search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Diwali 2023"

    • கூகுள் நிறுவனம் கியூட் ஆன விளையாட்டை தனது வலைதளத்தில் வெளியிட்டு உள்ளது.
    • பயனர்கள் கூகுளில் தீபாவளி என்று டைப் செய்து தேட வேண்டும்.

    இந்தியாவில் தீபாவளி பண்டிகை அடுத்த மாதம் 14-ம் கொண்டாடப்பட இருக்கிறது. ஒவ்வொரு பண்டிகை அல்லது விசேஷ நாட்களை கொண்டாடும் வகையில், கூகுள் தனது வலைதளத்தில் டூடுல்களை வெளியிடுவதை வாடிக்கையாக கொண்டிருக்கிறது. இந்த டூடுல்கள் கார்டூன் படங்களாகவும், அனிமேஷன் வீடியோக்களாகவும் இடம்பெற்று இருக்கும்.

    அந்த வகையில் தீபாவளியை கொண்டாடும் வகையில், கூகுள் நிறுவனம் கியூட் ஆன விளையாட்டை தனது வலைதளத்தில் வெளியிட்டு உள்ளது. அதன்படி பயனர்கள் கூகுளில் தீபாவளி என்று டைப் செய்து தேடினால், தீபாவளி என்ற வார்த்தையின் அருகில் நட்சத்திரங்களால் சூழப்பட்ட விளக்கு காணப்படுகிறது. பயனர்கள் அதனை க்ளிக் செய்ய வேண்டும்.

    இனி க்ளிக் செய்த விளக்கு மிளிர்ந்து, அந்த வலைப்பக்கம் முழுக்க இன்னும் அதிக விளக்குகள் தோன்றும். இதோடு வலைப்பக்கம் இருளில் இருப்பது போன்று காட்சியளிக்கும், இதைத் தொடர்ந்து பயனர்கள் மவுஸ் பாயின்டரை அசைத்தால், விளக்கும் அசையும். அதன்படி பயனர்கள் வலைப்பக்கத்தில் உள்ள விளக்குகள் அனைத்தையும் பற்ற வைக்கலாம்.

    இவ்வாறு செய்ததும், வலைப்பக்கம் முழுக்க மெல்ல வெளிச்சமுற்று சாதாரண வலைப்பக்கமாக மீண்டும் மாறிவிடும். இதே எஃபெக்ட் கணினி மட்டுமின்றி கூகுள் ஆண்ட்ராய்டு மற்றும் ஐ.ஒ.எஸ். வெர்ஷன்களிலும் இயங்குகிறது.

    ×