என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Draft"
- திருப்பூர் மாவட்டத்தில் அனைத்து ஓட்டுச்சாவடிகளிலும் வெளியிடப்படுகிறது.
- டிசம்பர் 8-ந் தேதி வரை வாக்காளர் பட்டியல் திருத்தும் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.
திருப்பூர் :
இந்தாண்டுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் நவம்பர் மாதம் 9-ந்தேதி வெளியிடப்பட உள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் அனைத்து ஓட்டுச்சாவடிகளிலும் இது வெளியிடப்படுகிறது. டிசம்பர் 8-ந்தேதி வரை வாக்காளர் பட்டியல் திருத்தும் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இறுதி வாக்காளர் பட்டியல் அடுத்த ஆண்டு ஜனவரி 5-ந்தேதி வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.
இது குறித்து திருப்பூர் மாவட்ட தேர்தல் அதிகாரிகள் கூறியதாவது :- திருப்பூர் மாவட்டத்தைப் பொறுத்தவரை, வாக்காளர் பட்டியலுடன் ஆதார் இணைப்பில் வாக்காளர்கள் ஆர்வம் அதிகரித்து வருகிறது. போலி வாக்காளர்களை இதன் மூலம் களைய முடியும். தங்கள் ஓட்டுரிமையை வேறு யாரும் முறைகேடாக பயன்படுத்த முடியாமல் செய்வதற்கும் இது உதவும்.வெளி மாவட்டம், வெளிமாநில தொழிலாளர் நிறைந்த திருப்பூரில் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் இணைப்பு மூலம் நிச்சயமாகஓட்டுப்பதிவு சதவீதம் அதிகரிக்கும் வாய்ப்புகள் உள்ளன என்றனர்.