என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "DMK Booth Committee"

    • கூட்டத்திற்கு கிழக்கு ஒன்றிய அவைத் தலைவர் பரமசிவம் தலைமை வகித்தார்.
    • நடராஜ், தியாகராஜன், மற்றும் திமுக ஒன்றிய கிளைக் கழக நிர்வாகிகள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    பல்லடம்:

    நாடாளுமன்றத் தேர்தல் வரும் 2024ம் ஆண்டு நடைபெற இருக்கும் நிலையில் தமிழ்நாடு முழுவதும் தி.மு.க. தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளது.இந்த நிலையில் தேர்தல் பணிகளை உடனடியாக தொடங்க வேண்டும் என கடந்த மாதம் 9 ந்தேதி நடந்த பொதுக்குழு கூட்டத்தில்தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கட்சி நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தி இருந்தார். இதை தொடர்ந்து டிசம்பர் மாதத்திற்குள் பூத் கமிட்டி அமைக்கும் பணியை முடிக்க வேண்டும் என தி.மு.க. தலைமை சார்பில் மாவட்ட செயலாளர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

    இதன்படி பல்லடம் கிழக்கு ஒன்றிய தி.மு.க. பூத் கமிட்டி மற்றும் கிளை கழக செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் கிழக்கு ஒன்றிய தி.மு.க. அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு கிழக்கு ஒன்றிய அவைத் தலைவர் பரமசிவம் தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர் சோமசுந்தரம் முன்னிலை வகித்தார். இதில் திருப்பூர் வடக்கு மாவட்ட அவைத்தலைவர் நடராஜன், பொருளாளர் சாமிநாதன், தலைமை செயற்குழு உறுப்பினர் சரவண நம்பி ஆகியோர் கலந்து கொண்டு பூத் கமிட்டி அமைப்பது குறித்து ஆலோசனைகள் வழங்கி பேசினர். இந்த கூட்டத்தில் பல்லடம் ஒன்றிய குழு தலைவர் தேன்மொழி, துணை தலைவர் பாலசுப்பிரமணியம், திமுக கிழக்கு ஒன்றிய துணைச் செயலாளர்கள் சிவக்குமார், முருகன்,கதிஜா பானு, பொருளாளர் கந்தசாமி, மாவட்ட பிரதிநிதிகள் சின்னப்பன், நடராஜ், தியாகராஜன், மற்றும் திமுக ஒன்றிய கிளைக் கழக நிர்வாகிகள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    ×