search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Diet Food"

    • உடலில் ரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கும்.
    • சரியான அளவு கார்போஹைட்ரேட்டுகளை எடுக்க வேண்டும்.

    நீரிழிவு என்பது ஒரு தீவிர நோயாகும். இது உலகம் முழுவதும் பெரியவர்கள் மற்றும் குழந்தைகளை அதன் பலியாக்குகிறது. நீரிழிவு நோயில் இரண்டு வகைகள் உள்ளன. டைப் 1 நீரிழிவு, குழந்தை பருவ நீரிழிவு என்றும் அழைக்கப்படுகிறது.

    இதில் ஒரு நபர் நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த மனிதனால் உருவாக்கப்பட்ட இன்சுலின் பயன்படுத்த வேண்டும். அதேசமயம் டைப் 2 நீரிழிவு மரபணு காரணங்களால் ஏற்படுகிறது மற்றும் வாழ்க்கை முறையுடன் தொடர்புடையது.

    டைப் 1 நீரிழிவு நோயின் போது என்ன செய்யக்கூடாது என்பதை தெரிந்து கொள்வோம்.

    * டைப் 1 நீரிழிவு நோய், தாமதமாக கண்டறியப்படுகிறது. டைப் -1நீரிழிவு நோயைப் பற்றி அறிய, ஆன்டிஜென் சோதனை செய்யப்பட வேண்டும். இதற்காக நீங்கள் ஐலெட் செல் ஆன்டிஜென் மற்றும் குளுடாமிக் அமிலம் டிகார்பாக்சிலேஸ் 65 ஆகியவற்றைப் பெறலாம். இது தாமதமாக கண்டறியப்பட்டால் நீரிழிவு நோய் மேலும் அதிகரிக்கலாம்.

    * டைப் 1 நீரிழிவு அடிக்கடி கார்டிசோல் மற்றும் அட்ரினலின் போன்ற மன அழுத்த ஹார்மோன்களை தூண்டுகிறது. இது உடலில் ரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கும். டைப் 1 நீரிழிவு நோயாளிகளில், இந்த ஹார்மோன் மாற்றங்கள் இன்சுலின் மூலம் கட்டுப்படுத்த கடினமாக இருக்கும் உயர் ரத்த சர்க்கரை அளவை ஏற்படுத்தும்.

    எனவே, உங்கள் உணர்ச்சி ஆரோக்கியத்தை நீங்கள் புறக்கணிக்கக்கூடாது. ஆனால் மன அழுத்தத்தை குறைக்கவும், இந்த ஹார்மோன்களை கட்டுப்படுத்தவும் முயற்சிக்கவும்.

    உங்கள் ரத்த சர்க்கரை அளவுகள், உணவு உட்கொள்ளல், உடல் செயல்பாடு மற்றும் இன்சுலின் அளவைப் பற்றிய குறிப்பை எப்போதும் வைத்திருக்க வேண்டும். இது நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்துவது முக்கியம். ஒரு நாளிதழ் எழுதுவது நீரிழிவு வடிவங்களைக் கண்டறிந்து அதைக் கட்டுப்படுத்த உதவுகிறது.

    டைப் 1 நீரிழிவு நோயுடன் தொடர்புடைய சிக்கல்கள், சிறுநீரக செயல்பாடு சோதனைகள் மற்றும் லிப்பிட் சுயவிவரம் சரியான நேரத்தில் வழக்கமான பரிசோதனைகளை மேற்கொள்வது மிகவும் முக்கியம். இதனால் அது சரியான நேரத்தில் கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்படும். இந்த சோதனைகள் செய்யப்படாவிட்டால், தேவையான சிகிச்சையை தாமதப்படுத்தலாம்.

    கார்போஹைட்ரேட்டுகளின் சரியான அளவைக் கண்டுபிடிப்பது மிகவும் முக்கியம். அத்தகைய சூழ்நிலையில், உங்கள் அளவை தவறாகக் கணக்கிடுவது தவறான இன்சுலின் டோசுக்கு வழிவகுக்கும். இது ரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கலாம் அல்லது குறைக்கலாம். எனவே, சரியான அளவு கார்போஹைட்ரேட்டுகளை எடுக்க எப்போதும் உங்கள் மருத்துவர் அல்லது நிபுணரை அணுகவும்.

    • உடற்பயிற்சி செய்தால் ரத்தத்தில் சர்க்கரை அளவு குறைய வாய்ப்புள்ளது.
    • பயிற்சியில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் பயிற்சியாளரை அணுகவும்.

    பிட்டான உடலை பெற விரும்பி இன்று பலரும் உடற்பயிற்சி கூடத்திற்கு செல்வது வழக்கமாகி வருகிறது. ஜிம்முக்கு செல்வோர் எதை செய்யலாம் எதை தவிர்க்க வேண்டும் என்று தெரிந்துகொள்ள வேண்டியது அவசியமாகும். பயிற்சிகள் முறைகள், பயிற்சி நேரம் உள்ளிட்ட விவரங்களை தெரிந்து கொள்ளாமல் ஜிம்முக்கு சென்று உடற்பயிற்சி செய்வது மரணத்தில் கூட சென்று முடியலாம்.

    ஜிம்முக்கு செல்வோர் அல்லது செல்ல விரும்புவோர் கீழ்கண்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டால் உடல்காயம், மாரடைப்பு, ஸ்ட்ரோக், சுயநினைவிழப்பு ஆகியவற்றில் இருந்து தங்களை தற்காத்துக் கொள்ளலாம்.

    நீரிழிவு நோய் அல்லது குறைந்த ரத்த சர்க்கரை அளவு உள்ளவர்கள் ஜிம்முக்கு செல்லும் முன் உடலின் சர்க்கரை அளவை தெரிந்துகொள்ள வேண்டும். உடற்பயிற்சி செய்தால் ரத்தத்தில் சர்க்கரை அளவு குறைய வாய்ப்புள்ளது. இதனால் மயக்கம், வாந்தி அல்லது உடற்சோர்வு ஏற்படலாம். ரத்த சர்க்கரை அளவு மிகவும் குறைந்தால் சுயநினைவு இழக்க நேரிடும். மாவுச்சத்து அதிகம் உள்ள திண்பண்டங்களை ஜிம்முக்கு எடுத்து செல்வது நீரிழிவு நோயாளிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

     பயிற்சி முறை

    ஜிம் பயிற்சிகள் சிக்கலானவையாக இருக்கலாம். சரியான முறையில் பயிற்சிகளை செய்ய வேண்டியது அவசியம். இல்லையேல், காயங்கள் ஏற்பட வாய்ப்புண்டு. பயிற்சியில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் பயிற்சியாளரை அணுகவும். அதேபோல, புதிய பயிற்சி மேற்கொள்ளும் முன்னர் பயிற்சியாளரிடம் கலந்தாலோசிக்க வேண்டும்.

    உடற்பயிற்சி செய்வது அவசியம் தான். இருப்பினும், அளவிற்கு மிஞ்சினால் அமுதும் நஞ்சு என்பது போல அதிகமாக உடற்பயிற்சி செய்தாலும் உடலுக்கு தீங்கு ஏற்படக்கூடும். பரிந்துரைக்கப்பட்ட கால அளவிற்கு மட்டுமே உடற்பயிற்சி மேற்கொள்ள வேண்டும்.

    • புரோட்டின் உள்ள உணவுகளாக தேர்வு செய்து கொடுப்பது அவசியம்.
    • பருப்பு வகைகளில் புரோட்டின் சத்துக்கள் அதிகப்படியாக இருக்கும்.

    நம் குழந்தைகள் வளரும் காலங்களில் அவர்களுக்கு அதிகம் தேவைப்படும் சத்து புரோட்டின். அதற்காக முக்கியமாக நாம் புரோட்டின் உள்ள உணவுகளாக தேர்வு செய்து கொடுப்பது அவசியம். குழந்தைகளுக்கு புரோட்டின் உள்ள காய்கறிகள் போன்றவற்றை உணவாக கொடுக்கும் பொழுது அவர்கள் முதலில் உணவுகளை தவிர்க்கத் தான் பார்ப்பார்கள். ஆனால் புரோட்டின் சத்தை அவர்களுக்கு விரும்பிய படி நாம் கொடுக்கலாம்.

    பருப்பு வகைகளில் புரோட்டின் சத்துக்கள் அதிகப்படியாக இருக்கும். அந்த பருப்புகளை எல்லாம் அரைத்து அதில் இருந்து நாம் லட்டு தயாரித்து குழந்தைகளுக்கு சாப்பிட கொடுக்கும் போது அவர்கள் லட்டை மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்.

    தேவையான பொருட்கள்:

    நெய்- 4 ஸ்பூன்

    நிலக்கடலை- ஒரு கப்

    உலர் திராட்சை- 100 கிராம்

    முந்திரி- 50 கிராம்

    பாதம்- 50 கிராம்

    பிஸ்தா- 50 கிராம்

    பூசணி விதை- 50 கிராம்

    ஏலக்காய்- 6

    பேரிச்சம் பழம்- 150 கிராம்

    செய்முறை:

    முதலில் கடாயை அடுப்பில் வைத்து நாம் எடுத்து வைத்திருக்கும் நிலக்கடலையை காடாயில் போட்டு எண்ணெய் இல்லாமல் வறுத்துக் கொள்ளுங்கள். கடலை வறுபட்டு பொன்னிறமாக வந்ததும் அதை தாம்பூல தட்டில் ஓரமாக கொட்டிக் கொள்ளுங்கள்.

    அதன்பிறகு கடாயில் கால் டீஸ்பூன் அளவு நெய் ஊற்றி அதில் நாம் எடுத்து வைத்திருக்கும் உலர் திராட்சை பழங்களை சேர்த்து நன்றாக வறுத்து எடுங்கள். ஒரு நிமிடம் நன்றாக வறுத்து எடுத்த பின்னர் உலர் திராட்சையும் தாம்பூல தட்டில் ஒரமாக கொட்டி வைக்க வேண்டும்.

    பின்னர் மறுபடியும் கால் டீஸ்பூன் நெய் ஊற்றி அதனுடன் முந்திரி பருப்புகளையும் சேர்த்து பொன்னிறமாக வரும் வரை வறுத்து அதையும் ஏற்கனவே வறுத்த பொருட்கள் உடன் சேர்த்து கொட்டிக் கொள்ளவும்.

    அதன்பிறகு மறுபடியும் கால் டீஸ்பூன் நெய் ஊற்றி பாதாம் பருப்பு சேர்த்து நன்றாக வறுத்துக் கொள்ளவும், பாதாம் பருப்பு நன்கு வறுபட்டதும் அதையும் ஏற்கனவே வறுத்து வைத்துள்ள பொருட்களுடன் சேர்த்து வைத்து விடுங்கள். பின்னர் மீண்டும்பிஸ்தா பருப்பை கடாயில் சேர்த்து நன்கு வறுத்து விடுங்கள். பிஸ்தா பருப்பு வறுத்தெடுத்தபின், பூசணி விதையையும் சேர்த்து வறுத்து எடுத்துக் கொள்ளுங்கள்.

    அதன் பிறகு ஏலக்காயையும் சேர்த்து ஒரு 10 வினாடிகள் வறுத்து, அதையும் மீதமுள்ள பொருட்களுடன் சேர்த்துக் கொள்ளுங்கள். இப்போது நாம் வறுத்த பொருட்கள் அனைத்தும் ஆறியதும் தண்ணீர் சேர்க்காமல் அரைக்க வேண்டும்.

    நாம் வறுத்த பொருட்களில் உலர் திராட்சை மற்றும் நிலக்கடலை தவிர அனைத்து பொருட்களை எல்லாம் மிக்சி ஜாரில் போட்டு நன்றாக கொர கொரவன அரைத்துக் கொள்ள வேண்டும். அதன் பின்பு நிலக்கடலையின் மேற்புறத்தோலை நீக்கிவிட்டு அதையும் மிக்சி ஜாரில் போட்டு நன்றாக அரைத்துக் கொள்ளுங்கள்.

    இந்த அரைத்த பொடியை தனியாக ஒரு தட்டில் வைத்துக் கொண்டு மிக்ஸி ஜாரில் பேரிச்சம்பழம் பழத்தின் கொட்டைகளை நீக்கிவிட்டு சேர்த்துக் கொள்ளுங்கள், இதனுடன் நாம் வறுத்து வைத்துள்ள உலர் திராட்சையையும் சேர்த்து மீண்டும் நன்றாக அரைத்துக் கொள்ளுங்கள்.

    நாம் அரைத்த பேரிச்சம் பழத்தை ஏற்கனவே அரைத்து வைத்துள்ள பொருட்களுடன் சேர்த்து கைகளில் சிறிது நெய் தடவிக் கொண்டு நன்றாக பிசைந்து எடுத்துக் கொள்ளுங்கள். அனைத்து பொருட்களையும் நன்றாக பிசைந்ததும் முடித்ததும் பின்னர் லட்டு போன்று உருண்டைகளாக பிடிக்க வேண்டும். அவ்வளவுதான் சுவையான புரோட்டின் லட்டு தயார்.

    • டயட் ஃபாளோ பண்றவங்க இதை கண்டிப்பாக உங்களது லிஸ்டில் சேர்க்கலாம்.
    • கொலஸ்ட்ரால் சேமிப்பைத் தவிர்க்கும்.

    ஓட்சில் உள்ள ஆன்டி ஆக்சிடன்ட், ரத்த நாளங்களில் கொலஸ்ட்ரால் சேமிப்பைத் தவிர்க்கும். கொழுப்பு சேர்ந்தவர்களுக்கு அதைக் குறைப்பதற்கு கோதுமை ரவை ஒரு வரப்பிரசாதமாகும். இன்றைக்கு ஒரு ஹெல்த்தியான ஓட்ஸ் இட்லி மிருதுவாகவும், பஞ்சுபோலவும் சுவையாக எப்படி செய்யலாம் என்பதை பார்க்கலாம் வாங்க.

    தேவையான பொருட்கள்

    ஓட்ஸ்- ஒரு கப்

    கோதுமை ரவை- ஒரு கப்

    தயிர்- ஒரு கப்

    கடலைபருப்பு- ஒரு ஸ்பூன்

    பச்சைமிளகாய்- 1 (நறுக்கியது)

    கடுகு- கால் டீஸ்பூன்

    சிரகம்- கால் டீஸ்புன்

    உளுந்தப்பருப்பு- கால் டீஸ்பூன்

    கேரட்- 1 துருவியது

    முந்திரி- 2 ஸ்பூன்

    இஞ்சி- கால் ஸ்பூன்

    சோடா உப்பு

    செய்முறை:

    ஒரு வாணலியை அடுப்பில் வைத்து மிதமான தீயில் ஓட்சை போட்டு வறுக்க வேண்டும். அதில் கோதுமை ரவையையும் சேர்த்து வறுத்து எடுத்து வேறு ஒரு பிளேட்டிற்கு மாற்றிக்கொள்ள வேண்டும்.

    அதன்பிறகு அதே வாணலியை அடுப்பில் வைத்து அதில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் கடுகு, சீரகம், உளுந்தம்பருப்பு, கடலைப்பருப்பு சேர்த்து தாளிக்க வேண்டும். இதில் நறுக்கிய பச்சைமிளகாய், கேரட், இஞ்சி, முந்திரி ஆகியவற்றை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.

    பின்னர் ஏற்கனவே வறுத்து வைத்துள்ள ஓட்ஸ், கோதுமை ரவையை இதில் சேர்க்க வேண்டும். அதில் தயிர் மற்றும் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அதில் சோடா உப்பு சேர்த்து 30 நிமிடங்கள் மூடி போட்டு வைக்க வேண்டும். அதன்பிறகு இந்த கலவையை இட்லி பாத்திரத்தில் ஊற்றி வேகவைத்து எடுத்தால் ஓட்ஸ் இட்லி தயார்.

    ×