என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Delhi AIIMS Hospital"

    • மருத்துவமனையின் எண்டோஸ்கோபி அறையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
    • விபத்து ஏற்பட்ட பகுதியில் இருந்த நோயாளிகள் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர்.

    டெல்லி:

    டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. மருத்துவமனையின் எண்டோஸ்கோபி அறையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீ விபத்து ஏற்பட்ட பகுதியில் இருந்த நோயாளிகள் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர்.

    தீ விபத்து குறித்து தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் 8 தீயணைப்பு வாகனங்கள் மூலம் தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த தீ விபத்தால் எய்ம்ஸ் மருத்துவமனை வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக முதல்கட்ட தகவல்கள் கூறுகின்றன.

    • டெல்லி எய்ம்ஸில் உள்ள புறநோயாளிகள் பிரிவுக்கு தினமும் சுமார் 15,000 நோயாளிகள் வருகின்றனர்.
    • ஸ்கேன்கள் எடுக்க ஆறு மாதங்கள் முதல் மூன்று ஆண்டுகள் வரையில் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

    நாட்டின் தலைநகர் டெல்லியில் உள்ள பிரபல எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்கு வந்த நோயாளி ஒருவருக்கு எம்ஆர்ஐ ஸ்கேன் எடுக்க 3 ஆண்டுகள் காத்திருப்பு காலம் வழங்கப்பட்டுள்ளது நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    சமீபத்தில், எய்ம்ஸ் மருத்தவமனையில் எலும்பியல் புறநோயாளி பிரிவில் 52 வயதாக ஜொய்திப் தேய் என்பவர் வலது காலில் ஏற்பட்ட காயத்திற்கு சிகிச்சை பெற மருத்துவரை அணுகியுள்ளார்.

    அவருக்கு எம்ஆர்ஐ ஸ்கேன் எடுக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அதற்கு பதிவு செய்ய முற்பட்டபோது ஜொய்திப் தேய்க்கு 2027ம் ஆண்டு செப்டம்பர் 7ம் தேதி அன்று எம்ஆர்ஐ ஸ்கேன் எடுக்க தேதி குறிப்பிட்டு வழங்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    ஆனால், இதுபோன்ற நீட்டிக்கப்பட்ட காத்திருப்பு காலம் இங்கு சாதாரணமானதான் என்கின்றனர். அதற்கு காரணம், எய்ம்ஸில் உள்ள புறநோயாளிகள் பிரிவுக்கு தினமும் சுமார் 15,000 நோயாளிகள் வருகின்றனர்.

    இவர்களில், சுமார் 10% பேருக்கு அல்ட்ராசவுண்ட், எக்ஸ்ரே மற்றும் எம்ஆர்ஐ ஸ்கேன் போன்ற கண்டறியும் இமேஜிங் நடைமுறைகள் பரிந்துரைக்கப்படுகிறது. இதனால், ஸ்கேன்கள் எடுக்க ஆறு மாதங்கள் முதல் மூன்று ஆண்டுகள் வரையில் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

    வெளியே தனியார் மருத்துவமனைகளில் எம்ஆர்ஸ் ஸ்கேனுக்கு ரூ.18,000 வரை செலவாகிறது. இதுவே, எய்ம்ஸ் மருத்துவமனையில் ரூ.2000 முதல் ரூ.3000 மட்டுமே கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

    இதனால், தான் வறுமைக் கோட்டுக்குக் கீழே இருப்பதால், டெல்லியல் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவது சாத்தியமற்றது. ஒரு எம்ஆர்ஐ ஸ்கேன் எடுக்க ரூ.18,000 முதல் ரூ.25,000 வரை செலவாகும். என்னிடம் அவ்வளவு பணம் இல்லை என்று கூறிய ஜொய்தீப் ஸ்கேன் எடுக்கும் முடிவையே கைவிட்டுள்ளார்.

    டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் இதுபோன்ற நீட்டித்த காத்திருப்பு காலத்தால் நோயாளிகள் கடுமையாக அவதிப்பட்டு வருகின்றனர்.

    • உத்தரபிரதேசத்தை சேர்ந்த 17 வயது சிறுவனுக்கு பிறக்கும் போதே வயிற்றில் 2 கால்கள் வளர்ந்துள்ளது.
    • இதனால் சிறுவனை பள்ளிக்கூடத்தில் பலர் கேலி செய்துள்ளனர்.

    தலைநகர் டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில், நான்கு கால்களுடன் பிறந்த 17 வயது சிறுவனின் தேவையற்ற 2 கால்களை அறுவை சிகிச்சை செய்து அகற்றி மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.

    உத்தரபிரதேசத்தின் பாலியாவைச் சேர்ந்த 17 வயது சிறுவனுக்கு பிறக்கும் போதே வயிற்றில் 2 கால்கள் வளர்ந்துள்ளது. இதனால் சிறுவனை பள்ளிக்கூடத்தில் பலர் கேலி செய்துள்ளனர். இதனால் மனமுடைந்த சிறுவன் படிப்பை நிறுத்தியுள்ளான்.

    இந்நிலையில், சிறுவனின் உடலில் தேவையின்றி வளர்ந்துள்ள 2 கால்களை எய்ம்ஸ் மருத்துவர்கள் வெற்றிகரமாக அகற்றியுள்ளனர்.

    இது தொடர்பாக பேசிய எய்ம்ஸ் மருத்துவமனையின் அறுவை சிகிச்சை துறையின் கூடுதல் பேராசிரியர் டாக்டர் அசுரி கிருஷ்ணா, "இரட்டையர்கள் கருத்தரிக்குபோது, அவர்களில் ஒருவரின் உடல் வளர்ச்சியடையாமல், அதன் உறுப்புகள் மற்ற குழந்தையின் உடலுடன் இணைக்கப்படும் இதுபோன்ற நிகழ்வுகள் ஒரு கோடி பேரில் ஒருவருக்கு மட்டுமே ஏற்படுகிறது" எபின்ரு தெரிவித்தார்.

    உலகம் முழுவதும் நான்கு கால்களுடன் 42 பேர் மட்டுமே பிறந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் வாஜ்பாய் உடல்நலம் குறித்து வைகோ நேரில் சென்று விசாரித்தார்.
    புதுடெல்லி:

    முன்னாள் பிரதமர் வாஜ்பாய் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவரை சந்தித்து உடல்நலம் விசாரிப்பதற்காக ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ நேற்று டெல்லி சென்றார். வாஜ்பாயின் உடல்நலம் குறித்து விசாரித்துவிட்டு வெளியே வந்த வைகோ நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    வாஜ்பாய் வளர்ப்பு மகள் நமீதாவிடம் வாஜ்பாய் உடல்நிலை பற்றி கவலையோடு விசாரித்தேன். அதற்கு அவர், ‘மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டது; சிறுநீர் கழிக்கும் பாதையிலும் இடையூறு ஏற்பட்டது; எனவே, முன் எச்சரிக்கையாக மருத்துவமனைக்கு கொண்டு வந்தோம். கவலைப்பட தேவை இல்லை என்று டாக்டர்கள் கூறி இருக்கிறார்கள்’ என்றார்.

    வாஜ்பாய்க்கு 2008-ம் ஆண்டு பக்கவாத தாக்குதல் வந்தது. கடந்த 11 ஆண்டுகளாக அவருக்கு ஆண்டுக்கு மூன்று நான்கு முறை டெல்லிக்கு வந்து, அவரது இல்லம் சென்று படுக்கைக்கு அருகில் நின்று, அவரது நலம் வேண்டி இயற்கை அன்னையை பிரார்த்தனை செய்து, அவரது கால்களை தொட்டு வணங்கி விட்டு, வளர்ப்பு மகள் நமீதா, மருமகன் ரஞ்சன் பட்டாச்சார்யா ஆகியோரோடு அமர்ந்து பேசிவிட்டுத் திரும்புவது வழக்கம்.

    முதல் இரண்டு ஆண்டுகள் நான் வந்து பார்த்தபோதெல்லாம் பேசிக்கொண்டுதான் இருந்தார். அதற்கு முன்பு, 1986-ம் ஆண்டு அவருக்கு சிறுநீரகத்தில் பாதிப்பு ஏற்பட்டு, இதே எய்ம்ஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட செய்தி, அரசியல் கட்சித் தலைவர்கள், எம்.பி.க்களுக்கு தெரியாது. ஆனால், எனக்கு தகவல் கிடைத்ததால் அவரை பார்க்கத் தனியாக வந்து அவரோடு அமர்ந்து அரை மணி நேரம் பேசினேன். மனம் நெகிழ்ந்து போனார். பின்னாளில் அதை பற்றிப் பலமுறை என்னிடம் சொல்லி இருக்கின்றார்.

    வாஜ்பாயை, அவருடைய உயிர் நண்பரான ஷிவ்குமாருடன், 1979-ல் மோதி மகால் ஓட்டலில் சந்தித்தேன். வாஜ்பாய்க்கு மெய்க்காப்பாளராகவும் இருந்து வருகின்ற ஷிவ்குமாரையும் சந்தித்தேன். அவர் என்னை ஆரத் தழுவிக்கொண்டார். ‘தலைவர் வாஜ்பாய் மீது உயிரான அன்பு கொண்டவர் நீங்கள்; அதைப்போல அவரும் உங்களை நேசிக்கின்றவர்’ என்று உணர்ச்சி வயப்பட்டு சொன்னார்.

    வாஜ்பாய் முழுமையான நலம் பெற வேண்டும் என்ற என் விருப்பத்தை, நமீதாவிடம் தெரிவித்தேன்.

    இவ்வாறு அவர் கூறினார். 
    ×