என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Delhipolice"
- பதவியேற்பு விழாவின்போது சிறுத்தை ஒன்று நடமாடியது அதிர்ச்சி.
- சிறுத்தை ஒன்று நடந்து செல்வது போல் வீடியோவில் பதிவாகி உள்ளது.
நாட்டின் பிரதமராக தொடர்ந்து 3-வது முறையாக நரேந்திர மோடி பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
அவரைத் தொடர்ந்து மத்திய அமைச்சர்களாக 71 பேர் பதவியேற்றுக்கொண்டனர். ஜனாதிபதி திரவுபதி முர்மு அனைவருக்கும் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
சுமார் இரண்டரை மணி நேரத்துக்கும் அதிகமாக நடைபெற்ற பதவியேற்பு நிகழ்ச்சி இரவு 10 மணியளவில் முடிவடைந்தது.
அப்போது பதவியேற்பு விழாவின்போது சிறுத்தை ஒன்று நடமாடியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
குடியரசு தலைவர் மாளிகையில் ஜனாதிபதி திரவுபதி முர்மு அமைச்சர் குமாரசாமிக்கு பதவி பிரமாணம் செய்து வைக்கும் போது மாளிகை பின்னால் உள்புறம் சிறுத்தை ஒன்று நடந்து செல்வது போல் வீடியோவில் பதிவாகி உள்ளது.
இந்த மர்ம விலங்கு சிறுத்தையா? பூனையா? என்ற சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது.
பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்திருந்த போது இந்த மர்ம விலங்கு எப்படி வந்து என்று கேள்வி எழுந்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்நிலையில், குடியரசு தலைவர் மாளிகையின் பின்னாள் சென்ற விலங்கு தொடர்பாக டெல்லி போலீஸ் விளக்கம் அளித்துள்ளது.
அதன்படி, ராஷ்டிரபதி பவனில் பதவியேற்பின் போது காணப்பட்ட விலங்கு வீட்டுப் பூனை, சிறுத்தை அல்ல என டெல்லி காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.
டெல்லியில் போதைப்பொருள் கடத்துவதாக போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற சிறப்புப்படை போலீசார் போதை மாத்திரைகள் கடத்திய 4 பேர் கொண்ட கும்பலை பிடித்தனர். அவர்களிடமிருந்த போதைப்பொருள்கள் மீட்கப்பட்டன.
கடத்தல் கும்பலைச் சேர்ந்த 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. மீட்கப்பட்ட 6.5 லட்சம் போதை மாத்திரைகளின் மொத்த மதிப்பு 30 கோடி ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது. #DelhiPolice #narcotictablets