என் மலர்
நீங்கள் தேடியது "Defence Ministry"
- இந்த ஒப்பந்தத்தில் கிட்டத்தட்ட பாதியை ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனம் பெற்றுள்ளது.
- இந்திய கடற்படைக்கு இந்திய தயாரிப்பான 60 யுடிலிட்டி ஹெலிகாப்டர்கள் வாங்கப்படும்
புதுடெல்லி:
இந்திய பாதுகாப்பு படைகளுக்கு ரூ.70 ஆயிரம் கோடி மதிப்பிலான பல்வேறு ஆயுதங்களை வாங்க மத்திய பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல் வழங்கி உள்ளது. டெல்லியில் நடைபெற்ற பாதுகாப்பு கொள்முதல் கவுன்சில் கூட்டத்தில், இந்த கொள்முதல் திட்டத்திற்கு பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் ஒப்புதல் அளித்தார்.
இந்த ஒப்பந்தத்தில் கிட்டத்தட்ட பாதியை ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனம் பெற்றுள்ளது. அதாவது, ரூ.32 ஆயிரம் கோடி மதிப்பில் 60 ஹெலிகாப்டர்கள் வாங்க ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்திடம் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
இது தவிர, இந்திய கடற்படைக்கு இந்திய தயாரிப்பான 60 யுடிலிட்டி ஹெலிகாப்டர்கள் மற்றும் பிரம்மோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணைகள், இந்திய ராணுவத்திற்கு 307 ஏடிஏஜிஎஸ் ஹோவிட்சர்கள் மற்றும் இந்திய கடலோர காவல்படைக்கு 9 ஏஎல்எச் துருவ் ஹெலிகாப்டர்கள் ஆகியவை அனுமதிக்கப்பட்ட திட்டங்களுக்கு ஏற்ப வாங்கப்படும்.
- ராணுவ ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி அமைப்பு நாட்டின் பாதுகாப்புக்காக பல்வேறு ஏவுகணைகளை தயாரித்துள்ளது.
- இந்தியாவிடம் ஏற்கனவே பிருதிவி, ஆகாஷ், நாக், திரிசூல், அக்னி ஏவுகணைகள் உள்ளன.
புதுடெல்லி:
ராணுவ ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி அமைப்பு நாட்டின் பாதுகாப்புக்காக பல்வேறு ஏவுகணைகளை தயாரித்து உள்ளது. இந்தியாவிடம் ஏற்கனவே பிருதிவி, ஆகாஷ், நாக், திரிசூல், அக்னி ஏவுகணைகள் உள்ளன.
இந்நிலையில், குறுகிய தூரம் சென்று இலக்கை தாக்கும் அக்னி 1 ஏவுகணை சோதனை இன்று வெற்றிகரமாக நடத்தப்பட்டது என பாதுகாப்புத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக பாதுகாப்புத்துறை அமைச்சகம் வெளியிட்ட எக்ஸ் தள செய்தியில், அக்னி-1 என்ற குறுகிய தூர பாலிஸ்டிக் ஏவுகணையின் வெற்றிகரமான பயிற்சி ஏவுதல் வியாழக்கிழமை ஒடிசாவின் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் தீவில் இருந்து மூலோபாயப் படைகளின் கட்டளையால் மேற்கொள்ளப்பட்டது.
இந்த ஏவுகணை ஒரு நிரூபிக்கப்பட்ட அமைப்பு. மிக உயர்ந்த துல்லியத்துடன் இலக்குகளைத் தாக்கும் திறன் கொண்டது. பயனர் பயிற்சி ஏவுகணையின் அனைத்து செயல்பாட்டு மற்றும் தொழில்நுட்ப அளவுருக்கள் வெற்றிகரமாக சரிபார்க்கப்பட்டது என தெரிவித்துள்ளது.
- புதிதாக தளவாடங்கள் வாங்க 1.45 லட்சம் கோடி ரூபாய் நிதியை பாதுகாப்புத்துறை ஒதுக்கியது.
- இதில் ராடார், பீரங்கிகள் மற்றும் போர் விமானங்கள் வாங்க ஒப்புதல் வழங்கப்பட்டது.
புதுடெல்லி:
இந்திய கடற்படைக்கு மேலும் போர் விமானங்களை கொள்முதல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இது தொடர்பாக பிரான்ஸ் அரசு மற்றும் விமானம் தயாரிக்கும் நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
இந்திய கடற்படைக்குச் சொந்தமான விமானம் தாங்கி கப்பலான ஐ.என்.எஸ். விக்ராந்திற்கு ரபேல்-எம் ரக போர் விமானங்கள் தேவைப்படுகிறது. இதற்காக 26 போர் விமானங்கள் வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்திய ராணுவத்துக்கு ஆயுதங்கள் மற்றும் உபகரணங்கள் வாங்கும் மத்திய அமைச்சகத்தின் பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் இன்று நடைபெற்றது.
இதில் பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் தலைமை தாங்கினார். இந்தக் கூட்டத்தில் புதிதாக தளவாடங்கள் வாங்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதற்காக 1.45 லட்சம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
ரூ.70 ஆயிரம் கோடி செலவில் 7 போர்க்கப்பல்கள் கட்டுவதற்காக ஒப்புதல் வழங்கப்பட இருக்கிறது. இந்த கப்பல்கள் ஒவ்வொன்றும் 8 ஆயிரம் டன் எடை கொண்டவை ஆகும். மேலும் தாக்கும் திறனும் அதிகமாக இருக்கும்.
பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் அமெரிக்கா சென்றிருந்தபோது பென்டகனில் ஜெனரல் அணுமின் உற்பத்தியாளர் அவருக்கு பிரிடேட்டர் ட்ரோன்களை பற்றி விளக்கக் காட்சியை வழங்கினார். இதன்பின் இந்த பிரிடேட்டர் ஆயுதமேந்திய ஆளில்லா விமானங்கள் வாங்குவதற்கான ஒப்பந்தம் வரும் அக்டோபர் 31-ம் தேதிக்குள் கையெழுத்தாகிவிடும் என தெரிகிறது.
அதேபோல் ரபேல்-எம் போர் விமானங்களைக் வாங்குவதால் வரும் மூன்று மாதங்களில் இந்திய ஆயுதப் படைகளின் திறன், குறிப்பாக இந்தியக் கடற்படைக்கு பெரிய ஊக்கம் கிடைக்கும். மேலும் 3 கூடுதல் கல்வாரி வகை நீர்மூழ்கிக் கப்பல்கள் இந்த ஆண்டு இறுதிக்குள் அனுமதி அளிக்கப்படும்.
இந்தக் கூட்டத்தின் இறுதியில் கடலோர காவல்படை தலைமை இயக்குனர் ராகேஷ் பால் மறைவுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
- இந்த இடஒதுக்கீடு முன்னாள் ராணுவத்தினருக்கான ஒதுக்கீடை விட கூடுதலாக இருக்கும்.
- பாதுகாப்பு பொதுத்துறை நிறுவனங்கள் ஆட்சேர்ப்பு விதிகளில் திருத்தம் செய்யப்படும்.
அக்னிபாத் திட்டம் மூலம் ராணுவத்தில் 4 வருடங்கள் மட்டும் பணி வழங்கப்படுவதற்கு வட மாநிலங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. அங்குள்ள இளைஞர்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், அக்னிபாத் திட்டத்தில் இணையும் வீரர்களுக்கு, பணி நிறைவுக்கு பிறகு அவர்களின் தகுதிக்கு ஏற்ப, பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் உள்ள இந்திய கடலோர காவல்படை உள்பட 16 பணிகளில் 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்க, பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத்சிங் ஒப்புதல் அளித்துள்ளார்.
இது தொடர்பாக ராணுவம் கடற்படை மற்றும் விமானப்படையின் உயர் அதிகாரிகளுடன் பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத்சிங் டெல்லியில் இன்று ஆலாசனை நடத்தினார். இந்த கூட்டத்திற்கு பிறகு 10 சதவீத இட ஒதுக்கீட்டிற்கான முன்மொழிதலுக்கு ராஜ்நாத்சிங் ஒப்புதல் வழங்கியதாக பாதுகாப்புத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்த இடஒதுக்கீடு முன்னாள் ராணுவத்தினருக்கான ஒதுக்கீடை விட கூடுதலாக இருக்கும் என்று தமது டுவிட்டர் பதிவில் பாதுகாப்புத்துறை அமைச்சகம் கூறியுள்ளது. இது தொடர்பான ஆட்சேர்ப்பு விதிகளில் தேவையான திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
பாதுகாப்பு பொதுத்துறை நிறுவனங்கள் தங்களுக்குரிய ஆட்சேர்ப்பு விதிகளில் திருத்தங்களைச் செய்ய அறிவுறுத்தப்படும் என்றும், தேவையான வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும் என்றும் ராஜ்நாத்சிங் தெரிவித்துள்ளார்.
முன்னதாக அக்னிபாத் திட்டத்தின் கீழ் பணியாற்றும் வீரர்களில் 25 சதவீதம் பேர் பணி நிறைவுக்கு பின்னர் ராணுவத்தில் வழக்கமான சேவைக்காக நியமிக்கப்படுவார்கள் என்று மத்திய அரசு அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.


இந்திய விமானப்படைக்கு பிரான்சிடம் இருந்து 36 ரபேல் ரக போர் விமானங்களை வாங்க மத்திய அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. ரூ.58 ஆயிரம் கோடிக்கு இந்த விமானங்கள் வாங்கப்படுகின்றன.
ரபேல் விமானங்களை வாங்க காங்கிரஸ் ஆட்சி காலத்திலேயே ஒப்பந்தம் போடப்பட்டது. பின்னர் அந்த ஒப்பந்த்தை மாற்றி அமைத்து கடந்த 2015-ம் ஆண்டில் பாரதிய ஜனதா ஆட்சியில் புதிய ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது.
பிரான்ஸ் நாட்டில் இருந்து வாங்கப்படும் போர் விமானங்களை பராமரிக்கும் பொறுப்பை இந்திய அரசுக்கு சொந்தமான எச்.ஏ.எல். நிறுவனத்துக்கு வழங்காமல் விமானத்துறையில் முன் அனுபவம் இல்லாத அம்பானிக்கு சொந்தமான ரிலையன்ஸ் குழுமத்துக்கு அளிக்கும் வகையில் இந்த ஒப்பந்தம் உருவாக்கப்பட்டுள்ளது.
மேலும், அதிக தொகை கொடுத்து விமானத்தை வாங்க ஒப்பந்தம் செய்திருப்பதாகவும், இதில் ஊழல் நடந்திருப்பதாகவும் காங்கிரஸ் குற்றம்சாட்டி வருகிறது.
இதற்கிடையே, ரபேல் போர் விமானங்கள் வாங்கும் ஒப்பந்தத்தில் அம்பானி நிறுவனத்தை நுழைத்தது இந்திய அரசின் நிர்பந்தத்தால்தான் என பிரான்ஸ் முன்னாள் அதிபர் பிராங்கோயிஸ் ஹாலன்டே நேற்று குறிப்பிட்டிருந்தார்.

மேலும், பிரான்ஸ் முன்னாள் அதிபரின் பத்திரிகை பேட்டியை வைத்து தேவையில்லாத சர்ச்சைகள் எழுப்பப்படுவதாகவும் ராணுவ அமைச்சகம் வெளியிட்டுள்ள விளக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #Hollande #RafaleDeal #DefenceMinistry
