search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Dress production"

    • கடந்த2 ஆண்டுகளாக தீபாவளி பண்டிகை கால ஆடை தயாரிப்பு ஆர்டர் வருகை சரிந்துவிட்டது.
    • ஆண்டு துவக்கம் முதலே திருப்பூர் நிறுவனங்களுக்கு ஆர்டர் வருகை குறைவாகவே உள்ளது.

    திருப்பூர் :

    உள்நாட்டு சந்தைக்காக பின்னலாடை ரகங்களை தயாரிக்கும் நிறுவனங்கள் திருப்பூரில் ஆயிரக்கணக்கில் உள்ளன.இந்நிறுவனங்களுக்கு கோடை, குளிர் பருவ காலங்கள், பொங்கல், ரம்ஜான், தீபாவளி, கிறிஸ்துமஸ் பண்டிகை காலங்களில் ஆடை தயாரிப்புக்கான ஆர்டர் அதிக அளவில் கிடைக்கிறது.

    பின்னலாடை உற்பத்தியாளர்களுக்கும், தொழிலாளர்களுக்கும் தீபாவளி பண்டிகை மிக முக்கியமானது. இப்பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள வர்த்தகரிடமிருந்து திருப்பூர் நிறுவனங்களுக்கு அதிக அளவு ஆடை தயாரிப்பு ஆர்டர் கிடைக்கிறது. போனஸ் கிடைப்பதால் தொழிலாளர்களையும், தீபாவளி தித்திக்க செய்கிறது.கொரோனா பரவல் காரணமாக கடந்த2 ஆண்டுகளாக தீபாவளி பண்டிகை கால ஆடை தயாரிப்பு ஆர்டர் வருகை சரிந்துவிட்டது. அபரிமிதமாக உயர்ந்த நூல் விலை, கொரோனாவால் உள்நாட்டில் ஏற்பட்டுள்ள வர்த்தக மந்தநிலையால் நடப்பு ஆண்டு துவக்கம் முதலே திருப்பூர் நிறுவனங்களுக்கு ஆர்டர் வருகை குறைவாகவே உள்ளது. கைவசம் போதிய ஆர்டர் இல்லாததால் உள்நாட்டு ஆடை உற்பத்தி நிறுவனங்கள் சார்ந்துள்ள நிட்டிங், சாய ஆலை, பிரின்டிங், எம்ப்ராய்டரி உட்பட அனைத்துவகை ஜாப்ஒர்க் துறையினரும் கவலை அடைந்துள்ளனர்.

    வருகிற அக்டோபர் 24-ந்தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. கொரோனா குறித்த கவலைகள் விலகியுள்ளன. தீபாவளி ஆடை தயாரிப்புக்கு ஆர்டர் வருகை அதிகரிக்கும் என்கிற நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர் பின்னலாடை துறையினர்.நூற்பாலைகள், ஒசைரி நூல் விலைகளை ஒரே சீராக தொடர செய்து, வர்த்தகத்தை ஈர்ப்பதற்கு கைகொடுக்கவேண்டும் என்பது ஒட்டுமொத்த ஆடை உற்பத்தியாளர்களின் பிரதான கோரிக்கையாக உள்ளது.

    ×