என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Diesel Rate"
- கடந்த 3 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைந்துள்ளது.
- இந்தியாவில் பெட்ரோல்-டீசல் விலை குறைக்கப்பட வில்லை.
புதுடெல்லி:
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயிக்கப்படுகிறது.
கச்சா எண்ணெய்க்காக ரஷ்யா, ஈராக், அமெரிக்கா, சவுதி அரேபியா, ஐக்கிய அரபு நாடுகள் ஆகியவற்றை இந்தியா நம்பி உள்ளது. 40 சதவீதம் அளவுக்கு ரஷ்யாவில் இருந்துதான் கச்சா எண்ணெய் வாங்கப்படுகிறது.
கடந்த ஜூலை மாதம் மட்டும் 46 லட்சம் பீப்பாய் கச்சா எண்ணெய் வாங்கப்பட்டுள்ளது. ரஷ்யாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெயின் விலை மற்ற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் விலையைவிட மிக குறைவு.
ரஷ்யா-உக்ரைன் போர் காரணமாக மேற்கத்திய நாடுகள் ரஷ்யாவில் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை தற்காலிகமாக நிறுத்திவைத்து இருக்கின்றன.
இப்போது கச்சா எண்ணெய் விலை நாளுக்கு நாள் குறைந்து வந்தாலும், இந்தியாவில் பெட்ரோல்-டீசல் விலை குறைக்கப்பட வில்லை.
ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை அதிகபட்சமாக 2008-ம் ஆண்டு 147 அமெரிக்க டாலராக இருந்த நேரத்தில், சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.55 ஆக இருந்தது. டீசல் விலை ரூ.35 ஆக இருந்தது.
இப்போது கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாய்க்கு 68.56 டாலர் என்ற அளவில்தான் இருக்கிறது. ஆனால், பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.100.75 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.92.34 ஆகவும் உள்ளது.
கடந்த மார்ச் மாதம் 28-ந்தேதி முதல் பெட்ரோல்-டீசல் விலையில் எந்தவித மாற்றமும் செய்யப்பட வில்லை. மார்ச் 28-ந்தேதி கச்சா எண்ணெய் விலை 83.69 டாலராக இருந்தது.
இந்த நிலையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து சரிந்தால் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படும் என்று பெட்ரோலியத்துறை அமைச்சக செயலாளர் பங்கஜ் ஜெயின் தெரிவித்து உள்ளார்.
இதுகுறித்து பங்கஜ் ஜெயின் கூறியதாவது:-
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடந்த 3 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைந்திருப்பதால் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை குறைக்கவேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
கச்சா எண்ணெய் விலை சரிவு நீடித்தால் பெட்ரோல், டீசல் விலை குறைப்பு குறித்து எண்ணெய் நிறுவனங்கள் பரிசீலிக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
சென்னையில் இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 23 காசுகள் குறைந்து ரூ. 71.62-க்கும், டீசல் விலை லிட்டருக்கு 23 காசுகள் குறைந்தது ரூ. 66.59-க்கும் விற்பனையாகிறது.
பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினசரி நிர்ணயம் என்ற நிலைக்கு வந்த பிறகு, பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து கொண்டே சென்றது. உச்சக்கட்டமாக பெட்ரோல் லிட்டருக்கு 85 ரூபாய்க்கு மேல் விற்பனையானது.
இந்த நிலையில், கடந்த அக்டோபர் மாதத்தில் இருந்து பெட்ரோல் விலை குறைய ஆரம்பித்தது. அதன்பின் தொடர்ந்து பெட்ரோல் விலை குறைந்து கொண்டே வந்தது. ரூ.85-க்கும் கூடுதலாக விற்கப்பட்டு வந்த பெட்ரோல் விலை ரூ.75-க்கும் குறைவாக சரிந்தது. இதேபோன்று டீசல் விலையும் சரிந்தது.
இந்த நிலையில் சென்னையில் பெட்ரோல் விலை நேற்றைய விலையில் இருந்து 21 காசுகள் குறைந்து இன்று ரூ.72.70-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதேபோன்று டீசல் விலை 19 காசுகள் குறைந்து ரூ.67.58-க்கு விற்பனையாகிறது.
பெட்ரோல், டீசல் விலையை பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் நிர்ணயித்து வருகின்றன. கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலையிலும் ஏற்றம், இறக்கம் காணப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த அக்டோபர் மாதம் பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத வகையில் ஏற்றம் கண்டது.
அக்டோபர் மாதம் 17-ந்தேதி ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.86.10, டீசல் விலை ரூ.80.04 என உச்சத்தை தொட்டது. இதன் காரணமாக சரக்கு லாரி கட்டணம் உயர்ந்தது. ஷேர் ஆட்டோ கட்டணமும் அதிகரித்தது.
தொடர் விலை உயர்வு காரணமாக பெட்ரோல், டீசல் மீதான உற்பத்தி வரியை மத்திய அரசு குறைத்தது. இதனைத் தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலையில் இறங்குமுகம் காணப்பட்டது.
இந்த நிலையில், கடந்த சில நாட்களாக பெட்ரோல், டீசல் விலை ஏற்ற இறக்கமாக காணப்படுகிறது. சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து எந்த மாற்றமும் இன்றி ரூ.72.99-க்கே விற்பனை செய்யப்படுகின்றது. டீசல் விலை நேற்றைய விலையில் இருந்து 13 காசுகள் குறைந்து ரூ. 67.97 ஆக விற்பனை ஆகிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்