என் மலர்
நீங்கள் தேடியது "dispute with husband"
புதுச்சேரி:
புதுவை அய்யங்குட்டி பாளையம் அமைதி நகர் 3-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் குணசேகர். கூலித்தொழிலாளி. இவரது மனைவி மாலா (வயது 40). இவர்களுக்கு 16 வயதில் ஒரு மகள் உள்ளார்.
மதுகுடிக்கும் பழக்கம் உள்ள குணசேகர் அடிக்கடி வேலைக்கு செல்லாமல் மது குடித்து விட்டு மனைவியிடம் தகராறு செய்வது வழக்கம்.
அதுபோல் நேற்றும் குணசேகர் மது குடித்து விட்டு மனைவியிடம் தகராறு செய்தார். இதனால் மனமுடைந்த மாலா தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து வீட்டில் மின் விசிறி கொக்கியில் சேலையால் தூக்குபோட்டு தொங்கினார்.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த குணசேகர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் தூக்கில் இருந்து மனைவியை மீட்டு கதிர்காமம் அரசு மருத்துவ கல்லூரிக்கு அழைத்து சென்றார். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே மாலா இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்த புகாரின் பேரில் மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.