என் மலர்
நீங்கள் தேடியது "Delhi Indira Gandhi Airport"
- வெளிநாடுகளில் இருந்து கடத்தல்கள் அதிகரித்து வருகின்றன.
- தங்கம் கடத்தியது தொடர்பாக இந்திய பயணி ஒருவரை போலீசார் கைது செய்தனர்.
புதுடெல்லி :
தங்கம் இறக்குமதிக்கான கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளதால் தங்கம் விலை உயர்ந்து வருகிறது. இதனால் வெளிநாடுகளில் இருந்து கடத்தல்களும் அதிகரித்து வருகின்றன. இவற்றை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
இந்நிலையில், டெல்லி இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையத்தில் ஒரே நாளில் 4 கிலோவுக்கு மேல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
பயணி ஒருவர் கொண்டு வந்த உடமைகளை பரிசோதனை செய்ததில் தங்கத்தை கட்டியாக வைத்து கடத்திவந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இப்படி கண்டுபிடித்து பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் மொத்த மதிப்பு சுமார் ரூ.2 கோடிக்கும் அதிகமாகும். இது தொடர்பாக பாங்காங்கில் இருந்து திரும்பிய இந்தியரை போலீசார் கைது செய்துள்ளனர்.