என் மலர்
நீங்கள் தேடியது "Dream Warrior Pictures"
- வித்தியாசமான கதைகளை தயாரிக்கும் நிறுவனம்.
- புதிய படம் குறித்த அறிவிப்பை வெளியிட்டது.
தமிழ் திரையுலகில் சகுனி, ஜோக்கர், காஷ்மோரா, கூட்டத்தில் ஒருத்தன், தீரன் அதிகாரம் ஒன்று, அருவி, என்.ஜி.கே., ராட்சசி, கைதி, சுல்தான், ஓ2, வட்டம் என பல படங்களை தயாரித்த முன்னணி நிறுவனம் டிரீம் வாரியர் பிக்சர்ஸ்.
வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து தயாரித்து வரும் டிரீம் வாரியர் பிக்சர்ஸ், தான் தயாரித்துள்ள புதிய படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நாளை (மே 23) மாலை 5 மணிக்கு வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது.
இந்த படம் ஜூன் மாதம் திரையரங்குகளில் வெளியாகும் என்று தெரிவித்துள்ளது. இவைதவிர, புதிய படத்தின் இயக்குநர், நடிகர், நடிகைகள் என வேறு எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- கீர்த்தி சுரேஷ் பிரதான கதாபாத்திரத்தில் நடிக்கும் கண்ணிவெடி என்ற படம் உருவாகி வருகிறது.
- பெயரிடப்படாத 2 திரைப்படங்களை இந்த இரு நிறுவனங்களும் இணைந்து தயாரிக்கின்றன.
தென்னிந்திய திரைப்படத் துறையில் முன்னணி திரைப்பட தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ், இன்வேனியோ பிலிமிஸ் நிறுவனத்துடன் இணைந்து தமிழ் மற்றும் தெலுங்கில் நான்கு புதிய திரைப்படங்களை தயாரிக்க உள்ளது.
சிறந்த நடிகைக்கான தேசிய விருது வென்ற கீர்த்தி சுரேஷ் பிரதான கதாபாத்திரத்தில் நடிக்கும் 'கண்ணிவெடி' (தமிழ்), ராஷ்மிகா மந்தனா பிரதான கதாபாத்திரத்தில் நடிக்கும் 'ரெயின்போ' (தெலுங்கு) உட்பட மேலும் இரண்டு பெயரிடப்படாத திரைப்படங்களை இந்த இரண்டு நிறுவனங்களும் இணைந்து தயாரிக்க உள்ளன.
புதிய கூட்டு முயற்சி குறித்து பேசிய இன்வேனியோ நிறுவனத் தலைவர் அலங்கார் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். "ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் போன்ற அனுபவமிக்கவர்களுடன் ஒரே குழுவில் இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. படைப்பாற்றல், தொழில்நுட்ப திறன் மற்றும் உயர்தர பொழுதுபோக்கை வழங்குவதற்காக எங்கள் இரண்டு நிறுவனங்களும் இணைந்துள்ளது" என்று அலங்கார் கூறியுள்ளார்.
ட்ரீம் வாரியர் பிக்சர்சின் எஸ்.ஆர். பிரபு பேசுகையில், "இந்த புதிய பயணம் உற்சாகத்தைத் தருகிறது. இரண்டு நிறுவனங்களின் தனித்துவ சிறப்புகளும் எங்கள் படைப்புகளில் பிரதிபலிக்கும். எல்லைகள் தாண்டி அனைத்துத் தரப்பு ரசிகர்களையும் கவரும் வண்ணம் நாங்கள் சொல்லப்போகும் கதைகள் வெள்ளித் திரையை உயிர்ப்பிக்கும்" என்று தெரிவித்தார்.