என் மலர்
நீங்கள் தேடியது "donate"
- தர்மம் என்றால் நல்லொழுக்கம்
- நம்மைவிட உயர்ந்தவர்களுக்கு நாம் கொடுப்பது தானம்.
நம்மைவிட உயர்ந்தவர்களுக்கு நாம் கொடுப்பது தானம். உதாரணமாக நல்ல காரியங்களுக்கு நாம் தருவதை 'தானம்' என்று சொல்லலாம். நம்மைவிட வசதி குறைந்தவர்களுக்கும், பிச்சைக்காரர்களுக்கும் நாம் தருவதை 'தர்மம்' என்று சொல்லலாம்.
நெருப்பின் தர்மம் சுடுவது, நீரின் தர்மம் பள்ளத்தை நோக்கிப் பாய்வது என்று சொல்லும்போது, இங்கு 'இயல்பு' என்ற பொருளிலேயே தர்மம் என்ற சொல்லை நாம் பயன்படுத்துகிறோம். 'தானம்' என்ற சொல் பொதுவாகவே நாம் பிறருக்குச் செய்யும் பொருளுதவியைக் குறிக்கவே உபயோகிக்கப்படுகிறது.
தர்மம் என்றால் நல்லொழுக்கம், ஆன்மிக வழியைப் பின்பற்றுதல், பெரியோர் காட்டிய நல்வழியில் வாழ்தல், நியாயமான வழியில் வாழ்க்கை நடத்துதல்; தானம் தர்மத்தில் அடங்கும் என்றும் கொள்ளலாம்.
பாரதப் போரில் மிகப் பெரிய கொடையாளி கர்ணனின் உயிர் பிரியாமல் காத்தது அவர் செய்த தான தர்மங்கள், ஆனால் விதிப்படி உயிர் பிரிந்தால்தான் அவரின் தேகம் சாந்தியடைந்து அவரின் உயிர் இறைவனை சரணடையும் என்பதால் அவரின் உயிரை போக்க கண்ணனே அந்தனர் வேடத்தில் வந்து கர்ணன் செய்த புண்ணியங்களை தானம் பெற்றார்.
கண்ணன் அருளால் கர்ணன் மோட்சத்தை அடைந்தார். இதுகுறித்து சூரியதேவன் கண்ணனிடம் தானம் தர்மம் இவற்றிற்கு உள்ள வித்தியாசத்தை விளக்குமாறு வேண்டிக் கொண்டதன் பேரில் கண்ணன் கூறிய தான தர்ம உரைதான் கீழே உள்ளது. தானம் என்பது பிறருக்குத் தேவையானவற்றை அவர் கேட்டோ, அடுத்தவர் அவர் நிலை கூறி அறிந்தபின்னோ தருவது. இதுதான் தானம்.
புண்ணியக் கணக்கில் சேராது. ஏனெனில்.. இல்லாதவர் மற்றும் இயலாதவர் கேட்டபின் கொடையளிப்பது ஒரு மன்னனின் கடமை. ஒவ்வொரு மனிதனின் கடமையும் கூட.... ஆனால், தர்மம் என்பது எவரும் கேட்காமல் அவரே அறியாமல் அவர் நிலை அறிந்து கொடுப்பது. இதுதான் புண்ணியம் தரும். பசித்திருக்கும் ஒருவர் கேட்டபின் ஏதாவது தருவது தானம்.
அவர் கேட்காமலேயே அவர் பசியாற்றுவது தர்மம். கர்ணன் தர்மங்கள் செய்து புண்ணியங்களை ஈட்டியவன்தான். ஆனால், மொத்த புண்ணியத்தையும் கிருஷ்ணர் தானமாகக் கேட்டுத்தான் வாங்கினாரே தவிர தர்மமாகப் பெறவில்லை. எல்லா புண்ணியங்களையும் தானமாகத் தாரை வார்த்து தந்த பிறகு கர்ணனும் ஒரு சாதாரண மனிதனானான். அதனாலேயே மரணம் அவனை எளிதாய் நெருங்கியது. புரிந்ததா ? என்றார் கண்ணன்.
- தானமாக பெற்ற அரிசியை கொண்டு பொங்கல் செய்து படைப்பார்கள்.
- பெருமாளுக்கு திருக்குடை சமர்ப்பிக்கும் வைபவமும் நடைபெறும்.
ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசியில் திருப்பதி போன்ற முக்கிய தலங்களில் பிரம்மோற்சவம் நடக்கும். குலதெய்வ பூஜைகளை செய்யவும் காணிக்கை, நேர்த்தி கடன்கள் செலுத்தவும் இந்த மாதம் சிறந்தது. புரட்டாசி மாதம் முழுவதும் அசைவ உணவுகளை துறந்து விரதம் இருப்பார்கள். சனிக் கிழமைகளில் வீட்டில் உள்ளவர்கள் திருநாமம் அணிந்து சர்க்கரைப் பொங்கல், வெண்பொங்கல், சுண்டல், வடை பாயாசம், நைவேத்யமாக படைத்து பெருமாளை வழிபடுவர். பலர் கையில் உண்டியல் ஏந்தி நாராயணா... கோபாலா... கோவிந்தா... என்று திருநாமங்களை உரக்க கூறியபடி வீடு வீடாக சென்று பணம், அரிசி, தானம் பெறுவர். பணத்தை திருப்பதி ஏழுமலையானுக்கு காணிக்கையாக செலுத்துவர். தானமாக பெற்ற அரிசியை கொண்டு பொங்கல் செய்து படைத்து அனைவருக்கும் வழங்குவர்.
பல இடங்களில் உறியடி திருவிழாவும், பெருமாளுக்கு திருக்குடை சமர்ப்பிக்கும் வைபவமும் நடைபெறும். அனைத்து விஷ்ணு தலங்களிலும் சிறப்பு பூஜைகள் நடந்து கொண்டே இருக்கும்.குடும்பத்தினருடன் பெருமாள் தலங்களுக்கு பாத யாத்திரையாக சென்று தரிசனம் செய்து நேர்த்திக்கடன் காணிக்கை செலுத்துபவர்களும் உண்டு. புரட்டாசி மாதத்தில் மேற்கொள்ளப்படும் சனிக் கிழமை விரதம் சர்வ மங்களங்களையும் அருளும்.
அதுவும் மூன்றாம் சனிக்கிழமை வழிபாடு அதி சிறப்பானது. இந்த மாதத்தில் செய்யும் தானதர்மம் மிகச் சிறந்ததாக கருதப்படுகிறது. சனிக்கிழமை அன்று இல்லாதோர், இயலாதோர், சாலையோரம் வசிப்பவர்கள், தொழுநோயாளிகள், பாரம் சுமப்பவர்கள், முதியோர்கள் போன்றவர்களுக்கு உணவு, உடை வழங்குவது சிறந்த புண்ணியமாக சொல்லப்படுகிறது. சனி திசை நடப்பில் இருப்பவர்கள், ஏழரை சனி, அஷ்டம சனி, கண்ட சனி என்று சனியின் பிடியில் இருப்பவர்கள் புரட்டாசி சனிக்கிழமையில் விரதம் இருந்து பெருமாளை தரிசித்து பிரார்த்தனை செய்தால் தடைகள் நீங்கும். சுபயோக சுபயோகம் கூடிவரும்.
- நிதி பற்றாக்குறையை சரி செய்ய பல்வேறு ஏற்பாடு.
- விஷால், கார்த்தி, பூச்சி முருகன் ஆகியோரிடம் கமல்ஹாசன் வழங்கினார்.
தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு புதிதாக கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. பல ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கப்பட்ட இதன் கட்டுமான பணிகள் நிதி பற்றாக்குறை காரணமாக இன்னும் முடியவில்லை.
இதற்காக, நிதி பற்றாக்குறையை சரி செய்ய பல்வேறு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகிறது.
சமீபத்தில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் நடிகர் சங்க கட்டிடத்திற்கு நிதி வழங்கினர்.

இந்நிலையில், தென்னிந்திய நடிகர் சங்க கட்டட பணிக்கு நடிகர் கமல்ஹாசன் ரூ.1 கோடி நிதி வழங்கியுள்ளார்.
நடிகர் சங்க கட்டட பணியை தொடர்வதற்காக வைப்பு நிதியாக ரூபாய் ஒரு கோடிக்கான காசோலையை கமல்ஹாசன் வழங்கினார்.
நிர்வாகிகளான விஷால், கார்த்தி, பூச்சி முருகன் ஆகியோரிடம் கமல்ஹாசன் வழங்கினார்.
- ரத்த தானம் செய்வதன் அவசியம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இந்த நாளின் முக்கிய நோக்கமாகும்.
- ரத்த தானம் செய்வது பல உயிர்களைக் காப்பாற்றக்கூடிய உன்னத செயல்.
தானங்களில் சிறந்த தானமாக 'ரத்த தான'த்தை மருத்துவத்துறை முன்னிறுத்துகிறது. ஏனெனில் பல்வேறு மருத்துவ அறுவை சிகிச்சைகளின் போதும், ஒரு மருத்துவ நோயாளிக்கு தேவைப்படும் முக்கியமான, முதன்மையான விஷயமாக ரத்தம் இருக்கிறது. ரத்தத்தில் ஏ, பி, ஓ, என்று சில பிரிவுகளும் இருப்பதால், எல்லாராலும் எல்லாருக்கும் ரத்தத்தை அளித்து விட முடியாது.
ஒருவருக்கு தேவைப்படும் சமயத்தில், அவருக்குரிய ரத்த வகையாளரைத் தேடிக் கொண்டுவருவது சிரமம். எனவேதான், ரத்த தானம் என்ற பெயரில், விருப்பப்பட்டு வழங்கும் நபர்களிடம் இருந்து ரத்தம் தானமாகப் பெறப்பட்டு மருத்துவமனை மற்றும் ரத்த வங்கிகளில் இருப்பு வைக்கப்படுகிறது. இப்படி ரத்ததானம் அளிப்பவர்களின் தினமாக உலகம் முழுவதும் ஜூன் 14-ந்தேதியை 'உலக ரத்த நன்கொடையாளர்கள் தினம்' என்று அனுசரித்து வருகிறோம்.
ரத்தத்தில் ஏ, பி, ஓ ரத்த வகையை கண்டுபிடித்ததற்காக நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி யான கார்ல் லேண்ட்ஸ்டெய்னரின் பிறந்த தினத்தில்தான், நாம் இந்த நாளை கடைப்பிடித்து வருகிறோம். ரத்த தானம் செய்வதன் அவசியம் மற்றும் பாதுகாப்பாக ரத்த தானம் செய்வதன் முக்கியத்துவம் குறித்து உலகளாவிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இந்த நாளின் முக்கிய நோக்கம் ஆகும்.
ரத்தம் பெறுபவர்கள் மட்டுமல்ல, ரத்தம் அளிப்பவர்களின் உடலும் பல நன்மைகளைப் பெறுவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். ரத்த தானம் செய்வது பல உயிர்களைக் காப்பாற்றக்கூடிய உன்னத செயல் என்பதால், இந்த நாளில் அனைவரும் ரத்த தானம் செய்ய உறுதியேற்போம்.
- அமாவாசை திருநாளில் தானங்கள் செய்வோம்.
- நமது கர்மவினைகளை தூள் தூளாக்குவோம்.
மகாளய அமாவாசை நாளில் செய்யும் சிறு தானமும் நமது முன்னோர்களின் பசியை தீர்த்து அவர்களின் ஆசியை வழங்கக்கூடியது. இத்தகைய சிறப்பு மிக்க அமாவாசை திருநாளில் தானங்கள் செய்வோம். நமது கர்மவினைகளை தூள் தூளாக்குவோம். எந்தெந்த பொருட்களை தானம் செய்தால் என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்ற விபரம் வருமாறு:-
பொருட்கள் - பலன்கள்
அன்னம்- வறுமையும், கடனும் நீங்கும்
துணி- ஆயுள் அதிகமாகும்
தேன்- புத்திர பாக்கியம் உண்டாகும்
தீபம்- கண்பார்வை தெளிவாகும்
அரிசி- பாவங்களை போக்கும்
நெய்- நோய்களை போக்கும்
பால்- துக்கம் நீங்கும்
தயிர்- இந்திரிய சுகம் பெருகும்
பழங்கள்- புத்தியும், சித்தியும் உண்டாகும்
தங்கம்- குடும்ப தோஷங்களை நீக்கும்
வெள்ளி- மனக்கவலை நீங்கும்
பசு- ரிஷி, தேவர், பிதுர் கடன்கள் அகலும்
தேங்காய்- நினைத்த காரியம் வெற்றியாகும்
நெல்லிக்கனி- ஞானம் உண்டாகும்
பூமி தானம்- ஈஸ்வர தரிசனம் உண்டாகும்
சிலருக்கு பொருள் வசதி குறைவாக இருக்கும். அவர்களால் பெரிய அளவில் தானம் செய்ய இயலாது. அவர்கள் கவலை கொள்ள வேண்டாம்.
பசுவிற்கு உணவளிப்பதன் மூலம் தானத்துக்குரிய எல்லா பலன்களையும் பெற முடியும். கன்றுடன் கூடிய பசுவிற்கு தானம் அளித்தல் மிகவும் நல்லது.
பசுவிற்கு ஒரு கட்டு அருகம்புல் அளிக்கலாம். ஒரு கட்டு அகத்தி கீரையை உணவாக அளிக்கலாம். பசுவிற்கு வாழையிலையில் சாதத்தை அளிக்கலாம். பழவகைகளை கொடுக்கலாம்.
பழங்களில் வாழைப்பழமே மிகச் சிறந்தது. ஆறு மஞ்சள் வாழைப்பழங்களை பசுவிற்கு உணவாக அளிக்கலாம். அரிசியும், வெல்லமும் கலந்து ஒரு பாத்திரத்தில் பசுவிற்கு உணவாக அளிக்கலாம். இதை அதிகமாக தரக்கூடாது. பசுவிற்கு வயிற்று உபாதையை உண்டாக்கும்.
கோமாதா என்றழைக்கப்படும் பசுவின் உடலில் அனைத்து தெய்வங்களும், தேவதைகளும் வாசம் செய்கின்றனர். அனைத்து தெய்வங்களுக்கும் மற்றும் தேவதைகளுக்கும் ஒரே நேரத்தில் தானம் செய்ய முடியுமா? முடியும். பசுவுக்கு உணவளித்தால் அனைத்து தெய்வங்களுக்கும், தேவதைகளுக்கும் உணவளித்ததாகவே சமம். எனவே இத்தகைய சிறப்புடைய பசுவிற்க்கு தங்களால் இயன்ற அளவு உணவை அளிக்கவும்.
அமாவாசை நாளில் பசுவிற்கு உணவளித்தால் நமது கர்ம வினைகளை போக்கிக் கொள்ள முடியும். அமாவாசை நாளில் பசுவிற்கு உணவளித்தல் நம் பிதுர்களையும் மகிழ்விக்கும் செயல் ஆகும். நம் பிதுர்களும் மகிழ்ச்சி அடைந்து அவர்களின் ஆசிகளும் கிட்டும். நமது குலம் தழைக்கும்.
- எப்போதும் கோவிந்த நாமம் சொல்லிக்கொண்டே இருங்கள்.
- ‘கோவிந்தா’ என்று சொன்னால் ‘போனது வராது’ என்று பொருள்படும்.
'கோவிந்தா' என்று சொன்னால் 'போனது வராது' என்று பொருள்படும். இதனால்தான் கடன் வாங்கியவன், திருப்பித்தராமல் ஏமாற்றி விட்டால், 'பணம்' கோவிந்தா தானா? என கேட்கும் வழக்கம் வந்தது.
கோவிந்தா எனும் சொல்லுக்கு வேறொரு பொருளும் உண்டு. இதை 'கோ இந்தா' என்றும் பிரிக்கலாம். அப்போது 'கோ' என்றால் 'பசு' 'இந்தா' என்றால் 'வாங்கிக்கொள்' என்று பொருள் வரும்.
கோவிந்தா... கோவிந்தா... என சொல்லச்சொல்ல பசுதானம் செய்த புண்ணியம் கிடைத்துக் கொண்டே இருக்குமாம். எப்போதும் கோவிந்த நாமம் சொல்லிக்கொண்டே இருங்கள்.
பசுக்களுடன் விளையாடி மகிழ்ந்த கிருஷ்ணனின் அருள் பூரணமாகக் கிடைக்கும்.
- இன்று ஆவணி மாதம் அசுவினி நட்சத்திரத்தில் பிறக்கிறது.
- அசுவினி, மகம், மூலம் நட்சத்திரக்காரர்கள் பரிகாரங்கள் செய்து கொள்வது நல்லது.
இன்று (புதன்கிழமை) ஆவணி மாதம் பிறக்கிறது. வாக்கிய பஞ்சாங்கத்தின்படி இன்று அதிகாலை 5.34 மணிக்கும், திருக்கணித பஞ்சாங்கத்தின்படி இன்று காலை 7.21 மணிக்கும் ஆவணி மாதம் பிறக்கிறது. இன்றைய மாத பிறப்புக்கு விஷ்ணுபதி என்று பெயர். இன்று அதிகாலையில் புனிதநீராடி விட்டு பாராயணம் செய்வது மிகுந்த பலன்கள் தரும். இன்று நடத்தப்படும் ஹோமங்களுக்கு சிறப்பான பலன் உண்டு.
இன்று ஆவணி மாதம் அசுவினி நட்சத்திரத்தில் பிறக்கிறது. எனவே அசுவினி, மகம், மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உரிய பரிகாரங்கள் செய்து கொள்வது நல்லது. குறிப்பாக நெய், ஒருசெம்பு பசும்பால், பழ வகைகள் ஆகியவற்றை தானமாக கொடுத்து பரிகாரம் செய்து கொள்ளலாம். இந்த பரிகார தானங்களை இன்று காலையிலேயே கொடுக்க வேண்டும்.
தானம் செய்ய இயலாதவர்கள் சிறிது வாழைப்பழத்தை ஆலயங்களில் வைத்து வழிபட்டு விட்டு பிறகு அவற்றை ஆலய வாசலில் இருக்கும் ஆதரவற்றவர்களுக்கு கொடுத்து விடலாம். இவ்வாறு பரிகாரங்கள், தானங்கள் செய்வதால் ஆவணி மாதம் முழுவதும் மனதில் நிம்மதி நிலவும். பண வரவும் அதிகரிக்கும். ஆவணி மாத தானத்துக்கு நீண்ட ஆயுள், நல்லவர்களுடன் சேருவது போன்ற பலன்கள் கிடைக்கும் என்று புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
- கண்தானம் கொடுக்க வயது வரம்பு கிடையாது.
- நீரிழிவு நோய், ரத்த அழுத்தம் உள்ளவர்கள்கூட கண்தானம் செய்யலாம்.
ஒருவர் இறந்தவுடன் 6 மணி நேரத்துக்குள் கண்களை எடுத்துப் பாதுகாக்க வேண்டும். கண்தானம் செய்ய உங்கள் ஊருக்கு அருகில் உள்ள கண்தான வங்கியை அணுக வேண்டும். உங்கள் ஊருக்கு அருகில் உள்ள கண்தான வங்கியின் தொலைபேசி எண், முகவரி ஆகியவற்றை அறிய தமிழக அரசின் 104 என்ற இலவச தொலைபேசி எண்ணை தொடர்புகொள்ளலாம்.
கண்தான வங்கியிலிருந்து மருத்துவர்கள் வரும்வரை இறந்தவர்களின் கண் இமைகளை மூடி வைக்க வேண்டும். மூடிய இமைகளின் மீது ஈரப்பஞ்சை வைத்திருக்க வேண்டும். இறந்தவர் உடல் உள்ள அறையில் மின்விசிறியை அணைத்துவிட வேண்டும். கண்தானம் கொடுக்க வயது வரம்பு கிடையாது.
நீரிழிவு நோய், ரத்த அழுத்தம் உள்ளவர்கள்கூட கண்தானம் செய்யலாம். கண்புரை அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்களும் கண்தானம் செய்யலாம். புற்றுநோய், எய்ட்ஸ், மஞ்சள் காமாலை, நச்சு கிருமித்தொற்று, கிருமி பாதிப்பினால் இறந்தவர்கள் மற்றும் காரணம் தெரியாமல் இறந்தவர்களின் கண்களை தானமாக பெற முடியாது. இறந்த ஒருவரிடம் இருந்து எடுக்கப்படும் ஒரு ஜோடி கண்களைக்கொண்டு, பார்வையிழந்த 2 பேருக்கு பார்வை கொடுக்க முடியும்.
இந்தியாவில் கருவிழி பாதிப்பினால் பார்வையிழந்து வருபவர்களில் பெரும்பாலானோர் இளம் வயதினரே. அவர்கள் வாழ்நாள் முழுவதும் பார்வையற்றவர்களாக வாழ்வது வேதனையானது. நாட்டில் விபத்து, கிருமி பாதிப்பு, பிறவி குறைபாடு போன்ற காரணங்களால் பார்வையிழந்து சுமார் 1 லட்சத்து 20 ஆயிரம் பேர் வாழ்ந்து வருகிறார்கள்.
ஒவ்வொரு ஆண்டும் 30 ஆயிரம் பேர் கருவிழி பாதிப்பினால் பார்வையிழந்து வருகிறார்கள். தற்போது இந்தியாவில் கருவிழி மாற்று அறுவை சிகிச்சைக்கு தேவையான கண்களில் சுமார் 50 சதவீத கண்களை மட்டுமே தானமாக பெற முடிகிறது. மீதமுள்ள 50 சதவீத மக்கள், பார்வையிழந்தவர்களாக வாழ்ந்து வருகின்றனர். இவர்களுக்கு பார்வை கொடுக்க நம்மால் நிச்சயம் முடியும். எப்படி?
உங்கள் ஊரிலோ, உங்கள் உறவினர் வீட்டிலோ, உங்கள் குடும்பத்திலோ யாராவது இறக்க நேரிட்டால், கண்தானம் செய்வதன் அவசியம் குறித்து அவர்களுக்கு எடுத்துக்கூறி கண்களைத் தானமாக கொடுத்து உதவ வேண்டும். மண்ணில் புதைத்தவரை மீண்டும் இந்த உலகத்தை பார்க்க வைக்க, கண் தானத்தை தவிர வேறு சிறந்த வழி ஏது?
- தானம் செய்வது மிகவும் சிறப்பு வாய்ந்தது.
- தானம் செய்தால் கிடைக்கும் பலனை இந்த கதை மூலம் அறிந்து கொள்ளலாம்.
ஓர் ஏழை, காட்டு வழியில் சென்று கொண்டிருந்தார். வெயில் காரணமாக அவருக்கு களைப்பு ஏற்பட்டது. அவர் ஒரு மரத்தடியில் அமர்ந்தார். அப்போது அங்கு வந்த ஒரு திருடன் அவரிடம் இருந்த பொருட்களையும் துணிகளையும் பறித்துக் கொண்டு விரட்டினான்.
வெயிலில் மிகவும் சிரமப்பட்டு அவர் நடந்து சென்றார். அதைப்பார்த்த திருடனின் மனதில் இரக்கம் ஏற்பட்டது. கிழிந்துபோன செருப்பு மற்றும் ஒரு பழைய குடையை கொடுத்தான். பின் அவன் தன் வழியே திரும்பியபோது ஒரு புலி அவனைத் அடித்து கொன்றது. அப்போது எமதூதர்கள் அந்த வேடனின் உயிரைக் கொண்டு போக வந்தார்கள்.
அதே சமயம் அங்கு வந்த விஷ்ணு தூதர்கள் எம தூதர்களைத் தடுத்து, இந்த வேடன் வைகாசி மாதத்தில் செருப்பு, குடை தானம் செய்திருக்கிறான். அதனால் அவன் செய்த பாவங்கள் அவனை விட்டு விலகி விட்டன. எனவே அவனை நாங்கள் வைகுண்டத்திற்கு அழைத்துச் செல்கிறோம் என்று கூறி அந்த திருடனின் உயிரைக்கொண்டு சென்றனர்.
இத்தகைய சிறப்பு வாய்ந்தது வைகாசி மாத தானம். எனவே தானம் செய்யுங்கள்.
- அவரவர் பிறந்த நட்சத்திர நாளில் ஆடை தானம் செய்வது மிக நன்று.
- அன்னதானம் செய்தால் பூர்வ ஜென்ம கர்மவினைகள் தீரும்.
தானத்தை செய்த உடன் நம்முடைய கடமை முடிந்து விடவில்லை. நான் கொடுத்த தானம் சரியான இடத்தில் தான் இருக்கிறதா என்பதை தெரிந்து கொள்ள வேண்டியது நம்முடைய கடமை.
அன்னதானம் - வறுமை, கடன் நீங்கும்
ஆடை தானம் - ஆயுள் அதிகரிக்கும்
தேன் தானம் - புத்திர பாக்கியம் உண்டாகும்
தீப தானம் - கண் பார்வைதெளிவாகும்
அரிசி தானம் - பாவங்களைப்போக்கும்
நெய் தானம் - நோய்கள் அகலும்
பால் தானம் - துக்கம் விலகும்
தயிர் தானம் - இன்பம் பெருகும்
பழங்கள் தானம் - புத்தியும், சித்தியும் கிடைக்கும்
பொன் தானம் - குடும்ப மகிழ்ச்சி அதிகமாகும்
வெள்ளி தானம் -மனக் கவலை நீங்கும்
பசு தானம் - முன்னோர் கடன் தீரும்
தேங்காய் தானம் - நினைத்தகாரியம் நிறைவேறும்
நெல்லிக்கனி தானம் - ஞானம் கிடைக்கும்.
பூமி தானம் - சிவ தரிசனம் கிடைக்கும்.
சென்னை:
ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
சிவகாசியில் உள்ள அரசு மருத்துவமனையில் ரத்தப் பரிசோதனை செய்யாமல் வைக்கப்பட்டிருந்த ரத்தம் கர்ப்பிணிப் பெண்ணுக்கு செலுத்தப்பட்டதால், அவர் எச்.ஐ.வி. பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார். அரசு மருத்துவமனையின் அலட்சியப் போக்கால் இத்தகைய கொடூரம் நடந்தேறி இருக்கிறது.
இது போன்று அவர்கள் உயிரோடு விளையாடும் சம்பவங்கள் மிகச் சாதாரணமாக நடப்பது கடும் கண்டனத்துக்கு உரியது ஆகும்.
பாதிக்கப்பட்ட கர்ப்பிணிப் பெண் எச்.ஐ.வி. கிருமித் தொற்றிலிருந்து முழுமையாகக் குணமடையவும், குழந்தைப் பேறு எவ்வித குறைபாடும் இன்றி நடந்தேறவும், தகுந்த உயர் சிகிச்சைக்கு ஏற்பாடு செய்து, தமிழக அரசு அப்பெண்ணைக் காப்பாற்ற வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு வைகோ கூறியுள்ளார்.
மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
சாத்தூர் அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்த கர்ப்பிணிப் பெண்ணுக்கு செலுத்தப்பட்டுள்ள ரத்தம் ஹெச்.ஐ.வி. மற்றும் மஞ்சள் காமாலை தொற்றுநோய் உள்ளது என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக வரும் செய்திகள் மிகவும் அதிர்ச்சியளிப்பதாகவும், 2016-ம் ஆண்டே ரத்த தானம் செய்தவருக்கு ஹெச்ஐவி பாதிக்கப்பட்டுள்ளது என்று கண்டுபிடிக்கப்பட்ட பிறகும், சம்பந்தப்பட்ட நபருக்கு தெரிவிக்கப்படாதது ஏன் என்ற கேள்வியை எழுப்புகிறது.
தவறிழைத்தவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு 1 கோடி ரூபாய் நஷ்டஈடும், உரிய உயர் மருத்துவ சிகிச்சையும் தமிழக அரசு வழங்க வேண்டும். மிக அடிப்படையான மருத்துவ சேவைகளை தனியார் மயமாக்கும் முயற்சிகளை கைவிட வேண்டும் என தமிழக அரசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வலியுறுத்துகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அரசு மருத்துவ மனையில் கூலித் தொழிலாளி ஒருவரின் கர்ப்பிணி மனைவிக்கு எச்.ஐ.வி.ரத்தம் செலுத்தப்பட்ட விவகாரம் பெரும் அதிர்ச்சியை அளிக்கிறது.
கர்ப்பிணிப் பெண்ணின் ஒட்டுமொத்த குடும்பமும் நிலைகுலைந்துள்ளது. மருத்துவ சேவை துறையில் எடப்பாடி பழனிசாமி அரசு அலட்சியமாக நடந்து வருகின்றது என்பதற்கு எடுத்துக்காட்டாக இந்தச் சம்பவம் அமைந்துள்ளது.
சாத்தூர் சம்பவத்திற்குப் பிறகாவது அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் ரத்த மாதிரிகளை முழுமையாகச் சோதிக்கும் வசதிகள் செய்யப்பட வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.
இந்த அவல நிலைக்குக் காரணமான மருத்துவ அலுவலர்களுக்கு கடும் தண்டனை வழங்குவதுடன், பாதிக்கப்பட்ட பெண்மணியின் குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் இழப்பீடாக தமிழக அரசு உடனடியாக வழங்க வேண்டுமென மனித நேய மக்கள் கட்சி சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
மக்கள் நீதி மய்யத்தின் துணை தலைவர் மகேந்திரன் டுவிட்டரில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
‘சாத்தூரில், சுகாதாரத் துறையினரின் அலட்சியப் போக்கினாலும் நிர்வாகப் பிழையினாலும் எச்.ஐ.வி வைரஸ் ரத்தம் செலுத்தப்பட்டு பாதிப்படைந்துள்ள கர்ப்பிணிப் பெண்ணிற்கு நடந்த கொடுமை அதிர்ச்சி அளிக்கக்கூடியதாக இருக்கின்றது.
அப்பெண்ணிற்கு தற்காலிக நிவாரணங்களுடன், நீடித்த உதவியும், நிரந்தரப் பாதுகாப்பும் அவசியம்.
ஏழைத்தாய்க்கு நடந்துள்ள இக்கொடூரம் குறித்து மக்களாகிய நாமும் அலட்சியப்போக்கினைக் காட்டாமல், நம் அனைவருக்குமான ஒரு அபாயக்குறியாக கருதி விழிப்புடன் நடந்து கொள்ள வேண்டும்,
இவ்வாறு அவர் கூறி உள்ளார். #HIVBlood #PregnantWoman #vaiko #tngovt