என் மலர்
நீங்கள் தேடியது "dispute wife"
பெரம்பூர்:
பெரியமேடு என்.எச். ரோட்டில் குடியிருப்பவர் புருஷோத்தமன் (38). வேப்பேரி அரசு கால்நடை மருத்துவ கல்லூரி ஊழியர். இவருடைய மனைவி பெயர் சோனியா (34). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். கணவன்- மனைவி இடையே குடும்ப தகராறு இருந்து வந்தது.
இந்த நிலையில் நேற்று இரவு சோனியா அதே தெருவில் உள்ள தனது உறவினர் வீட்டுதிருமணத்துக்கு சென்று இருந்தார். புருசோத்தமன் அங்கு போய் மனைவி சோனியாவை வீட்டுக்கு வரும்படி அழைத்தார்.
சோனியா வர மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவன்-மனைவி இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது.
இதில் ஆத்திரம் அடைந்த புருசோத்தமன், தனது மோட்டார் சைக்கிளில் இருந்த பெட்ரோலை எடுத்து உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். தெருவில் அலறி துடித்தார். அவரது உடலில் பற்றி எரிந்த தீயை அணைத்து கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அங்கு சிகிச்சை பலன் இல்லாமல் இன்று காலை புருசோத்தமன் பரிதாபமாக உயிர் இழந்தார். அவரது உடலை கண்டு மனைவி, குழந்தைகள் கதறியது நெஞ்சை உருக்குவதாக இருந்தது. ஓட்டேரி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஈரோடு:
சித்தோடு அடுத்த பெருமாள் மலை, பெரிய மாரியம்மன் கோவில் வீதியைச் சேர்ந்தவர் பிரபு (வயது 37). இவரது மனைவி சுதா. கணவன் மனைவிக்கு இடையே குடும்ப தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் பிரபு கடந்த 23-ந் தேதி மனைவியுடன் கோபித்துக் கொண்டு தந்தை வீட்டுக்கு வந்தார். பின்னர் அவர் சாப்பிட்டு விட்டு தூங்க சென்று விட்டார். மறுநாள் காலை பிரபுவின் தந்தை அம்மாசை பிரபுவை எழுப்புவதற்காக அவரது அறைக்கு வந்தார்.
அப்போது பிரபு அவரது அறையில் தூக்குபோட்டு தொங்கிக் கொண்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார், அக்கம் பக்கத்தினர் உதவியுடன் பிரபுவை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர்.
அங்கு பரிசோதனை செய்த டாக்டர் பிரபு வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தார். பிரபு எதற்காக தற்கொலை செய்து கொண்டார்? என்று தெரியவில்லை.
இதுகுறித்து சித்தோடு போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேதராப்பட்டு:
புதுவையை அடுத்த தமிழக பகுதியான இரும்பை காலனியை சேர்ந்தவர் பாபு (வயது33), எலக்ட்ரிசீயன். இவருக்கு கலைவாணி என்ற மனைவியும் 3 குழந்தைகளும் உள்ளனர்.
மதுகுடிக்கும் பழக்கம் உள்ள பாபு அடிக்கடி மதுகுடித்துவிட்டு மனைவியிடம் தகராறு செய்வார். அதுபோல் சம்பவத்தன்றும் பாபு மதுகுடித்துவிட்டு வீட்டில் மனைவி கலைவாணியிடம் தகராறு செய்தார். இதனால் கணவருடன் கோபித்துக்கொண்டு கலைவாணி குழந்தைகளை திருச்சிற்றம்பலத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு அனுப்பி விட்டு அவரும் அவரது அண்ணன் ஆனந்து வீட்டுக்கு சென்று விட்டார்.
மனைவி கோபித்து சென்றதால் ஆத்திரம் அடைந்த பாபு, மனைவியின் ஆடையை எடுத்து தீவைத்து கொளுத்தி தனது கூரை வீட்டில் வீசிவிட்டு ஓடிவிட்டார். இதில் வீடு தீப்பிடித்து எரிந்ததுடன் தீ மளமளவென பரவி அருகில் உள்ள பாபுவின் மாமியார் செல்வராணி வீடு மற்றும் சுப்பராயன் வீட்டிலும் பரவி எரிந்தது.
இதுபற்றி தகவல் அறிந்ததும் வானூர் தீயணைப்பு படையினர் விரைந்து சென்று தீயை அணைத்தனர். எனினும் 3 வீடுகளும் முற்றிலும் எரிந்து சாம்பலானது. இதில் செல்வராணி வீடு மற்றும் சுப்புராயன் வீடுகளில் வைத்திருந்த நகை-பணம் தீயில் கருகி போனது.
இதுபற்றிய புகாரின் பேரில் ஆரோவில் போலீசார் வழக்குபதிவு செய்து பாபுவை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.