என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Delhi Minister"
- தனது அரசியல் வாழ்க்கையை காப்பாற்றிக்கொள்ள பாஜகவில் சேருமாறு வறுப்புத்தப்பட்டதாகவும் கூறினார்
- டெல்லி பாஜக ஊடகப்பிரிவுத் தலைவர் சங்கர் கபூர் , கடந்த ஏப்ரல் 30 ஆம் தேதி அதிஷி மற்றும் அரவிந்த் கெஜ்ரிவால் மீது அவதூறு வழக்குத் தொடர்ந்தார்.
ஆம் ஆதிமி கட்சியின் முக்கிய தலைவரும் டெல்லியின் கல்வி அமைச்சருமான அதிசி, பாஜக குறித்து அவதூறாக பேசியாத தொடரப்பட்ட வழக்கில் வரும் ஜூன் 29 ஆம் தேதி நேரில் ஆஜராகும்படி டெல்லி உயர்நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.
ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் 7 பேரை பாஜக ரூ.25 கோடிக்கு விலைக்கு வாங்க முயன்றதாக அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டியிருந்தார். கடந்த ஏப்ரல் மாதம் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் டெல்லி அமைச்சர் அதிஷி பேசுகையில், தனக்கு நெருக்கமானவர்கள் மூலம் பாஜக தன்னை விலைக்கு வாங்க முயன்றதாகவும், தனது அரசியல் வாழ்க்கையை காப்பாற்றிக்கொள்ள பாஜகவில் சேருமாறு வறுப்புத்தப்பட்டதாகவும் கூறினார். இதற்கு மறுத்தால் ஒரு மாதத்துக்குள் அமலாக்கத்துறையை அனுப்பி கைது செய்துவிடுவோம் என்று பாஜக மிரட்டியதாக தெரிவித்திருந்தார்.
இதைதொடர்ந்து டெல்லி பாஜக ஊடகப்பிரிவுத் தலைவர் சங்கர் கபூர் , கடந்த ஏப்ரல் 30 ஆம் தேதி அதிஷி மற்றும் அரவிந்த் கெஜ்ரிவால் மீது அவதூறு வழக்குத் தொடர்ந்தார். அதிஷி ஊடகத்தின் முன்னிலையிலும் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில்தான் அதிஷி ஜூன் 29 ஆம் தேதி நேரில் ஆஜராகும்படி சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. முன்னதாக ஜூன்1 ஆம் தேதி கெஜ்ரிவாலின் ஜாமின் முடிய உள்ள நிலையில் அவரின் ஜாமீன் நீட்டிப்பு கோரிக்கை மனுவை உடனே விசாரிக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் இன்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
- சிறையில் இருந்தபடியே தனது பணியை கெஜ்ரிவால் மேற்கொண்டு வருகிறார்.
- அரவிந்த் கெஜ்ரிவாலை திகாரில் 30 நிமிடங்கள் சந்தித்து பேசினார்.
டெல்லி அரசின் மதுபான கொள்கை முறைகேடு விவகாரத்தில் முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த மாதம் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
பதிவியில் இருந்து விலகாத நிலையில், சிறையில் இருந்தபடியே தனது பணியை கெஜ்ரிவால் மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில், டெல்லி கேபினட் அமைச்சர் சவுரப் பரத்வாஜ் இன்று முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை திகார் சிறையில் 30 நிமிடங்கள் சந்தித்து பேசினார். அப்போது, "மக்கள் அவரைப் பற்றி கவலைப்பட வேண்டாம்" என்று கேட்டுக்கொண்டார்.
அரவிந்த் கெஜ்ரிவாலை சிறையில் சந்தித்ததாகவும், அவருடன் தொலைபேசியில் உரையாடியதாகவும் அமைச்சர் சவுரப் பரத்வாஜ் தெரிவித்துள்ளார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சவுரப் பரத்வாஜ் கூறுகையில், "அரவிந்த் கெஜ்ரிவாலை சிறையில் நான் அரை மணி நேரம் சந்தித்தேன். அப்போது, "மக்கள் தன்னைப் பற்றி கவலைப்பட வேண்டாம்" என்று அவர் கூறினார். "அவர் வலிமையானவர்" என்றும் "டெல்லி மக்களின் ஆசீர்வாதத்துடன் தனது போராட்டத்தை தொடருவேன்" என்றும் அவர் கூறினார்.
- ஊழலை எதிர்த்துப் போராட பிறந்த ஆம் ஆத்மி கட்சி இன்று ஊழலில் சிக்கித் தவிக்கிறது.
- இன்று அரசியல் மாறவில்லை ஆனால் அரசியல்வாதி மாறிவிட்டார் என தெரிவித்தார்.
புதுடெல்லி:
டெல்லி சமூக மேம்பாட்டுத்துறை மந்திரி ராஜ்குமார் ஆனந்த் இன்று தனது பதவியை திடீரென ராஜினாமா செய்தார். மேலும் அவர் ஆம் ஆத்மி கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தும் விலகியுள்ளார்.
இந்நிலையில், ராஜ்குமார் ஆனந்த் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
ஆம் ஆத்மி கட்சி ஊழலை எதிர்த்துப் போராட பிறந்தது. ஆனால் இன்று அந்தக் கட்சி ஊழலில் சிக்கித் தவிக்கிறது.
அமைச்சர் பதவியில் பணியாற்றுவது எனக்கு கடினமாகிவிட்டது. இந்த ஊழலுடன் பெயரை இணைக்கமுடியாது என்பதால் அமைச்சர் பதவி மற்றும் கட்சியில் இருந்து ராஜினாமா செய்தேன்.
இன்று அரசியல் மாறவில்லை ஆனால் அரசியல்வாதி மாறிவிட்டார். எனது ராஜினாமா கடிதத்தை முதல் மந்திரி அலுவலகத்திற்கு அனுப்பியுள்ளேன்.
தலித் பிரதிநிதித்துவம் பற்றி பேசப்படும்போது பின் இருக்கை எடுக்கும் கட்சியில் நான் அங்கம் வகிக்க விரும்பவில்லை. நான் எந்த கட்சியிலும் சேரவில்லை என தெரிவித்தார்.
- பா.ஜனதா, பெண் அமைச்சருக்கு அவதூறு நோட்டீஸ் அனுப்பி மன்னிப்பு கேட்க வலியுறுத்தல்.
- தேர்தல் ஆணையம் எடுத்த நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்து அமைச்சர் அதிஷி கருத்து.
பாரதீய ஜனதா கட்சியில் சேராவிட்டால் அமலாக்கத் துறையால் கைது செய்ய போவதாக மிரட்டல் விடுக்கப்பட்டது என்று டெல்லி பெண் அமைச்சர் அதிஷி தெரிவித்தார். இதற்கு மறுப்பு தெரிவித்த பா.ஜனதா, பெண் அமைச்சருக்கு அவதூறு நோட்டீஸ் அனுப்பி மன்னிப்பு கேட்க வலியுறுத்தியது.
மேலும், இது தொடர்பாக தேர்தல் ஆணையத்திலும் பா.ஜனதா புகார் செய்தது. இதையடுத்து இவ்விவகாரம் குறித்து விளக்கம் அளிக்கக் கோரி அமைச்சர் அதிஷிக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
தேர்தல் ஆணையம் எடுத்த நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்து அமைச்சர் அதிஷி கருத்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அதிஷி கூறியதாவது:-
ஏப்ரல் 4-ம் தேதி (நேற்று), எனது செய்தியாளர் சந்திப்பில் ஒன்றின் மீது பாஜக புகார் அளித்தது. ஏப்ரல் 5-ம் தேதி காலை 11:15 மணிக்கு, அதிஷிக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டதாக செய்தி சேனல்கள் ஒளிப்பரப்பின. ஆனால் அடுத்த அரை மணி நேரத்திற்குள் எனக்கு மின்னஞ்சல் மூலம் நோட்டீஸ் அறிவிப்பு வந்தது.
அதாவது, தேர்தல் கமிஷன் நோட்டீசை முதலில் ஊடகங்களில் பா.ஜ.க.வினர் போடுகிறார்கள் அதன் பிறகு எனக்கு நோட்டீஸ் வருகிறது. தேர்தல் ஆணையம் பாஜகவின் துணை அமைப்பாக மாறிவிட்டதா என்பதே எனது கேள்வி.
அனைத்து மத்திய அமைப்புகளும், பாஜகவிடம் மண்டியிட்டது கவலைக்குரிய விஷயம்.
மேலும் தற்போது தேர்தல் ஆணையம் கூட பாஜகவிடம் மண்டியிட்டுள்ளது. ஆம் ஆத்மி கட்சி பல்வேறு பிரச்சனைகளில் புகார்களை பதிவு செய்ய முயற்சிக்கும்போது எங்களுக்கு அவகாசம் வழங்கப்படவில்லை.
எம்சிசி செயல்படுத்தப்பட்ட பிறகும், மத்திய அமைப்புகள் எதிர்க்கட்சித் தலைவர்களைக் குறிவைத்து வருகின்றன. ஆனால் தேர்தல் ஆணையம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
ஆனால் பா.ஜ.க.வினர் புகார் பதிவு செய்த உடனேயே 12 மணி நேரத்தில் நோட்டீஸ் வருகிறது. நோட்டீஸ் வெளியிடுவது தேர்தல் ஆணையமா அல்லது பாஜகவா?
டிஎன் சேஷனின் வாரிசுகளாக இருந்து, இந்த நாட்டில் ஜனநாயகத்தை காப்பாற்றுவது அவர்களின் பொறுப்பு என்று தேர்தல் ஆணையத்தின் உறுப்பினர்களை நான் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- டெல்லியில் ஜேஎன்- 1 தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளி இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
- புதிய வகை தொற்று லேசானது, இதனால் மக்கள் கடுமையாக நோய்வாய்ப்படுவதில்லை.
இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் ஜேஎன் 1 என்கிற புதிய வகை கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வருகிறது. அந்த வகையில், டெல்லியில் நேற்று ஒருவருக்கு கொரோனா வைரஸ் ஜே.என். 1 வகை பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.
இதன் மூலம் நாடு முழுக்க டிசம்பர் 26-ம் தேதி வரையிலான காலக்கட்டத்தில் கொரோனா ஜே.என்.1 வகை மூலம் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 109 ஆக அதிகரித்து இருப்பதாக சுகாதார துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
டெல்லியில் ஜேஎன்- 1 தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளி இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இதையடுத்து, டெல்லியில் ஜேஎன்1 புதிய பாதிப்பு இல்லை என டெல்லி சுகாதார அமைச்சர் சவுரப் பரத்வாஜ் உறுதிப்படுத்தினார்.
இதுகுறித்து அமைச்சர் சவுரப் பரத்வாஜ் கூறுகையில்," பரிசோதனைகளின் எண்ணிக்கையை அதிகரித்துள்ளோம். நேற்று, தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் 636 சோதனைகளை மேற்கொண்டோம். மூன்று மரபணு வரிசைமுறை முடிவுகள் நேற்று வந்தன. அவற்றில் இரண்டு பழைய ஓமிக்ரான் வகைகள் மற்றும் ஒன்று ஜே.என்.1 ஆகும்.
புதிய வகை தொற்று லேசானது, இதனால் மக்கள் கடுமையாக நோய்வாய்ப்படுவதில்லை.
டெல்லியில் தற்போது ஜேஎன்-1 வகை புதி பாதிப்பு இல்லை.
மத்திய சுகாதார அமைச்சகத்தின் தரவுகளின்படி, இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 692 புதிய கொரோனா பாதிப்புகள் பதிவாகியுள்ளன. மொத்த எண்ணிக்கையில் நான்கு அதிகரித்து, 4,097 ஐ எட்டியுள்ளது என்று சுகாதார அமைச்சக தரவு தெரிவித்துள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்