search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Deputy President"

    • ஜெகதீப் தன்கர், 'கார்கே ஜி இந்த விஷயத்தில் நான் உங்களுக்கு உதவியுள்ளேன்' என்று சிரித்தபடி தெரிவித்தார்.
    • கடந்த நாட்களில் தான் பேசும்போது மைக்கை அணைத்து விடுவதாக கார்கே ஜெகதீப் தன்கரை குற்றம்சாட்டியதால் அவையில் இருவருக்கும் இடையில் இறுக்கமான சூழல் நிலவியது

    நேற்று நடந்த பாராளுமன்ற மக்களை கூட்டத்தொடரில் ராகுல் காந்தியின் அதிரடி உரை அவையை களேபரம் ஆகியது தெரிந்ததே. அதேசயம் பாராளுன்றத்தில் நடந்த மாநிலங்களவை கூட்டத்தொடரின் நேற்றைய கூட்டத்தில் மக்களவையில் நடந்ததற்கு நேர் மாறாக காங்கிரஸ் தலைவர் கார்கேவின் கருத்துக்களால் சிரிப்பலை ஏற்பட்ட சுவாரஸ்யமான சம்பவம் நிகழ்ந்துள்ளது.

    நேற்று நடந்த மாநிலங்களவை கூட்டத்தில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவித்து பேச எழுந்த போது தனக்கு கால்வலி இருப்பதால் உட்கார்ந்து பேச கார்கே அனுமதி கேட்டார். அதற்கு அனுமதி அளித்த மாநிலங்களவை சபாநாயகரும் துணைக் குடியரசுத் தலைவருமான ஜெகதீப் தன்கர், 'கார்கே ஜி இந்த விஷயத்தில் நான் உங்களுக்கு உதவியுள்ளேன்' என்று சிரித்தபடி தெரிவித்தார்.

    இதற்கு பதிலளித்த கார்கே, 'ஆமாம் நீங்கள் எங்களுக்கு [எதிர்க்கட்சி எம்.பிக்களுக்கு] சில சமயம் உதவுகிறீர்கள். நான் அதை நினைவு கூர்கிறேன்' என்று நகைச்சுவை தொனிக்க தெரிவித்தார். மேலும் ஜனாதிபதி உரை குறித்து தொடர்ந்து பேசத் தொடங்கிய கார்கே பாஜக எம்.பி சுதான்சு சதுர்வேதியை குறிப்பிட்டு பேசும்போது, இடையில் நிறுத்தி, 'மன்னிக்கவும், திவேதி, திரிவேதி, சதுர்வேதி ஆகிய பெயர்கள் என்க்கு எப்போதும் குழப்பமாக உள்ளது.

    நான் தெற்கில் [தென்னிந்தியாவில்] இருந்து வருவதால் இதை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை; என்று நகைச்சுவையாக தெரிவிக்க அரங்கமே சிரிப்பலையால் அதிர்ந்தது.இதற்கு சிரித்தபடி பதிலளித்த சபாநாயகர் ஜெகதீப் தன்கர், 'நீங்கள் விரும்பினால் இந்த விவகாரம் குறித்துஅரை மணி நேரத்துக்கு வேண்டுமானாலும் நாம் விவாதிக்கலாம்' என்று தெரிவித்தார்.

    முன்னதாக கடந்த நாட்களில் தான் பேசும்போது மைக்கை அணைத்து விடுவதாக கார்கே ஜெகதீப் தன்கரை குற்றம்சாட்டியதால் அவையில் இருவருக்கும் இடையில் இறுக்கமான சூழல் நிலவிய நிலையில் நேற்றைய கூட்டம் அந்த இறுக்கத்தை தளத்தியது என்றே கூறலாம். கடந்த ஜூன் 27 ஆம் தேதி தொடங்கிய மாநிலங்களவை கூட்டொடர் நாளையுடன் முடிவடைவது குறிப்பிடத்தத்க்கது. 

     

    ×