என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
முகப்பு » Department officer
நீங்கள் தேடியது "Department officer"
- வட்டாரப் பொறியாளரை மாவட்ட நிர்வாகம் பணிநீக்கம் செய்ததை கண்டித்து, கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
- 20க்கும் மேற்பட்ட ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் பங்கேற்று கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
பல்லடம் :
விருதுநகர் மாவட்டம் நரிக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் வட்டாரப் பொறியாளரை மாவட்ட நிர்வாகம் பணிநீக்கம் செய்ததை கண்டித்து, பல்லடம் ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பல்லடம் சங்கத் தலைவர் காந்திராஜ் தலைமை தாங்கினார். செயலாளர் ரவி வரவேற்றார்.மாநிலத் தலைவர் ரமேஷ் கண்டன உரையாற்றினார்.இந்த ஆர்ப்பாட்டத்தில் 20க்கும் மேற்பட்ட ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் பங்கேற்று கண்டன முழக்கங்களை எழுப்பினர்.இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் பல்லடம் சங்க பொருளாளர் ஜெயக்குமார், மற்றும் நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
×
X