என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Delhi Air Pollution"
- காற்று மாசு கடுமையாக உள்ளதால் டெல்லியில் அடர்ந்த புகை மூட்டம் நிலவுகிறது.
- பனிப்பொழிவு அதிகம் உள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி:
தலைநகர் டெல்லியில் காற்று மாசு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இன்று 7-வது நாளாக காற்றின் மாசு அபாய கட்டத்தை எட்டி உள்ளது.
டெல்லி, நொய்டா, காசியாபாத், குருகிராம் ஆகிய நகரங்களில் இன்று அதிகாலை 5 மணிக்கு காற்றின் தரக்குறியீடு 500-ஐ தாண்டி விட்டது.
காற்று மாசு கடுமையாக உள்ளதால் டெல்லியில் அடர்ந்த புகை மூட்டம் நிலவுகிறது. பனிப்பொழிவும் அதிகமாக இருப்பதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
காற்று மாசுவினால் டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் ரெயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் விமான சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது. காற்று மாசுபாட்டால் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் இன்று முதல் ஆன்லைன் வகுப்புகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இந்தப் பிரச்சனைகளில் இருந்து தப்பிக்க பொதுமக்கள் மாஸ்க் அணிய தொடங்கி உள்ளனர்.
இந்நிலையில், காற்று மாசு அதிகரிப்பின் எதிரொலியாக வீட்டில் இருந்தே வேலை செய்யும் திட்டத்தை விரைவில் நடைமுறைக்கு கொண்டு வர உள்ளோம் என சுற்றுச்சூழல் துறை மந்திரி கோபால் ராய் தெரிவித்துள்ளார்.
மேலும், ஒற்றைப்படை, இரட்டைப்படை எண்கள் கொண்ட வாகனங்கள் இயக்கும் திட்டமும் விரைவில் நடைமுறைக்கு கொண்டு வருகிறோம் என தெரிவித்தார்.
- காற்று மாசால் டெல்லி மக்கள் மிகவும் பாதிப்படைந்துள்ளனர்.
- பள்ளிகள் ஆன்லைன் வகுப்புகள் நடத்த உத்தரவு.
தீபாவளி பண்டிகைக்குப் பிறகு டெல்லியில் காற்றின் தரம் மிகவும் மோசமான நிலையை அடைந்துள்ளது. தற்போது மிகமிக மோசமான நிலையை அடைந்துள்ளது. இதனால் பொதுமக்கள் கண் எரிச்சல் உள்ளிட்ட பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகியுள்ளனர். மாஸ்க் அணிந்துதான் வெளியில் செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
காற்று மாசுக்கு முக்கியமான காரணம் பஞ்சாப், அரியானா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் விவசாயக் கழிவுகள் அதாவது அறுவடை முடிந்தபின் சோளம் போன்ற கதிர்களின் தண்டுகள் உள்ளிட்ட கழிவுகளை எரிப்பதுதான். இதன் மூலமாக காற்றில் புகை கலந்து மாசு ஏற்படுகிறது.
விவசாயக் கழிவுகளை எரிக்கும் விவசாயிகளுக்கு அபராதம் விதிக்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக உச்சநீதிமன்றமும் கடுமையாக உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. இருந்த போதிலும் கழிவுகள் எரிக்கப்படுவது நிறுத்தப்படவில்லை.
இந்த நிலையில் காங்கிரஸ் ஆளும் பஞ்சாப் மாநிலத்தில் 80 சதவீதம் அளவிற்கு விவசாயக்கழிவுகள் எரிக்கப்படுவது குறைக்கப்பட்டுள்ளது. மற்ற மாநிலங்களுக்கு எதிராக மத்திய அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? என அதிஷி மத்திய அரசை சாடியுள்ளார்.
- மாநிலம் முழுவதும் நச்சு புகை சூழ்ந்து காணப்படுகிறது.
- டெல்லியில் இன்று முதல் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி:
தலைநகர் டெல்லி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் காற்று மாசு பிரச்சனை மிகவும் தீவிர மடைந்துள்ளது. மாநிலம் முழுவதும் நச்சு புகை சூழ்ந்து காணப்படுகிறது.
நேற்றிரவு 7 மணிக்கு காற்றின் தரக்குறியீடு 457 ஆக அதிகரித்தது. இந்நிலை யில் கடந்த 24 மணி நேரத்தில் காற்றின் தரக் குறியீடு 481 ஆக உயர்ந்துள்ளது. இதனால் டெல்லியில் இன்று முதல் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
அங்கு ஏற்கனவே கிராப் திட்டத்தின் 1, 2, 3 நிலை கட்டுப்பாடுகள் உள்ள நிலையில் 4-வது நிலை கட்டுப்பாடுகள் இன்று முதல் அமல்படுத்தப் பட்டுள்ளது.
அங்கு ஏற்கனவே 1 முதல் 5-ம் வகுப்பு வரை உள்ள மாணவ-மாணவி களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டு வரும் நிலையில் இன்று முதல் டெல்லியில் உள்ள பள்ளிகளில் 9-ம் வகுப்பு வரை படிக்கும் மாண வர்களுக்கு ஆன்லைன் மூலமாக பாடங்கள் நடத்தப் படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
அதே நேரம் அரசின் உத்தரவுப்படி 10 முதல் 12-ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு நேரடியாக வகுப்புகள் நடத்தப்படும்.
புதிய கட்டுப்பாடுகளின் படி அனைத்து வகையிலும் அரசு திட்ட கட்டுமான பணிகளுக்கு கனரக வாகனங்கள் டெல்லிக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்கள் ஏற்றி வரும் வாகனங்களுக்கு மட்டும் விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
மாநில அரசு, மாநகராட்சி ஊழியர்கள் 50 சதவீதம் பேர் வீட்டில் இருந்து பணியாற்ற உத்தரவிடப்பட்டுள்ளது. நகரில் அடர்ந்த பனி மூட்டம் காரணமாக இந்திய வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது.
அடர்ந்த பனி மூட்டம் காரணமாக விமான செயல்பாடுகளிலும் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால் டெல்லி விமான நிலையத்தில் விமானங்கள் வருகையில் 30 நிமிடங்கள் முதல் 1 மணி நேரம் வரை தாமதம் ஏற்பட்டது. பயணிகளுக்கு விமான அட்ட வணையை அந்தந்த நிறுவனங்கள் தெரிவிக்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்தினர்.
#WATCH | Delhi | A layer of smog envelops the national capital as air quality remains in the 'Severe' category as per the Central Pollution Control Board (CPCB).
— ANI (@ANI) November 18, 2024
Drone visuals from the Vasant Kunj area shot at 8:15 am pic.twitter.com/yuvzOcCaNi
#WATCH | Delhi: People take a morning walk around Kartavya Path amid a dense layer of smog enveloping various parts of the city.
— ANI (@ANI) November 18, 2024
As per the Central Pollution Control Board, the air quality here has dropped to 'Severe' category. pic.twitter.com/FH0wWaKJ9f
- நகரம் முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது.
- காற்றின் மாசு தரம் இருந்தால் மோசமானதாக கருதப்படுகிறது.
டெல்லி:
டெல்லியில் தீபாவளி பண்டிகையை தொடர்ந்து காற்று மாசு அதிகரித்து வருகிறது. கடந்த ஒரு வாரத்தில் இன்று மோசமான நிலைக்கு காற்று மாசு சென்றது. காலை 8 மணி நிலவரப்படி காற்றின் தரம் 317 ஆக இருந்தது.
ஆனால் காலை 6 மணி நிலவரபடி டெல்லியில் ஒட்டு மொத்த காற்றின் தரக்குறியீடு 434 ஆக இருந்தது. இது உலக சுகாதார மையம் பரிந்துரைத்த ஆபத்து வரம்பை விட 59 மடங்கு அதிகமாக உள்ளது. காற்று மாசு அதிகரிப்பால் நகரம் முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது.
காற்றின் அதிக மாசால் நுரையீரல் மற்றும் மூளை பாதிப்பு உண்டாக்கும் அபாயம் ஏற்படும். கடுமையான அளவில் உடல் நலத்தை பாதிக்கும். 200 மற்றும் 300-க்கு இடையில் காற்றின் மாசு தரம் இருந்தால் மோசமானதாக கருதப்படுகிறது.
300-400க்கு இடையில் மிகவும் மோசமானதாகவும், 400-450-க்கு இடையில் கடுமையானது என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் இன்று ஆனந்தவிஹார் பகுதியில் காற்று மாசு 627 ஆகவும், அலிபூர் பகுதியில் 388, பஞ்சாபிபாக் 319, நரேலா 372, ஆர்.கே.புரம் 268, பவானா 368, ஐ.டி.ஐ. ஷஹ்த்ராவில் 408 ஆகவும் இருந்தது.
சுமார் 200 நகரும் புகை எதிர்ப்பு கருவிகள் மூலம் டெல்லியில் காற்று மாசை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று அமைச்சர் கோபால் ராய் தெரிவித்துள்ளார்.
- விமான நிலையம் பகுதியில் 324 ஆகவும், அஷர்தாம் பகுதியில் 261 ஆகவும் காற்றின் தர குறியீடு பதிவானது.
- நகரின் சில பகுதிகளில் அடர்த்தியான புகை மூட்டம் காணப்பட்டது.
புதுடெல்லி:
தலைநகர் டெல்லியில் கடந்த சில நாட்களாக காற்று மாசு நிலவி வருகிறது. இந்த நிலையில் காற்று மாசு கடுமையாக இருந்தது. ஆனந்த் விஹார் பகுதியில் இன்று காலை காற்றின் தர குறியீடு 405-யை தாண்டியது. இது மிகவும் மோசமான அளவு ஆகும். விமான நிலையம் பகுதியில் 324 ஆகவும், அஷர்தாம் பகுதியில் 261 ஆகவும் காற்றின் தர குறியீடு பதிவானது.
ஒட்டுமொத்தமாக காற்றின் தரக் குறியீடு 352 ஆக இருந்தது. நகரின் சில பகுதிகளில் அடர்த்தியான புகை மூட்டம் காணப்பட்டது. இந்த காற்று மாசுவால் மூச்சு திணறல் ஏற்பட்டு அவதி அடைந்ததாக மக்கள் தெரிவித்தனர்.
- வாகனப்புகை மாசுபாடு, சாலைப் புழுதி, கட்டுமானப் புழுதி தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
- தீபாவளி போன்ற இந்து பண்டிகைகள் மீது குற்றம் சுமத்துகிறார்கள்.
டெல்லியில் கடந்த சில தினங்களாக காற்று மாசுபாடு மிகவும் மோசமாக உள்ளது. இன்றும் மோசமான நிலையை எட்டியுள்ளது. இன்று 400-க்கும் அதிகமான இடங்களில் காற்றுமாசு மோசமான நிலையை எட்டியுள்ளது. இந்த நிலையில் டெல்லி கியாஸ் (எரிவாயு) அரங்கமாகியுள்ளது என பா.ஜ.க. செய்தி தொடர்பாளர் ஷேசாத் பூனவாலா விமர்சித்துள்ளார்.
இது தொடர்பாக ஷேசாத் பூனவாலா கூறியதாவது:-
இன்று, மீண்டும் ஒருமுறை காற்று மாசு மோசமான கட்டத்தை தாண்டியுள்ளது. 400 இடங்களில் வழக்கமான அளவை தாண்டியுள்ளது. டெல்லி எரிவாயு அரங்கமாகியுள்ளது. இதற்கு அரவிந்த் கெஜ்ரிவால்தான் பொறுப்பு. ஏனென்றால், பத்து ஆண்டுகளாக டெல்லியில் மாசு ஏற்படுவதற்கான உள் காரணங்கள் குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
வாகன மாசுபாடு, சாலைப் புழுதி, கட்டுமானப் புழுதி அல்லது உயிர்ப்பொருள் எரிப்பு தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அவர்கள் தீபாவளி போன்ற இந்து பண்டிகைகள் மீது குற்றம் சுமத்துகிறார்கள். தீபாவளிக்கு பட்டாசு வெடித்தல் மற்றும் தீபம் ஏற்றுதலுக்கு தடைவிதிக்கிறார்கள். டெல்லி கியாஸ் அரங்கமாக மாறி வருகிறது. காற்று முதல் தண்ணீர் வரை விசமாகியுள்ளது. அரவிந்த் கெஜ்ரிவாலின் விஷ அரசியலுக்கு நன்றி.
இவ்வாறு ஷேசாத பூனவாலா தெரிவித்துள்ளார்.
- காற்று மாசு மிகவும் அதிகரித்ததை தொடர்ந்து டெல்லியில் கடந்த 9-ந்தேதி முதல் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது.
- கடந்த 17-ந்தேதி காற்று மாசு 405 ஆக இருந்தது. அது நேற்று 319 ஆக குறைந்துள்ளது.
புதுடெல்லி:
டெல்லியில் காற்றின் தரம் மிகவும் மோசமாக உள்ளது. குறிப்பாக தீபாவளி மற்றும் அதற்கு முந்தைய நாட்களில் டெல்லியில் காற்று மாசுபாடு மிகவும் அதிக அளவில் இருந்தது.
காற்று மாசு மிகவும் அதிகரித்ததை தொடர்ந்து டெல்லியில் கடந்த 9-ந்தேதி முதல் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது.
இந்த நிலையில் டெல்லியில் தற்போது காற்று மாசு குறைந்துள்ளது. கடந்த 17-ந்தேதி காற்று மாசு 405 ஆக இருந்தது. அது நேற்று 319 ஆக குறைந்துள்ளது. இதையடுத்து டெல்லியில் நாளை (20-ந்தேதி) முதல் பள்ளிகள் திறக்கப்படுகின்றன. நாளை முதல் அனைத்து பள்ளிகளும் திறக்கப்படும் என்று டெல்லி மாநில அரசு தெரிவித்து உள்ளது.
அதேபோல் டெல்லியில் காற்று மாசு அதிகரித்து இருந்த நேரத்தில் கட்டுமான பணிகளை மேற்கொள்ளும் வாகனங்கள் மற்றும் 4 சக்கர வணிக வாகனங்கள் டெல்லியில் நுழைய தேசிய காற்றுத்தர மேலாண்மை ஆணையம் தடை விதித்து இருந்தது.
தற்போது காற்று மாசு குறைந்ததை தொடர்ந்து டெல்லி நகருக்குள் கட்டுமான பணிகளை மேற்கொள்ளும் வாகனங்கள் மற்றும் 4 சக்கர வணிக வாகனங்கள் நுழைய விதிக்கப்பட்டு இருந்த தடையும் நீக்கப்பட்டு உள்ளது.
- சர்வதேச குழு ஒன்று காற்றின் தரத்தை அளவிட்டு பட்டியல் வெளியிட்டுள்ளது.
- வாகனங்கள் அதிகளவில் செல்வதாலும் காற்று மாசு ஏற்படுவதாக கூறப்படுகிறது.
புதுடெல்லி:
டெல்லியில் கடந்த மாதம் 28-ந்தேதி முதல் 2 வாரம் காற்று மாசு அதிகரித்து காணப்பட்டது. தீபாவளிக்கு முன்னர் காற்று மாசு ஓரளவு குறைந்தது.
இந்த நிலையில் தீபாவளி பண்டிகைக்கு வெடித்த பட்டாசால் மீண்டும் காற்று மாசு அதிகரித்தது. காற்றின் தரம் குறைந்து நகரம் முழுவதையும் மூடு பனி ஆக்கிரமித்து இருப்பது போல் காணப்படுகிறது.
எங்கு பார்த்தாலும் புகை மண்டலமாக இருக்கிறது. இதனால் குழந்தைகள், ஆஸ்துமா நோயாளிகள் மிகவும் பாதிக்கப்பட்டனர்.
புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களும் மிகுந்த சிரமம் அடைந்தனர். புறநகர் பகுதிகளில் இருந்து காற்று மாசு டெல்லியின் மைய பகுதியிலும் தற்போது தொற்றிக் கொண்டுள்ளது. வரலாறு காணாத வகையில் டெல்லியில் காற்று மாசு அதிகரித்துள்ளது.
நேற்று மதியம் மத்திய அரசின் ஷபார் செயலியின்படி, டெல்லியில் காற்றின் தரக் குறியீடு (ஏ.கியூ.ஐ) 445 ஆக இருந்தது, சில இடங்களில் 520-க்கு மேல் பதிவாகியது.
101 மற்றும் 200-க்கு இடைப்பட்ட நிலைகள் மிதமானதாகக் கருதப்படுகின்றன.
அதே சமயம் 201 மற்றும் 300-க்கு இடைப்பட்டவை மோசமானவை. 301 மற்றும் 400 க்கு இடையில் மிகவும் மோசமானது என வகைப்படுத்தப்பட்டுள்ளது. மற்றும் 400 ஐ விட அதிகமான எண்ணிக்கை கடுமையானது என்று கருதப்படுகிறது.
ஆனால் சில பகுதிகளில் டெல்லியின் காற்றின்தரம் (ஏ.கியூ.ஐ) பரிந்துரைக்கப்பட்ட அளவை விட 30 மடங்கு அதிகமாக உள்ளது.
டெல்லியின் நச்சுக் காற்றை சுவாசிப்பது ஒரு நாளைக்கு 25 ல் இருந்து 30 சிகரெட்டுகளை புகைப்பதற்கு சமம் என்று நுரையீரல் நிபுணர்கள் கூறியுள்ளனர்.
அதிக அளவு மாசுபாடுகளை நீண்ட நேரம் வெளிப்படுத்துவது மக்களுக்கு சுவாசிப்பதில் சிரமத்தை ஏற்படுத்தும்.
இது தோல் மற்றும் கண் எரிச்சலைத் தூண்டும் மற்றும் ஆஸ்துமா, நாள்பட்ட தடுப்பு நுரையீரல் நோய், மூச்சுக்குழாய் அழற்சி, நுரையீரல் திறன் இழப்பு, எம்பிஸிமா, புற்றுநோய் மற்றும் கடுமையான நரம்பியல், இருதய மற்றும் சுவாச நோய்களை ஏற்படுத்தும்.
டெல்லி அரசு கடந்த சில ஆண்டுகளாக தீபாவளியின் போது பட்டாசு வெடிக்க தடை விதித்துள்ளது. இந்தாண்டும் பட்டாசு வெடிக்க தடை விதித்தது. ஆனால் அதையும் மீறி அதிகளவிலான பட்டாசு வெடித்ததே இந்த மோசமான சூழ்நிலைக்கு காரணமாகும் என கூறப்படுகிறது.
வாகனங்கள் அதிகளவில் செல்வதாலும் காற்று மாசு ஏற்படுவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் டெல்லி அமைச்சர் ராஜ்குமார் ஆனந்த் முக்கிய பகுதிகளில் ஆய்வு செய்தார். எல்லையில் சோதனை நடத்தினார்.
அத்தியாவசிய பொருட்களை ஏற்றி செல்லும் வாகனங்களை மட்டுமே நகருக்குள் அனுமதித்தார். மற்ற வாகனங்களை திருப்பி அனுப்பினார். இதனை கடுமையாக பின்பற்றுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
தீபாவளிக்கு முன்பு காற்று மாசு குறைவாக இருந்தது. பட்டாசு அதிகளவில் வெடித்ததால் மீண்டும் காற்று மாசு அதிகரித்துள்ளது என்று மாநில அரசும், மத்திய அரசும் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டி வருகின்றனர்.
சர்வதேச குழு ஒன்று காற்றின் தரத்தை அளவிட்டு பட்டியல் வெளியிட்டுள்ளது. அதில் டெல்லியில் காற்றின் தரக்குறியீடு 445 என்ற அளவில் உள்ளதாகவும் அது உலகளவில் காற்று மாசு பட்டியலில் டெல்லி முதலிடத்தைபிடித்துள்ளது என்றும் கூறியுள்ளது.
இந்த பட்டியலில் 6-வது இடத்தில் மும்பையும், 7-வது இடத்தில் கொல்கத்தாவும் உள்ளது.
- டெல்லியில் காற்றின் தரம் தொடர்ந்து இரண்டாவது நாளாக மோசமான நிலையில் உள்ளது.
- அடுத்த ஆண்டுக்குள் வேளாண் கழிவுகளை எரிப்பது குறையும் என கெஜ்ரிவால் தகவல்
புதுடெல்லி:
தொழிற்சாலைகள், வாகன புகை, கார்பன் வெளியேற்றம் உள்ளிட்ட பல்வேறு காரணிகளால் டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் காற்று மாசுபாடு அதிகரித்து வருகிறது. மேலும், டெல்லியை சுற்றியுள்ள பஞ்சாப், அரியானா உள்ளிட்ட சில மாநிலங்களில், வேளாண் கழிவுகளை தீ வைத்து எரிக்கும் நிகழ்வு போன்ற காரணிகளால் டெல்லி அதிக பாதிப்புக்கு உள்ளாகிறது.
இந்நிலையில் காற்று மாசுபாடு குறித்து டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பேசியதாவது:-
காற்று மாசுபாடு என்பது அகில இந்திய அளவில் உள்ள பிரச்சனை. வட இந்தியாவின் பல பகுதிகள் கடுமையான காற்று மாசுபாட்டை எதிர்கொண்டுள்ளன. டெல்லியில் காற்றின் தரம் தொடர்ந்து இரண்டாவது நாளாக மோசமான நிலையில் உள்ளது.
பஞ்சாப் மாநிலத்தில் விவசாய நிலங்களில் வேளாண் கழிவுகளை எரிப்பது அதிகரித்து வருவதற்கு நாங்கள் முழு பொறுப்பேற்கிறோம். ஆனால், பஞ்சாபில் நாங்கள் ஆட்சி அமைத்து ஆறு மாதங்களே ஆகின்றன. அதைக் கட்டுப்படுத்த நாங்கள் நடவடிக்கை எடுத்துள்ளோம். அடுத்த ஆண்டுக்குள் வேளாண் கழிவுகளை எரிப்பது குறையும்.
காற்று மாசுபாட்டை குறைப்பதற்கு மத்திய அரசு ஒரு கூட்டு செயல் திட்டத்தை கொண்டு வர வேண்டும். இது மற்றவர்கள் மீது குறை சொல்லும் நேரம் அல்ல. மோசமான காற்றின் தரத்திற்கு கெஜ்ரிவால் அரசு மட்டுமே பொறுப்பல்ல.
இவ்வாறு அவர் கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்