங்களிலும், ஒவ்வொரு ஆண்டும் 24 லட்சம் இடங்களிலும் சோதனை நடத்துகின்றன. ஆனால் இதற்குப் பிறகும், சட்டவிரோத கள்ளச்சாராய விற்பனை தடையின்றி தொடர்கிறது" என்று பதிவிட்டுள்ளார்.

    • கள்ளச்சாராயம் காய்ச்சியது தொடர்பாக 8 பேரை கைது செய்து போலீசார் விசாரணை.
    • மாகர் மற்றும் அவுரியா ஊராட்சியைச் சேர்ந்த 2 அதிகாரிகள் சஸ்பெண்ட்.

    பீகார் மாநிலம் சிவான் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்ததால் நேற்று 4 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இதில், காலை நிலவரப்படி கள்ளச்சாராயம் குடித்து பலியானவர்கள் எண்ணிக்கை உயர்ந்தது. அதன்படி, சிவான் மற்றும் சரண் மாவட்டங்களில் கள்ளச்சாராயம் குடித்தவர்களில், மேலும் 12 பேர் பலியானதால் பலி எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது.

    இந்நிலையில், ஏற்கனவே 20 பேர் உயிரிழந்த நிலையில், மேலும் 8 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், உயிரிழப்பு எண்ணிக்கை 28ாகு உயர்ந்துள்ளது.

    கள்ளச்சாராயம் காய்ச்சியது தொடர்பாக 8 பேரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலும், மாகர் மற்றும் அவுரியா ஊராட்சியைச் சேர்ந்த 2 அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

    கள்ளச்சாராயம் குடித்து சுமார் 49 பேர் கடும் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பலவர உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை உயரக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.

    • கள்ளச்சாராயம் குடித்து பலியானவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருகிறது.
    • ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மகேஷ் என்பவர் உயிரிழப்பு.

    கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் கடந்த 18-ந் தேதி விற்பனை செய்யப்பட்ட எத்தனால் கலந்த கள்ளச்சாராயம் குடித்து பலியானவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருகிறது.

    இதற்கிடையே, மருத்துவமனையில் உள் நோயாளிகளாக சிகிச்சையில் உள்ள 90க்கும் மேற்பட்டோரின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனை நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. இதுவரை 8 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

    இந்நிலையில், கள்ளச்சாராயம் குடித்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நபர்களில் ஒருவர் இன்று உயிரிழந்துள்ளார்.

    புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மகேஷ் என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

    இதனால், கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 64ஆக உயர்ந்துள்ளது.

    ஒடிசா மாநிலத்தை அசுர வேகத்தில் தாக்கி துவம்சம் செய்த பானி புயலின் தாக்கத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 41 ஆக அதிகரித்துள்ளது. #Fanitoll #CycloneFani
    புவனேஸ்வர்: 

    வங்கக் கடலில் உருவான பானி புயல் கடந்த வெள்ளிக்கிழமை காலை ஒடிசா மாநிலம் பூரி அருகே கரையை கடந்தது.  அப்போது 175 முதல் 230 கி.மீ. வேகத்தில் பயங்கர சூறாவளி காற்று வீசியது. இதனால் ஒடிசா மாநிலத்தின் 14 மாவட்டங்கள் கடுமையாக பாதிப்பு அடைந்தது.

    ஒடிசா மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகளை பானி புயல் புரட்டிப்போட்டது. கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு புயல் மழையால் மிக கடுமையான சேதத்தை ஒடிசா மாநிலம் சந்தித்துள்ளது.  வானிலை மையத்தின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் பெருமளவு உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. 

    இதற்கிடையே, பானி புயலின் தாக்கத்துக்கு 29 பேர் உயிரிழந்ததாக ஒடிசா மாநில அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. 

    இந்நிலையில், பானி புயல் தாக்கத்துக்கு பலியானவர்களின் எண்ணிக்கை இதுவரை 41 ஆக அதிகரித்துள்ளது என அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    புயலால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு உரிய இழப்பீடு அளிக்கப்படும். சேதமடைந்த வீடுகளுக்கு பதிலாக புதிய வீடுகள் கட்டித்தரப்படும். அடுத்த 3 தினங்களுக்குள் நிவாரண பொருள்களை அளிக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது என அம்மாநில அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். #Fanitoll #CycloneFani
    இலங்கையில் நடந்த தொடர் வெடிகுண்டு தாக்குதலில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 359 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். #SriLankaTerrorAttacks #SriLankaBombings
    கொழும்பு:

    இலங்கை தலைநகர் கொழும்புவில் கடந்த ஞாயிறு அன்று பயங்கரவாதிகள் நிகழ்த்திய தொடர் வெடிகுண்டு தாக்குதலில்  தேவாலயங்கள், நட்சத்திர ஓட்டல்கள் தகர்க்கப்பட்டன. பிரார்த்தனைக்காக தேவாலயங்களில் திரண்டிருந்த பொதுமக்கள் உடல் உறுப்புகள் சிதைந்த நிலையில் கொத்துக் கொத்தாக உயிரிழந்தனர். 500-க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்தனர்.

    காயமடைந்தவர்கள் வெவ்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.  அவர்களில் பலர் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இதனால் நேற்று மாலை நிலவரப்படி, 321 பேர் பலியானதாக அறிவிக்கப்பட்டது.

    அதன்பின்னர், பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டிருந்தவர்களில் சிகிச்சை பலனின்றி மேலும் பலர் உயிரிழந்தனர். இன்று காலை நிலவரப்படி உயிரிழப்பு 359 ஆக உயர்ந்துள்ளது. இதில் 45 பேர் குழந்தைகள் என்பது குறிப்பிடத்தக்கது.



    ஈவு இரக்கமின்றி பொதுமக்களை கொன்று குவித்த, இந்த கொடூர தாக்குதலுக்கு ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இந்த தாக்குதல் தொடர்பாக 40 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்ட நிலையில், நேற்று இரவு மேலும் 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    ஆயுதங்கள் மற்றும் வெடிகுண்டுகளுடன் இலங்கையில் மேலும் பலர் பதுங்கியிருப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்கே எச்சரித்துள்ளார். எனவே, வாகன சோதனை மற்றும் தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. #SriLankaTerrorAttacks #SriLankaBombings
    மலாவியில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 56 ஆக அதிகரித்துள்ளது என பேரிடர் மீட்புக்குழு அதிகாரிகள் தெரிவித்தனர். #MalawiRain
    பிளான்டையர்:

    தென்கிழக்கு ஆப்பிரிக்க நாடான மலாவியில் கடந்த சில தினங்களாக பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக ஆறுகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    தாழ்வான பகுதிகள் தண்ணீரில் தத்தளிக்கின்றன. சுமார் ஒரு லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இரண்டு முக்கிய பாலங்கள் வெள்ளத்தில் மூழ்கி உள்ளதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து பொதுமக்கள் மீட்கப்பட்டு அரசு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 11 மாவட்டங்களில் அதிக அளவில் சேதம் ஏற்பட்டுள்ளது. 

    இதற்கிடையே, மழை வெள்ளத்தில் சிக்கி 23 பேர் உயிரிழந்தனர் என்றும், பலரை காணவில்லை என்றும் முதல் கட்ட தகவல் வெளியானது.

    இந்நிலையில், மலாவியில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 56 ஆக அதிகரித்துள்ளது. சுமார் ஐநூறுக்கும் மேற்பட்டோர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். தொடர்ந்து அங்கு மீட்புப் பணிகள் நடந்து வருகிறது என பேரிடர் மீட்புக்குழு அதிகாரிகள் தெரிவித்தனர். #MalawiRain
    பிரேசில் நாட்டில் இரும்புத்தாது சுரங்கத்தில் உள்ள அணை உடைந்த விபத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 200 ஆக உயர்ந்துள்ளது. #BrazilDamCollapse
    பிரேசிலியா:

    பிரேசில் நாட்டின் தென்கிழக்கு பகுதியில் உள்ள புருமாடின்கோ நகரம் அருகே தனியாருக்கு சொந்தமான இரும்புத்தாது சுரங்கம் உள்ளது.

    இந்த சுரங்கத்தின் அருகில் பயன்படுத்தப்படாமல் இருந்த ஒரு அணை கடந்த 25-ம் தேதி திடீரென உடைந்தது. அணையில் இருந்த தண்ணீரும், சேறும் சகதியுமாக பெருக்கெடுத்து வெளியேறியது. இதில் ஏராளமான தொழிலாளர்கள் சிக்கிக்கொண்டனர். அணை வளாகத்தில் இருந்த உணவகம் சகதியில் முழுவதும் புதைந்தது. 
     
    அணையை ஒட்டியுள்ள பகுதியில் இருந்த நிறுவனங்கள், தொழிலாளர்கள் வசிக்கும் பகுதிகளில் பெருமளவிலான சகதி  நிரம்பியதால், அவர்களின் வீடுகள் மற்றும் வாகனங்கள் சேதமடைந்தன. தகவலறிந்த மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்குச் சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

    உள்ளூர் ஊடகத்தில் சமீபத்தில் வெளியான தகவலின்படி, அணை விபத்தில் உயிரிழப்பு 188 ஆக உயர்ந்தது. மேலும், தொழிலாளர்கள், ஒப்பந்ததாரர்கள், பொதுமக்கள் என பலரைக் காணவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இந்நிலையில், பிரேசில் நாட்டில் இரும்புத்தாது சுரங்கத்தில் உள்ள அணை உடைந்த விபத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 200 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 108 பேர் மாயமாகி உள்ளனர் எனவும், அவர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் மீட்புக்குழுவினர் தெரிவித்துள்ளனர். #BrazilDamCollapse
    நைஜீரியாவில் வேகமாக பரவி வரும் லசா காய்ச்சலுக்கு பலியானோர் எண்ணிக்கை 93 ஆக அதிகரித்துள்ளது. #NigeriaLassafever
    அபுஜா:

    உலகின் மிக மோசமான நோய்களில் ஒன்றான லசா காய்ச்சல் கடந்த ஆண்டு தொடக்கத்தில் திடீரென வேகமாக பரவி, 23 நாடுகளை தாக்கி, 171 பேரை கொன்றது. இந்த நோய் நைஜீரியாவில் மீண்டும் பரவி வருகிறது.
     
    நைஜீரியாவில் கடந்த இரு மாதமாக லசா காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. லசா காய்ச்சலுக்கு பலியாவோர் எண்ணிக்கை 93 ஆக அதிகரித்துள்ளது. நைஜிரியாவின் 21 மாநிலங்களில் லசா காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என தேசிய மையக் கண்காணிப்பு அமைப்பு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். 

    லசா வைரசானது மார்பர்க் மற்றும் எபோலா எனும் இரண்டு கொடிய வைரஸ்களின் குடும்பத்தைச் சார்ந்தது. இதனால் கடுமையான காய்ச்சல், வாந்தி மற்றும் இரத்த சோகை போன்ற பிரச்னைகள் ஏற்படும். லசா எனும் பெயர் வடக்கு நைஜீரியாவின் லசா நகரத்திலிருந்து வந்ததாகும். இந்நோய் 1969 ஆம் ஆண்டில் கண்டறியப்பட்டது.

    இந்த வைரஸ் எலிகள் மூலமாகவும், இந்நோய் பாதிக்கப் பட்டவர்களின் தொற்றினாலும் பரவ அதிக வாய்ப்புள்ளது. மேலும் இந்நோய் பரவுவதை தடுக்க சுகாதாரத்துடனும், எலிகளின் தொற்று இல்லாமலும் இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. #NigeriaLassafever 
    பிரேசில் நாட்டில் இரும்புத் தாது சுரங்கத்தில் உள்ள அணை உடைந்த விபத்தில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 58 ஆக அதிகரித்துள்ளது. #BrazilDamCollapse
    பிரேசிலியா:

    பிரேசில் நாட்டின் தென்கிழக்கு பகுதியில் உள்ள புருமாடின்கோ நகரம் அருகே தனியாருக்கு சொந்தமான இரும்புத்தாது சுரங்கம் உள்ளது. சுரங்கத்தின் அருகில் பயன்படுத்தப்படாமல் இருந்த ஒரு அணை கடந்த 25-ம் தேதி திடீரென உடைந்தது. அணையில் இருந்த தண்ணீரும், சேறும் சகதியுமாக பெருக்கெடுத்து வெளியேறியது. இதில் ஏராளமான தொழிலாளர்கள் சிக்கிக்கொண்டனர். அணை வளாகத்தில் இருந்த உணவகம் சகதியில் முழுவதும் புதைந்தது. அங்கு தொழிலாளர்கள் மதிய உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

    இதுதவிர அணையை ஒட்டியுள்ள பகுதியில் இருந்த நிறுவனங்கள், தொழிலாளர்கள் வசிக்கும் பகுதிகளில் பெருமளவிலான சகதி  நிரம்பியதால், அவர்களின் வீடுகள் மற்றும் வாகனங்கள் சேதமடைந்தன.

    இந்த விபத்து பற்றி தகவல் அறிந்த மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்குச் சென்று மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சாலைகள் சேதமடைந்ததால், அப்பகுதியில் சகதியில் சிக்கிய பொதுமக்கள் ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்டனர். பாதுகாப்பு காரணமாக அங்கு வசிக்கும் பலர் வெளியேற்றப்பட்டனர். அருகில் உள்ள மற்றொரு அணையும் மோசமான நிலையில் இருந்ததால், நேற்று மீட்பு பணி நிறுத்தப்பட்டது. இன்று மீட்பு பணி மீண்டும் தொடங்கியது.



    நேற்று நிலவரப்படி இந்த விபத்தில் 40 பேரின் உடல்கள் மீட்கப்பட்டிருந்தன. அதன்பின்னர் மேலும் 18 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், உயிரிழப்பு 58 ஆக உயர்ந்துள்ளதாக மீட்புக்குழு அறிவித்துள்ளது. தொழிலாளர்கள், ஒப்பந்ததாரர்கள், பொதுமக்கள் என 305 பேரைக் காணவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது. 192 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். அவர்களில், 23 பேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.  

    காணாமல் போனவர்களில் பெரும்பாலானோர் சகதிக்குள் சிக்கியிருக்கலாம் என்பதால் உயிர்பிழைக்க வாய்ப்பு இல்லை என்று கூறப்படுகிறது. தொடர்ந்து மீட்பு பணி நடைபெறுகிறது. #BrazilDamCollapse
    மெக்சிகோவில் பெட்ரோல் குழாய் வெடித்து தீப்பிடித்த விபத்தில், பலத்த காயமடைந்த மேலும் சிலர் உயிரிழந்ததையடுத்து, பலி எண்ணிக்கை 91 ஆக உயர்ந்துள்ளது. #MexicoFire
    மெக்சிகோ சிட்டி:

    மெக்சிகோவின் ஹிடால்கோ மாநிலத்தில் சட்டவிரோதமாக பெட்ரோல் கொண்டு செல்லப்பட்ட குழாயில் கடந்த வெள்ளிக்கிழமை கசிவு ஏற்பட்டது. அதில் இருந்து வெளியேறிய பெட்ரோலை பொதுமக்கள் கேன்கள், வாளிகள் மற்றும் பாத்திரங்களில் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென பெட்ரோல் குழாய் வெடித்து தீப்பிடித்தது. அதில் சிக்கி ஏராளமானோர் கருகினர்.

    இந்த விபத்தில் 20க்கும் மேற்பட்டோர்  சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ஏராளமானோர் பலத்த தீக்காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அவர்களில் பலர் சிகிச்சை பலனின்றி பலியாகினர். இதனால் உயிரிழப்பு அதிகரித்தது.

    இந்நிலையில், காயமடைந்தவர்களில் மேலும் சிலர் நேற்று உயிரிழந்தனர். இதனையடுத்து பைப்லைன் தீ விபத்தில் உயிரிழப்பு 91 ஆக உயர்ந்துள்ளது. 52 பேர் பலத்த தீக்காயங்களுடன் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    மெக்சிகோவில் கடந்த ஆண்டு மட்டும் 14,894 இடங்களில் சட்டவிரோத பெட்ரோல் குழாய்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக அரசு கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. #MexicoFire
    மெக்சிகோவில் பெட்ரோல் குழாய் வெடித்து தீப்பிடித்த விபத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 66 ஆக உயர்ந்துள்ளது. #MexicoFire
    மெக்சிகோ:

    மெக்சிகோவில் பெட்ரோல் குழாய் மூலம் எடுத்துச் செல்லப்படுகிறது. ஹிடால்கோ மாநிலத்தில் குழாயில் கசிந்து வெளியேறிய பெட்ரோலை பொதுமக்கள் கேன்கள், வாளிகள் மற்றும் பாத்திரங்களில் பிடித்துக் கொண்டிருந்தனர்.
     
    அப்போது எதிர்பாராத விதமாக திடீரென பெட்ரோல் குழாய் வெடித்து தீப்பிடித்தது. அதில் சிக்கி ஏராளமானோர் கருகினர். அவர்களில் 20 பேர் உயிரிழந்தனர். 54 பேர் காயம் அடைந்தனர் என முதல் கட்ட தகவல் வெளியானது.

    இந்நிலையில், மெக்சிகோவில் பெட்ரோல் குழாய் வெடித்து தீப்பிடித்த விபத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 66 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 76 பேர் காயமடைந்துள்ளனர். தொடர்ந்து அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என ஹிடால்கோ மாநில கவர்னர் ஓமர் பயாத் தெரிவித்தார்.

    மெக்சிகோவில் மெக்சிகோ சிட்டி உள்ளிட்ட நகரங்களில் பெட்ரோல் மற்றும் டீசல் தட்டுப்பாடு நிலவுகிறது. அங்கு மக்கள் நீண்ட நேரம் ‘கியூ’ வரிசையில் நின்று வாங்க வேண்டிய நிலை உள்ளது. எனவே பெட்ரோல் திருட்டு இங்கு அதிக அளவில் நடைபெறுகிறது. #MexicoFire
    சூடானில் அரசுக்கு எதிரான போராட்டத்தின்போது ஏற்பட்ட வன்முறை மற்றும் போலீசாரின் நடவடிக்கைகளால் இதுவரை 22 பேர் உயிரிழந்துள்ளனர். #SudanProtests #BreadPrice
    கர்த்தூம்:

    சூடான் நாட்டில் ரொட்டி உற்பத்திக்கான அரசு மானியங்கள் நிறுத்தப்பட்டதால், ரொட்டி விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இது பொதுமக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. ரொட்டி விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து சமூக ஆர்வலர்கள், எதிர்க்கட்சியினருடன் இணைந்து பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    போராட்டக்காரர்கள் பல்வேறு பகுதிகளில் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். அத்துடன், கடைகளை சூறையாடி அங்குள்ள பொருட்களை போராட்டக்காரர்கள் கொள்ளையடித்துச் செல்வதும் அதிகரித்தது. போராட்டக்காரர்களை ஒடுக்க கலவர தடுப்பு பிரிவு போலீசார் கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். இதனால் போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்குமிடையே கடும் மோதல் ஏற்பட்டு உயிர்ப்பலி ஏற்படுகிறது. கடந்த மாதம் நடந்த போராட்டங்களில் 19 பேர் உயிரிழந்தனர்.

    இந்நிலையில் கடந்த புதன்கிழமையன்று அதிபர் பஷீருக்கு ஆதரவாக தலைநகர் கர்த்தூமில் போட்டி பேரணி நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். அரசுக்கு எதிராகவும் தனியாக போராட்டம் நடைபெற்றது. இதனால் தலைநகரில் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.

    ஓம்டர்மான் பகுதியில் திரண்ட நூற்றுக்கணக்கான போராட்டக்காரர்கள், அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்கள் எழுப்பினர். ‘அதிபர் ரஷீத் பதவி விலக வேண்டும், சுதந்திரம், அமைதி மற்றும் நீதி வேண்டும்’ என கோஷமிட்டபடி பேரணியாக சென்றனர். அவர்களை போலீசார் சுற்றி வளைத்து தடுத்து நிறுத்தினர். பின்னர் கண்ணீர் புகை குண்டுகளை வீசி அவர்களை விரட்டியடித்தனர்.



    இந்த சம்பவத்தில் 3 பேர் உயிரிழந்தனர். சிலர் காயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். ஆனால் போலீசார் தாக்கியதால் 3 பேரும் உயிரிழந்தார்களா? என்பது உறுதிப்படுத்தப்படவில்லை.

    அரசுக்கு எதிரான போராட்டம் மற்றும் வன்முறைகளால் இதுவரை 22 பேர் உயிரிழந்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆனால் 40 பேர் வரை இறந்திருக்கலாம் என நியூயார்க்கைச் சேர்ந்த மனித உரிமை அமைப்பு கூறியுள்ளது. #SudanProtests #BreadPrice
    ×