என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "dmk volunteer death"
வேடசந்தூர்:
வேடசந்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இடி- மின்னலுடன் கனமழை பெய்தது. குஜிலியம்பாறையை சேர்ந்த கணேசன்(வயது38). இவர் பாளையம் பேரூராட்சி ராமகிரி தி.மு.க வார்டு செயலாளராக இருந்தார். நேற்று மாலை தனது தோட்டத்தில் இருந்தபோது திடீரென மின்னல் தாக்கியது. இதில் சம்பவ இடத்திலேயே கணேசன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து குஜிலியம்பாறை போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இதேபோல் 100 நாள் வேலைக்கு சென்ற சாமிமுத்தன் பட்டியை சேர்ந்த மரியசெல்வம்(35). மழைக்காக மரத்தின் அடியில் நின்றுள்ளார். அப்போது மின்னல் தாக்கி சம்பவ இடத்திலேயே பலியானார். இது குறித்து எரியோடு போலீசார் விசாரித்து வருகின்றனர். ரங்கநாத புரத்தை சேர்ந்த உமாசங்கர்(40). தோட்டத்தில் கறவை மாடுகளை வளர்த்து வருகிறார். நேற்றிரவு இரவு பெய்த மழையின்போது மின்னல் தாக்கி சுமார் ரூ.60 ஆயிரம் மதிப்புள்ள பசுமாடு பலியானது. இதேபோல் ஆர்.ஜி.வலசை சேர்ந்த மாலதி என்பவரது பசுமாடும் மின்னல் தாக்கி பலியானது.
செய்யாறு:
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த புளிரம்பாக்கத்தை சேர்ந்தவர் தங்கராஜ் என்கிற பீட்டர். இவரது மனைவி சுசிலா (வயது 60). அங்கன்வாடி பணியாளராக இருந்து ஓய்வு பெற்றவர். இவர்களுக்கு 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர்.
சுசிலா, தி.மு.க.வின் நீண்ட கால உறுப்பினராகவும், கருணாநிதியின் தீவிர ஆதரவாளராகவும் இருந்தார்.இந்த நிலையில் தி.மு.க. தலைவர் கருணாநிதி உடல்நலக்குறைவால் மரண மடைந்த செய்தியை நேற்று இரவு தெரிந்து கொண்ட சுசிலா அதிர்ச்சியில் துக்கம் தாளாமல் கதறி அழுதார்.
விடிய விடிய டி.வி. முன்பு உட்கார்ந்துக் கொண்டு கருணாநிதியின் இறுதி அஞ்சலி நிகழ்ச்சியை பார்த்து கொண்டிருந்தார். இன்று காலை திடீரென மாரடைப்பு ஏற்பட்டு சுசிலா இறந்தார்.
விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே உள்ள உழக்குடியைச் சேர்ந்தவர் முனியசாமி (வயது 82), விவசாயி. இவர் கடந்த 1968-ம் ஆண்டு முதல் தி.மு.க. உறுப்பினராக உள்ளார்.
தி.மு.க.வில் பிரதிநிதி, கிளைச் செயலாளர் உள்ளிட்ட பொறுப்புக்களை வகித்துள்ளார். தி.மு.க. தலைவர் கருணாநிதி மீது அதிக பாசம் கொண்டவர். கருணாநிதிக்கு உடல் நலம் சரியில்லை என கேள்விப்பட்டதும் முனியசாமி அதிர்ச்சியடைந்தார்.
கருணாநிதி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டதும் முனியசாமி மிகுந்த மனவேதனை அடைந்தார். இந்த சோகத்தில் அவர் சாப்பிட மறுத்து விட்டார். இதனால் உடல் நலம் பாதிக்கப்பட்ட முனியசாமி பரிதாபமாக இறந்தார். அவருக்கு ஒரு மகன் உள்ளார். மனைவி ஏற்கனவே இறந்து விட்டார்.
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் பூதாமூர் கிராமத்தை சேர்ந்தவர் சங்கர்(வயது 95). தி.மு.க. முன்னாள் கவுன்சிலர். இவர் வேடப்பர் கோவில் தர்மகர்த்தாவாக இருந்து வந்தார். கருணாநிதி மீது அதிகபற்று வைத்திருந்தார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு தி.மு.க.தலைவர் கருணாநிதி உடல்நிலை குறைவு காரணமாக சென்னை காவிரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இதற்கிடையே கருணாநிதி உடல்நிலைக் குறித்து முரண்பட்ட தகவல் வலைதளங்களில் வெளியாகின. இதையறிந்த சங்கர் மனவேதனை அடைந்து மயங்கி விழுந்தார்.
அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இன்று காலை சங்கர் பரிதாபமாக இறந்தார்.
பின்னர் அவரது உடல் சொந்த ஊரான பூதாமூர் கொண்டு வரப்பட்டது. அங்கு அவரது உடலுக்கு தி.மு.க.நகர செயலாளர் தண்டபாணி, இளைஞரணி குமார் மற்றும் தி.மு.க. பிரமுகர்கள் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.
இறந்துபோன சங்கருக்கு ருக்மணி என்ற மனைவியும், நல்லமுத்து, அல்லிமுத்து, ஆறுமுகம், இளையபெருமாள் ஆகிய 4 மகன்களும் உள்ளனர். #DMK
தி.மு.க தலைவர் கருணாநிதி உடல் நலக்குறைவு மற்றும் வயோதிகம் காரணமாக சென்னை காவேரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். நேற்று முன்தினம் அவரது உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டதால் தமிழகம் முழுவதும் பல தி.மு.க. தொண்டர்கள் தற்கொலை செய்தும், அதிர்ச்சியிலும் பலியானார்கள்.
துத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே உள்ள கான்சாபுரத்தை சேர்ந்த தி.மு.க. தொண்டரும், வார்டு உறுப்பினருமான செல்வக்குமார் (வயது 42) என்பவர் நேற்று முன்தினம் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். நெல்லை மாவட்டம் குருவிகுளம் அருகே உள்ள பிச்சை தலைவன் பட்டியைச் சேர்ந்த தி.மு.க. தொண்டரும், முன்னாள் கிளை செயலாளருமான கோயில்பிள்ளை (75) என்பவர் கருணாநிதிக்கு உடல்நலக்குறைவு என்று கேள்விபட்டதும் அதிர்ச்சியில் மரணம் அடைந்தார்.
பாளை என்.ஜி.ஓ. காலனியை அடுத்த திருநகரை சேர்ந்தவர் சங்கர் (50). தீவிர தி.மு.க. தொண்டரான இவர் சமையல் வேலை செய்து வந்தார். கருணாநிதிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது முதல் வேலைக்கு செல்லாமல் எப்போதும் டி.வியையே பார்த்துக்கொண்டு இருந்தார்.
மனைவி பேச்சியம்மாள் மற்றும் உறவினர்களிடம், என்தலைவருக்கு இப்படி ஆகிவிட்டதே இனி அவரது பேச்சை கேட்க முடியாது என்று கண்கலங்கி கூறி வந்துள்ளார். இந்த நிலையில் நேற்றுமுன்தினம் மாலை திடீரென்று அவர் தனது உடலில் மண்எண்ணை ஊற்றி தீவைத்தார். வேதனையிலும், தி.மு.க. வாழ்க, கலைஞர் வாழ்க என்று கத்தினார்.
அவரது அலறல் சத்தம் கேட்டு அங்கு ஓடிவந்த அவரது மனைவி பேச்சியம்மாள் மற்றும் அருகில் உள்ளவர்கள், சங்கரை மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். 90 சதவீதத்திற்கு மேல் தீக்காயம் ஏற்பட்டதால் கவலைக்கிடமான நிலையில் இருந்த சங்கருக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் இன்று காலை சிகிச்சை பலன் அளிக்காமல் சங்கர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து பெருமாள்புரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தில்லை நாகராஜன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மரணம் அடைந்த சங்கர் உடலுக்கு இன்று நெல்லை மாவட்ட தி.மு.க பிரமுகர்கள் சென்று அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். முன்னாள் அமைச்சர் டி.பி.எம்.மைதீன்கான் எம்.எல்.ஏ, மத்திய மாவட்ட கழக செயலாளர் அப்துல் வகாப், மாநகர செயலாளர் ஏ.எல்.எஸ் லட்சுமணன் எம்.எல்.ஏ மற்றும் ஏராளமான நிர்வாகிகளும் அஞ்சலி செலுத்தினர். மரணம் அடைந்த சங்கரின் மனைவி பேச்சியம்மாளை சந்தித்தும் அவர்கள் ஆறுதல் கூறினர். #DMK
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்