search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "DGP Rajendran"

    தேர்தல் தொடர்பான விவகாரங்களில் இனி, டி.ஜி.பி. ராஜேந்திரன் தலையிடக்கூடாது என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. #Loksabhaelections2019 #DGPRajendran #ElectionCommission
    சென்னை:

    தமிழகத்தில் பாராளுமன்ற மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலுக்கு இன்னும் 7 நாட்களே இருக்கும் நிலையில் அதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் தீவிரமாக செய்து வருகிறது.

    தமிழக சட்டம்-ஒழுங்கு போலீஸ் டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன் உள்ளிட்ட ஐ.பி.எஸ். அதிகாரிகள் சிலரை மாற்ற வேண்டும் என்று தி.மு.க. சார்பில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தேர்தல் ஆணையத்தில் மனு அளிக்கப்பட்டிருந்தது.

    ஆனால் அதில் எந்தவிதமான நடவடிக்கையையும் தேர்தல் ஆணையம் மேற்கொள்ளாமலேயே இருந்து வந்தது. இந்த நிலையில் டி.ஜி.பி. ராஜேந்திரனை தேர்தல் பணியில் இருந்து விடுவித்து இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

    இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், “தேர்தல் தொடர்பான விவகாரங்களில் இனி, டி.ஜி.பி. ராஜேந்திரன் தலையிடக்கூடாது” என்று கூறப்பட்டுள்ளது.

    இதற்கு பதில் புதிய தேர்தல் டி.ஜி.பி.யாக அசு தோஸ் சுக்லாவை தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது. தேர்தல் தொடர்பான பணிகளை இனி, அசுதோஸ் சுக்லாதான் மேற்கொள்வார் என்றும், தேர்தல் பிரச்சனைகள் தொடர்பாக அனைத்து மாவட்ட போலீஸ் அதிகாரிகளும், இனி அவரைத்தான் தொடர்பு கொள்ள வேண்டும் என்றும் தேர்தல் ஆணைய அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. #Loksabhaelections2019 #DGPRajendran #ElectionCommission
    பாராளுமன்ற தேர்தலை யொட்டி போலீஸ் டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன் உள்பட 10 போலீஸ் அதிகாரிகளை மாற்ற வேண்டும் என்று தேர்தல் ஆணையத்தில் தி.மு.க. மனு அளித்துள்ளது. #ParliamentElection #DMK
    சென்னை:

    தேர்தல் நேரத்தில் ஆளும் கட்சிக்கு ஆதரவாக செயல்படும் அதிகாரிகளை இடமாற்றம் செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் சார்பில் கோரிக்கை விடுப்பது வழக்கம். அந்த வகையில் தி.மு.க. ஒவ்வொரு முறையும் தேர்தலின் போது போலீஸ் அதிகாரிகளின் பட்டியலை தயாரித்து தேர்தல் ஆணையத்தில் மனு அளித்து வருகிறது.

    அந்த வகையில் நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலுக்கு முன்னதாக போலீஸ் டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன் உள்பட 10 போலீஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்ய வேண்டும். தி.மு.க. எம்.பி. திருச்சி சிவா, அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் டெல்லியில் தேர்தல் ஆணையத்தில் மனு அளித்துள்ளனர்.

    அந்த பட்டியலில் இடம் பெற்றுள்ள அதிகாரிகள் வருமாறு:-

    1. டி.கே.ராஜேந்திரன் (போலீஸ் டி.ஜி.பி.)

    2. சத்தியமூர்த்தி (உளவுப்பிரிவு ஐ.ஜி.)

    3. ஈஸ்வர மூர்த்தி (உள்நாட்டு பாதுகாப்பு ஐ.ஜி)

    4. கண்ணன் (உளவுப்பிரிவு சூப்பிரண்டு)

    5. திருநாவுக்கரசு (உளவுப்பிரிவு துணை கமி‌ஷனர்)

    6. விமலா (உளவுப்பிரிவு துணை கமி‌ஷனர்)

    7. நாகராஜன் (ஐஜி. மத்திய மண்டலம்)

    8. வரதராஜு (ஐ.ஜி. மேற்குமண்டலம்)

    9. பெரியய்யா (ஐ.ஜி. மேற்குமண்டலம்)

    10. ராஜேந்திரன் (கூடுதல் டி.எஸ்.பி. உளவுப்பிரிவு)

    தி.மு.க. சார்பில் அளிக்கப்பட்ட 10 போலீஸ் அதிகாரிகள் பட்டியலில் உளவுப்பிரிவு அதிகாரிகள் 5 பேர் இடம் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த பட்டியலில் உள்ள போலீஸ் அதிகாரிகளில் பலரை தேர்தல் ஆணையம் விரைவில் மாற்றி உத்தரவிடும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. #ParliamentElection #DMK
    தேர்தல் பணியில் டி.ஜி.பி. ராஜேந்திரன் ஈடுபடுவது குறித்து தேர்தல் ஆணையமே முடிவெடுக்கலாம் என்று மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது. #LSPolls #MaduraiHCBench #DGPRajendran
    மதுரை:

    மதுரையைச் சேர்ந்த கதிரேசன் என்பவர் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறி இருப்பதாவது:-

    பாராளுமன்ற தேர்தல் பாதுகாப்பு பணிகளை கவனிக்க போலீஸ் டி.ஜி.பி. ராஜேந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் தேர்தல் பாதுகாப்பு பணிகளை மேற்கொள்வார்.

    டி.ஜி.பி.யாக பணி நீட்டிப்பு செய்த அவர் மீது குட்கா ஊழல் உள்பட பல்வேறு வழக்குகள் உள்ளன. எனவே தேர்தல் பணிகளில் அவர் ஈடுபட்டால் சட்டத்திற்கு புறம்பாக விதிகளை மீறி செயல்பட வாய்ப்புள்ளது. இதனால் தமிழகத்தில் ஜனநாயக முறைப்படி தேர்தல் நடைபெற வாய்ப்புகள் குறைவு.


    எனவே பாராளுமன்ற தேர்தல் பாதுகாப்பு பணிகளில் அவர் ஈடுபட தடை விதிக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திடம் மனு அளித்தேன். ஆனால் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே நீதிபதிகள் மனுவை விசாரித்து டி.ஜி.பி. ராஜேந்திரன் தேர்தல் பணியில் ஈடுபட தடை விதித்து உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

    இந்த வழக்கு இன்று நீதிபதிகள் கிருபாகரன், சுந்தர் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், டி.ஜி.பி. ராஜேந்திரன் தேர்தல் பணியில் ஈடுபடுவதற்கு தடை விதிக்க முடியாது. மனுதாரர் தனது கோரிக்கையை தேர்தல் ஆணையத்திடமே முறையிடலாம்.

    டி.ஜி.பி. ராஜேந்திரன் தேர்தல் பணியில் ஈடுபடுவது குறித்து தேர்தல் ஆணையமே முடிவெடுக்கலாம் என மனுவை தள்ளுபடி செய்தனர்.  #LSPolls #MaduraiHCBench #DGPRajendran
    தேர்தல் பணிகளில் ஈடுபட டி.ஜி.பி.க்கு தடை விதிக்க வேண்டும் என மதுரை ஐகோர்ட்டில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. #LSPolls #MaduraiHCBench #DGPRajendran
    மதுரை:

    மதுரை ஐகோர்ட்டில் நீதிபதிகள் கிருபாகரன், சுந்தர் ஆகியோர் இன்று வழக்கு விசாரணையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வக்கீல் ஏ.கண்ணன் ஆஜராகி, ஏப்ரல் 18-ந்தேதி தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் கமி‌ஷன் அறிவித்துள்ளது.

    தேர்தல் பாதுகாப்பு பணிகளை கவனிக்க போலீஸ் டி.ஜி.பி. ராஜேந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார்.

    அவர் மீது குட்கா ஊழல் உள்பட பல்வேறு வழக்குகள் உள்ளன. குட்கா வழக்கு விசாரணையில் உள்ளது. எனவே தேர்தல் பணிகளில் அவர் ஈடுபட்டால் சட்டத்திற்கு புறம்பாக விதிகளை மீறி செயல்பட வாய்ப்புள்ளது.



    இதனால் தமிழகத்தில் ஜனநாயக முறைப்படி தேர்தல் நடைபெற வாய்ப்புகள் குறைவு. எனவே பாராளுமன்ற தேர்தல் பாதுகாப்பு பணிகளில் அவர் ஈடுபட தடை விதிக்க வேண்டும் என முறையிட்டார்.

    அதற்கு நீதிபதிகள், உங்கள் கோரிக்கை மனுவாக தாக்கல் செய்யப்படும்பட்சத்தில் விசாரிக்கப்படும் என்றனர். #LSPolls #MaduraiHCBench #DGPRajendran
    டி.ஜி.பி. ராஜேந்திரன் பதவி விலகாவிட்டால் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடருவேன் என்று இன்று நடைபெற்ற தி.மு.க. ஆர்ப்பாட்டத்தில் ஜெ.அன்பழகன் பேசினார். #DMK #DMKProtest
    சென்னை:

    அ.தி.மு.க. அரசின் ஊழலை கண்டித்தும், குட்கா ஊழலில் சி.பி.ஐ. விசாரணையில் சிக்கி உள்ள போலீஸ் அதிகாரிகள், அமைச்சர் ஆகியோர் ராஜினாமா செய்ய வலியுறுத்தியும் தி.மு.க. சார்பில் மாவட்ட தலைநகரங்களில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மேற்கு மாவட்டச் செயலாளர் ஜெ.அன்பழகன் எம்.எல்.ஏ. பேசியதாவது:-

    தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் எங்கும் ஊழல் எதிலும் ஊழல் காணப்படுகிறது. பொதுப் பணித்துறை நெடுஞ்சாலைத் துறையில் உள்ள ஊழல்களை உயர்நீதிமன்றமே பட்டியலிடுகிறது. இதுவரை கொடுக்கப்பட்ட டெண்டர் விவரங்களை பட்டியலிட கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

    குட்கா ஊழலில் அமைச்சர் விஜயபாஸ்கர், போலீஸ் டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன், முன்னாள் போலீஸ் கமி‌ஷனர் ஜார்ஜ், வீடுகளில் சி.பி.ஐ. சோதனை நடத்தி உள்ளது. ஆனாலும் இவர்கள் பதவி விலக மறுக்கிறார்கள்.

    எந்த புகாருக்கும் ஆளாகாதவர்தான் பதவி நீடிப்பில் டி.ஜி.பி.யாக இருக்க முடியும். ஆனால் டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன் பதவி விலகாமல் தொடர்ந்து நீடிக்கிறார்.

    எனவே அவர் பதவி விலகாவிட்டால் சுப்ரீம் கோர்ட்டில் நான் வழக்கு தொடருவேன். தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் ஊழல் செய்யும் அமைச்சர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    ஆர்ப்பாட்டத்தில் தமிழக அரசுக்கு எதிராக கண்டன கோ‌ஷங்கள் எழுப்பப்பட்டன.

    ஆர்ப்பாட்டத்தில் மு.க.தமிழரசு, முன்னாள் அமைச்சர் ரகுமான்கான், எம்.எல்.ஏ.க்கள் அண்ணா நகர் மோகன், கு.க.செல்வம், தலைமை கழக நிர்வாகி பூச்சி முருகன், வி.எஸ்.ராஜ், பகுதி செயலாளர்கள் சேப்பாக்கம் மதன்மோகன், ஏ.ஆர்.பி.எம்.காமராஜ், மா.பா.அன்புதுரை, ராமலிங்கம், கே.ஏழுமலை, ஜெ.கருணாநிதி, வேலு, அகஸ்டின்பாபு, பரமசிவம், மாணவரணி மாநில துணை செயலாளர் மோகன், பகுதி துணை செயலாளர் சேப்பாக்கம் பா.சிதம்பரம், லாகூர், கோவிந்தன், மாரி, பாபா சுரேஷ், மேட்டுக்குப்பம் கமலக்கண்ணன், முத்து ராமன், தனிகாசலம், பிரசன்னா, ராமச்சந்திரன் வடிவேலு உள்பட ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

    சென்னை தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் கந்தன் சாவடியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்டச் செயலாளர் மா.சுப்பிரமணியன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார்.

    இதில் தி.மு.க. பொருளாளர் துரைமுருகன் பங்கேற்று பேசினார். அவர் கூறுகையில், எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் எங்கும் ஊழல் எதிலும் ஊழல் நடைபெறுவதாக குறிப்பிட்டார்.

    தாம்பரத்தில் காஞ்சி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் தா.மோ. அன்பரசன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இதில் எம்.எல்.ஏ.க்கள் தாம்பரம் எஸ்.ஆர்.ராஜா, பல்லாவரம் இ.கருணாநிதி, திண்டுக்கல் லியோனி, வைத்தியலிங்கம், தமிழ்மணி, மேடவாக்கம் ரவி, படப்பை மனோகரன், பெருங்களத்தூர் சேகர், புகழேந்தி, பம்மல் கருணாநிதி, பொழிச்சலூர் வனஜா, மாவட்ட பிரதிநிதி ரஞ்சன், செல்வகுமார், இமயவர்மன், ஜோசப் அண்ணாதுரை, ஜானகிராமன், சிவக்குமார், திருநீர்மலை ஜெயக்குமார், காமராஜ், தமிழ்மாறன் உள்பட ஆயிரக்கணக்கான நிர்வாகிகள் பங்கேற்று தமிழக அரசை கண்டித்து கோ‌ஷம் எழுப்பினார்கள்.

    கட்டுமானத் தொழிலாளர் கட்சி பொன்.குமார், எஸ்.அரவிந்த் ரமேஷ் எம்.எல்.ஏ., வாகை சந்திரசேகர் எம்.எல்.ஏ., பாலவாக்கம் சோமு, வேளச்சேரி மணிமாறன், க.தனசேகரன், மகேஷ்குமார், பாலவாக்கம் த.விஸ்வநாதன், துரை.கபிலன், வாசுகிபாண்டியன், இப்ராஹிம், பி.டி.சி.செல்வராஜ், எஸ்.வி.ரவிச்சந்திரன், மதியழகன், கிருஷ்ணமூர்த்தி, துரைராஜ், குணாளன், சந்திரன், கண்ணன், மு.ராஜா, சுசேகர், பாலவாக்கம் மனோகர், சி.பிரதீப், பிரேமா, பொதுக்குழு உறுப்பினர்கள், அணிகளின் அமைப்பாளர்கள், பகுதி கழக நிர்வாகிகள், வட்ட கழக செயலாளர்கள், மாவட்டப் பிரதிநிதிகள், மாவட்ட அளவிலான அணிகளின் மாவட்ட துணை அமைப்பாளர்கள், பகுதி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், வட்ட கழக நிர்வாகிகள், சார்பு மன்றங்களின் நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.

    தண்டையார்பேட்டை, வைத்தியநாதன் மேம்பாலம் அருகே சென்னை வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாதவரம் சுதர்சனம் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார்.

    ஆர்ப்பாட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கண்டன கோ‌ஷங்கள் எழுப்பினார்.

    இதில் கே.பி.பி.சாமி எம்.எல்.ஏ., சமத்துவ மக்கள் கழக தலைவர் எர்ணாவூர் நாராயணன், தி.மு.க. மாநில பிரசார குழு செயலாளர் சிம்லா முத்துச்சோழன், கிரிராஜன், ஆர்.டி.சேகர், வே.சுந்தர்ராஜன், ஜெபதாஸ் பாண்டியன், மருது கணேஷ், பி.டி.பாண்டிச்செல்வம், ரெயின்போ விஜயகுமார், ஏ.வி.ஆறுமுகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    சென்னை கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் கலெக்டர் அலுவலகம் அருகே நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் சேகர்பாபு எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். முன்னாள் மத்திய மந்திரி தயாநிதிமாறன் சிறப்புரையாற்றினார். அவர் பேசும் போது, தமிழகத்தில் இப்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஆட்சி ஊழலில் மிதந்து கொண்டுள்ளது. குட்கா ஊழலுக்கு ஆளான அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் டி.ஜி.பி. பதவி விலக வேண்டும் அவர்கள் கொள்ளையடித்த பணம் மக்களின் வரிப்பணம். அரசு கஜானாவுக்கும், மக்களின் திட்டங்களுக்கம் வரிப்பணம் அமைச்சர்கள் ஊழல் செய்து கொள்ளையடிக்கின்றனர்.

    ஆகவே தமிழகம் தலை நிமிர தி.மு.க. தலைவர் ஸ்டாலின் தலைமையில் விரைவில் ஆட்சி மலர அனைவரும் சம்மதமேற்று பணியாற்றுவோம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    சேகர்பாபு எம்.எல்.ஏ. பேசும்போது, ‘‘தமிழகத்தில் நடைபெறும் ஆட்சியில் அமைச்சர் மீது குட்கா வழக்கு, சட்ட ஒழுங்கை பாதுகாக்கும் டி.ஜி.பி. மீது ஊழல் வழக்கு உள்ளது. இது பற்றி முதல்-அமைச்சரிடம் புகார் செய்ய சென்றால் அவர் மீதே கோர்ட்டில் வழக்கு இருக்கிறது. துணை முதல்-அமைச்சர் மீதும் புகார் உள்ளது.

    டெண்டர் விடுவதில் அமைச்சர் வேலுமணி மீது ஊழல் இப்படி எல்லா துறையிலும் ஊழல் மலிந்து விட்டது. தி.மு.க. தலைவர் கருணாநிதி மறைந்ததும் கட்சியில் வெற்றிடம் ஏற்பட்டு விடும் என்று சொன்னார்கள். ஆனால் தளபதி தலைமைஏற்று கட்சி வீறுநடை போட்டு செல்கிறது. விரைவில் சட்டமன்ற தேர்தலோ அல்லது பாராளுமன்ற தேர்தலோ வரும். இதில் அனைவரும் ஒருங்கிணைந்து பணியாற்றி ஸ்டாலின் தலைமையில் நல்லாட்சி ஏற்ப அனைவரும் பாடுபட வேண்டும்’’ என்றார்.

    ஆர்ப்பாட்டத்தில் எம்.எல்.ஏ.க்கள் ரங்கநாதன், தாயகம் ரவி, ரவிச்சந்திரன் சங்கரி நாராயணன், சல்மா, பிரசன்னா, வக்கீல் சந்துரு, பகுதி செயலாளர்கள் ஜி.சி.எப்.முரளி, ராஜசேகர், நாகராஜன், ஜோசப் சாமுவேல், வாசு, ஜெயின், விஜயகுமார், வேலு தமிழ் வேந்தன், சாமிக்கன்னு, உதயா மாவட்ட நிர்வாகி ஏகப்பன், தேவஜவகர் ராதாகிருஷ்ணன், புனித வதி எத்திராஜன், ஆசாத் செம்மொழி ஆகியோர் கலந்து கொண்டனர். கவியரசு நன்றி கூறினார். பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு கண்டன கோ‌ஷங்களை எழுப்பினர். #DMK  #DMKProtest
    குட்கா ஊழல் விவகாரத்தில் சென்னையில் நேற்று சிபிஐ அதிகாரிகள் நடத்திய சோதனையில் டன் கணக்கில் குட்கா பொருட்களும் 53 எந்திரங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. #GutkhaScam #CBIRaid
    சென்னை:

    குட்கா விவகாரத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், டிஜிபி டி.கே ராஜேந்திரன், முன்னாள் போலீஸ் கமிஷ்னர் ஜார்ஜ் ஆகியோர் வீடுகள் உள்பட 40-க்கும் மேற்பட்ட இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சமீபத்தில் சோதனை நடத்தினர். 

    சோதனையை தொடர்ந்து இந்த வழக்கில் தொடர்புடைய குட்கா நிறுவன பங்குதாரர்கள் மாதவராவ், உமாசங்கர் குப்தா, உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி செந்தில் முருகன், கலால் வரித்துறை அதிகாரி பாண்டியன், சீனிவாச ராவ் ஆகிய 5 பேரும் கைது செய்யப்பட்டு விசாரணைக்காவலில் உள்ளனர்.

    கைது செய்யப்பட்டவர்களின் விசாரணைக்காவல் முடிந்த நிலையில், அவர்கள் மீண்டும் இன்று சிபிஐ கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது, அவர்களின் விசாரணை காவலை மேலும் மூன்று நாட்கள் நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார். 

    மாதவராவிடம் நடத்தப்பட்ட விசாரணையை அடிப்படையாக கொண்டு அவருக்கு சொந்தமான சென்னை அண்ணாமலை இன்டஸ்ட்ரீஸில் நேற்று சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர். 

    இந்த சோதனையின் போது டன் கணக்கில் குட்கா மூலப்பொருட்களும், 53 எந்திரங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 
    குட்கா ஊழல் விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசியுள்ளார். #GutkhaScam #CBIRaid #VijayaBaskhar
    சென்னை:

    குட்கா விவகாரத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், டிஜிபி டி.கே ராஜேந்திரன், முன்னாள் போலீஸ் கமிஷ்னர் ஜார்ஜ் ஆகியோர் வீடுகள் உள்பட 40-க்கும் மேற்பட்ட இடங்களில் சிபிஐ அதிகாரிகள் நேற்று முன்தினம் சோதனை நடத்தினர். இந்த சோதனை தமிழக அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    சோதனையை தொடர்ந்து இந்த வழக்கில் தொடர்புடைய குட்கா நிறுவன பங்குதாரர்கள் மாதவராவ், உமாசங்கர் குப்தா, உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி செந்தில் முருகன், கலால் வரித்துறை அதிகாரி பாண்டியன், குட்கா தயாரிப்பு நிறுவனர் சீனிவாச ராவ் ஆகிய 5 பேரும் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டுள்ளனர்.

    இந்நிலையில், கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதல்வர் இல்லத்துக்கு இன்று வந்த அமைச்சர் விஜயபாஸ்கர், எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசினார். சுமார் 15 நிமிடங்களுக்கு பின்னர் விஜய பாஸ்கர் அங்கிருந்து புறப்பட்டுச்சென்றார்.

    இதற்கிடையே, குட்கா ரெய்டு தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் கமிஷ்னர் ஜார்ஜ், குட்கா விவகாரத்தில் ஊழல் நடந்துள்ளது எனவும், தன்னை சிக்கவைக்க சதி நடப்பதாகவும் குற்றம் சாட்டியிருந்தார்.
    குட்கா ஊழல் விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள 5 பேரையும் வரும் 20-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க சிபிஐ கோர்ட் உத்தரவிட்டுள்ளது. #GutkhaScam #CBIRaid
    சென்னை:

    குட்கா விவகாரத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், டிஜிபி டி.கே ராஜேந்திரன், முன்னாள் போலீஸ் கமிஷ்னர் ஜார்ஜ் ஆகியோர் வீடுகள் உள்பட 40-க்கும் மேற்பட்ட இடங்களில் சிபிஐ அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர். இந்த சோதனை தமிழக அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    சோதனையை தொடர்ந்து இந்த வழக்கில் தொடர்புடைய குட்கா நிறுவன பங்குதாரர்கள் மாதவராவ், உமாசங்கர் குப்தா, உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி செந்தில் முருகன், கலால் வரித்துறை அதிகாரி பாண்டியன் ஆகிய நால்வரும் இன்று சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர்.

    இதனை தொடர்ந்து மாலை 5 மணியளவில் குட்கா தயாரிப்பு நிறுவனர் சீனிவாச ராவும் கைது செய்யப்பட்டார். 

    கைது செய்யப்பட்ட 5 பேரும் சென்னை சிபிஐ கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்கள் அனைவரையும் வரும் 20-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். 
    குட்கா விவகாரத்தில் சிபிஐ ரெய்டு நடத்தியுள்ள நிலையில், டிஜிபி டி.கே ராஜேந்திரன் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை அவரது இல்லத்தில் சந்தித்துள்ளார். #GutkhaScam #DGPRajendran #CBIRaid
    சென்னை:

    குட்கா விவகாரத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், டிஜிபி டி.கே ராஜேந்திரன், முன்னாள் போலீஸ் கமிஷ்னர் ஜார்ஜ் ஆகியோர் வீடுகள் உள்பட 40-க்கும் மேற்பட்ட இடங்களில் சிபிஐ அதிகாரிகள் இன்று சோதனை நடத்தினர். இந்த சோதனை தமிழக அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    தமிழகத்தில் மட்டும்தான் வரலாற்றின் முதல்முறையாக வருமானவரிச் சோதனையில் ராம மோகனராவ் சிக்கியபிறகு தலைமைச் செயலகத்தில் உள்ள தலைமைச் செயலாளர் அலுவலகத்தில் சோதனை நடத்தப்பட்டது. தொடர்ந்து முதல்முறையாக டிஜிபி டி.கே.ராஜேந்திரன் சென்னை வீட்டில் சோதனை நடத்தப்பட்டது.

    இந்நிலையில், சோதனை முடிந்த சில மணி நேரங்களில் டி.கே ராஜேந்திரன் கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதல்வர் இல்லத்தில் எடப்பாடி பழனிசாமியை தற்போது சந்தித்து பேசி வருகிறார். 
    குட்கா முறைகேடு விவகாரத்தில் அமைச்சர் விஜயபாஸ்கர், டிஜிபி ராஜேந்திரன் வீடுகள் உள்ளிட்டோர் வீடுகளில் நடந்த சிபிஐ சோதனை முடிவடைந்துள்ளது. #GutkhaScam
    சென்னை:

    தமிழ்நாட்டில் குட்கா விற்பனை செய்வதற்கு கடந்த 2013-ம் ஆண்டு அரசு தடை விதித்தது.  இந்த தடையை மீறி சென்னை உள்பட முக்கிய நகரங்களில் குட்கா விற்பனை செய்யப்படுகிறது. போலீசாருக்கு லஞ்சம் கொடுத்து விட்டு சிறிய கடைகளில் குட்கா விற்பனை படுஜோராக நடக்கிறது.

    இந்த நிலையில் தமிழகத்தில் நடக்கும் குட்கா விற்பனையில் பல கோடி ரூபாய் வரி ஏய்ப்பு நடப்பதாக மத்திய வருமான வரித்துறைக்கு ரகசிய தகவல்கள் சென்றன. அதன்பேரில் சென்னை செங்குன்றத்தில் செயல்பட்டு வந்த எம்.டி.எம். குட்கா ஆலையில் கடந்த 2016-ம் ஆண்டு ஜூலை மாதம் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினார்கள்.

    அந்த ஆலையில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் போதை பொருட்கள் தயாரிக்கப்படுவது கண்டு பிடிக்கப்பட்டது. இங்கிருந்து தமிழ்நாடு முழுவதும் கடைகளுக்கு சப்ளை செய்யப்பட்டு விற்பனை ஆவதும் வெளிச்சத்துக்கு வந்தது.

    குட்கா ஆலை பங்குதாரர் மாதவராவ் வீட்டிலும், குடோனிலும் சோதனை நடத்தப்பட்டது. அப்போது மாதவராவ் உதவியாளர் வீட்டில் இருந்து ரகசிய டைரி ஒன்று சிக்கியது.

    அந்த டைரியில் குட்கா தயாரிப்பு மற்றும் விற்பனையை கண்டு கொள்ளாமல் இருப்பதற்காக மாநகராட்சி உயர் அதிகாரிகள், உணவு பாதுகாப்பு அதிகாரிகள், போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்த விவரம் இடம் பெற்று இருந்தது.

    ஒவ்வொரு போலீஸ் அதிகாரிக்கும் எந்தெந்த தேதிகளில் எத்தனை லட்சம் ரூபாய் லஞ்சமாக கொடுக்கப்பட்டது என்ற விவரமும் துல்லியமாக எழுதப்பட்டு இருந்தது.

    அதிகாரிகள் துணையோடு குட்கா விற்ற வகையில் எவ்வளவு வரி கட்டப்பட்டு இருக்கிறது என்ற குறிப்புகளும் இருந்தன. இந்த டைரி தகவல்தான் அதிகாரிகள் சிக்குவதற்கு ஆதாரமாக அமைந்தது.

    தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பெயரும் அந்த டைரியில் இடம் பெற்று இருப்பதாக வருமான வரித்துறை தெரிவித்து இருந்தது. இதைத் தொடர்ந்து அப்போதைய சென்னை மாநகர போலீஸ் கமி‌ஷனர் உள்பட 23 அதிகாரிகளுக்கு ரூ.60 லட்சம் வீதம் மொத்தம் ரூ.40 கோடி லஞ்சம் வழங்கியதாக தகவல்கள் வெளியானது. டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன் மீதும் குற்றம் சாட்டப்பட்டது.

    இது தொடர்பாக குட்கா பங்குதாரர் மாதவராவிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. அப்போது அவர் மாதாமாதம் தவிர தீபாவளி, கிறிஸ்துமஸ் போன்ற பண்டிகை காலங்களிலும் லஞ்சம் கொடுத்து இருப்பதாக வருமான வரித்துறையிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

    இந்த ஆதாரத்தின் அடிப்படையில் அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கும்படி தமிழக அரசின் தலைமைச் செயலாளர், போலீஸ் டி.ஜி.பி. ஆகியோருக்கு வருமான வரித்துறை முதன்மை ஆணையர் கடிதம் எழுதி இருந்தார்.

    இதையடுத்து தமிழக லஞ்ச ஒழிப்பு போலீசார் பெயரளவுக்கு விசாரணை நடத்தி சில போலீஸ் அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து மேல் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

    இதனால் சி.பி.ஐ. விசாரணை கோரி சென்னை ஐகோர்ட்டில் தி.மு.க. சார்பில் வழக்கு தொடரப்பட்டது. அதை ஏற்று குட்கா ஊழல் பற்றி சி.பி.ஐ. விசாரணை நடத்த சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. டெல்லி சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரிக்க உத்தரவிடப்பட்டு இருந்தது.

    அதன்பேரில் சி.பி.ஐ. சார்பில் பெயர் குறிப்பிடாமல் கலால் துறை, உணவு பாதுகாப்புத் துறை, போலீஸ் அதிகாரிகள் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேலும் சட்ட விரோத பணபரிவர்த்தனை நடந்து இருப்பதால் இது தொடர்பாக அமலாக்கப் பிரிவும் வழக்குப்பதிவு செய்தது. இதிலும் யாருடைய பெயரும் குறிப்பிடப்படவில்லை.

    சமீபத்தில் டெல்லியில் இருந்து வந்த சி.பி.ஐ. அதிகாரிகள் குட்கா பங்குதாரர் மாதவராவிடம் விசாரணை நடத்தினார்கள். சுமார் 10 மணி நேரம் நீடித்த இந்த விசாரணையில் குட்கா ஊழல் தொடர்பாக ஏராளமான தகவல்கள் சி.பி.ஐ. அதிகாரிகளுக்கு கிடைத்தது. எனவே சி.பி.ஐ.யின் அடுத்த அதிரடி எந்த நேரத்திலும் இருக்கலாம் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது.

    இந்த நிலையில் குட்கா ஊழல் தொடர்பாக சி.பி.ஐ. அதிகாரிகள் இன்று (புதன்கிழமை) அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இந்த ஊழலில் குற்றம் சாட்டப்பட்டுள்ள அமைச்சர் விஜயபாஸ்கரின் கிரீன்வேஸ் சாலையில் உள்ள வீட்டுக்கு காலை 8 மணிக்கு 5 அதிகாரிகள் சென்றனர். வீட்டை பூட்டிக்கொண்டு சோதனையில் ஈடுபட்டனர்.

    அதே நேரத்தில் முகப்பேர் மேற்கில் உள்ள போலீஸ் டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன் வீட்டிலும் சி.பி.ஐ. அதிகாரிகள் அதிரடியாக புகுந்து சோதனையில் ஈடுபட்டனர்.

    நொளம்பூர் புதிய போலீஸ் நிலையம் அருகில் உள்ள அவரது வீட்டில் 10 அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். குட்கா ஊழலில் பரபரப்பாக பேசப்பட்ட முன்னாள் போலீஸ் கமி‌ஷனரான ஜார்ஜின் வீட்டிலும் சோதனை நடந்தது.

    நொளம்பூர் பாரிசாலையில் உள்ள அவரது வீட்டிலும் சி.பி.ஐ. அதிகாரிகள் குழு அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இங்கு 5 அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

    போலீஸ் அதிகாரிகளான டி.கே.ராஜேந்திரன், ஜார்ஜ் இருவரது வீடுகளும் ஒரே பகுதியில் அமைந்துள்ளன. இதனால் இன்று நடைபெற்ற இந்த சோதனை அப்பகுதியில் பரபரப்பாக பேசப்பட்டது.

    சென்னை போலீஸ் வட்டாரத்தில் மட்டுமின்றி, தமிழகம் முழுவதும் உள்ள போலீஸ் அதிகாரிகள் மட்டத்திலும் சி.பி.ஐ. நடத்திய இந்த அதிரடி வேட்டை உச்சக்கட்ட பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    டி.ஜி.பி.யாக பொறுப்பில் இருக்கும் ஒருவர் மீது ஊழல் குற்றச்சாட்டு கூறப்பட்டு இருப்பதும், அது தொடர்பாக, சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தி இருப்பதும், தமிழக காவல்துறை வரலாற்றில் இதுவே முதல் முறையாகும்.
    தூத்துக்குடியில் நிலைமை பதட்டமாக உள்ளதால் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்றும் டி.ஜி.பி. ராஜேந்திரனை தலைமை செயலகத்துக்கு அழைத்து ஆலோசனை நடத்தினார். #SterliteProtest
    சென்னை:

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் கலவரம் வெடித்ததால் பொதுமக்களுக்கும் போலீசுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது

    இதில் போலீசார் துப்பாக்கியால் சுட்டதில் 10 பேர் பலியானார்கள். 60-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர்.



    தூத்துக்குடியில் நிலைமை பதட்டமாக உள்ளதால் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரனை அழைத்து அவசர ஆலோசனை நடத்தினார்.

    இதைதொடர்ந்து மேலும் 2 ஆயிரம் போலீசார் மதுரை உள்பட பக்கத்து மாவட்டங்களில் இருந்து தூத்துக்குடிக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளனர். ஆனாலும் இன்றும் அங்கு பதட்டமான சூழல் நிலவுகிறது.

    இதனால் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்றும் டி.ஜி.பி. ராஜேந்திரனை தலைமை செயலகத்துக்கு அழைத்து ஆலோசனை நடத்தினார்.

    இதில் மூத்த அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், கே.ஏ.செங்கோட்டையன், தங்கமணி, தலைமை செயலாளர் கிரிஜா வைத்திய நாதன், உள்துறை செயலாளர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    தூத்துக்குடியில் அமைதி திரும்ப எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கை குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. #SterliteProtest

    ×