என் மலர்
நீங்கள் தேடியது "Delhi accident"
- போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் காரை டிரைவர் அதிவேகத்தில் ஓட்டியபோது கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையில் நடந்து சென்றவர்களை மோதியது தெரிய வந்துள்ளது.
- தாறுமாறாக ஓடிய கார் நின்றிருந்த மேலும் 2 வாகனங்களிலும், சாலையோர கடைகள் மீதும் மோதியது.
டெல்லி:
டெல்லி மலை மந்திர் பகுதியில் வேகமாக சென்ற கார் தாறுமாறாக ஓடி சாலையில் நடந்து சென்றவர்கள் மீது வேகமாக மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே 2 பேர் உயிரிழந்தனர். மேலும் குழந்தைகள் உட்பட 8 பேர் படுகாயமடைந்தனர். விபத்து குறித்து தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.
படுகாயமடைந்து உயிருக்கு போராடியவர்களை ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. உயிரிழந்த 2 பேர் வசந்த் விகார் பகுதியை சேர்ந்த முன்னா, சமீர் என்பது தெரிய வந்தது.
முதல்கட்ட விசாரணையில் காரை டிரைவர் அதிவேகத்தில் ஓட்டியபோது கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையில் நடந்து சென்றவர்களை மோதியது தெரிய வந்துள்ளது. தாறுமாறாக ஓடிய கார் அங்கு நின்றிருந்த மேலும் 2 வாகனங்களிலும், சாலையோர கடைகள் மீதும் மோதியது.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பொதுமக்கள் மீது காரை மோதியதும் டிரைவர் அங்கிருந்து காரை பின்நோக்கி நகர்த்தி வேகமாக தப்பி செல்ல முயன்றார்.
- விபத்து குறித்து தகவல் அறிந்த போலீசார் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து டிரைவரை கைது செய்தனர்.
காஜியாபாத்:
கிழக்கு டெல்லி காஜிப்பூரில் புத் பஜார் என்ற மார்க்கெட் உள்ளது. இங்கு எப்போதும் பொதுமக்கள் கூட்டம் நிறைந்து காணப்படும். நேற்று இரவு 9.30 மணியளவில் பொதுமக்கள் மார்க்கெட்டில் பொருட்களை வாங்கிக்கொண்டு இருந்தனர்.
அப்போது திடீரென ஒரு கார் கூட்டத்தில் வேகமாக புகுந்தது. கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த இந்த விபத்தில் காஜியாபாத்தை சேர்ந்த சீதா தேவி என்ற 22 வயது இளம்பெண் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் 5 பெண்கள் உள்பட 7 பேர் படுகாயமடைந்தனர். அவர்களை அருகில் இருந்தவர்கள் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
பொதுமக்கள் மீது காரை மோதியதும் டிரைவர் அங்கிருந்து காரை பின்நோக்கி நகர்த்தி வேகமாக தப்பி செல்ல முயன்றார். ஆனால் பொதுமக்கள் காரை சிறிது தூரம் விரட்டி பிடித்து டிரைவரை மடக்கி பிடித்தனர். விபத்து ஏற்படுத்திய டிரைவர் மது போதையில் இருந்ததாக தெரிகிறது.
இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து டிரைவரை கைது செய்தனர். அவர் மீது வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கடந்த மே 15 ஆம் தேதி வரை 511 விபத்துகளில் மொத்தம் 518 பேர் உயிரிழப்பு.
- கடந்த ஆண்டு இதே காலத்தில் 544 விபத்துகளில் 552 இறப்பு.
டெல்லியில் இந்த ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில் சாலை விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக டெல்லி காவல்துறை வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மே 15 ஆம் தேதி வரை 511 விபத்துகளில் மொத்தம் 518 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த ஆண்டு இதே காலத்தில் 544 விபத்துகளில் 552 இறப்புகள் ஏற்பட்டதாக பதிவாகியுள்ளது.
தேசிய நெடுஞ்சாலை-24, என்எச்-8, ரிங் ரோடு, ரோஹ்தக் சாலை, ஜிடி சாலை மற்றும் மதுரா சாலை போன்ற பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்டோம். இந்த ஆண்டு இதுவரை அதிக எண்ணிக்கையிலான விபத்துக்கள் நிகழ்ந்த டெல்லியின் முதல் பத்து சாலைகளில் ஒன்றாகும்.
இந்த ஆய்வு தகவலின் மூலம், சாலைப் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கும், போக்குவரத்து விதிமுறைகளுக்கு இணங்குவதை உறுதி செய்வதற்கும் இலக்கு அமலாக்க நடவடிக்கைகளைச் செயல்படுத்த முடியும், இறுதியில் இந்த சாலைகளில் ஏற்படும் உயிரிழப்புகளைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளதாக, மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
"பள்ளிகள், கல்லூரிகளுடன் இணைந்து பல கல்வித் திட்டங்கள் மற்றும் சாலை பாதுகாப்பு விதிமுறைகள் மற்றும் பாதுகாப்பான ஓட்டுநர் நடைமுறைகள் குறித்து மக்களுக்கு கற்பிக்க ராஹ்கிரி போன்ற விழிப்புணர்வு பிரச்சாரங்கள் தொடர்ந்து நடத்தப்படுகின்றன," என்று அதிகாரி கூறினார்.
- தேசிய தலைநகரில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தகவல்.
- விபத்தில் இன்னும் பலர் இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
டெல்லி கரோல் பாக்கில் கட்டிடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்து ஏற்பட்ட விபத்தில் 3 பேர் உயிரிழந்த நிலையில், 12 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர்.
விபத்து குறித்து தகவல் அறிநத் சம்பவ இடத்திற்கு விரைந்த டெல்லி தீயணைப்புத் துறையினர், போலீசார் மற்றும் தேசிய பேரிடர் மீட்புப் படையைச் சேர்ந்த பணியாளர்கள் தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த சம்பவம் குறித்து காலை 9.11 மணிக்கு தகவல் கிடைத்ததும் டெல்லி தீயணைப்பு துறையினர் 5 தீயணைப்பு வாகனங்களுடன் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.
இதுவரை குறைந்தது 12 பேர் மீட்கப்பட்டுள்ளனர். ஆனால் இன்னும் பலர் இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தேசிய தலைநகரில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.