என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Director Bala"

    • வணங்கான் படத்திலிருந்து நடிகர் சூர்யா விலகியுள்ளார்.
    • இது நடிகர் சூர்யா மற்றும் சினிமா ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    சென்னை:

    வணங்கான் படத்திலிருந்து நடிகர் சூர்யா விலகியுள்ளார். இந்த அறிவிப்பு சூர்யா மற்றும் சினிமா ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது.

    இதுதொடர்பாக படத்தின் இயக்குனர் பாலா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

    வணக்கம். என் தம்பி சூர்யாவுடன் இணைந்து வணங்கான் என்ற புதிய திரைப்படத்தை இயக்க விரும்பினேன். ஆனால் கதையில் நிகழ்ந்த சில மாற்றங்களினால், இந்தக் கதை சூர்யாவுக்கு உகந்ததாக இருக்குமா என்கிற ஐயம் தற்போது எனக்கு ஏற்பட்டுள்ளது.

    என் மீதும், இந்தக் கதையின் மீதும் முழு நம்பிக்கையுடன் இருக்கிறார் சூர்யா. இவ்வளவு அன்பும், மதிப்பும், நம்பிக்கையும் வைத்திருக்கும் என் தம்பிக்கு ஒரு அண்ணனாக என்னால் ஒரு சிறு தர்மசங்கடம் கூட நேர்ந்து விடக்கூடாது என்பது என் கடமையாகவும் இருக்கிறது.

    எனவே வணங்கான் திரைப்படத்திலிருந்து சூர்யா விலகிக் கொள்வது என நாங்கள் இருவரும் கலந்து பேசி ஒருமனதாக முடிவு எடுத்திருக்கிறோம். அதில் அவருக்கு மிகவும் வருத்தம் தான் என்றாலும் அவரது நலன் கருதி எடுத்த முடிவு இது.

    நந்தாவில் நான் பார்த்த சூர்யா பிதாமகனில் நீங்கள் பார்த்த சூர்யா போல் வேறு ஒரு தருணத்தில் உறுதியாக இணைவோம் மற்றபடி வணங்கான் பணிகள் தொடரும் என தெரிவித்துள்ளார்.

    • இயக்குனர் பாலாவின் வணங்கான் படத்தில் அருண் விஜய் நடிக்கிறார்.
    • இந்த படத்தில் சமுத்திரகனி, இயக்குனர் மிஸ்கின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

    இயக்குனர் பாலாவின் வணங்கான் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் செப்டம்பர் 25-ம் தேதி காலை 10 மணிக்கு வெளியாகும் என்று படக்குழு அறிவித்து இருக்கிறது.

     

    வி ஹவுஸ் ப்ரோடக்ஷன்ஸ் மற்றும் பி ஸ்டூடியோஸ் தயாரிக்கும் வணங்கான் படத்தில் அருண் விஜய், ரோஷினி, சமுத்திரகனி, இயக்குனர் மிஸ்கின் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இந்த படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார். படத்தொகுப்பு பணிகளை சூர்யா மேற்கொள்கிறார்.

    முதலில் வணங்கான் படத்தில் சூர்யா நடிக்க முடிவு செய்து, படத்திற்கான படப்பிடிப்பும் நடந்தது. அப்போது இந்த படத்தை 2டி நிறுவனம் சார்பில் சூர்யாவே தயாரித்து வந்தார். பிறகு, இந்த படத்தில் இருந்து விலகிக் கொள்வதாக சூர்யா மற்றும் 2டி நிறுவனம் அறிவித்தது. இது தொடர்பான அறிவிப்பை முதலில் இயக்குனர் பாலா வெளியிட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

    • பாலா ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தின் டீசர் கடந்த 19-ம் தேதி வெளியானது.
    • மலையாளத்தில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற 'பிரேமலு' படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானார்.

    இயக்குநர் பாலா, சூர்யா நடிப்பில் 'வணங்கான்' படத்தை இயக்கினார். ஒரு ஷெட்யூல் படப்பிடிப்பு நடந்து முடிந்த நிலையில், திடீரென படம் கைவிடப்பட்டது. பின்னர், இந்தப் படத்தில் இருந்து சொந்த காரணங்களுக்காக சூர்யா திடீரென விலகினார்.

    இதையடுத்து, இந்தப் படத்தில் சூர்யாவுக்கு பதில் அருண் விஜய் நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக ரோஷினி பிரகாஷ் நடித்துள்ளார். மிஷ்கின், சமுத்திரக்கனி முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

    ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். படத்தை சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ளார். பாலா ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தின் டீசர் கடந்த 19-ம் தேதி வெளியானது. 

    வணங்கான் படம் தொடர்பாக வெளிவெரும் அப்டேட்கள் படத்தின் மீதான எதிர்பார்ப்பை ரசிகர்கள் மத்தியில் எகிறச் செய்துள்ளது.

    இந்நிலையில், வணங்கான் படத்தில் நடித்த பிரபல மலையாள நடிகை மமிதா பைஜூ, "வணங்கான் படப்பிடிப்பில் பாலா தன்னை தோள் பட்டையில் அடித்தார்" என தெரிவித்துள்ளார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    சமீபத்தில் மலையாளத்தில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற 'பிரேமலு' படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானார்.

    இதுகுறித்து நடிகை மமிதா பைஜூ கூறுகையில், "வணங்கான் படத்தில் முதலில்நான் நடித்திருந்தேன். அப்படத்தில் ஒரு பாடலுக்கு மேலளம் அடித்தபடி பாடிக்கொண்டே ஆட வேண்டும். நான் அப்போது தான் அதை கற்றுக் கொண்டேன். ஆனால், இயக்குனர் பாலா தான் அதை உடனே செய்து காட்டும்படி கூறினார். 

    நான் அதற்கு தயாராக இல்லை என்பதால் பதற்றமாகிவிட்டேன். அப்போது, பின்னாலில் இருந்த இயக்குனர் பாலா தனது தோள்பட்டையில் அடித்தார். நான் அவ்வபோது திட்டுவேன். அப்போது பெரிதா எடுத்துக் கொள்ளாதீர்கள் என்று இயக்குனர் பாலா கூறுவார்.

    சூர்யா சார் ஏற்கெனவே அவரோடு படம் பண்ணியிருப்பதால் புதிதாக இணைந்த எனக்குதான் அது புதிதாக இருந்தது" என்றார்.

    • மமிதா பைஜு இன்ஸ்டாகிராமில் விளக்கம் கொடுத்து உள்ளார்
    • மலையாள நடிகை மமிதாபைஜு முதலில் நடித்து இருந்தார்


    தமிழ்பட உலகின் முன்னணி இயக்குனர் பாலா. இவர் நடிகர் சூர்யா நடிக்கும் 'வணங்கான்' படத்தை இயக்கினார்.இந்த' படத்தில் பிரபல மலையாள நடிகை மமிதாபைஜு முதலில் நடித்து இருந்தார்.

    இந்த படத்திற்கான முதற்கட்ட படப்பிடிப்பு தொடங்கிய நிலையில் திடீரென அந்த படம் கைவிடப்பட்டது.

    மேலும் அந்தப்படத்தில் இருந்து சொந்த காரணங்களுக்காக நடிகர் சூர்யா, மமிதாபைஜு திடீரென விலகினர்.இதையடுத்து இந்தப்படத்தில் சூர்யாவுக்கு பதில் அருண்விஜய் நடித்தார்.அவருக்கு ஜோடியாக ரோஷினிபிரகாஷ் நடித்தார்.இதில் மிஷ்கின்,சமுத்திரக்கனியும் நடித்து உள்ளனர். ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்து உள்ளார்படத்தை சுரேஷ்காமாட்சி தயாரித்து உள்ளார்.இந்நிலையில், 'வணங்கான்' படத்தில் நடித்த பிரபல மலையாள நடிகை மமிதாபைஜூ இப்படத்தில் நடித்த அனுபவங்கள் குறித்து ஒரு பேட்டியில் கூறியதாவது:-

    "வணங்கான் படத்தில் முதலில் நான் ஒப்பந்தமாகியிருந்தேன். அப்படத்தில் ஒரு பாடல் இருந்தது. அதற்கு பாடிக்கொண்டே ஆடவேண்டும்.நான் அப்போதுதான் அதை கற்றுக்கொண்டிருந்தேன். திடீரென இயக்குநர் பாலா வந்து என்னை அதை செய்துகாட்டும்படி கூறினார். 

    அப்போது நான் அதற்கு தயாராகி இருக்கவில்லை.அதனால் பதற்றமாகி விட்டேன். அப்போது எனக்கு பின்னால் இருந்த பாலா என்னை தோள்பட்டையில் அடித்தார். 'மேலும் நான் அவ்வபோது திட்டுவேன்.அதனை பெரிதாக எடுத்துக்கொள்ளாதீங்க' என சொல்லுவார். சிலசமயங்களில் அவரிடம் அடி வாங்கி இருக்கிறேன்.   

                             



                                                                                                                                                                                                                                                                    இந்நிலையில், இயக்குநர் பாலா குறித்து நடிகை மமிதா பைஜுபேசிய வீடியோ சமூக வலைதள பக்கங்களில் அதிகம் பகிரப்பட்டு இணையத்தில் வைரலானது.இதனால் பாலாவிற்கு எதிராக கருத்துக்கள் வெளியாகின. இந்த நிலையில், தான் பேசிய அந்த வீடியோ தொடர்பாக நடிகை மமிதா பைஜூ தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விளக்கம் கொடுத்து உள்ளார்.அதில் கூறி இருப்பதாவது:-வணங்கான் பட அனுபவம் குறித்து இணையத்தில் பரப்பப்படும் செய்திகள் முற்றிலும் ஆதாரமற்றவை.திரைப்பட பிரமோஷன் நேர்காணலின் ஒரு பகுதி.பொறுப்பற்ற தலைப்பின் மூலம் அது தவறாக குறிப்பிடப்பட்டு உள்ளது.

    படத்தின் ப்ரீபுரொடக்ஷன், புரொடக்ஷன் என ஒரு வருடத்திற்கும் மேலாக பாலா சாருடன் வேலை பார்த்து உள்ளேன். ஒரு சிறந்த நடிகையாக மாறுவதற்கு அவர் என்னை வழிநடத்தினார்.அந்தப்படத்தில் பணிபுரிந்த போது மனரீதியாகவோ,உடல்ரீதியாகவோ எவ்வித தவறான அனுபவங்களையும் நான் அனுபவிக்கவில்லை என்பதை மீண்டும் வலியுறுத்த விரும்புகிறேன். பிறதொழில்ரீதியான கமிட்மெண்ட் காரணமாக அந்தப்படத்தில் இருந்து விலகினேன்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார். 

    • ராமம் ராகவம் படத்தின் டீசர் வெளியீட்டு விழா நடைபெற்றது.
    • இந்த படத்தை இயக்குநர் தன்ராஜ் இயக்கியுள்ளார்.

    அறிமுக இயக்குநர் தன்ராஜ் இயக்கத்தில், சமுத்திரக்கனி நடித்திருக்கும் புதிய படம் ராமம் ராகவம். தயாரிப்பளர் பிருத்தவி போலவரபு தயாரிப்பில் உருவாகி இருக்கும் ராமம் ராகவம் படத்தின் டீசர் வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது.

    இந்த விழாவில் கலந்து கொண்ட இயக்குநர் பாலா பேசும் போது, "சமுத்திரக்கனியின் மாபெரும் ரசிகனாக வந்திருப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். நடிகனாக அவர் நிரூபித்து விட்டார். அவருடைய உழைப்பிற்கு நான் ரசிகன். கடுமையாக உழைக்கக்கூடியவர்."

    "மற்றவர்களுக்கு உதவக்கூடிய அவருடைய தன்மை எனக்கு வியப்பாக இருக்கும். உதவுவதில் அவருக்கு பெரிய மனசு இருக்கு. இந்த படம் வெற்றி பெற என் வாழ்த்துகள்," என்று தெரிவித்தார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.


    • படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.
    • இப்படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது

    தமிழ் சினிமாவுக்கு தனித்துவமான படங்களை கொடுத்த பாலாவின் இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் வணங்கான். இந்த படத்தின் நாயகியாக ரோஷினி பிரகாஷ் நடித்துள்ளார். இயக்குனர் மிஸ்கின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

    படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். இப்படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நிறைவடைந்த நிலையில் ரிலீசுக்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர். கடந்த ஜூலை 6 ஆம் தேதி வெளியான படத்தின் டிரைலர் எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்தது.

    பிதாமகன் விக்ரம் சாயலில் அருண் விஜய் இருப்பதால் படத்தின் கதை குறித்த விவாதங்களும் இருந்து வருகிறது. இந்நிலையில் இன்று [ நவம்பர் 19] படத்தின் நாயகன் அருண் விஜய் தனது 47 வது பிறந்தநாளைக் கொண்டாடி வருகிறார்.

    அவருக்குப் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ள படக்குழு வணங்கான் ரிலீஸ் தேதியையும் போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது. அதன்படி வணங்கான் படம் அடுத்த ஜனவரியில் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும் என்பதைப் படக்குழு அறிவித்துள்ளது. பொங்கலுக்கு அஜித் நடித்துவரும் 'குட் பேட் அக்லி', விக்ரம் நடித்து வரும் 'வீர தீர சூரன்' ஆகிய படங்கள்  வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • "எனக்கும் இப்படி ஒரு வாய்ப்பு கிடைக்காதா" என ஏங்கினேன்
    • என் பெற்றோரை பெருமையில் நெகிழ்வடைய செய்தமைக்கு உங்களை வணங்குகிறேன்.

    பாலாவின் இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் வணங்கான். இந்த படத்தின் நாயகியாக ரோஷினி பிரகாஷ் நடித்துள்ளார். இயக்குனர் மிஸ்கின் முக்கிய காதாபாத்திரத்தில் நடித்துள்ளார். படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். யு/ஏ சான்றிதழ் பெற்ற இந்த படம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும் என்று இன்று அருண் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் படத்தின் இயக்குனர் பாலாவுக்கு அருண் விஜய் எழுதியுள்ள கடிதத்தில்,

    மன நெகிழ்வுடனும் கனத்த இதயத்துடனும், என் இயக்குனர் திரு. பாலா சார் அவர்களுக்கு,

    நான் திரையுலகில் கால் பதித்த காலத்தில் இருந்து, உங்கள் படைப்புகளின் ரசிகனாகவும், உங்களைக் கண்டு வியந்து, நேசித்து, ஒரு நடிகனாக "எனக்கும் இப்படி ஒரு வாய்ப்பு கிடைக்காதா" என ஏங்கியவனுக்கு தங்களின் இயக்கத்தில் பணியாற்ற 'வணங்கான்' படத்தின் மூலம் வாய்ப்பளித்தமைக்கு மனமார்ந்த நன்றிகள்.

    நம் படப்பிடிப்பின் பொழுது கூட இக்கதையின் பாதிப்பை நான் முழுமையாக உணரவில்லை. ஆனால் அதனை இப்பொழுது வெள்ளித்திரையில் காண்கையில், என் உணர்ச்சிகளை வெளிப்படுத்த வார்த்தைகள் இல்லை. என் பெற்றோரை பெருமையில் நெகிழ்வடைய செய்தமைக்கு உங்களை வணங்குகிறேன்.

     

    எனது திரையுலக பயணத்தில், வணங்கான் ஒரு மிக முக்கியமான பாகமாக அமையும் என்பதில் எனக்கு துளி அளவும் சந்தேகமில்லை! இப்படைப்பின் மீது முழுமையான நம்பிக்கை வைத்து, பக்க பலமாக இருந்து கொண்டிருக்கும் திரு. சுரேஷ் காமாட்சி அவர்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

    மக்கள் அனைவரும் இப்படத்தை விரைவில் திரையில் காணும் நாளை மிகவும் ஆவலுடன் எதிர்நோக்கி காத்துக் கொண்டிருக்கும்... உங்கள் அருண் விஜய் என்று குறிப்பிட்டுள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • பிறந்தநாளை ஒட்டி ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் ரத்த தானம் செய்துள்ளார்.
    • பாலா படம் என்றாலே கஷ்டமாகத்தான் இருக்கும் என்று சொல்வார்களே என்ற கேள்விக்கு பதிலளித்தார்.

    பாலாவின் இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் வணங்கான். இந்த படத்தின் நாயகியாக ரோஷினி பிரகாஷ் நடித்துள்ளார். இயக்குனர் மிஸ்கின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சமுத்திரக்கனி, சண்முக ராஜன், அருள்தாஸ் ஆகியோரும் இதில் நடித்துள்ளனர்.

    படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். யு/ஏ சான்றிதழ் பெற்ற இந்த படம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. அருண் விஜய் இன்று [நவம்பர் 19] தனது 47வது பிறந்தநாளை கொண்டாடுவதை முன்னிட்டு இந்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.

     

    இதற்கிடையே தனது பிறந்தநாளை ஒட்டி ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் ரத்த தானம் செய்துள்ளார். அதன்பின் செய்தியாளர்களை சந்தித்து அவர் பேசினார். வணங்கான் தனது கேரியரில் முக்கியமான படமாக அமையும் என்பதில் சந்தேகமில்லை, பாலா சாருக்கு நன்றி, ஒரு நடிகரா என்னை வேறு பரிணாமத்தில் இப்படம் காட்டும் என்று தெரிவித்தார்.

     

    தொடர்ந்து பாலா படம் என்றாலே கஷ்டமாகத்தான் இருக்கும் என்று சொல்வார்களே என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், இந்தப் படத்தில் நான் கஷ்டப்படவில்லை. இஷ்டப்பட்டுதான் எல்லா விஷயங்களையும் செய்தேன். பாலா சாருடன் இணைந்து பணியாற்றியது எனக்கு நல்ல அனுபவமாக இருந்தது என்றார்.

    தொடர்ந்து அஜித்தின் 'குட் பேட் அக்லி' படமும் பொங்கல் தினத்தை முன்னிட்டு வெளியாகிறது. அஜித் சாருக்கும், உங்களுக்கும் போட்டி இருக்குமா? என்று கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த அருண் விஜய், அஜித் சார் உச்சம். அவருக்கும் யாரும் போட்டி கிடையாது. அவருடைய ரசிகர்களும் என்னை நேசிகிறார்கள். நிச்சயமாக போட்டி எதுவும் கிடையாது என்று தெரிவித்தார். 

     

    மேலும் விஜய் தவெக என்ற அரசியல் கட்சி தொடங்கியது பற்றிய கேள்விக்கு பதிலளித்த அவர், விஜய் சாரின் அரசியல் பயணம் வெற்றிப் பயணமாக அமைய எனது வாழ்த்துக்கள் என்று தெரிவித்தார். அஜித் மற்றும் அருண்விஜய் இணைத்து என்னை அறிந்தால் படத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • வணங்கான் படத்தில் அருண் விஜய் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
    • இயக்குநர் பாலா நடிகர் விஜய் பற்றி கருத்து தெரிவித்துள்ளார்.

    தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குநர் பாலா. இவர் இயக்கிய படங்கள் தேசிய விருது வென்றுள்ளன. மேலும், விமர்சன ரீதியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. அந்த வகையில், இயக்குநர் பாலா நீண்ட இடைவெளிக்கு பிறகு இயக்கியிருக்கும் புதிய படம் "வணங்கான்."

    வருகிற பொங்கல் பண்டிகையை ஒட்டி வெளியாக இருக்கும் வணங்கான் படத்தில் அருண் விஜய் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். வணங்கான் வெளியீட்டைத் தொடர்ந்து இயக்குநர் பாலா சமீபத்தில் பேட்டி அளித்தார். அதில் நடிகர் விஜய் பற்றி கருத்து தெரிவித்துள்ளார்.

    அப்போது பேசிய அவர், "விஜயை எனக்கு மிகவும் பிடிக்கும். தற்போது இதை கேட்பதால், ஒரு சம்பவத்தை பதிவு செய்கிறேன். ஒரு முறை நான், என் குழந்தை மற்றும் நடிகர் விஜய், அவரது மனைவி சந்தித்தும். அங்கு என் குழந்தை அவருடன் விளையாடிக் கொண்டு இருந்தது.

    என் குழந்தையுடன் செல்ஃபி எடுக்க கேமராவை ஆன் செய்துவிட்டார் விஜய். எனினும் ஒரு செல்ஃபி எடுத்துக் கொள்ளட்டுமா என்று என்னிடம் அனுமதி கேட்டார். இந்த மாதிரி ஒழுக்கமான நபரை நான் எதற்காக அவமானப்படுத்த வேண்டும்," என்று கூறினார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.


    • ஜனவரி 10-ந் தேதி திரைக்கு வந்தது.
    • வாய் பேச முடியாத, காது கேட்காத மாற்றுத்திறனாளியாக அருண் விஜய் நடித்துள்ளார்.

    பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடித்திருக்கும் வணங்கான் திரைப்படம் பொங்கல் விருந்தாக ஜனவரி 10-ந் தேதி திரைக்கு வந்தது.

    சமீப காலமாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி வரும் அருண் விஜய்க்கு இந்த படம் ஒரு மைல்கல். விக்ரம், சூர்யாவை போலவே அருண் விஜய்யிடம் இருந்தும் சிறப்பான ஒரு நடிப்பை வெளிக்கொண்டு வந்திருக்கிறார் பாலா.

    வாய் பேச முடியாத, காது கேட்காத மாற்றுத்திறனாளியாக அபாரமாக நடித்திருக்கும் அருண் விஜய் பல இடங்களில் கலங்க வைத்திருக்கிறார்.


    இவருடைய தங்கையாக நடித்திருக்கும் ரிதாவும், காதலியாக நடித்திருக்கும் நடிகை ரோஷினி பிரகாசும் கூட சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்கள். நீண்ட இடைவெளிக்கு பிறகு தமிழ் சினிமாவில் காதல் காட்சிகள் ரசிக்கும்படியாக அமைந்துள்ளன.

    கம்பீரமான காவல்துறை அதிகாரியாக சமுத்திரக்கனியும் நேர்மையான நீதிபதியாக மிஷ்கினும் நடித்துள்ளனர்.


    இந்த நிலையில் வணங்கான் திரைப்படம் பிப்ரவரி 21 முதல் TENTKOTTA என்ற ஸ்ட்ரீமிங் தளத்தில் திரையிடப்பட உள்ளது. திரையரங்க வெளியீட்டைத் தவறவிட்ட பார்வையாளர்கள் இப்போது தங்கள் வீடுகளில் இருந்தபடியே படத்தை ஆன்லைனில் பார்க்கலாம்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    ×