search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "denmark open badminton"

    • டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் தொடர் டென்மார்க்கில் நடைபெற்று வருகிறது.
    • பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் பி.வி.சிந்து வெற்றி பெற்றார்.

    கோபன்ஹெகன்:

    டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் தொடர் டென்மார்க்கில் நடைபெற்று வருகிறது.

    இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் பிவி சிந்து, சீன தைபே வீராங்கனையான பை யூ போ உடன் மோதினார்.

    இதில் முதல் செட்டை 21-8 என பிவி சிந்து வென்றார். இரண்டாவது செட்டில் 13-7 என முன்னிலை பெற்றிருந்தார். அப்போது சீன தைபே வீராங்கனை போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இதனால் பிவி சிந்து அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

    ஏற்கனவே நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் மாளவிகா பன்சோத், ஆகர்ஷி காஷ்யப் ஆகியோர் தோல்வி அடைந்து வெளியேறினர்.

    டென்மார்க் நாட்டில் நடைபெற்று வரும் பெண்களுக்கான பேட்மிண்டன் போட்டியில் சாய்னா நேவால் வெற்றி பெற்று அரைஇறுதிக்கு தகுதி பெற்றுள்ளார். #DenmarkOpenBadminton #SainaNehwal

    டென்மார்க் நாட்டில் பேட் மிண்டன் போட்டி நடந்து வருகிறது. இதில் பெண்களுக்கு ஒற்றையர் பிரிவில் இன்று நடந்த கால் இறுதி ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் சாய்னா நேவால்- முன்னாள் உலக சாம்பியனான நஜோமி ஒகுஹாரா மோதினர்.

    இதில் முதல் செட்டை 17-21 என்ற கணக்கில் இருந்த சாய்னா அடுத்த இரண்டு செட்டுகளை தன் வசப்படுத்தினார்.

    முடிவில் சாய்னா நேவால் 17-21, 21-16, 21-12 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அரை இறுதிக்கு முன்னேறினார்.

    அரை இறுதியில் சாய்னா, இந்தோனேஷியாவின் மாரீஸ்காவுடன் பலப்பரீட்சை நடத்துகிறார்.

    இதேபோல் ஆண்கள் ஒற்றையர் பிரிவு கால் இறுதியில் இந்தியாவின் ஸ்ரீகாந்த் வெற்றி பெற்று கால் இறுதிக்கு தகுதி பெற்றார்.

    அவர் கால் இறுதியில் சக நாட்டு வீரர் சமீர் வர்மாவை 22-20, 19-21, 23-21 என்ற கணக்கில் வீழ்த்தினார். அரை இறுதியில் ஸ்ரீகாந்த், நம்பர் ஒன் வீரர் கென்டூ மோமொடாவுடன் (ஜப்பான்) மோதுகிறார். #DenmarkOpenBadminton #SainaNehwal 

    ×