என் மலர்
நீங்கள் தேடியது "Didi Global"
- சொந்தமாக ரோபோ டாக்சி உருவாக்கும் திட்டத்தின் அங்கமாக இந்த கான்செப்ட் கார் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.
- டிடி நியூரான் கான்செப்ட் கார் ஓட்டுனர் இருக்கையை முழுமையாக அகற்றிவிட்டு, பயணிகளுக்கு அதிக இடவசதியை வழங்குகிறது.
சீனாவை சேர்ந்த டிடி குளோபல் நிறுவனம் தனது ரோபோ டாக்சி கான்செப்ட் கார் மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது. டிடி நியூரான் என்று அழைக்கப்படும் புதிய கான்செப்ட் கார் விர்ச்சுவல் நிகழ்வில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த கான்செப்ட் கார் எதிர்கால போக்குவரத்தில் பயனர் அனுபவத்தை அடுத்தக் கட்டத்திற்கு கொண்டு செல்லும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது.
டிடி ஆட்டோனோமஸ் டிரைவிங் தலைமை நிர்வாக அதிகாரி மெங் சிங் புதிய கான்செப்ட் வாகனத்தை அறிமுகம் செய்தார். புளூ மற்றும் வைட் நிறங்களை கொண்டிருக்கும் ரோபோ டாக்சி சீனாவில் இயங்கி வரும் உள்ளூர் ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்களுடன் கூட்டணி அமைத்து உற்பத்தி செய்யப்பட இருக்கிறது.
டிடி குளோபல் நிறுவனத்தின் நீண்ட நாள் இலக்கு, சொந்தமாக ரோபோ டாக்சி உருவாக்கும் திட்டத்தின் அங்கமாக இந்த கான்செப்ட் கார் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த திட்டத்தின் கீழ் 2025 வாக்கில் தானியங்கி வாகனங்களை டிடி நெட்வொர்க்கில் பயன்பாட்டிற்கு கொண்டுவர இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
"இவை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யப்படும் என்று நம்புகிறோம். பாகங்களின் உற்பத்தியை கட்டுப்படுத்தி, அதிகபட்சம் இந்த வாகனத்திற்கான 90 சதவீத பாகங்களை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்ய முடியும் என்று நம்புகிறோம்," என மெங் சிங் தெரிவித்து இருக்கிறார்.
டிடி நியூரான் கான்செப்ட் கார் ஓட்டுனர் இருக்கையை முழுமையாக அகற்றிவிட்டு, பயணிகளுக்கு அதிக இடவசதியை வழங்குகிறது. இந்த காரின் மிகமுக்கிய அம்சமாக இதில் உள்ள ரோபோடிக் கைகள் உள்ளன. இவை பயணிகளுக்கு மிகவும் சவுகரியமாக இருக்கும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் டிடி குளோபல் நிறுவனம் லிடார் சென்சார் மற்றும் கார் கம்ப்யுடிங் சாதனத்தை அறிமுகம் செய்தது.
இவை தானியங்கி டிரைவிங் தொழில்நுட்பத்தில் டிடி நிறுவனம் ஏற்படுத்தி இருக்கும் பணிகளை விளக்கும் வகையிலும், சவால்களை எந்த அளவுக்கு எதிர்கொள்ளும் என்பது பற்றிய விளக்கமும் இடம்பெற்று இருந்தது. 2016 ஆம் ஆண்டு வாக்கில் டிடி நிறுவனம் தானியங்கி வாகனங்களை உருவாக்கும் பணிகளை துவங்கியது.