என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "deputy sp"

    • தீப்தியின் சாதனைகளைப் பாராட்டி, உத்தரப் பிரதேச அரசு 3 கோடி ரூபாய் ரொக்கப் பரிசு வழங்கியது.
    • துணை எஸ்பி பதவிக்கான நியமனக் கடிதமும் வழங்கி கவுரவித்தது.

    இந்திய மகளிர் கிரிக்கெட் அணி வீராங்கனை தீப்தி சர்மா. இவர் இந்திய அணியின் ஆல்ரவுண்டராக பல போட்டிகளில் இந்திய அணியின் வெற்றிக்கு உதவியுள்ளார். மேலும் இங்கிலாந்தின் பர்மிங்காமில் 2023 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் இந்திய அணி வெள்ளிப்பதக்கம் வெல்ல தீப்தி முக்கியப் பங்காற்றினார்.

    இந்நிலையில் தீப்தி சர்மாவுக்கு உத்தரப் பிரதேச மாநில அரசு சிறப்பு கவுரவம் செய்துள்ளது. தீப்தியின் சாதனைகளைப் பாராட்டி, உத்தரப் பிரதேச அரசு, 3 கோடி ரூபாய் ரொக்கப் பரிசும், துணை எஸ்பி பதவிக்கான நியமனக் கடிதமும் வழங்கி கவுரவித்தது.

    இதன்மூலம் தீப்தி சர்மாவின் சிறுவயது கனவு நனவாகியது. உத்தரபிரதேசத்தில் அவருக்கு துணை போலீஸ் சூப்பிரண்டு (டிஎஸ்பி) சீருடை வழங்கப்பட்டது. இந்த பதவிக்காக உத்தரபிரதேச அரசுக்கு தீப்தி நன்றி கூறினார். மேலும் இதற்காக நான் நன்றியுள்ளவளாக இருப்பேன் எனவும் அவர் கூறினார்.

    காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் இன்று தேடுதல் வேட்டையின்போது ஜெய்ஷ் இ முஹம்மது பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்த 3 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். போலீஸ் துணை சூப்பிரண்ட்டும் வீரமரணம் அடைந்தார். #militantsencounter #securityforcesencounter #Kulgamencounter
    ஜம்மு:

    ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தின் குல்காம் மாவட்டத்துக்கு உட்பட்ட டுரிகாம் பகுதியில் சில பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, இன்று அப்பகுதியை பயங்கரவாத ஒழிப்பு சிறப்பு படையினர் சுற்றி வளைத்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். 

    அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கிகளால் சுட்டு தாக்குதல் நடத்தினர். இருதரப்பினருக்கும் இடையில் தொடர்ந்து நீடித்துவரும் துப்பாக்கிச் சண்டையில் ஒரு பயங்கரவாதி சுட்டுக் கொல்லப்பட்டான். போலீஸ் துணை சூப்பிரண்ட் அமான் தாக்குர் என்பவரும் வீரமரணம் அடைந்தார் என இன்று மாலை முதல்கட்ட தகவல் வெளியானது.



    இந்நிலையில், இந்த துப்பாக்கிச் சண்டையில் இன்றிரவு நிலவரப்படி புல்வாமா தாக்குதலுக்கு காரணமாக இருந்த ஜெய்ஷ் இ முஹம்மது பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்த 3 பேர் சுட்டுக் கொல்லப் பட்டதாகவும், ராணுவ உயரதிகாரி ஒருவர் படுகாயமடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் காஷ்மீர் மாநில போலீஸ் டி.ஜி.பி. தில்பாக் சிங் தெரிவித்தார்.

    இதற்கிடையில், பயங்கரவாதிகளை எதிர்த்து போரிட்டு வீரமரணம் அடைந்த போலீஸ் துணை சூப்பிரண்ட் அமான் தாக்குர் மறைவுக்கு காஷ்மீர் கவர்னர் சத்ய பால் மாலிக் இரங்கல் தெரிவித்துள்ளார். ஸ்ரீநகரில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு போலீஸ் மற்றும் ராணுவ உயரதிகாரிகள் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தி வருகின்றனர். #militantsencounter #securityforcesencounter #Kulgamencounter
    ×