search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Delhi flight"

    • பயணியின் நிலைமை மோசம் அடைந்ததால் அவசரமாக சிகிச்சை அளிப்பதற்காக டெல்லி விமானம் பாகிஸ்தான் கராச்சி விமான நிலையத்தில் தரை இறக்கப்பட்டது.
    • கராச்சி விமான நிலையத்தில் பயணிக்கு சிகிச்சை அளிப்பதற்காக மருத்துவ குழுவினர் தயார் நிலையில் வைக்கப்பட்டு இருந்தனர்.

    கராச்சி:

    டெல்லியில் இருந்து கத்தாரில் உள்ள தோகாவிற்கு பயணிகள் விமானம் புறப்பட்டு சென்றது. நடுவானில் சென்றபோது விமானத்தில் பயணம் செய்த பயணிக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது.

    அவரது நிலைமை மோசம் அடைந்ததால் அவசரமாக சிகிச்சை அளிப்பதற்காக அந்த விமானம் பாகிஸ்தான் கராச்சி விமான நிலையத்தில் தரை இறக்கப்பட்டது. முன்னதாக அங்கு அந்த பயணிக்கு சிகிச்சை அளிப்பதற்காக மருத்துவ குழுவினர் தயார் நிலையில் வைக்கப்பட்டு இருந்தனர்.

    விமானம் இறங்கியதும் மருத்துவ குழுவினர் பாதிக்கப்பட்ட பயணியை சோதித்தனர். ஆனால் ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • விமானத்தின் இயந்திரத்தில் ஒரு நொடி அதிர்வுகள் காணப்பட்டதால் விமானம் ஜெய்ப்பூருக்கு திசை திருப்பி வைக்கப்பட்டது.
    • விமானத்தில் பயணித்த பயணிகள் மாற்று விமானத்தில் அனுப்பி வைக்கப்பட்டனர்.

    புது டெல்லி:

    டெல்லியிலிருந்து வதோதரா நோக்கி சென்ற இண்டிகோ விமானத்தில் ஏற்பட்ட இயந்திரக்கோளாறு காரணமாக ஜெய்ப்பூருக்கு திசை திருப்பி விடப்பட்டது. நேற்று டெல்லியிலிருந்து வதோதராவிற்கு சென்ற இண்டிகோ 6E-859 விமானத்தை இயக்கிய விமானிகள் விமானத்தின் இயந்திரத்தில் ஒரு நொடி அதிர்வு ஏற்பட்டதை உணர்ந்ததால் முன்னெச்செரிக்கை நடவடிக்கையாக விமானம் ஜெய்ப்பூருக்கு திசை திருப்பப்பட்டது. இரவு 8.30 மணியளவில் விமானம் ஜெய்ப்பூர் சென்றடைந்தது. விமானத்தில் பயணித்த பயணிகள் மாற்று விமானத்தில் அனுப்பி வைக்கப்பட்டனர்.

    இது குறித்து சிவில் விமானப் போக்குவரத்து இயக்குனரகத்தின் அதிகாரி கூறியதாவது:-

    விமானத்தின் இயந்திரத்தில் ஒரு நொடி அதிர்வுகள் காணப்பட்டதால் விமானம் ஜெய்ப்பூருக்கு திசை திருப்பி வைக்கப்பட்டது. நேற்று நடந்த இந்த சம்பவத்திற்கான காரணம் குறித்து விசாரித்து வருகிறோம்.

    மேலும், இண்டிகோவின் போட்டி நிறுவனமான ஸ்பைஸ்ஜெட் தற்போது ரெகுலெட்டரி ஸ்கேனிங் கீழ் உள்ளதாக டிஜிசிஏ அதிகாரிகள் தெரிவித்தனர்.

    கடந்த ஜுன் 19ம் தேதி முதல் விமானத்தில் இதுவரை 8 முறை கோளாறுகள் இருப்பது கண்டுப்பிடிக்கப்பட்டதாகவும் கூறினர். டிஜிசிஏ இதுகுறித்து ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்திற்கு எச்சரிக்கை நோட்டீஸ் அனுப்பி உள்ளதாகவும் தெரிவித்தனர்.

    தொடர்ந்து, "பாதுகாப்பான, திறமையான மற்றும் நம்பகமான சேவையை தர பட்ஜெட் கேரியர் தோல்வியடைந்துவிட்டது" என்று விமான ஒழுங்குமுறை அதிகாரி கூறினார்.

    டெல்லி விமான நிலையத்தில் ரூ.1 கோடி தங்கம் பறிமுதல் செய்த சுங்கத்துறை அதிகாரிகள் 2 பேரை கைது செய்தனர். #DelhiFlight #SmuggledGold
    புதுடெல்லி:

    டெல்லி இந்திரா காந்தி விமான நிலையத்தில் சண்டிகரில் இருந்து விமானம் ஒன்று வந்து நின்றது. அதில் தங்கம் கடத்தி வரப்படுவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ஏற்கனவே தகவல் கிடைத்து இருந்தது. எனவே சற்றும் தாமதிக்காத சுங்கத்துறை அதிகாரிகள் உடனடியாக அந்த விமானத்துக்குள் அதிரடியாக நுழைந்தனர்.

    பின்னர் அவர்கள் விமானத்தில் இருந்த பயணிகளிடம் சோதனை நடத்தினர். அப்போது அதில் இருந்த 2 பயணிகளின் பைகளில் சுமார் 3 கிலோ எடையுள்ள தங்கம் இருந்தது கண்டறியப்பட்டது. அவற்றை அதிரடியாக பறிமுதல் செய்த அதிகாரிகள், அந்த இருவரிடமும் விசாரணை நடத்தினர். இதில் அந்த தங்கம் கடத்தி வரப்பட்டது என தெரியவந்தது.

    மேலும் அந்த இருவரில் ஒருவர் தமிழகத்தையும், மற்றொருவர் கர்நாடகாவையும் சேர்ந்தவர்கள் என கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களை சுங்கத்துறை அதிகாரிகள் அதிரடியாக கைது செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் மதிப்பு சுமார் ரூ.1 கோடி இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இந்த சம்பவம் டெல்லி விமான நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இதே போல் அசாம் மாநிலம் கவுகாத்தி விமான நிலையத்தில், கொல்கத்தா செல்ல இருந்த ஒரு பயணியிடம் மொத்தம் 6.48 கிலோ எடை கொண்ட 39 தங்க கட்டிகள் இருப்பதை சோதனையின் போது மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் கண்டுபிடித்தனர். அந்த தங்க கட்டிகளின் மதிப்பு ரூ.2 கோடியே 8 லட்சம் ஆகும். அந்த பயணி வருவாய் புலனாய்வு இயக்குனரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார்.
    124 பயணிகளுடன் டெல்லி நோக்கி சென்றுகொண்டிருந்த ஏர் இந்தியா விமானத்தின் எஞ்சின் பகுதியில் பறவை மோதியதால் பாட்னாவில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. #AirIndia
    பாட்னா:

    கொல்கத்தாவிலிருந்து டெல்லி நோக்கி இன்று பிற்பகலில் ஏர் இந்தியா விமானம் புறப்பட்டது. 124 பயணிகள் இருந்த இந்த விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்த போது எஞ்சின் பகுதியில் பறவை மோதியது. இதனால், பீகார் மாநிலம் பாட்னா விமான நிலையத்தில் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

    விமானத்தில் உள்ள பயணிகள் பத்திரமாக உள்ளதாகவும், தொழில்நுட்ப பணியாளர்கள் விமானத்தை சரிசெய்து கொண்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. 
    ×