என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Dietary habits"

    • உடலில் எலக்ட்ரோலைட்டுகளை சமநிலைப்படுத்தவும் துணை புரியும்.
    • பழங்கள் சாப்பிட்டு வருவது பிளேட்லெட்டுகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும்.
    தமிழகத்தின் சில பகுதிகளில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. நாட்டின் பல பகுதிகளிலும் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்தியா மட்டுமின்றி பல நாடுகளிலும் டெங்கு காய்ச்சலுக்கு ஆளாகுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டிருக்கிறது. ஊட்டச்சத்து பற்றாக்குறை, பிளேட்லெட்டுகள் இழப்பு, உடலில் ஏற்படும் அழற்சி காரணமாக டெங்கு பாதிப்புக்குள்ளானவர்கள் அதில் இருந்து முழுமையாக மீண்டு வர காலதாமதமாகும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், டெங்கு பாதிப்பில் இருந்து மீண்டு வரவும் பின்பற்ற வேண்டிய உணவுப்பழக்கங்கள் குறித்து பார்ப்போம்.


    கிவி

    டெங்கு காய்ச்சலில் இருந்து குணமடைய உட்கொள்ள வேண்டிய சத்தான பழங்களுள் ஒன்று கிவி. இந்த பழத்தில் வைட்டமின் சி, பொட்டாசியம், பாலிபினால்கள், டிரோலாக்ஸ் போன்ற ஆன்டிஆக்சிடென்டுகள் நிறைந்துள்ளன. அவை உடலின் நோய் எதிர்ப்பு தன்மையை மேம்படுத்தவும், டெங்கு காய்ச்சலை திறம்பட எதிர்த்துப் போராடவும் உதவும்.

    உடலில் எலக்ட்ரோலைட்டுகளை சமநிலைப்படுத்தவும் துணை புரியும். டெங்கு பாதிப்புக்கு ஆளாகுபவர்கள் தினமும் 2 கிவி பழங்கள் சாப்பிட்டு வருவது பிளேட்லெட்டுகளின் எண்ணிக்கையை அதிகரிக்க உதவி செய்யும்.

    மாதுளை

    மாதுளை பழத்தில் இரும்புச் சத்து அதிகம் உண்டு. ரத்தத்தில் பிளேட்லெட் எண்ணிக்கையை அதிகப்படுத்தவும் உதவும். மேலும் டெங்கு காய்ச்சலின்போது ஏற்படும் சோர்வை குறைக்கும். உடல் ஆற்றலையும் மேம்படுத்தும்.

    சிட்ரஸ் பழங்கள்

    ஆரஞ்சு, நெல்லிக்காய், எலுமிச்சை போன்ற சிட்ரஸ் பழங்களில் வைட்டமின் சி நிறைந்துள்ளது. அவை நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்துவதற்கு உதவி செய்யும். பிளேட்லெட்டுகளுடன் ரத்த ஓட்டத்தை துரிதப்படுத்தும். ரத்தப்போக்கு அபாயத்தை குறைக்கவும் செய்யும்.

    பப்பாளி

    பப்பாளியில் பப்பைன், கரிகைன், சைமோபாபைன், அசிட்டோஜெனின் போன்ற சேர்மங்கள் உள்ளன. அவை அழற்சி எதிர்ப்பு பண்புகள் மற்றும் ஆக்ஸிஜனேற்ற பண்புகளைக் கொண்டுள்ளன. உடலின் நோய் எதிர்ப்பு தன்மையை வலுப்படுத்தி டெங்கு தொடர்பான வீக்கத்தை குறைக்கும் தன்மை கொண்டவை. டெங்குவில் இருந்து விரைவாக மீளவும் உதவும்.

    பீட்ரூட்

    இதில் இரும்பு மற்றும் போலிக் அமிலம் அதிகம் உள்ளன. அவை ரத்த சிவப்பணுக்களின் உற்பத்திக்கு அவசியமானவை. மேலும் பீட்ரூட்டில் நச்சு நீக்கும் பண்புகள் உள்ளன. அவை கல்லீரலை சுத்தப்படுத்தவும், அதன் செயல்பாட்டை மேம்படுத்தவும் உதவும். டெங்கு தொடர்பான அழற்சியின் காரணமாக உடலில் உள்ள பிளேட்லெட்டுகள் சேதம் அடைவதை தடுக்கும். இருப்பினும் பிளேட்லெட் அளவுகளில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தாது.

    கீரை

    கீரையில் வைட்டமின் கே மிகுதியாக இருக்கும். இது பிளேட்லெட் எண்ணிக்கையை நேரடியாக உயர்த்தாது. ஆனால் ரத்த அணுக்கள் நன்றாக உறைவதற்கு உதவும். அதனால் டெங்கு நோயாளிகள் கீரையை தவறாமல் சாப்பிட வேண்டும். இதில் இரும்பு, போலேட் மற்றும் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் உள்ளன. டெங்கு போன்ற வைரஸால் ஏற்படும்

    ஆக்சிஜனேற்ற அழுத்தத்தில் இருந்து உடலை பாதுகாக்க உதவும். சோர்வு மற்றும் பலவீனம் போன்ற அறிகுறிகளில் இருந்து விரைவாக மீளவும் உதவி புரியும்.

    பூசணி

    இதில் வைட்டமின் ஏ மற்றும் பீட்டா கரோட்டின் போன்ற ஆக்சிஜனேற்றங்கள் நிறைந்துள்ளன. இவை உடலில் ஏற்படும் அழற்சி மற்றும் ஆக்சிஜனேற்ற அழுத்தத்தை எதிர்த்து போராடும் ஆற்றல் படைத்தவை.

    • துரித உணவுகள் சாப்பிடுவதால் கல்லீரல் பாதிப்புக்குள்ளாகிறது.
    • துரித உணவுகளில் அதிகமாக டிரான்ஸ் கொழுப்புகள் இருக்கும்.

    தற்போதைய வேகமான வாழ்க்கையில் துரித உணவுகளே பெரும் இடத்தை பிடித்துள்ளன. அலுவலக பணி செய்பவர்கள் அருகில் இருக்கும் டீ கடைக்கு சென்றால், அங்கு அதிகரிப்படியாக நிறைந்திருப்பவை துரித உணவுகளாகவே இருக்கிறது. இன்று மட்டும்தான் என்று நாம் தினமும் எடுக்கும் சிறிய சிறிய துரித உணவுகள் கூட உங்கள் உடலில் பெரிய விளைவுகளை ஏற்படுத்தக்கூடும்.

    வீட்டில் சமைப்பதை விட கொஞ்சம் காரமாகவும் சுவையாகவும் சாப்பிட வேண்டும் என்ற விருப்பம் நம் எல்லாருக்குமே இருக்கும். அதனால்தான் ஹோட்டலுக்கு சென்று பர்கரோ அல்லது பீட்சாவோ சாப்பிடுகிறோம்.

    ஆனால், இதுபோன்ற துரித உணவுகளை நாம் அடிக்கடி சாப்பிட்டு வந்தால், அது நம் உடல்நலத்தை மோசமாக பாதிக்கும். அதிக கலோரிகளை கொண்ட உணவையோ அல்லது அதிக பதப்படுத்தப்பட்ட உணவுகளையோ சாப்பிடும் போது உடல் எடை அதிகரிக்கிறது. இன்சுலின் எதிர்ப்பு குறைகிறது. நாளடைவில் இது வளர்சிதை மாற்ற நோய்க்குறி (metabolic syndrome disease) வருவதற்கு காரணமாக அமைந்துவிடும்.

    ஒருவருக்கு இதய நோய், பக்கவாதம், டயாபடீஸ் போன்ற நோய்கள் தாக்குவதற்கான ஆபத்தை அதிகரிக்கிறது. இந்த வளர்சிதை மாற்ற நோய்க்குறி. உடல் பருமனாக இருப்பவர்களுக்கு உயர் ரத்த அழுத்தம், அதிக ட்ரைகிளீசரைட், நல்ல கொழுப்பின் அளவு குறைவாக இருப்பது மற்றும் இன்சுலின் ரெசிஸ்டென்ஸ் போன்றவை அறிகுறிகளாக இருக்கும். மேலும் உடல் எடை அதிகமாக இருப்பதால் வயிறு உப்புசம், சோர்வு, குடல் அழற்சி போன்றவை ஏற்படும்.

     துரித உணவுகள் சாப்பிடுவதால் பல வழிகளில் கல்லீரல் பாதிப்புக்குள்ளாகிறது. உடலின் பல மெடபாலிக் செயல்பாடுகளுக்கு காரணமாக இருக்கிறது கல்லீரல். துரித உணவுகளில் அதிகமாக நிறைவுற்ற மற்றும் டிரான்ஸ் கொழுப்புகள் இருக்கும். இது கல்லீரலை பெரிதாக்கி குடிப்பழக்கம் அல்லாத கொழுப்பு கல்லீரல் நோயை உண்டாக்குகிறது.

    இந்நோய் மோசமானால் சிரோசிஸ் தாக்கும் அபாயம் உள்ளது. துரித உணவுகளில் அதிகமாக இருக்கும் சுத்திகரிகப்பட்ட சர்க்கரை மற்றும் கார்போஹைடரேட்ஸ் கல்லீரலில் அழற்சியை உண்டாக்குகிறது. மேலும் துரித உணவுகளில் உள்ள அதிகப்படியான உப்பு, வீக்கத்தை ஏற்படுத்தி கல்லீரலுக்கு செல்லும் ரத்தத்தை தடை செய்கிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஜீரணமாவதற்கு கடினமாக இருக்கும்.
    • சேர்ந்து உட்கொள்ளக்கூடாத உணவுப்பொருட்கள் நிறைய இருக்கின்றன.

    பால், பழம் இரண்டையும் சேர்த்து உட்கொள்ளும் வழக்கம் நீண்டகாலமாக நடைமுறையில் இருக்கிறது. ஆனால் இரண்டையும் சேர்த்து உட்கொள்ளக்கூடாது என்கிறது மருத்துவ உலகம். அவை இரண்டும் ஒன்று சேர்ந்தால் ஜீரணமாவதற்கு கடினமாக இருக்கும். செரிமானம் மந்தமாக நடக்கும், இந்த கலவை உருவாக்கும் ஒருவித நச்சுத்தன்மை மன நல செயல்பாடுகளையும் பாதிக்கக்கூடும்.

    பாலையும், வாழைப்பழத்தையும் தனித்தனியாக உட்கொள்வதே சிறந்த செரிமானத்துக்கும், ஒட்டுமொத்த நல்வாழ்விற்கும் உதவிடும் என்கிறார்கள். பால், பழத்தை போலவே சேர்ந்து உட்கொள்ளக்கூடாத உணவுப்பொருட்கள் நிறைய இருக்கின்றன. அவற்றுள் சில உங்கள் கவனத்துக்கு...

    உணவு-பழங்கள்

    வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆன்டிஆக்சிடென்டுகள் நிறைந்திருந்தாலும், பழங்களை உணவோடு சேர்த்து உட்கொள்வது செரிமான பிரச்சினைகளை ஏற்படுத்தும் என்கிறார், மும்பையை சேர்ந்த ஊட்டச்சத்து நிபுணர் ராகுல் குரானா.

    பழங்கள் விரைவாக செரிமானமாகிவிடும். ஆனால் தானியங்கள், இறைச்சிகள் மெதுவாக ஜீரணமாகக்கூடியவை. இரண்டும் இணையும்போது நொதித்தல் செயல்முறையில் மாறுபாடு ஏற்படும்.

    தன் காரணமாக வயிறு வீக்கம், வாயுத்தொல்லை போன்ற அசவுகரியங்கள் உண்டாகும். இதனை தடுக்க பழங்களை உணவு சாப்பிடுவதற்கு அரை மணி நேரத்துக்கு முன்பு உட்கொள்வது நல்லது.


    தானியங்கள் - ஜூஸ்

    தானியங்களுடன் ஜூஸ் பருகுவதும் ஆரோக்கியத்துக்கு பலம் சேர்க்காது. ஏனெனில் இவை ஒன்று சேரும்போது நீடித்த உடல் ஆற்றலுக்கு தேவையான புரதம் மற்றும் நார்ச்சத்துக்கள் கிடைக்காது.

    இந்த கலவை ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிப்புக்கும், சோர்வுக்கும் வழிவகுக்கும். ஜூஸுக்கு பதிலாக பழங்களை அப்படியே சாப்பிடுவதும், புரதம் நிறைந்த உணவுகளை காலையில் உட்கொள்வதும் உடலுக்கு பலம் சேர்க்கும்.


    பர்கர் - பொரித்த பொருட்கள்

    இந்த துரித உணவுகள் ருசியான கலவையாக இருந்தாலும் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கக்கூடியவை. அதிக நேரம் சமைத்த, பதப்படுத்தப்பட்ட உணவுப்பொருட்களை அதிக கொழுப்பு உள்ளடக்கம் கொண்ட பொருட்களுடன் இணைத்து சாப்பிடுவது செல்களை சேதப்படுத்தும். விரைவில் வயதாகும் அறிகுறிகள் எட்டிப்பார்க்க காரணமாகிவிடும்.

    கார்போஹைட்ரேட்டுகள் - தக்காளி

    தக்காளி அமிலத்தன்மை கொண்டது. அதனை அரிசி, உருளைக்கிழங்கு போன்ற மாவுச்சத்து நிறைந்த கார்போஹைட்ரேட்டுகளுடன் உட்கொள்ளும்போது செரிமான பிரச்சினைகளை ஏற்படுத்தலாம். இந்த கலவை அஜீரணம் மற்றும் நெஞ்செரிச்சலுக்கு வழிவகுக்கும். இதனை தவிர்க்க தக்காளியை குறைவாக சேர்த்துக்கொள்வது நல்லது.


    பழம் - யோகர்ட்

    யோகர்ட்டில் இருக்கும் புரோபயாடிக் ஏராளமான நன்மைகளை கொண்டது. அதை பழங்களுடன் இணைப்பது ஒவ்வாமையையும், நெஞ்செரிச்சலையும் அதிகப்படுத்தக்கூடும். சைனஸ், சளி அறிகுறிகளை கொண்டிருப்பவர்கள் பால் பொருட்களுடன் பழங்களை இணைந்து உட்கொண்டால் நிலைமையை மோசமாக்கும்.

    வெறுமனே யோகர்ட் உட்கொள்வது அல்லது பால் பொருட்களுக்கு மாற்று உணவு வகைகளை தேர்ந்தெடுப்பது இந்த சிக்கல்களை குறைக்க உதவும்.


    தானியங்கள் - பால்

    அரிசி, கோதுமை, கம்பு, ஓட்ஸ், பார்லி, தினை போன்ற தானியங்களுடன் பால் சேர்த்து உட்கொள்வது ரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிக்க செய்துவிடக்கூடும். உடல் சோர்வுக்கும் வழிவகுக்கும். தானியங்கள் மற்றும் பால் இரண்டிலும் வேகமாக ஜீரணிக்கும் கார்போஹைட்ரேட்டுகள் உள்ளன.

    அவை உடலிலுக்கு தேவையான ஆற்றலை அளிப்பதில் ஏற்ற, இறக்கங்களை ஏற்படுத்தக்கூடும். இவற்றை குறைவாக உட்கொள்வது அல்லது மாற்று பொருட்களை தேர்ந்தெடுப்பது நலம் சேர்க்கும்.


    பீட்சா - சோடா

    இவை இரண்டையும் ஒன்றாக உட்கொள்வது உடலில் கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் சர்க்கரை அளவை அதிகரிக்க செய்து செரிமானத்துக்கு அசவுகரியத்தை உண்டாக்கிவிடும். இரண்டிலும் அதிக அளவு சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட்டுகள் உள்ளன.

    அவை ரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிக்கலாம். தண்ணீர் அல்லது ஆரோக்கியமான பானங்களை தேர்ந்தெடுப்பது சிறந்த செரிமானத்துக்கும், ஒட்டுமொத்த ஆரோக்கியத்துக்கும் உதவிடும்.

    ×