search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "DJ"

    • தான் மேடைக்கு வரும்போது குறிப்பிட்ட பாடலை இசைக்க விட வேண்டும் என்று மணப்பெண் விரும்பிக் கேட்டுள்ளார்.
    • ஆனால் மாப்பிள்ளை தரப்பு தங்களுக்குப் பிடித்த பாடல்களையே ஒளிபரப்பியுள்ளது

    கல்யாணத்தில் டி.ஜே பாடல் போடும் தகராறில் மாப்பிள்ளை பக்க விருந்தினர் பெண் வீடு சார்பாக வந்த விருந்தினரின் கழுத்தை அறுத்துக் கொலை செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

    சமீப காலமாக திருமண நிகழ்ச்சிகளில் டி.ஜே பாடல்கள் ஏற்பாடு செய்து ஒவ்வொருவர் வரும்போதும் பாடல்களை ஒலிபரப்பும் டிரண்ட் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் உத்தரப் பிரதேச மாநிலம் சுல்தானிபூரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த திருமணத்தில், தான் மேடைக்கு வரும்போது குறிப்பிட்ட பாடலை இசைக்க விட வேண்டும் என்று மணப்பெண் விரும்பிக் கேட்டுள்ளார்.

    ஆனால் மாப்பிள்ளை தரப்பு தங்களுக்குப் பிடித்த பாடல்களையே ஒளிபரப்பியுள்ளது. இதனால் இரு வீட்டாருக்கும் வாக்குவாதம் எழுந்துள்ளது. கடைசியில் ஒரு வழியாக இரு தரப்பினரும் சமாதானமாகி நிகழ்ச்சியும் நடந்து முடிந்துள்ளது.

    ஆனால் மாப்பிள்ளை வீடு சார்பில் திருமணத்துக்கு வந்த விருந்தினர் ஒருவர் ஆத்திரம் அடங்காமல் பெண் வீடு சார்பில் வந்த விருந்தினர் இரவு 11 மணிக்கு வண்டியில் வீடு திரும்பும்போது வழிமறித்து கத்தியால் கழுத்தை அறுத்துள்ளார்.

    படுகாயமடைந்த அவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இவர் பெண்ணின் குடும்பத்திற்கு நெருங்கிய நண்பர் என்று கூறப்படுகிறது. இதற்கிடையே கழுத்தை அறுத்துவிட்டு தப்பி ஓடிய மாப்பிள்ளை பக்க உறவினரை போலீசார் தேடி வருகின்றனர். 

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • நேற்று ஐஸ்வர்யா ஷங்கர் - தருண் கார்த்திகேயன் திருமணம் காலை இனிதே நடைபெற்றது.
    • பிரபல இயக்குனர் மற்றும் நடிகர்கள் உள்ளிட்ட பலர் இத்திருமணத்திற்கு வருகை தந்து மணமக்களை வாழ்த்தினர்.

    கடந்த பிப்ரவரி மாதம், உதவி இயக்குனர் தருண் கார்த்திகேயனுடன் ஐஸ்வர்யாவுக்கு திருமண நிச்சயதார்த்த ஏற்பாடுகள் நடந்தது. நேற்று ஐஸ்வர்யா ஷங்கர் - தருண் கார்த்திகேயன் திருமணம் காலை இனிதே நடைபெற்றது.

    மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அவரின் மனைவியான துர்கா ஸ்டாலின் மணமக்களை நேரில் சென்று வாழ்த்தினர். பிரபல இயக்குனர் மற்றும் நடிகர்கள் உள்ளிட்ட பலர் இத்திருமணத்திற்கு வருகை தந்து மணமக்களை வாழ்த்தினர்.

    நேற்று இரவு நடந்த கல்யாண ரிசப்ஷனில் மொத்த திரையுலக பிரபலங்களும் கலந்துக் கொண்டு மணமக்களை வாழ்த்தினர். ஷங்கர் படத்தில் பிரமாண்டத்தை காண்பித்து நாம் பார்த்து இருக்கிறோம்,. ஆனால் நிஜத்தில் ஒரு பிரமாண்டமான கல்யாணத்தை தன் மகளுக்காக நடத்தி இருக்கிறார்.

     

    லோகேஷ் கனகராஜ், சிவகார்த்திகேயன், ரன்வீர் சிங், அட்லீ, வெற்றிமாறன், ஏ.ஆர் ரகுமான், மோஹன்லால், நெல்சன் திலிப்குமார், அனிருத், விஜய் சேதுபதி, சிரஞ்சீவி, காஜல் அகர்வால், கீர்த்தி சுரேஷ் மற்றும் பலர் கலந்துக் கொண்டனர்.

    அதைத்தொடர்ந்து  ரன்வீர் சிங் பாட்டு டீ.ஜே கவுதமிடம் வாத்தி கம்மிங் பாடலை ஒலிக்க செய்து , மகிழ்ச்சியாக மணமக்களான ஐஷ்வர்யா ஷங்கர் மற்றும் தருண் கார்த்திகேயனுடன் குத்தாட்டம் ஆடினார். இவர்களுடன் அதிதி ஷங்கர் மற்றும் அட்லீ இணைந்து ஆடினர்.

    • கோல்ட் எஃப்எம் எனும் வானொலியில் ஜுவன் பணியாற்றி வந்தார்
    • பலவந்தமாக உள்ளே நுழைந்தவர்களில் ஒருவன் ஜுவனை சுட்டான்

    பிலிப்பைன்ஸ் நாட்டின் பத்திரிக்கையாளராகவும், வானொலி ஒலிபரப்பாளராகவும் இருந்தவர் 57 வயதான ஜுவன் ஜுமலோன். டிஜேவாக (DJ) ஜுவன், "டிஜே ஜானி வாக்கர்" எனும் புனைப்பெயரில் புகழ் பெற்றிருந்தார்.

    ஜுவன், மிசாமிஸ் ஆக்ஸிடென்டல் (Misamis Occidental) பகுதியில் உள்ள கோல்ட் எஃப் எம் 94.7 (Gold FM 94.7) எனும் வானொலி நிலையத்தில் பணியாற்றி வந்தார்.

    இன்று காலை சுமார் 05:30 மணியளவில் வானொலி நிலையத்தில் உள்ள ஸ்டூடியோவில் நிகழ்ச்சியை ஒலிபரப்பி, டிஜேவாக நேயர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து கொண்டிருந்தார்.

    அப்போது அந்த நிலையத்திற்கு இருவர் அவரை தேடி வந்தனர். இரும்பு கதவுகளை தள்ளி விட்டு கொண்டு உள்ளே நுழைந்த அவர்கள் ஜுவன் இருந்த ஒலிபரப்பு அறைக்குள் பலவந்தமாக நுழைந்தனர்.

    அவர்களில் ஒருவன் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து ஜுவனை ஒரு முறை சுட்டான்; மற்றொருவன் வேறு யாரும் வருகின்றனரா என பார்த்து கொண்டிருந்தான். அங்கிருந்து புறப்படும் போது அவன், ஜுவன் அணிந்திருந்த நெக்லெஸையும் கழட்டி கொண்டு சென்றான்.

    அங்கிருந்து உடனடியாக ஜுவன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார் அங்கு அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

    இந்த சம்பவத்தின் போது அங்கிருந்த கேமிராவில் பதிவான காட்சிகள் இணையத்தில் பரவி வருகிறது.

    அந்நாட்டு பத்திரிக்கையாளர்கள் சங்கம் இந்த கொலைக்கு கண்டனம் தெரிவித்துள்ளது.

    இந்த கொலை சம்பவம் குறித்து வருத்தம் தெரிவித்த பிலிப்பைன்ஸ் அதிபர் பெர்டினண்டு மார்கோஸ் ஜூனியர், தீவிர விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.

    1986லிருந்து பிலிப்பைன்ஸ் நாட்டில் நடக்கும் 199-ஆவது பத்திரிக்கையாளர் கொலை இது என்பது குறிப்பிடத்தக்கது.

    ×