search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "driver escaped"

    • பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத 8 அடி உயரத்தில் கரையை பலப்படுத்தப்பட்டது.
    • அவருக்கு காயம் ஏற்படவில்லை. மேலும் இதில் ஷேர் ஆட்டோ முழுவதும் சேதமடைந்து இருந்தது.

    கடலூர்:

    கடலூர் கம்மியம் பேட்டை சாலை அருகே கெடிலம் ஆறு உள்ளது. இந்த கெடிலம் ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும் சமயத்தில் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத வகையில் இருபுறமும் சுமார் 8 அடி உயரத்தில் கரையை பலப்படுத்தப்பட்டது. இந்த நிலையில் கம்மிய ம்பேட்டை சாலையில் தினந்தோறும் ஆயிரக்க ணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. நேற்று மாலை கம்மியம்பேட்டை சாலையில் 50 வயது மதிக்கத்தக்க ஷேர் ஆட்டோ ஓட்டுனர், கம்மியம்பேட்டை சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென்று எதிர்பாராமல் சாலையில் ஓரத்தில் 10 அடி ஆழத்தில் கெடிலம் ஆற்றில் திடீரென்று ஷேர் ஆட்டோ பாய்ந்து கவிழ்ந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஷேர் ஆட்டோ டிரைவர் திடீரென்று ஆட்டோவில் இருந்து குதித்ததால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

    அப்போது அங்கு இருந்த பொதுமக்கள் இதனை பார்த்து கடும் அதிர்ச்சி அடைந்து, பள்ளத்தில் குதித்த ஆட்டோ டிரைவரை பாதுகாப்பாக மீட்டு சாலைக்கு கொண்டு வந்தனர். இதில் அவருக்கு காயம் ஏற்படவில்லை. மேலும் இதில் ஷேர் ஆட்டோ முழுவதும் சேதமடைந்து இருந்தது. அதனை தொடர்ந்து சேதமடைந்த ஷேர் ஆட்டோ மீட்கும் பணியில் டிரைவர் ஈடுபட்டார். இந்த நிலையில் கெடிலம் ஆறு ஓரமாக வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பாக செல்வதற்கு தடுப்பு கட்டைகள் அமைத்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதி பெரும் பரபரப்பாக காணப்பட்டது.

    • ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள தனியார் கல்குவாரியில் தினமும் 100-க்கும் மேற்பட்ட கனரக லாரிகள் கேரள மாநிலத்திற்கு கற்களை கொண்டு செல்கிறது
    • கல்குவாரியில் இருந்து கற்களை ஏற்றிக்கொண்டு ஒரு கனரக லாரி விளிஞ்சம் துறைமுகத்திற்கு சென்றது

    செய்துங்கநல்லூர்:

    தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே தெற்கு காரசேரியில் உள்ள தனியார் கல்குவாரியில் தினமும் 100-க்கும் மேற்பட்ட கனரக லாரிகள் இருந்து கேரள மாநிலத்தில் விளிஞ்சம் துறைமுகத்திற்கு கற்களை கொண்டு செல்கிறது.

    இந்நிலையில் இன்று காலை 4.30 மணிக்கு தெற்கு காரசேரியில் கல்குவாரியில் இருந்து கற்களை ஏற்றிக்கொண்டு ஒரு கனரக லாரி விளிஞ்சம் துறைமுகத்திற்கு சென்றது. இந்த லாரியை துளுக்கர்பட்டியைச் சேர்ந்த ராமலிங்கம் என்பவர் ஓட்டியுள்ளார். இந்த லாரி சேரகுளம் அருகே உள்ள மகிழ்ச்சிபுரம் பகுதியில் வந்து கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக சாலையின் ஓரமாக இருந்த வாழைத்தோட்டத்தில் கவிழ்ந்தது.

    இதில் ஓட்டுநர் காயமின்றி உயிர் தப்பினார். இதுகுறித்து சேரகுளம் காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து போலீசார் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    சேலத்தில் இன்று காலை நடுரோட்டில் கார் தீப்பிடித்து எரிந்ததால் டிரைவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
    சேலம்:

    சேலம் இரும்பாலை அருகே அரசு ஆவின்பால் பண்ணை நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் டிரான்ஸ்போர்ட் மேலாளர் பயன்படுத்துவதற்காக அரசு சார்பில் கார் வழங்கப்பட்டு உள்ளது. இந்த காரை மேட்டூர் சிந்தாமணியூர் பகுதியை சேர்ந்த ரங்கநாதன் (வயது 34) என்பவர் ஓட்டி வருகிறார். இன்று காலையில் வழக்கமாக மேலாளரை காரில் அழைத்து வந்து ஆவின் நிறுவனத்தில் இறக்கி விட்டார்.

    அதன் பிறகு ஆவின் நிறுவனத்தின் கீழ் இரும்பாலை ரோட்டில்  இயங்கிவரும் பெட்ரோல் பங்கில் வசூலான ரூ.2 லட்சத்தை  வங்கியில் செலுத்துவதற்காக ஊழியர் குமார் என்பவரை காரில் ஏற்றிக்கொண்டு ராமகிருஷ்ணா பூங்காவிற்கு வந்தார். அங்கு வங்கி வாசல் முன்பு ஊழியரை இறக்கி விட்டு விட்டு, பணத்தை வங்கியில் செலுத்தி விட்டு வருமாறு கூறிக் கொண்டு ரங்கநாதன் அருகே உள்ள பார்க்கிங் பகுதியில் காரை நிறுத்தினார். அப்போது காரின் முன்பகுதியில் இருந்து குபு, குபு வென புகை வெளியேறியது.

    இதை பார்த்ததும் ரங்கநாதன் காரில் இருந்து உடனடியாக கீழே இறங்கி சிறிது தூரம் தள்ளி சென்று நின்று கொண்டு செவ்வாய்ப் பேட்டை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தார்.

    அதற்குள் கார் முன்பகுதியில் தீ கொளுந்து விட்டு எரிந்தது. இதை பார்த்ததும் அக்கம், பக்கத்தினர் தண்ணீரை எடுத்து வந்து காரின் மீது ஊற்றினார்கள். தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வருவதற்குள் பொதுமக்கள் தீயை அணைத்தனர். இதில் காரின் முன்பகுதி முழுவதும் எரிந்து நாசமானது. மேலும் தீயணைப்பு வீரர்களும் காரில் தண்ணீரை பீய்ச்சி அடித்தனர்.
    திருவையாறில் லாரி வீட்டின் மீது மோதிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    திருவையாறு:

    அரியலூரில் இருந்து ஒரு லாரி சிமெண்ட் லோடு ஏற்றிக் கொண்டு தஞ்சை நோக்கி நேற்று இரவு வந்தது. அந்த லாரி நள்ளிரவு 1.30 மணி அளவில் தஞ்சை மாவட்டம் திருவையாறு அய்யனார் கோவில் பகுதியில் வந்து கொண்டு இருந்தது. அப்போது லாரி திடீரென டிரைவரின் கட்டுபாட்டை இழந்து ரோட்டோரம் புதிதாக கட்டப்பட்டு வரும் ஒரு வீட்டின் சுவரில் மோதி கவிழ்ந்தது.

    இதில் சுவரில் சேதம் ஏற்பட்டது. விபத்து நடந்தபோது அங்கு தொழிலாளர்கள் யாரும் இல்லாததால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். லாரி சுவரில் மோதியபோதிலும் காயமின்றி உயிர் தப்பிய டிரைவர் அங்கு லாரியை விட்டு விட்டு தலைமறைவாகி விட்டார்.

    இதுபற்றிய தகவல் கிடைத்தும் திருவையாறு போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று லாரியை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். திருவையாறில் லாரி வீட்டின் மீது மோதிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×