என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Detour"
- சுரங்கப்பாதை பணிகள் காரணமாக செங்கோட்டை ரெயில் மாற்றுப்பாதையில் இயக்கப்படுகிறது.
- தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரெயில் திருச்சியில் இருந்து இயக்கப்படும்.
மதுரை
திண்டுக்கல்-திருச்சி பிரிவில் தாமரைப்பாடி-வடமதுரை இடையே சுரங்கப்பாதை பணிகள் நடக்கிறது. அந்த வழியாக செல்லும் ரெயில் போக்குவரத்தில் இன்றும், நாளையும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. செங்கோட்டை-மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் ரெயில், இன்றும் நாளையும் விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி, திருச்சி வழியாக மாற்றுப் பாதையில் செல்லும். இந்த ரெயில் மானாமதுரையில் மட்டும் நிற்கும். குருவாயூர்-எழும்பூர் எக்ஸ்பிரஸ் ரெயில் இன்று விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி, திருச்சி வழியாக மாற்றுப் பாதையில் செல்லும். இந்த ரெயில் மானாமதுரையில் மட்டும் நிற்கும்.
எழும்பூர்-குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரெயில் நாளை திருச்சி, காரைக்குடி, மானாமதுரை, விருதுநகர் வழியாக மாற்றுப்பாதையில் செல்லும். மானா மதுரையில் மட்டும் நிற்கும். மயிலாடுதுறை- செங்கோட்டை எக்ஸ்பிரஸ் ரெயில் நாளை திருச்சி, காரைக்குடி, மானாமதுரை, விருதுநகர் வழியாக செல்லும். மானா மதுரையில் மட்டும் நிற்கும். சென்னை எழும்பூரில் இருந்து நாளை புறப்படும் தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரெயில், திருச்சி வரை மட்டும் இயக்கப்படும். மதுரையில் இருந்து இன்று புறப்படுவதாக இருந்த தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரெயில் திருச்சியில் இருந்து இயக்கப்படும்,
மேற்கண்ட தகவலை மதுரை கோட்ட ரெயில்வே அலுவலகம் தெரிவித்து உள்ளது.
- கனமழையால் தஞ்சை சீத்தா நகர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தெருக்களில் தண்ணீர் தேங்கியது.
- தொடர்ந்து 4 நாட்கள் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.
தஞ்சாவூர்:
தஞ்சை மாவட்டத்தில் பருவ கால மாற்றத்தின் காரணமாக கடந்த 2 மாதங்களாக மழை பெய்வதும், வெயில் அடிப்பதுமாக மாறி மாறி பருவநிலை நிலவி வருகிறது. கடந்த மாதத்தில் பல நாட்கள் மழை பெய்தது.
ஆனால் கடந்த மாத இறுதியில் இருந்து அக்னி நட்சத்திரம் போல் வெயில் சுட்டெரித்து வந்தது.
கோடை காலத்தை மிஞ்சும் வகையில் வெயில் கொளுத்தியதால் மக்கள் அவதி அடைந்தனர்.
கடந்த ஒரு வாரமாகவே 100 டிகிரியைத் தாண்டி வெயில் கொளுத்தியது. பகலில் அனல் காற்று வீசியதால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர்.
இந்த நிலையில் தஞ்சையில் நேற்று பகல் முழுவதும் வெயில் சுட்டெரித்து வந்தது.
இரவு 7 மணி அளவில் திடீரென சாரல் மழை பொழிந்தது. தொடர்ந்து வானம் மேகமூட்டத்துடன் காட்சியளித்தது.
நள்ளிரவு 12 மணி அளவில் பயங்கர சத்தத்துடன் இடி முழங்கியது.
அவ்வப்போது மின்னல் அடித்துக் கொண்டிருந்தது.
அடுத்த சில நிமிடங்களில் மழை பெய்ய தொடங்கியது.
ஆரம்பத்தில் மிதமான அளவில் பெய்து வந்த மழை நேரம் செல்ல செல்ல அதிகரிக்க தொடங்கியது.
கனமழையாக மாறி வெளுத்து வாங்கியது. சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
தொடர்ந்து 2 மணி நேரம் மழை நீடித்தது.
அதன் பின்னர் இன்று அதிகாலை 4 மணியில் இருந்து மீண்டும் மழை பெய்ய தொடங்கியது.
தொடர்ந்து இரண்டு மணி நேரம் அதாவது காலை 6 மணி வரை மிதமான அளவில் மழை பெய்தது.
இதன் காரணமாக குளிர்ச்சியான சூழல் நிலவியது.
தொடர்ந்து பெய்த கனமழையால் தஞ்சை சீத்தா நகர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தெருக்களில் தண்ணீர் தேங்கியது.
மேலும் வீடுகளை சுற்றி தண்ணீர் சூழ்ந்து கொண்டது.
இதனால் பொதுமக்கள் வீட்டில் இருந்து வெளியே வர அவதி அடைந்தனர்.
தஞ்சை சாந்த பிள்ளைக்கேட் ரெயில்வே கீழ் பாலத்தில் தண்ணீர் தேங்கியது.
இதனால் அந்த வழியை கடந்து பூக்கார தெரு, விளாருக்கு செல்லும் பொதுமக்கள் மாற்று பாதையில் சென்றனர்.
சிலர் தண்ணீரை கடந்தும் சென்றனர்.
தஞ்சை மாவட்டம் பூதலூரில் நள்ளிரவில் இருந்து இன்று காலை வரை கனமழை கொட்டி தீர்த்தது.
சாலை, தெருக்களில் தண்ணீர் ஆறு போல் பெருக்கெடுத்து ஓடியது.
தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கியது. மாவட்டத்திலேயே அதிகபட்சமாக பூதலூரில் தான் 167.60 மி.மீ. மழை அளவு பதிவானது.
இதேபோல் வல்லம், செங்கிப்பட்டி, திருக்காட்டுப்பள்ளி, பாபநாசம், கும்பகோணம், பட்டுக்கோட்டை, மதுக்கூர், வெட்டிக்காடு, ஒரத்தநாடு, அய்யம்பேட்டை, பேராவூரணி உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் பரவலாக மழை பெய்தது.
இதற்கிடையே தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசை காற்றில் வேக மாறுபாடு நிலவுவதால் தொடர்ந்து 4 நாட்கள் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக மீண்டும் தஞ்சை மாவட்டத்தில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தஞ்சை மாவட்டத்தில் இன்று காலை 9 மணியுடன் முடிவடைந்த மழையின் அளவு வருமாறு (மி.மீ.) :-
பூதலூர்-167.69, கல்லணை- 155, தஞ்சாவூர் -122, நெய்வாசல் தென்பாதி -118.20, வல்லம் -117, திருக்காட்டுப்பள்ளி- 89.40, பட்டுக்கோட்டை -88, ஒரத்தநாடு- 41.60, மதுக்கூர்-36, வெட்டிக்காடு- 36.
- லாரியில் இருந்த நிலக்கரி சாலையில் கொட்டியதில் டிரைவருக்கு காயம் ஏற்பட்டது.
- சாலையில் லாரி கவிழ்ந்து நிலக்கரி கொட்டி மலைபோல் குவிந்து கிடந்ததால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தஞ்சாவூர்:
தஞ்சை- திருச்சி சாலையில் நேற்று மதியம் ஒரு லாரி நிலக்கரி ஏற்றிக்கொண்டு சென்று கொண்டு இருந்தது. லாரியை திண்டுக்கல்லை சேர்ந்த டிரைவர் மோகனசுந்தர் (வயது 47) ஓட்டிச்சென்றார்.
லாரி தஞ்சை புதிய கலெக்டர் அலுவலகம் அருகே சென்ற போது டிரைவரின் கட்டுப்பாடடை இழந்து சாலையிலேயே கவிழ்ந்தது. இதில் லாரியில் இருந்த நிலக்கரி சாலையில் கொட்டியது. மேலும் லாரி கவிழ்ந்ததில் டிரைவருக்கு காயம் ஏற்பட்டது. அவர் மயக்க நிலையில் இருந்தார்.இது குறித்து தகவல் அறிந்ததும் தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழக போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று காயமடைந்த மோகனசுந்தரை மீட்டு தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். சாலையில் லாரி கவிழ்ந்து நிலக்கரி கொட்டி மலைபோல் குவிந்து கிடந்ததால் அந்த பகுதில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதையடுத்து போக்கு வரத்து மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டது. பின்னர் கவிழ்ந்த லாரி அப்புறப்படுத்த ப்பட்டதையடுத்து அந்த பகுதியில் போக்குவரத்து சீரானது. இந்த விபத்து குறித்து தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- குடியாத்தம், விரிஞ்சிபுரம் பாலங்கள் பழுதடைந்ததால் நடவடிக்கை
- போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது
வேலூர்:
வேலூர் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
பள்ளிகொண்டா பேரூராட்சி பகுதியில் அமைந்துள்ள குடியாத்தம் செல்லும் மாநில நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் மிக அதிகமாக உள்ளது. இதனால் ஆந்திர மாநிலத்திலிருந்து குடியாத்தம் பள்ளி கொண்டா செல்லும் கனரக சரக்கு வாகனங்கள் குடியாத்தத்திலிருந்து ஆம்பூர் வழியாக செல்ல அறிவுறுத்தப்பட்டிருந்தது.
ஆனால், வேலூர் மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை வழக்கத்தைவிட அதிக அளவு பெய்துள்ளதால் நெடுஞ்சாலை துறையால் பராமரிக்கப்படும் குடியாத்தம் நகர் பகுதி மற்றும் விரிஞ்சிபுரம் ஆகிய இடங்களில் பாலங்கள் மிகவும் பழுதடைந்த நிலையில் உள்ளது.
கனரக மற்றும் மிககனரக சரக்கு வாகனங்கள் பயன்படுத்தப்படுவதால் மேலும் பழுதடைவதுடன் உள்ளூர் பொதுமக்கள் மற்றும் பள்ளிச்செல்லும் குழந்தைகள் பாதிக்கப்படுகின்றனர். மேலும் சிறுசிறு விபத்துக்கள் நிகழ்கின்றன.
இவற்றை தடுக்கும் பொருட்டு ஆந்திர மாநிலம் சித்தூரிலிருந்து சென்னை மார்கமாகவும் மற்றும் கிருஷ்ணகிரி மார்கமாக செல்லும் அனைத்து கனரக மற்றும் மிககனரக வாகனங்கள் காட்பாடி மற்றும் திருவலம் வழியாக சென்று ஆறு வழிச்சா லைகளை பயன்படுத்திட அறிவுறுத்தப்படுகிறது.
இந்த மாற்று ஏற்பாட்டினை காவல்துறை, போக்குவரத்து துறை மற்றும் உள்ளாட்சி நிர்வாகத்தினர் மூலம் உறுதிசெய்யப்படும்.
அவ்வாறு மீறிச்செல்லும் வாகனங்கள் வந்த வழியாக திருப்பி அனுப்பி வைக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்