என் மலர்
நீங்கள் தேடியது "Diet"
- இளமை தோற்றத்துடன்தான் காட்சி அளிக்க வேண்டும் என்ற ஆசை பலருக்கும் இருக்கிறது.
- வயதையும், தோற்ற பொலிவையும் மரபணுவும், சுற்றுச்சூழல் காரணிகளும் பாதிக்கலாம்.
முதுமை பருவத்தை எட்டினாலும் கூட இளமை தோற்றத்துடன்தான் காட்சி அளிக்க வேண்டும் என்ற ஆசை பலருக்கும் இருக்கிறது. அதற்காக அழகு சாதன பொருட்களை சார்ந்திருப்பது மட்டும் பயனில்லை. உணவுப்பழக்கமும், வாழ்க்கை முறையுமே இளமை தோற்றத்தை தக்க வைக்க துணைபுரியும்.
சருமத்தின் வயதையும், தோற்ற பொலிவையும் மரபணுவும், சுற்றுச்சூழல் காரணிகளும் பாதிக்கலாம். உணவு, தூக்கம், மனஅழுத்தம் போன்றவை சருமத்தின் தோற்றத்தை நிர்ணயிக்கின்றன. சில உணவு பழக்கங்கள் முதுமைக்கு முன்கூட்டியே வித்திடக்கூடும் என்பது மருத்துவ நிபுணர்களின் கருத்தாக இருக்கிறது.
சர்க்கரை:
அதிகப்படியான சர்க்கரையை உட்கொள்வது கிளைகேஷன் எனப்படும் செயல்முறைக்கு வழிவகுக்கும். அதில் உள்ளடங்கி இருக்கும் சர்க்கரை மூலக்கூறுகளும், சருமத்தில் உள்ள கொலாஜன்களும் பிணைக்கப்படும். அவை சருமத்தை கடினமாக்கும். அதனால் தோல் சுருக்கங்கள் எட்டிப்பார்க்கும்.
பதப்படுத்தப்பட்ட- பொரித்த உணவுகள்:
இந்த உணவுகளில் பெரும்பாலும் ஆரோக்கியமற்ற கொழுப்புகளும், அதிக அளவு சோடியமும் கலந்திருக்கும். அவை உடலில் வீக்கத்திற்கு வழிவகுக்கும். அதே பழக்கத்தை தொடரும்போது நாள்பட்ட அழற்சிக்கு வித்திடும். கொலாஜன் செயல்பாட்டிலும் பாதிப்பை ஏற்படுத்தி தோல் வயதாவதை துரிதப்படுத்தும்.
மதுப்பழக்கம்:
மது அருந்துவது சருமத்தை நீரிழப்பு செய்து சரும வறட்சிக்கும், சுருக்கங்களை ஏற்படுத்தும் கோடுகளுக்கும் வழி வகுத்துவிடும். காபி அதிகம் பருகுவதும் நீரிழப்புக்கு வித்திடும். மந்தமான, வறண்ட மற்றும் வயதான தோற்றமுடைய சருமத்தை ஏற்படுத்தும். இந்த பழக்கங்களை தவிர்த்தாலே முதுமையை தாமதப்படுத்திவிடலாம்.
முதுமைக்கான காரணங்கள்:
* செலரி, சிட்ரஸ் பழங்கள் போன்ற சில உணவு பொருட்கள் சருமத்தை அதிக உணர்திறன் கொண்டதாக மாற்றும் சோராலென்ஸ் எனப்படும் சேர்மங்களை கொண்டிருக்கின்றன. அவற்றை சாப்பிட்டு கடுமையான சூரிய ஒளி படும் பகுதியில் நேரத்தை செலவழித்தால் விரைவில் வயதாகும் அறிகுறிகள் எட்டிப்பார்க்க தொடங்கும்.
* சர்க்கரை அதிகம் கலந்த உணவுகள், ஆரோக்கியமற்ற கொழுப்புகள் மற்றும் பதப்படுத்தப்பட்ட கார்போஹைட்ரேட்டுகள் உடலில் அழற்சியை ஏற்படுத்தும். நாளடைவில் தோலின் வயதை விரைவுபடுத்திவிடும். இதன் விளைவாக சருமத்தில் சுருக்கங்கள் ஏற்படும்.
* சில உணவுகள், அதிக வெப்பத்தில் சமைக்கப்படும்போது ப்ரீ ரேடிக்கல்கள் எனப்படும் தீங்கு விளைவிக்கும் மூலக்கூறுகளை உருவாக்குகின்றன. இவை சரும செல்களுக்கு தீங்கு விளைவித்து, வேகமாக சருமம் முதிர்ச்சி நிலையை அடைய வைக்கின்றன.
- சிசேரியன் செய்த பெண்கள் தொப்பை பாதிப்பால் அவதிப்படுகிறார்கள்.
- பிரசவத்திற்கு பின் கொழுப்பு சேர்வதாலும் தொப்பை ஏற்படுகிறது.
பிரசவத்திற்கு பிறகு பெரும்பாலான பெண்கள் உடல் பருமன் மற்றும் தொப்பை பிரச்சினைக்கு ஆளாகுகிறார்கள். அதிலும் சிசேரியன் செய்த பெண்கள் தொப்பை பாதிப்பால் அவதிப்படுகிறார்கள். சிசேரியன் செய்த பிறகு உடல் இயக்கமின்றி அதிக நேரம் படுக்கையில் இருப்பது தொப்பை உண்டாக காரணமாகிவிடுகிறது.
மேலும் வயிற்றில் இருந்த குழந்தையின் வெற்றிடத்தில் காற்று நிரம்புவதாலும், வயிற்றில் கொழுப்பு சேருவதாலும் தொப்பை ஏற்படுவது தவிர்க்கமுடியாததாகிவிடும். பிரசவத்திற்கு பின் வயிற்றில் கொழுப்பு சேர்வதாலும் தொப்பை ஏற்படுகிறது.

அந்த காலத்தில் பிரசவத்திற்கு பின்பு பெண்களின் வயிற்றில் இறுக்கமாக, துண்டை கட்டி வைப்பார்கள். கால்களையும் சேர்த்து அமரச்சொல்வார்கள். இதன் மூலம், தளர்வான பிறப்புறுப்பின் வழியே காற்று உட்செல்வது தடுக்கப்பட்டு, எத்தனை குழந்தைகள் பெற்றெடுத்தாலும் வயிறு ஒட்டிய நிலையில் அக்கால தாய்மார்கள் ஆரோக்கியமாக இருந்தார்கள்.
கர்ப்பிணியாக இருந்த நேரத்தில் தவிர்த்த உணவுகளை அளவுக்கு அதிகமாக சாப்பிடுவதும் தொப்பை, உடல் பருமன் பாதிப்புக்கு வழிவகுத்துவிடும். பிரசவத்திற்கு பிறகு ஏற்பட்ட உடல் சோர்வும், அதனால் ஏற்படும் பசியும் உண்ணும் உணவின் அளவை அதிகப்படுத்திவிடும்.
தாய்ப்பால் கொடுப்பதற்காக சத்தான உணவுகளை தேடிப்பிடித்து சாப்பிட வேண்டியிருக்கும். அந்த உணவுகளாலும் உடல் எடை கூடும். குழந்தை பிறந்து ஒரு ஆண்டை கடந்த பிறகோ, தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்திய பிறகோ உடல் பருமனை குறைப்பதற்கான முயற்சியில் ஈடுபட தொடங்கிவிட வேண்டும்.
சரியான உணவுப்பழக்க வழக்கங்களையும், உடற்பயிற்சியையும் கடைப்பிடிக்க வேண்டும். பிரசவத்திற்கு பிறகு அவசியம் செய்ய வேண்டிய உடற்பயிற்சிகளும், யோகாசனங்களும் ஏராளம் இருக்கின்றன. அவற்றுள் உடல் தகுதிக்கு ஏற்ற பயிற்சிகளை தேர்ந்தெடுத்து செய்துவர வேண்டும். அதில் அலட்சியம் காண்பிக்கக்கூடாது.
ஏனெனில் குழந்தை ஒரு வயதை தாண்டிய பின்னரும் எடை குறைப்பில் கவனம் செலுத்தாமல் இருந்தால் தோற்றப் பொலிவில் மாறுதல் உண்டாகிவிடும். பின்னர் பழைய தோற்றத்திற்கு திரும்புவது கடினமான விஷயமாகிவிடும்.
இப்போது வயது வித்தியாசமின்றி பலரும் தொப்பை பிரச்சினையை எதிர்கொள்கிறார்கள். எண்ணெய் அதிகம் சேர்ந்திருக்கும் உணவுப்பொருட்களை சாப்பிடுவதும் தொப்பைக்கு முக்கிய காரணமாக இருக்கிறது.
இனிப்பு வகைகள், பதப்படுத்தப்பட்ட இனிப்பு பலகாரங்கள் அதிகம் சாப்பிடுவதும் தொப்பைக்கு வித்திடும். கார்போஹைட்ரேட் அதிகம் கலந்த உணவுகள், புரதம், நார்ச்சத்து குறைவாக உள்ள உணவுகள் சாப்பிடுவதாலும் தொப்பை ஏற்படக்கூடும். பெண்களுக்கு தொப்பை அதிகம் இருந்தால் மாதவிடாய் சம்பந்தப்பட்ட கோளாறுகள் வரக்கூடும். தொப்பை உருவாகுவதற்கு முதன்மை காரணம் கொழுப்புதான். தண்ணீருக்கு பதிலாக அவ்வப்போது வெந்நீர் பருகுவது தொப்பையை கரைக்க உதவும்.
- உணவு பழக்கத்தை தவறாக கடைபிடிக்கிறீர்கள்.
- சர்க்கரை மிக அதிக கலோரிகளை கொண்டது.
இன்றைய காலகட்டத்தில் உடல் பருமன் பொதுவான ஒன்றாகி விட்டது. உடல் பருமனை குறைக்க சிறந்த வழி, சில வெள்ளை உணவுகளை ஒதுக்கி வைப்பதாகும்.
கடுமையான உடற்பயிற்சி செய்தாலும் உடல் எடை குறையவில்லை என்றால், நீங்கள் உணவு பழக்கத்தை தவறாக கடைபிடிக்கிறீர்கள் என்று அர்த்தம். மிக முக்கியமாக சில வெள்ளை உணவுகளை உங்கள் டயட்டில் இருந்து முற்றிலுமாக அகற்றினால், உடல் பருமன் வேகமாக குறையும்.
என்ன செய்தாலும் உடல் எடை குறையவில்லை என்றால் அதற்கு தவறான உணவுப்பழக்கமே காரணம். மிக முக்கியமாக சில வெள்ளை உணவுகளை உங்கள் டயட்டில் இருந்து முற்றிலுமாக அகற்றினால், உடல் பருமன் வேகமாக குறையும்.
மைதா ஊட்டசத்து இல்லாத காப்போஹைட்ரேட் நிறைந்த மாவு. மைதாவால் செய்யப்பட்ட உணவுகளான பரோட்டா, பிரட்டுகள் என அனைத்துமே, நார்ச்சத்து புரதம் எதுவுமே இல்லாதவை. இவை கலோரிகள் அதிகம் கொண்டவை. எனவே இதனை விலக்குவது மிக அவசியம்.
உடல் பருமன் குறைய வேண்டும் என்றால் சர்க்கரையை விலக்காமல் சாத்தியமில்லை. சர்க்கரை மிக அதிக கலோரிகளை கொண்டது. எனவே சர்கக்ரை உடல் எடை அதிகரிப்புக்கு வழிவகுக்கும். அதற்கு பதிலாக வெல்லம் எடுத்துக் கொள்ளலாம்
உடல் எடையை கட்டுக்குள் வைக்க உதவும் உணவுப்பட்டியல்
முதல் நாள்
தினமும் காலை டீ, காபி, பால் போன்றவை குடிக்காமல் வெள்ளரி தண்ணீர் குடிக்க வேண்டும். காலை உணவாக ஒரு கிண்ணம் ஓட்ஸ் கஞ்சியில் பால் சேர்த்து சாப்பிடலாம். மதிய உணவாக ஒரு சிறிய கப் பருப்பு, ஏதாவது ஒரு கப் காய்கறி, ஒரு சப்பாத்தி மற்றும் ஒரு கப் சாதம் ஆகியவற்றை எடுத்துக்கொள்ளலாம். இரவு உணவாக ஒரு சப்பாத்தி மட்டும் சாப்பிட வேண்டும். பசி அடங்கவில்லை என்றால் பழம் அல்லது ஒரு டம்ளர் மோர் குடிக்கலாம்.
இரண்டாவது நாள்
காலை உணவாக 2 சோளமாவு தோசை, அரை கப் தயிர்சேர்த்து சாப்பிடுங்கள். மதிய உணவிற்கு ஒரு சிறிய கிண்ணம் அளவுக்கு பருப்பு, ஒரு சப்பாத்தி, காய்கறி ஒரு கப் எடுத்துக்கொள்ள வேண்டும். இரவு உணவிற்கு இரண்டு சப்பாத்தி மட்டும் எடுத்துக்கொள்ள வேண்டும்.
மூன்றாவது நாள்
காலை உணவாக ஒரு கப் பழங்கள் மட்டும் எடுத்துக்கொள்ள வேண்டும். மதிய உணவிற்கு பன்னீருடன் காய்கறிகள் மட்டும் ஒரு கப் எடுத்துக்கொள்ள வேண்டும். இரவு உணவாக ஒன்று அல்லது 2 சப்பாத்தி எடுத்துக்கொள்ளலாம்.
நான்காவது நாள்
காலை உணவாக 2 ஆம்லேட் மட்டும் எடுத்துக்கொள்ள வேண்டும். மதியத்திற்கு ஒரு கப் காய்கறி மட்டும் எடுத்துக்கொள்ள வேண்டும். இரவு உணவாக அரை கப் சாதம் எடுத்துக்கொள்ளலாம்.
ஐந்தாம் நாள்
காலை உணவிற்கு காய்கறி உப்புமா, மதியத்திற்கு காய்கறி அல்லது பன்னீரால் சேர்க்கப்பட்ட சப்பாத்தி எடுத்துக்கொள்ளலாம். இரவு உணவிற்கு ஒரு சப்பாத்தி மட்டும் எடுத்துக்கொள்ளலாம்.
- ரத்த கொழுப்பு அதிகமானால் இதயத்தில் அடைப்புகளை உண்டாக்கும்.
- சித்த மருத்துவரின் ஆலோசனையின் பேரில் பின்பற்றுவது நல்லது.
இதய அடைப்புக்கு முக்கியமான காரணம் கொழுப்பு தான். ஆரோக்கியமான உடலுக்கு கொழுப்பு கட்டாயம் தேவை. ஆனால் ரத்த கொழுப்பு அளவுக்கு அதிகமானால் இதயத்தில் அடைப்புகளை உண்டாக்கும்.
கீழ்க்கண்ட சித்த மருந்துகளில் ஏதேனும் ஒன்றை சித்த மருத்துவரின் ஆலோசனையின் பேரில் பின்பற்றுவது நல்லது.
1) பூண்டு 5 பல், சிறிதளவு கொள்ளு, ஒரு சிட்டிகை பெருங்காயம் இவைகளை தண்ணீர் விட்டு நன்றாக வேக வைத்து மாலை நேரங்களில் சாப்பிடலாம்.
2) இலவங்கப்பட்டை, ஏலம், செம்பருத்தி பூ, வெந்தயம் இவைகளை பொடி செய்து அதில் சிறிதளவு எடுத்து தண்ணீரில் கொதிக்க வைத்து தேநீர் போல குடிக்கலாம்.
3) கோடம் புளி சிறிதளவு எடுத்து சீரகத்துடன் தண்ணீரில் கொதிக்க வைத்துக் குடிக்கலாம்.
4) ஏலாதிச் சூரணத்துடன் குங்கிலியப் பற்பம் கலந்து, வெந்நீரில் காலை, இரவு என இருவேளை குடித்து வந்தால் கொழுப்பின் அளவு குறையும்.
5) இதயத்தில் உள்ள ரத்த நாளங்களில் கொழுப்பு படிவதைத் தடுக்க பூண்டு சாறு, புதினா சாறு, எலுமிச்சை சாறு, இஞ்சி சாறு இவைகளை சம அளவில் எடுத்து சூடாக்கி, ஆற வைத்து அதனுடன் சம அளவு ஆப்பிள் வினிகர் சேர்த்து வைத்துக்கொள்ள வேண்டும். இதில் தினசரி காலை 5 மி.லி. எடுத்து அதனுடன் சிறிதளவு தேன் கலந்து வெந்நீரில் கலந்து குடிக்க வேண்டும்.
6) வெண்தாமரை மலர் இதழ், செம்பருத்தி மலர் இதழ், மருத மரப்பட்டை, சீரகம், இலவங்கப்பட்டை இவைகளை பொடித்து அதில் ஒரு கிராம் வீதம் எடுத்து ஒரு டம்ளர் தண்ணீரில் கொதிக்க வைத்து குடித்து வர வேண்டும்.
தடுப்பு முறைகள்:
சின்ன வெங்காயம், பூண்டு இவை கெட்ட கொழுப்பைக் கரைக்கும் தன்மையுடையதால் இவற்றை தினசரி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். உடற்பயிற்சி, சைக்கிளிங், நடைப்பயிற்சி, நீச்சல், பேட்மிண்டன் போன்ற ஏதாவதொரு பயிற்சியை உங்கள் உடல் திறனுக்கு ஏற்ப செய்ய வேண்டும். ஆரோக்கியமான உணவு வகைகள், காய்கறிகள், கீரைகள், பழங்கள் சாப்பிட வேண்டும். மூன்று வெள்ளைகளை அளவுடன் எடுத்தால் வாழ்நாள் அளவு கூடும். அவை, தீட்டிய வெள்ளை அரிசி, வெள்ளை சர்க்கரை, உப்பு.
- எலும்பு தேய்மானம் பொதுவாக 40 வயதிற்கு மேல் ஏற்படுகிறது.
- அன்றாட பயன்பாட்டினால் ஏற்படும் இயற்கையான சேதமாகும்.
பொதுவாக ஒருவருக்கு எலும்பு தேய்மானம் இருக்கும் பட்சத்தில் இடுப்பு, தோள், மணிக்கட்டு, முட்டி, முதுகு, கழுத்து உள்ளிட்டவற்றில் திடீரென வலி ஏற்படும். இதற்கு பல காரணங்கள் உள்ளன. பரம்பரைக் காரணங்கள், கால்சியம் குறைபாடு, உடற்பயிற்சி இன்றி இருத்தல், எடை அதிகம் இருத்தல், மதுப்பழக்கம் மற்றும் புகைபிடித்தல், வேறு நோய்களுக்கு உட்கொள்ளும் மருந்துகள், முன் கூட்டியே ஏற்படும் மெனோபாஸ், பெண்களுக்கு அறுவை சிகிச்சை மூலம் கருப்பை அகற்றுதல் போன்ற காரணங்களால் எலும்பு தேய்மானம் உண்டாகிறது.
எலும்பு தேய்மானம் பொதுவாக 40 வயதிற்கு மேல் ஏற்படுகிறது. இது அன்றாட பயன்பாட்டினால் ஏற்படும் இயற்கையான சேதமாகும். ஒவ்வொருவரின் உடலமைப்பின் தனித்தன்மையின் படியும், மூட்டுகளை பயன்படுத்தும் முறைகளை பொறுத்தும் மாறுபடும்.
உதாரணத்திற்கு மூட்டு எலும்பின் அடர்த்தி மற்றும் கனிமச்சத்து குறைவாக இருப்பவர்களுக்கும் உடற்பருமன், சர்க்கரை நோய் இருப்பவர்களுக்கும் கரடுமுரடான பாதைகளில் அதிகமாக நடப்பவர்களுக்கும் மூட்டு தேய்வு அதிகமாக ஏற்படுகிறது.
தடுக்கும் முறைகள்:
1) உடற்பருமனை குறைக்க வேண்டும்.
2) புரதச்சத்து மற்றும் கனிமச்சத்து நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். 3) கரடுமுரடான பாதைகளில் நடப்பதையும், படிகளில் அடிக்கடி ஏறி இறங்குவதையும் தவிர்க்க வேண்டும்.
4) உபநோய்கள் (அதிக உடற்பருமன் மற்றும் சர்க்கரை நோய்) இருப்பவர்கள் அதற்கான சிகிச்சையை முறையாக எடுக்க வேண்டும்.
5) அன்றாட பழக்க வழக்கங்களில் மூட்டுகளை மடக்கி உட்காராமல் நாற்காலியில் உட்கார வேண்டும். மேற்கத்திய கழிவறை முறையை உபயோகிக்க வேண்டும்.

பொதுவாக, 13 வயதில் ஒரு பெண் குழந்தை, பூப்பெய்தும் பருவத்தில், சிகப்பரிசி, கேழ்வரகு புட்டு , எள் உருண்டை, கருப்பட்டி, நல்லெண்ணெய், உளுந்தங்களி, கொண்டைக்கடலை, பச்சைப்பயறு போன்றவற்றை கொடுக்கத் தொடங்க வேண்டும். இதை தினமும் கொடுக்க முடியவில்லை என்றாலும், மாதவிடாய் நேரத்திலாவது, நான்கு நாள்களுக்கு தொடர்ந்து கொடுத்து வருவது நல்லது.
இதே வயதில்தான், ஆண்பிள்ளைகளும் அடுத்தக்கட்டத்தை நோக்கி வளர்ச்சி அடைய தொடங்குகிறார்கள். எனவே, அந்த வயதிலிருந்தே அவர்களுக்கும் இந்த உணவுளை எல்லாம் கொடுக்கத் தொடங்கினால், அவர்களும் உடலில் எந்த பிரச்சினையும் இல்லாமல் ஆரோக்கியமாக இருப்பார்கள். பெரும்பாலானவர்கள், மூட்டுவலி என்றதுமே வலி மாத்திரைகள் எடுத்துக் கொள்ள தொடங்குகிறார்கள்.
அப்படியில்லாமல், காலை எழுந்தவுடன், இஞ்சி, சீரகம், சோம்பு, மிளகு சேர்த்து கொதிக்க வைத்த நீரை காலை, மாலை இரு வேளை குடித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும். அல்லது காலை டீ குடித்தால், மாலை வேளையில் காய்களுடன் இஞ்சி, சீரகம், மிளகு எல்லாம் சேர்த்து ஒரு சூப் மாதிரி செய்து குடித்து வரலாம். அடுத்து கேழ்வரகு சார்ந்த உணவுகள், களியாகவோ, முருங்கைக்கீரை சேர்த்து அடையாகவோ, புட்டாகவோ, கஞ்சியாகவோ, தோசையாகவோ செய்து காலை வேளையில் சாப்பிட்டு வரலாம்.

தோசைக்கு மாவு அரைக்கும்போது, சிகப்பரிசியும் சேர்த்து தோசை மாவு தயாரித்து அதில், இட்லியாகவோ, தோசையாகவோ செய்து சாப்பிட்டு வரலாம். சிகப்பரிசி அவல் அதிகளவு சேர்த்துக் கொள்ளலாம். அதுபோன்று எள்ளு சேர்த்த உணவுகள், கொள்ளு வேக வைத்து சுண்டலாக செய்து சாப்பிடுவது, அல்லது எள்ளு, கொள்ளு, உளுந்து, வரமிளகாய், கறிவேப்பிலை சேர்த்து ஒரு பொடியாக திரித்து வைத்துக் கொண்டு, சாதத்தில் போட்டு சாப்பிடுவது, இட்லி, தோசைக்கு தொட்டு சாப்பிடுவது போன்றவற்றை செய்யலாம்.
பச்சைபயறை முளைக்கட்டியோ, வேக வைத்தோ, கூட்டு வைத்தோ செய்து சாப்பிட்டு வரலாம். வெந்தயம், சீரகம், தனியா வறுத்து பொடி செய்து வைத்துக் கொண்டு, சாம்பார், கோதுமை தோசை, ராகி அடை செய்யும்போது சிறிது தூவி சாப்பிட்டு வரலாம்.
மிளகு அதிகளவில் சேர்த்துக் கொள்ளலாம். சாமை, வரகு, தினை போன்றவற்றை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ளலாம். பாதாம் ஊற வைத்து தோல் நீக்கிவிட்டு சாப்பிடுவது நல்லது. பால் சார்ந்த உணவுகளான மோர், தயிர் போன்றவற்றை அதிகம் சேர்த்துக் கொள்ளலாம்.
கால்சியம் மாத்திரைகள் தொடர்ந்து சாப்பிட்டு வரும்போது, ரத்தக்குழாய் திக்காவது அல்லது ரத்தக் குழாயில் அடைப்பு ஏற்படுவது அல்லது குதிகாலில் கூடுதலாக எலும்பு வளர்வது போன்றவை ஏற்படுகிறது என்று ஆய்வுகள் தெரிவிக்கிறது. எனவே, முடிந்தளவு மாத்திரைகளை தவிர்த்துவிட்டு, உணவுகளை அதிகமாக எடுத்துக் கொள்ளும்போது அவை பக்கவிளைவுகளை ஏற்படுத்தாது.
அதேபோன்று கால்சியம் சத்துடன் கண்டிப்பாக, வைட்டமின் டி சத்தும் சேர்த்து எடுத்துக் கொள்ள வேண்டும். வைட்டமின் டி சத்து சூரிய ஒளியில் அதிகளவு இருக்கிறது. அது கிடைக்க, காலை 9 மணிக்குள் அல்லது மாலை 3-5- க்குள் சிறிதுநேரம் வெயில்படும்படி 20 நிமிடம் நிற்பது நல்லது. இப்படி வெயிலில் நிற்பதற்கு முன்பு, சிறிதளவு தண்ணீர் குடித்துவிட்டு போய் நிற்பது மேலும் சிறந்தது.

பச்சை காய்கறிகள், பிரண்டை, முடக்கற்றான் இவையெல்லாம் வாரத்திற்கு 2 நாள்கள் சேர்த்து வருவது மிகவும் நல்லது. இது இரண்டும் முடக்குவாதத்திற்கு நல்ல நிவாரணம் தரும். முருங்கைக்கீரை, வெந்தயக்கீரை, பசலைக்கீரை போன்றவற்றையும் அதிகம் சாப்பிட்டு வரலாம். இதைத் தொடர்ந்து எடுத்து வரும்போது, மேற்கொண்டு எலும்பு தேய்மானம் ஆவது தடுக்கப்படும். மூட்டுகளுக்கும் பலம் கிடைத்து வலி குறையும்.
- சப்பாத்தி சாப்பிட்டால் உடல் எடையை குறைத்துவிடலாம் என்று கருதுகிறார்கள்.
- உணவில் பல்வேறு வகைகளை சாப்பிட முடியும்.
உடல் பருமன் பிரச்சினையால் அவதிப்படுபவர்கள் எப்படியாவது உடல் எடையை குறைத்துவிட வேண்டும் என்று பல்வேறு உணவுக்கட்டுப்பாடுகளை பின்பற்றுகிறார்கள். உடல் எடையை குறைப்பதற்கு உண்ணும் உணவில் மாற்றங்கள் செய்வது சரியானதுதான்.
சிலர் சப்பாத்தி சாப்பிட்டால் உடல் எடையை குறைத்துவிடலாம் என்று கருதுகிறார்கள். சிலரோ சாதம் சாப்பிட்டால் உடல் எடை கூடிவிடும் என்று அதனை அறவே தவிர்க்கிறார்கள். உடல் எடை குறைவதற்கு அரிசி சாதம் அவசியம் என்பது சிலருடைய கருத்தாக இருக்கிறது.
சப்பாத்திக்கு பதிலாக தினை, கேழ்வரகு, கம்பு,சோளம், வரகு, சாமை, குதிரைவாலி உள்ளிட்ட சிறுதானியங்களை கொண்டு தயார் செய்யப்படும் தோசை, இட்லி, ரொட்டி உள்ளிட்டவற்றை உட்கொள்வது நல்லது என்பது சிலருடைய வாதமாக இருக்கிறது. அதனால் எதை சாப்பிட்டால் உடல் எடையை வேகமாக குறைக்க முடியும்? சாதம் சாப்பிட வேண்டுமா? வேண்டாமா? சப்பாத்தியை சாப்பிடலாமா? அல்லது சிறுதானியங்களில் தயாரிக்கப்படும் ரொட்டியை சாப்பிடலாமா? என்ற குழப்பம் நிறைய பேரிடம் இருக்கிறது.
உணவியல் நிபுணர் பூனம் துனேஜாவின் கருத்துப்படி, அரிசி மற்றும் ரொட்டி இவை இரண்டின் ஊட்டச்சத்து மதிப்புகளில் பெரிய வித்தியாசம் உள்ளது. இருப்பினும் உடல் எடை இழப்புக்கு இரண்டும் பயனுள்ளதாக இருக்கும். வாரத்தில் 4 நாட்கள் ரொட்டி சாப்பிட்டால், 2 நாட்கள் சாதம் சாப்பிட வேண்டும் என்கிறார்.
``இந்த வழிமுறையை பின்பற்றினால் உணவில் பல்வேறு வகைகளை சாப்பிட முடியும். ஒவ்வொரு நாளும் ஒரு சிறுதானியத்தை உட்கொள்ளலாம். அதிலும் கம்பு, தினை, கேழ்வரகு, சோளம் உள்ளிடவற்றை கொண்டு தயார் செய்யப்படும் ரொட்டியை சாப்பிடுவது எடை இழப்புக்கு பயனுள்ளதாக இருக்கும். இதில் கிளைசெமிக் குறியீடு குறைவாக இருக்கும் என்பதால் இன்சுலின் அளவு வேகமாக அதிகரிக்காது. மேலும் இந்த வகை ரொட்டியில் அதிக நார்ச்சத்தும், புரதச்சத்தும் நிரம்பி இருக்கும். அதனால் இந்த ரொட்டி சத்து மிக்கது.
சீராக உடல் எடையை குறைக்க உதவும். அதேபோல் பழுப்பு அரிசியை சாப்பிடலாம். வெள்ளை அரிசியை உட்கொள்வதாக இருந்தால் குக்கரில் வேகவைக்காமல் பாத்திரத்தில் கொதிக்கவிட்டு வேகவைத்து கஞ்சியை வடிகட்டிய பிறகு சாதத்தை உட்கொள்ளலாம்.
இருப்பினும் அரிசி, ரொட்டி இரண்டையும் உட்கொள்ளும் அளவில் கவனம் தேவை. ரொட்டியில் குளூட்டன் இருக்கும். அரிசியில் அது இருக்காது. குறிப்பாக நீரிழிவு நோயாளிகள் அரிசி சாதம் சாப்பிடுவதை விட ரொட்டி அதிகம் சாப்பிடுவதுதான் பயனுள்ளதாக இருக்கும்.
அதிலும் நீரிழிவு நோயால் கடும் பாதிப்புக்கு ஆளானவர்கள் அரிசி சாதம் சாப்பிடக்கூடாது. அதனை சாப்பிட்டு எடை குறையும்போது ரத்தத்தில் சர்க்கரை அளவு குறைய வாய்ப்புள்ளது'' என்கிறார்.
உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் மருத்துவ நிபுணர்களிடம் கலந்தாலோசித்துவிட்டு அரிசி, ரொட்டி இவை இரண்டையும் உட்கொள்ளலாம்.
- குளிர்ச்சி வயதானவர்களுக்கு ஒத்துக்கொள்ளாது.
- குளிர்த்தன்மை காரணமாக ரத்த நாளங்கள் சுருங்கும்.
குளிர்காலத்தில் நிலவும் அதிக குளிர்ச்சி வயதானவர்களுக்கு ஒத்துக்கொள்ளாது. குளிர்த்தன்மை காரணமாக ரத்த நாளங்கள் சுருங்கும். அதன் விளைவாக மாரடைப்பு, பக்கவாதம் ஏற்படக்கூடும். குளிர் அதிகமாக இருக்கும் வேளையில் உடலின் வெப்பநிலையை சீராக தக்கவைக்க இதயம் கடினமாக வேலை செய்ய வேண்டியிருக்கும். குளிர்காலத்தில் இதயத்தின் நலனை பேணுவதற்கு ஒருசில விஷயங்களை பின்பற்ற வேண்டியது அவசியமானது.

உடற்பயிற்சி:
உடல் எடை அதிகரிக்கும்போது இதயம், நோய் எதிர்ப்பு அமைப்பு உள்ளிட்டவை அழுத்தத்திற்கு உள்ளாகின்றன. அதனால் நோய்த்தொற்றுகளை எதிர்த்துப் போராடும் திறன் குறையக்கூடும். உடற்பயிற்சி செய்வதன் மூலம் உடல் நலனை சீராக பராமரிக்கலாம். அதேவேளையில் கடினமான உடற்பயிற்சிகளை செய்வதை தவிர்க்க வேண்டும். அவை இதய செயல்பாட்டிற்கு இடையூறு ஏற்படுத்திவிடக் கூடாது. ஏனெனில் குளிர்காலத்தில் கடினமான உடற்பயிற்சிகளை செய்யும்போது இதயத்திற்கு ஆக்சிஜன் தேவை அதிகரிக்கும். அதனை பூர்த்தி செய்ய முடியாத பட்சத்தில் இதயம் பாதிப்புக்குள்ளாகிவிடும். மாரடைப்பு ஏற்படுவதற்கு வழிவகுத்துவிடக்கூடும்.
மன ஆரோக்கியம்:
குளிர்காலத்தில் இரவு நீண்டும், பகல் பொழுது குறைந்தும் விடுவதால் உடல் இயக்கம் அதிகரிக்கும். அதனால் சோர்வாக உணரலாம். சூரிய ஒளி போதுமான அளவு கிடைக்காதபட்சத்தில் வைட்டமின் டி குறைபாடும் ஏற்படும். அதனால் மனச்சோர்வும் உண்டாகும். அத்தகைய பாதிப்புக்கு ஆளாகுபவர்கள் மருத்துவரின் பரிந்துரையின்படி வைட்டமின் மாத்திரைகள் உட்கொள்ளலாம்.

உணவு பழக்கம்:
குளிர்காலத்தில் நொறுக்குத்தீனிகள், எண்ணெய் பலகாரங்களை சாப்பிடுவதற்கு ஆர்வம் அதிகரிக்கும். அவை இதயத்தின் ஆரோக்கியத்திற்கு நலம் சேர்க்காது. ஊட்டச்சத்துமிக்க உணவுகளையே அவசியம் சாப்பிட வேண்டும். பழங்கள், காய்கறிகளை அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
ஆரோக்கியம்:
குளிர்ச்சியான காலநிலையின்போது உடல் முழுவதும் ரத்த ஓட்டம் சீராக சென்றடைய இதயம் கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். அத்துடன் உடல் முழுவதும் ஆக்சிஜனை செலுத்துவதற்கும் இதயம் இரண்டு மடங்கு கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். அதில் தொய்வு ஏற்படும்போது இதய தசைகளுக்கு ஆக்சிஜன் கிடைப்பதில் சிக்கல் நேரும். இதன் காரணமாக ரத்த உறைவு, பக்கவாதம், மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும்.

வெந்நீர், சூப் பருகுவது நல்லது. கீரை வகைகள், பருவகால பழங்கள், முழு தானியங்கள், ஆரோக்கியமான கொழுப்புகள் உள்ளடக்கியசமச்சீர் உணவை உண்ணுங்கள். மது, புகைப்பழக்கத்தை அறவே தவிருங்கள். கார்பனேற்றப்பட்ட பானங்கள் பருகுவதையும் தவிர்த்துவிடுங்கள்.
- சர்க்கரை பானங்களை மட்டும் தவிர்ப்பது நல்லது.
- நல்ல தூக்கம் எடையை பராமரிப்பதில் பெரும் பங்கு வகுக்கிறது.
அனைத்து பாலினத்தை சேர்ந்தவர்களுக்கும் வயது ஏற ஏற உடலில் பல வகையான மாற்றங்கள் ஏற்படுவது சகஜமான ஒன்றாகும். 40 களை கடக்கும் போது மெட்டபாலிச சக்திகளின் மாறுபாடு, ஹார்மோன் மாற்றங்கள் என பலவகையான மாற்றங்கள் ஏற்படும் என மருத்துவ ஆராய்ச்சிகள் பல கண்டுபிடித்துள்ளன. இதுபோன்ற மாற்றங்கள் நமது உடலில் உள்ள கொழுப்பை குறைக்கும் என்றாலும், வேறு வகையில் இன்னும் பிற உடல் நல பிரச்சினைகளையும் இழுத்து விடும்.
குறிப்பாக பெண்களுக்கு, 40 வயதிற்கு பிறகு உடலில் பல மாற்றங்கள் ஏற்படுவதால் அவர்கள் மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் பெரிய தாக்கத்திற்கு ஆளாகிறார்களாம். இங்கு, 40 களை கடக்கும் பெண்கள் தங்களது மெட்டபாலிச சக்தியை அதிகரிக்கவும் ஹெல்தியான முறையில் எடையை பராமரிக்கவும் சில டிப்ஸ்களை பார்க்கலாம்.

பெண்களுக்கு வயதாகும்போது, தசைகள் இலகுவானதாக மாறி தளர்வடைய ஆரம்பிப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். இது மெதுவான வளர்சிதை மாற்றத்திற்கு வழிவகுக்கிறது. இதை எதிர்த்துப் போராடுவதற்கு வழக்கமான வலிமையான பயிற்சியை அவர்கள் உடற்பயிற்சி வழக்கத்தில் சேர்த்துக்கொள்வது முக்கியமானதாகும்.
எடை தூக்குவது, பேண்டுகளை வைத்து இழுத்து ட்ரெயின் செய்வது போன்ற பயிற்சிகள், உங்கள் தசைகள் வலுவடைய உதவுகிறது. இது மெட்டபாலிச சத்துகள் அதிகமாவதற்கு உதவுவதோடு மட்டுமன்றி ஒட்டுமொத்த உடல் பலத்திற்கும், எலும்புகளை வலுவாக்குவதற்கும் கூட உதவி புரிகிறது.

தீவிர உடற்பயிற்சி:
உயர்-தீவிர இடைவெளி பயிற்சி என்பது கொழுப்பை குறைப்பதற்கும் வளர்சிதை மாற்றத்தை அதிகரிப்பதற்கும் பயனுள்ள உடற்பயிற்சி முறையாக பார்க்கப்படுகிறது. தீவிர உடற்பயிற்சியின் குறுகிய கால இடைவெளிகளைத் தொடர்ந்து சிறிது ஓய்வு நேரத்தை சேர்த்துக்கொள்வது வொர்க்அவுட்டை முடித்த பின்னரும் கலோரிகளை எரிக்க உதவும். HIIT உடற்பயிற்சிகளை பல்வேறு உடற்பயிற்சி நிலைகள் மற்றும் விருப்பங்களுக்கு ஏற்றவாறு மாற்றியமைக்க முடியும். 40 வயதை கடந்த பெண்களின் விருப்பமான உடற்பயிற்சிகளுள் இதுவும் ஒன்றாக உள்ளது.
நல்ல தூக்கம்:
போதுமான மற்றும் நல்ல தூக்கம் எடையை பராமரிப்பதில் பெரும் பங்கு வகுக்கிறது. தூக்கமின்மை ஹார்மோன் சமநிலையை சீர்குலைக்கும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். இது அதிக உணவுகளை நாம் உட்கொள்வதற்கும் மற்றும் மெதுவான வளர்சிதை மாற்றத்திற்கும் வழி வகுக்கிறது. உங்கள் உடலின் இயற்கையான கொழுப்பை எரிக்கும் செயல்முறைகள் மற்றும் ஒட்டுமொத்த நல்வாழ்விற்காக தினமும் 7-9 மணிநேர தடையற்ற தூக்கத்தை கடைப்பிடிப்பது என்பதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.

கவனமான உணவு முறை:
அனைவருக்கும் வயதுக்கு ஏற்ப வளர்சிதை மாற்றம் இயற்கையாகவே குறைவதால், எந்த உணவை எவ்வளவு சாப்பிடுகிறோம் என்பதில் கண்டிப்பாக கவனம் செலுத்த வேண்டும். அது மட்டுமன்றி சாப்பிடும் போது மிகவும் கவனத்துடன் இருக்க வேண்டும்.
உணவின் போது ஒவ்வொரு வாய் உணவையும் ருசித்து, பொறுமையாக சாப்பிட வேண்டும். மேலும், உணவு கட்டுப்பாட்டு பயிற்சியை செய்வது அதிகப்படியான உணவைத் தடுக்கும் மற்றும் ஆரோக்கியமான எடையை பராமரிக்க உதவும். ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளைத் தேர்ந்தெடுப்பது மற்றும் பழங்கள், காய்கறிகள் மற்றும் மெல்லிய புரதங்களை உங்கள் உணவில் சேர்த்துக்கொள்வது எடை நிர்வாகத்தை நாம் ஆதரிக்க உதவும்.
நீர்ச்சத்து:
தினமும் சரியான அளவு தண்ணீர் குடிப்பதால், உடலை நீர்ச்சத்து நிறைந்ததாக வைத்துக்கொள்வது ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் அவசியமானதாகும். மேலும், எடையை பராமரிக்க உதவும். போதுமான அளவு தண்ணீர் குடிப்பது வளர்சிதை மாற்றத்தை சீராக்க உதவுகிறது. இது, முழுமையான உணர்வுக்கும் பங்களிக்கிறது, அதிகப்படியான உணவை உட்கொள்வதை தடுத்து, கலோரி உட்கொள்ளலைக் குறைக்கவும் உதவுகிறது. உங்கள் உடலின் இயற்கையான கொழுப்பை எரிக்க, சர்க்கரை பானங்களை மட்டும் தவிர்ப்பது நல்லது.
- இன்று உடல் பருமன் பெரும் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது.
- உணவை பார்க்கும் விதத்தை மாற்றுங்கள்.
இன்று உடல் பருமன் பெரும் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. அதனால் உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள பலரும் பல ஆயிரங்களை செலவு செய்கின்றனர். குறிப்பாக உடல் எடையைக் குறைப்பதற்காக டயட், ரன்னிங், நடைப்பயிற்சி, ஜிம், விளையாட்டு, யோகா என ஏராளமான வழிமுறைகளை மாதக்கணக்கில் கடைப்பிடிக்கிறார்கள். இதற்காக தினமும் சில மணி நேரங்களை ஒதுக்குகிறார்கள்.
அத்துடன் எடை குறைப்பிற்காகவும், உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்வதற்காகவும் மேற்கொள்ளும் ஒவ்வொரு விஷயத்தையும் பேஸ்புக், இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு லைக்குகளை அள்ளுகிறார்கள். ஆனாலும் சிலரைத் தவிர மற்றவர்களுக்கு சரியான ரிசல்ட் கிடைப்பதில்லை.
இந்தநிலையில், ``உணவை பார்க்கும் விதத்தை மாற்றுங்கள். உங்களால் மன நிறைவாக சாப்பிட முடியும். அதேநேரத்தில் உங்களின் எடையும் குறையும்...'' என்று அடித்துச் சொல்கிறது இங்கிலாந்தில் செய்யப்பட்ட சமீபத்திய ஆய்வு. இந்த ஆய்வை மேற்கொண்ட `அய்ன் ட்ரீ' மருத்துவமனை, 500 பேரிடம் உணவு குறித்த சர்வேயை எடுத்திருக்கிறது. இந்த ஆய்வை ராபர்ட் என்ற மருத்துவர் தலைமையேற்று, நடத்தி முடித்திருக்கிறார்.
``உணவை எப்படி வேறு விதமாக பார்ப்பது?'' என்ற கேள்விக்கு ராபர்ட் பதில் அளிக்கிறார்.
``உணவுக்கும், மனதுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. நவீன வாழ்க்கையின் பரபரப்பில் அவசர அவசரமாக ஒரு கடமையை நிறைவேற்றுவதை போல சாப்பிடுகிறோம். சாப்பிடும் நேரத்தில் கூட மனதை எங்கேயோ அலையவிட்டு பதற்றத்துடன் இருக்கிறோம். அல்லது ஸ்மார்ட்போனை பார்த்துக்கொண்டே உணவை உள்ளே தள்ளுகிறோம். நமக்கு பசிக்கவில்லை அல்லது உணவு பிடிக்கவில்லை என்றாலும் கூட நேரம் தவறாமல் சாப்பிட வேண்டும் என்பது எழுதப்படாத ஒரு விதியாகவே ஆகிவிட்டது.
முக்கியமாக சுவையானதை தேடித்தேடி சாப்பிடுகிறோம். அது உடலுக்கு ஆரோக்கியமானதா என்று கூட பார்ப்பதில்லை. முதலில் இந்த பழக்கத்தை மாற்றுங்கள். தியானத்தில் ஈடுபடுவதை போல முழு மனதையும் செலுத்தி உணவை உண்ணுங்கள். ஆரோக்கியமான உணவை தேடிப்பிடித்து சாப்பிடுங்கள். முக்கியமாக, பசிக்கும்போது மட்டும் சாப்பிடுங்கள். அப்புறம் பாருங்கள், உங்களின் எடை குறைவது மட்டுமல்லாமல் உணவைப் பார்க்கும் விதமே மாறி இருக்கும்'' என்றார்.
- ரத்த அழுத்த நோய் உள்ளவர்களுக்கு நார்ச்சத்து உணவுகள் மிகவும் ஏற்றவை.
- ரத்த அழுத்த நோய் உள்ளவர்களுக்கு பூண்டு மிகவும் ஏற்றது.
உயர் ரத்த அழுத்த நோய் உள்ளவர்கள் நல்லெண்ணெய், கடலை எண்ணெய், ரீபைன்டு ஆயில் ஆகியவற்றை குறைந்த அளவில் பயன்படுத்துவது நல்லது. பாமாயில் வேண்டாம். ஆவியில் வேக வைத்த உணவுகள் ஏற்றவை. எப்போதாவது கோழிக்கறி அல்லது மீன் குழம்பு சாப்பிடலாம்.
காபி, டீக்குப் பதிலாகப் பழச்சாறு, லெமன் டீ, கிரீன் டீயை குடிக்கலாம். இவற்றில் நிறைந்துள்ள ஆண்டிஆக்ஸிடன்ட் சத்துகள் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவுகிறது. ரத்த அழுத்த நோய் உள்ளவர்களுக்கு நார்ச்சத்து உணவுகள் மிகவும் ஏற்றவை. இவை ரத்த அழுத்தத்தையும், கொழுப்பையும் குறைக்கும், நீரிழிவைக் கட்டுப்படுத்தும், உடல் எடையையும் குறைக்கும்.

கோதுமை, கேழ்வரகு, சோளம் போன்ற முழு தானியங்கள், தக்காளி, கொய்யா, தர்பூசணி, மாதுளை, பீன்ஸ், பட்டாணி, பயறு வகை, புதினா, கொத்தமல்லி ஆகியவற்றில் நார்ச்சத்து அதிகம். பொட்டாசியம், கால்சியம், மக்னீசியம் ஆகிய தாதுகள் ரத்த அழுத்தத்தை உடலில் சீராக வைத்திருக்க உதவும் என்பதால் பால், ஆப்பிள், ஆரஞ்சு, திராட்சை, எலுமிச்சை, வாழைப்பழம், சோயாபீன்ஸ், உளுந்து, கிழங்குகள், முட்டைக்கோஸ், காலிபிளவர், பருப்புக்கீரை, முருங்கைக் கீரை, இளநீர் ஆகியவற்றை தினசரி உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

ரத்த அழுத்த நோய் உள்ளவர்களுக்கு பூண்டு மிகவும் ஏற்றது. பூண்டில் உள்ள சத்துகள் ரத்தக்குழாயை விரிவடையச் செய்கின்றன. தமனிகளில் படியும் கால்சியம் தாதுக்களையும் தடுக்கின்றன.
தலை சுற்றும்போது மட்டும், உயர் ரத்த அழுத்தம் இருக்குமோ என்று பலரும் சந்தேகப்படுவார்கள். அது மட்டுமல்ல தலைவலி, மயக்கம், வாந்தி, மூக்கில் ரத்தக்கசிவு, நடக்கும்போது மூச்சு வாங்குதல், நெஞ்சு வலி, காலில் வீக்கம், களைப்பு, படபடப்பு ஆகியவையும் உயர் ரத்த அழுத்தத்துக்கான அறிகுறிகள்தான்.
குடும்பப் பின்னணியில் உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களும், 30 வயதைக் கடந்தவர்களும் தொடர்ந்து உயர் ரத்த அழுத்த அளவை கண்காணித்துவர வேண்டும். உயர் ரத்த அழுத்தம் இருப்பதை ஆரம்பத்திலேயே தெரிந்துகொண்டால் மாத்திரை இல்லாமல் உணவுப்பழக்கம் மூலம் சமாளிக்க முடியும்.
அதேநேரம், இதயம், மூளை, சிறுநீரகம், கண் என பிற உறுப்புகளை பாதிக்கும் தன்மையானது, உயர் ரத்த அழுத்த நோய்க்கு இருப்பதால், முறையான சிகிச்சை அவசியம்.
- நமக்கு நல்ல தூக்கம் இல்லாவிட்டால் எடை விறுவிறுவென ஏறிவிடும்.
- இரவில் நன்றாக தூங்குபவர்களுக்கு உடலில் அதிக கொழுப்பு இருக்காது.
ஆரோக்கியமான உணவு பழக்கம் இல்லாமல் பலருக்கும் உடல் எடை அதிகமாகிவிடும். அதன் பின்னர் என்ன செய்தாலும் உடல் எடை கொஞ்சம் கூட குறையாது. அதிலும் அடிவயிற்று தொப்பை கல் போல கரையவே கரையாது.

நமக்கு நல்ல தூக்கம் இல்லாவிட்டால் எடை விறுவிறுவென ஏறிவிடும். அதிலும் போதுமான தூக்கம் இல்லாவிட்டால் மற்ற நோய்களும் ஏற்படும். ஒருவர் நாள்தோறும் 8 அல்லது அதற்கும் அதிகமாக தூங்கினால் உடல் ஆரோக்கியமாகவும், எடை கட்டுக்குள்ளும் இருக்கும்.

இரவில் நன்றாக தூங்குபவர்களுக்கு உடலில் அதிக கொழுப்பு இருக்காது. டைப் 2 நீரிழிவு மாதிரியான நோய்கள் வராது. இரவில் நன்றாக தூங்காமல் போனால் உடலில் கொழுப்புச்சத்து அதிகமாகி உடல் எடை அதிகரிக்கும். அதுமட்டுமில்லாமல், வளர்சிதை மாற்றத்தில் பிரச்சனை ஏற்படும். உடல் எடை கட்டுக்குள் இருக்க 8 மணிநேரம் நன்றாக தூங்க வேண்டும்.

உடற்பயிற்சிகள்
சில உடற்பயிற்சிகளை தொடர்ந்து செய்வதன் மூலம் உடல் எடை குறையும். ஆனால் அதை தொடர்ந்து செய்ய வேண்டும். கொஞ்சம் கொஞ்சமாக அதன் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். ஜம்பிங் ஜாக்ஸ், ஹை நீஸ், ஸ்குவாட், கிரஞ்ஜஸ், லஞ்சஸ், ரிவர்ஸ் ப்ளாங் போன்றவை நல்ல பலன் தரக்கூடியவை. ஆரம்பத்தில் இவற்றை 3 செட் 15 கவுண்ட் செய்தால் போதும். நாளடைவில் எண்ணிக்கையை அதிகரிக்கலாம். உடல் எடை கணிசமாக குறையும். வாக்கிங், ஸ்கிப்பிங் தினசரி செய்யலாம்.
- சரும பராமரிப்பு வழிமுறைகளை தவறாமல் பின்பற்றுகிறார்கள்.
- சருமத்தை பாதுகாப்பதற்கு கூடுதல் கவனம் செலுத்துகிறார்கள்.
கொரியர்கள் பொதுவாகவே இளமையான தோற்றத்துடனும், பொலிவான சரும அழகுடனும் காட்சி அளிப்பதற்கான காரணம் குறித்து எப்போதாவது யோசித்து பார்த்திருக்கிறீர்களா? அது அவர்களின் மரபியல் சார்ந்த விஷயம் மட்டுமல்ல. அவர்கள் பின்பற்றும் ஆரோக்கியமான பழக்கவழக்கங்களும்தான் அதற்கு காரணமாக அமைந்திருக்கின்றன. அவை குறித்து பார்ப்போம்.

1. சரும பராமரிப்பு:
கொரியர்கள் காலையில் எழுந்ததும் சருமத்தை சுத்தம் செய்தல், ஈரப்பதமாக்குதல் போன்ற சரும பராமரிப்பு வழிமுறைகளை தவறாமல் பின்பற்றுகிறார்கள். அதற்குரிய அழகு சாதனப்பொருட்களை பயன்படுத்துகிறார்கள். அவை பெரும்பாலும் செயற்கை ரசாயனங்கள் கலக்காதவையாக இருக்கின்றன. பாரம்பரிய சடங்கு போல் பின்பற்றும் இந்த பழக்கம்தான் சருமத்தை ஈரப்பதமாகவும், ஆரோக்கியமாகவும், பொலிவாகவும் வைத்திருக்க உதவுகிறது.

2. சன்ஸ்கிரீன் பயன்பாடு:
சூரியனிடம் இருந்து சருமத்தை பாதுகாப்பதற்கு கூடுதல் கவனம் செலுத்துகிறார்கள். மேகமூட்டமான நாட்களில் கூட சன்ஸ்கிரீனை தவறாமல் பயன்படுத்துகிறார்கள். விரைவில் தோல் சுருக்கம், சரும எரிச்சல் போன்ற பிரச்சினைகள் நேராமல் தற்காத்துக்கொள்ள அவை உதவுகின்றன.
3. புளிப்பு வகை உணவு:
கிம்ச்சி, கோச்சுஜாங் போன்ற புளிக்கவைக்கப்பட்ட உணவுகளை விரும்பி உட்கொள்கிறார்கள். அவை குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கும், இளமை பொலிவுக்கும் வித்திடும் புரோபயாட்டிக்குகள் நிறைந்தவை.
4. நீர் அருந்துதல்:
உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றவும், சருமத்தை பொலிவாக வைத்திருக்கவும் தண்ணீர் மிகவும் அவசியம். கொரியர்கள் நாள் முழுவதும் உடலை நீரேற்றமாக வைத்திருப்பதற்கு முன்னுரிமை கொடுக்கிறார்கள். குறிப்பிட்ட நேரத்திற்கு இடையே தவறாமல் தண்ணீர் பருகும் வழக்கத்தை பின்பற்றுகிறார்கள்.
5. தூக்கம்:
ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும், பொலிவான சருமத்திற்கும் தூக்கம் அவசியமானது. கொரியர்கள் தூக்கத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். இரவு நேரத்தில் வீணாக பொழுதை கழிக்காமல் தூங்கும் வழக்கத்தை பின்பற்றுகிறார்கள்.
6. விறுவிறுப்பான நடைப்பயிற்சி:
கொரியர்களின் உடற்பயிற்சி வழக்கத்தில் விறுவிறுப்பான நடைப்பயிற்சிக்கு முன்னுரிமை கொடுக்கப்படுகிறது. தங்களை எப்போதும் சுறுசுறுப்பாக வைத்துக்கொள்ளவும் செய்கிறார்கள். அதுவும் உடல் இயக்கத்தின் ஒரு அங்கமாக இருக்கிறது. நடன பயிற்சியையும் ஆர்வமாக மேற்கொள்கிறார்கள்.
7. மன அழுத்தம்:
மன அழுத்தமும் முகப்பொலிவை சீர்குலைக்கும். கொரியர்கள் தியானம், இயற்கையுடன் நேரத்தை செலவிடுவது போன்ற பயிற்சிகள் மூலம் மன அழுத்தத்தை விரட்டியடிக்கிறார்கள்.
8. உணவு வழக்கம்:
கொரியர்கள் அவசர கதியில் உணவு உட்கொள்வதில்லை. உணவை நன்றாக மென்று ருசித்து சாப்பிடுகிறார்கள். அது செரிமானம் சீராக நடைபெறவும், உடல் எடையை சீராக பேணவும் வழிவகுக்கிறது.