என் மலர்
நீங்கள் தேடியது "Delhi crime"
- அப்பெண்ணிற்கு தரகர் ஒருவரும் அவர் நண்பரும் அறிமுகமானார்கள்
- காலியாக இருந்த ஃப்ளாட்டிற்கு அப்பெண்ணை அழைத்து சென்றனர்
புது டெல்லியின் வடக்கே உள்ளது புராரி பகுதி.
இப்பகுதியில் சுமார் 30 வயதுடைய பெண் ஒருவர் குடியிருக்க வீடு தேடி அடுக்குமாடி குடியிருப்புகளில் வீடு வாடகைக்கு உள்ளதா என விசாரித்து கொண்டிருந்தார். அப்போது அவருக்கு வீடுகளை வாங்கவும் விற்கவும் உதவும் ஜிதேந்திர சவுத்ரி எனும் தரகரும் அவரது நண்பர் ஒருவரும் அறிமுகமானார்கள். அப்பெண்ணிற்கு உதவ அவர்கள் இருவரும் முன்வந்தனர்.
அங்குள்ள ஒரு குடியிருப்பு பகுதியில் ஃப்ளாட் ஒன்று வாடகைக்கு இருப்பதாக அவர்கள் இருவரும் கூறினர். இதனையடுத்து அவர்களுடன் அப்பெண் அந்த வீட்டை பார்க்க சென்றார்.
காலியாக இருந்த அவர்கள் கூறிய அந்த ஃப்ளாட்டிற்கு அவர்கள் இருவரும் அப்பெண்ணை அழைத்து சென்றனர். அங்கு அப்பெண்ணுக்கு குடிக்க நீர் வழங்கினர். அதை குடித்ததும் அப்பெண் மயக்கமடைந்தார். அதன் பின், அவர்கள் இருவரும் அவரை பாலியல் ரீதியாக தாக்கி விட்டு, அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.
நினைவு திரும்பியதும் தனக்கு நேர்ந்த விபரீதம் குறித்து அறிந்த அப்பெண் அதிர்ச்சியடைந்தார்.
உடனடியாக அருகிலிருந்த புராரி காவல்நிலையத்திற்கு சென்று, குடிநீரில் மயக்க மருந்தை கலந்து கொடுத்து தன் மீது கூட்டு பாலியல் தாக்குதல் நடத்தியதாக அந்த இருவர் மீதும் புகாரளித்தார்.
கூட்டு பாலியல் வன்முறை வழக்கை பதிவு செய்த புராரி காவல்துறையினர், இது குறித்து மேலும் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
