என் மலர்
நீங்கள் தேடியது "Disabled girl"
- பயிற்சியின் போது மாற்றுதிறனாளி சிறுமியை இந்திய வீரர் ரிஷப் பண்ட் சந்தித்தார்.
- பண்டை சந்தித்த சிறுமி மகிழ்ச்சியாக அவருடன் உரையாடினார்.
ஆஸ்திரேலியாவுக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதுவரை நடந்துள்ள 3 டெஸ்ட் முடிவில் தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் உள்ளது.
இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான 4-வது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் நாளை மறுதினம் இந்திய நேரப்படி அதிகாலை 5 மணிக்கு தொடங்குகிறது. இதையொட்டி இந்திய வீரர்கள் கடந்த 21-ந்தேதியில் இருந்து அங்கு பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் பயிற்சியின் போது மாற்றுதிறனாளி சிறுமியை இந்திய வீரர் ரிஷப் பண்ட் சந்தித்தார். பண்டை சந்தித்த சிறுமி மகிழ்ச்சியாக அவருடன் உரையாடினார்.
அந்த வீடியோவில், ஹாய், உங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி, ரிஷப். நான் மிக நெருக்கமாக சந்தித்த முதல் கிரிக்கெட் வீரர் நீங்கள் என்று அந்த சிறுமி கூறினார்.
அதற்கு பதிலளித்த ரிஷப் பண்ட், உங்களை பார்த்ததில் மகிழ்ச்சி. உங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி. உங்கள் வாழ்க்கையில் நீங்கள் இன்னும் மகிழ்ச்சியாக இருப்பீர்கள் என்று நம்புகிறேன். எப்போதும் மகிழ்ச்சியாக இருங்கள் என பண்ட் கூறினார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.