என் மலர்
நீங்கள் தேடியது "Dr Lakshmi Nathan"
- மூட்டு பிரச்சனைக்கு அறுவை சிகிச்சை ஒன்றே தீர்வு என்கிற நிலை 10 ஆண்டுகளுக்கு முன்பு வரை இருந்தது.
- மூட்டு தேய்மானம் என்பது இயற்கையாக வயது கூடுவதால் ஏற்படுகிற ஒன்று.
ரியோ மருத்துவமனையின் தலைவர், எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணருமான டாக்டர் லட்சுமி நாதன் மூட்டு பிரச்சனை சம்பந்தமான பல்வேறு சந்தேகங்களுக்கு பதில் அளித்தார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:-
ரியோ என்பது ரீஜன் இன்ஸ்டிட்யூட் ஆப் ஆர்த்தோபீடிக்ஸ். அதாவது, எலும்பியல் சிகிச்சைக்கான சிறப்புவாய்ந்த மருத்துவமனை.
தமிழகத்திலேயே ஸ்டெம் செல்ஸ்க்கு முதல் முறையாக தொடங்கப்பட்ட மருத்துவமனை ரயோ. ஸ்டெம் செல்ஸ்க்கு மட்டுமே பெயர் பெற்று புகழ்பெற்ற மருத்துவமனை. அனைத்து விதமான எலும்பியல் பிரச்சினைகளுக்கும் இங்கு மருத்துவம் பார்க்கப்படுகிறது.
பொதுவாகவே, எந்த ஒரு மூட்டு பிரச்சனைக்கும் அறுவை சிகிச்சை ஒன்றே தீர்வு என்கிற நிலை 10 ஆண்டுகளுக்கு முன்பு வரை இருந்தது. அதன் பிறகு, நிறைய பேர் ஸ்டெம் செல் குறித்து ஆய்வு செய்ய தொடங்கினர்.
நம் உடலில் தானாகவே சரியாகக்கூடிய தன்மை இருக்கிறது. இது ஒரு சிலருக்கு குறைந்து இருக்கலாம். ஒரு சிலருக்கு இல்லாமல் இருக்கலாம். அப்படி ஒரு தன்மை நம்மிடம் இருக்கும்போது அதைக் கொண்டே ஏன் மூட்டு சம்பந்தமான தொந்தரவுகளுக்கு தீர்வு காண முடியாது என்ற நோக்கத்தில் ஆரம்பித்தது தான்.
இதுதொடர்பாக வெளிநாடுகளுக்கு சென்று படித்து பயிற்சிகளை பெற்றேன். இதை இந்தியாவில் கொண்டு சேர்க்க வேண்டும் என்று தமிழ்நாட்டில் ஆரம்பித்தேன். அறுவை சிகிச்சை என்றாலே மக்களுக்கு ஒரு வித பயம் தொற்றிக் கொள்ளும். அந்த பயத்தை போக்கும் வகையில், ஸ்டெம் செல் ட்ரீட்மென்ட் ஒரு வரப்பிரசாதமாக இருக்கிறது. இதை மக்களும் வரவேற்கிறார்கள்.
மூட்டு தேய்மானம் என்பது இயற்கையாக வயது கூடுவதால் ஏற்படுகிற ஒன்று. அந்தந்த வயதிற்கு உண்டான மாற்றமே மூட்டு தேய்மானம்.
ஒரு சிலருக்கு உடல் பருமனாலும் மூட்டு தேய்மானம் இளம் வயதிலேயே வரலாம். உடற் பயிற்சி செய்யாதவர்கள், உடலில் பிற வியாதி உள்ளவர்களுக்கும் மூட்டு தேய்மானம் வரலாம். அதை ஆரம்பத்திலேயே கண்டறிந்து அதற்கான சிகிச்சை பெற முடியும்.
இளம் வயதில் மூட்டு வலி என்றால் அதற்கு சதையும் ஒரு காரணமாக இருக்கலாம். எலும்பு என்பது நம் உடலுக்கு ஒரு ஃபிரேம் தான். ஆனால், சதை நாம் செயல்பட உதவுகிறது. தசை பலவீனம் தான் ஒருவருக்கு வலி ஏற்பட காரணமாக இருக்கிறது.
ஆண்களைவிட பெண்களுக்கு மூட்டு வலி அதிகளவில் ஏற்படக் காரணம் உடல் பருமன். நாள் முழுக்க வீட்டு பணி செய்தாலும் அது உடற்பயிற்சிக்கு ஈடாகாது. உடற்பயிற்சி செய்தால் மட்டும் தசை வலுப்பெறும். மூட்டு வலி இருக்காது.
பல மணி நேரம் உட்கார்ந்து வேலை செய்பவர்களுக்கு முதலில் முதுகு பாதிக்கப்படும்.படுத்துக் கொள்வது மட்டுமே முதுகிற்கு ஓய்வு. அதனால், நம் பணிக்கு ஏற்றது போல் நம் உடலை உடற்பயிற்சி மூலம் மாற்றிக் கொள்ள வேண்டும்.
மூட்டு தேய்மானத்திற்கு முதல் அறிகுறி வலி தான். மூட்டு தேய்மானம் அதிகம் ஆனால் வலியால் தாங்கி தாங்கி நடக்க நேரும். முன்பு செய்த பணிகள் எதுவும் செய்ய முடியாமல் போவது. சிலருக்கு முட்டி பகுதி வீங்கக்கூடும். இவை எல்லாம் மூட்டு பிரச்சனைக்கான அறிகுறி.
இவ்வாறு அவர் கூறினார்.