என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "defamation"

    மேலப்பாளையத்தில் குடிபோதையில் பெண்ணை அவதூறாக பேசி கொலை மிரட்டல் விடுத்த கொழுந்தனை போலீசார் கைது செய்தனர்.
    நெல்லை:

    மேலப்பாளையம் கணேசபுரத்தை சேர்ந்தவர் கனக சபாபதி. இவரது மனைவி தேவகி (வயது51). இவருக்கும் இவரது கொழுந்தன் சிவா (38) என்பவருக்கும் தகராறு ஏற்பட்டது. அப்போது குடிபோதையில் இருந்த சிவா, தேவகியை அவதூறாக பேசி கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

    இது குறித்து தேவகி மேலப்பாளையம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து சிவாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 
    ம.பி. முதல் மந்திரி சிவராஜ் சிங் சவுகானின் குடும்பம் பனாமா பேப்பர்ஸ் ஊழலில் சிக்கியுள்ளதாக கூறிய ராகுல் காந்தி மீது ம.பி. முதல் மந்திரியின் மகன் இன்று மானநஷ்ட வழக்கு தொடர்ந்தார். #ShivrajChouhan #KartikeyaChouhanson #defamationsuit #defamationsuitagainstRahul
    போபால்:

    மத்தியப்பிரதேசம் மாநிலம், ஜஹுபா பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ம.பி. முதல் மந்திரி சிவராஜ் சிங் சவுகான், அவரது மகன் கார்த்திகேயா சவுகான் மற்றும் குடும்பத்தினருக்கு பனாமா பேப்பர்ஸ் ஊழல், வியாபம் ஊழல் ஆகியவற்றில் தொடர்பு இருப்பதாக குற்றம்சாட்டி இருந்தார்.

    இந்த குற்றச்சாட்டை மறுத்த சிவராஜ் சிங் சவுகான், தவறாத தகவலை வெளியிட்டதற்காக ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையென்றால் சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன் என எச்சரித்திருந்தார்.

    இதற்கு பதிலளித்த ராகுல் காந்தி, பா.ஜ.க.வினர் ஏராளமான ஊழல்களில் ஈடுபட்டு வருவதால் குழப்பத்தில் ம.பி. முதல் மந்திரி சிவராஜ் சிங் சவுகானின் குடும்பம் பனாமா பேப்பர்ஸ் ஊழலில் சிக்கியுள்ளதாக குழப்பத்தில் தெரிவித்து விட்டேன்.

    பனாமா ஊழலில் அவர்களுக்கு தொடர்பு இல்லை. ஆனால், வியாபம் உள்ளிட்ட சில ஊழல்களில் அவர்களுக்கு நெருங்கிய தொடர்பு உண்டு என்று குறிப்பிட்டார்.

    இந்நிலையில், கார்த்திகேயா சவுகான் சார்பில் அவரது வழக்கறிஞர் ஷிரிஷ் ஸ்ரீவஸ்தவா இன்று ராகுல் காந்தி மீது மானநஷ்ட வழக்கு தொடர்ந்துள்ளார்.  #ShivrajChouhan #KartikeyaChouhanson #defamationsuit #defamationsuitagainstRahul
    அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் பற்றி சமூக வலைதளத்தில் அவதூறு பரவியது குறித்து வெற்றிவேல் போலீசில் புகார் அளித்தார்.
    ராயபுரம்:

    அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் பற்றி சமூக வலைதளத்தில் அவதூறு பரவியது. இதுபற்றி அவரது ஆதரவாளர் வெற்றிவேல் ஆர்.கே.நகர் போலீசில் புகார் செய்தார்.

    அந்த புகாரில் கூறி இருப்பதாவது:-

    டி.டி.வி.தினகரன் பற்றி தர்ம ரக்‌ஷன சபாவின் மாநில தலைவரான செல்வம், சமூக வலைதளத்தில் அவதூறு கருத்துக்களை பரப்பி வருகிறார்.

    ஆர்.கே.நகர் தொகுதியில் தினகரன் 50 ஆயிரம் பேருக்கு வீடு கட்டித் தருவதாகவும், கழிப்பறை கட்டித் தருவதாகவும் பொய் வாக்குறுதி அளித்து ஏமாற்றி விட்டார் என்று குறிப்பிட்டு அவதூறு பரப்பி வருகிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு புகார் மனுவில் கூறி இருந்தார்.

    இதையடுத்து தர்ம ரக்‌ஷன சபா மாநில தலைவர் செல்வத்தை போலீசார் போலீஸ் நிலையத்துக்கு வரவழைத்தனர். பின்னர் அவரை எச்சரித்து அனுப்பினார்கள்.
    ×