என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
முகப்பு » Dhananjaya de Silva Father
நீங்கள் தேடியது "Dhananjaya de Silva Father"
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னணி பேட்ஸ்மேனான தனஞ்ஜெயா டி சில்வாவின் தந்தை மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார்.
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னணி பேட்ஸ்மேன் தனஞ்ஜெயா டி சில்வா. இவரது தந்தை ரஞ்சன் டி சில்வா நேற்று முன்தினம் இரவு மர்ம நபரால் சுட்டுக்கொல்லப்பட்டார். கொழும்பின் புறநகரான ரத்மலானாவில் இந்த சம்பவம் நடந்தது. உள்ளூர் அரசியல்வாதியான ரஞ்சன் எதற்காக கொல்லப்பட்டார் என்பது தெரியவில்லை. இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. இதனால் வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இருந்து 26 வயதான தனஞ்ஜெயா டி சில்வா விலகியுள்ளார். மற்ற வீரர்கள் நேற்று வெஸ்ட் இண்டீசுக்கு புறப்பட்டனர்.
×
X