என் மலர்
நீங்கள் தேடியது "drug seized"
- ஆபரேசன் ‘டி’ என்ற பெயரில் மாநிலம் முழுவதும் அதிரடி சோதனை.
- தலைமறைவான குற்றவாளிகள் 1501 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்.
திருவனந்தபுரம்:
கேரளாவில் போதைப் பொருள் பயன்படுத்து பவர்கள் சம்பந்தப்பட்ட குற்ற வழக்குகள் அதிகரித்து வரும் நிலையில் போலீசார் அதனை கட்டுப்படுத்த அதிரடி வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். இதற்காக ஆபரேசன் 'டி' என்ற பெயரில் மாநிலம் முழு வதும் கடந்த மாதம் அதிரடி சோதனை நடத்தப்பட்டது.
இந்த சோதனையில் மாநிலத்தின் பல பகுதிகளிலும் போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டன. எம்.டி.எம்.ஏ., ஹெராயின், மெத்தம்பேட்டமைன், பிரவுன் சுகர், நைட்ரஸெபம் மாத்திரைகள், கஞ்சா, கஞ்சா சாக்லெட்டுகள், எரிசாராயம் என பல்வேறு வகையிலான போதை வஸ்துகள் போலீசாரின் வேட்டையில் சிக்கின.
மாநிலம் முழுவதும் பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருட்களின் மொத்த மதிப்பு ரூ.7 கோடியே 9 லட்சம் ஆகும். இது தொடர்பாக 114 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 149 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதுதவிர கலால் துறை தொடர்பான வழக்குகளில் தலைமறைவான குற்றவாளிகள் உள்பட1501 பேரும் கைது செய்யப்பட்டு உள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
- இரண்டு நடவடிக்கைகளிலும் போதைப்பொருள் கடத்தல்காரர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
- வாகனத்தில் இருந்து சுமார் 4.6 கிலோ எடையுள்ள ஹெராயின் அடங்கிய 399 சோப் கேஸ்களை மீட்கப்பட்டுள்ளன.
அசாம் மாநிலத்தில் சிவசாகர் மற்றும் கர்பி அங்லாங் மாவட்டத்தில் போலீசாரின் இருவேறு நடவடிக்கைகளில் ரூ.48 கோடி மதிப்பிலான போதைப் பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த இரண்டு நடவடிக்கைகளிலும் போதைப்பொருள் கடத்தல்காரர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சோதனையின்போது, வாகனத்தில் இருந்து சுமார் 4.6 கிலோ எடையுள்ள ஹெராயின் அடங்கிய 399 சோப் கேஸ்களை மீட்டுள்ளதாக மூத்த போலீஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.
- சந்தேகத்திற்கிடமாக நின்ற நபரை பிடித்து விசாரித்தபோது போதைப் பொருள் சிக்கியது.
- மொத்தம் 6.92 கிலோ மெத்தபெட்டமென் போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.
சென்னையில் ரூ.70 கோடி மதிப்புள்ள மெத்தபெட்டமென் போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் சந்தேகத்திற்கிடமாக நின்ற நபரை பிடித்து விசாரித்தபோது போதைப் பொருள் சிக்கியது.
பிடிபட்ட ராமநாதபுரத்தைச் சேர்ந்த பைசல் ரஹ்மானிடம் நடந்த விசாரணையின் அடிப்படையில் சென்குன்றத்தில் சோதனை நடத்தப்பட்டது.
செங்குன்றம் பகுதியில் மன்சூர், இப்ராஹிம் ஆகிய இருவரை கைது செய்து, குடோனில் பதுக்கி வைத்திருந்த போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மொத்தம் 6.92 கிலோ மெத்தபெட்டமென் போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.
விசாரணையில் போதைப் பொருட்களை சென்னையில் இருந்து ராமநாதபுரம் கொண்டு சென்று, அங்கிருந்து இலங்கைக்கு கடத்த இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
சென்னை விமான நிலையத்தில், பிரேசிலில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.5½ கோடி மதிப்பிலான போதைப்பொருளை மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக போர்ச்சுகல் நாட்டை சேர்ந்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்திற்கு வெளிநாடுகளில் இருந்து பெரும் அளவில் போதைப்பொருள் கடத்தப்பட்டு வருவதாக மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் விமான நிலையத்தில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
பிரேசில் நாட்டில் இருந்து துபாய் வழியாக சென்னைக்கு விமானத்தில் வந்த பயணிகளை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்தனர். அப்போது, அந்த விமானத்தில் போர்ச்சுகல் நாட்டை சேர்ந்த மெண்டஸ் அபோசன் டோம்மிங்கோஸ் (வயது 28) என்பவர் சுற்றுலா விசாவில் சென்னை வந்திருந்தார்.
அவர் மீது சந்தேகம் அடைந்த போதை பொருள் தடுப்புப்பிரிவு அதிகாரிகள் அவரிடம் விசாரித்தனர். மெண்டஸ் அபோசன் டோம்மிங்கோஸ் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தார். அவரது உடைமைகளை சோதனை செய்தபோது, அதில் உணவு பெட்டிகள் இருந்தது.
அவற்றை பிரித்து பார்த்தபோது உயர்ரக போதை பொருளான கொக்கைன் இருந்தது தெரியவந்தது. அவற்றின் மதிப்பு, ரூ.5½ கோடி ஆகும். இதையடுத்து மெண்டஸ் அபோசன் டோம்மிங்கோசை கைது செய்த அதிகாரிகள், அவரிடம் இருந்த 1 கிலோ 800 கிராம் கொக்கைன் போதை பொருளை கைப்பற்றினர்.
விசாரணையில், வேலை இல்லாத காரணத்தால் போதைப்பொருளை கடத்தி வந்ததாக அவர் தெரிவித்தார். பிரேசிலில் இருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட போதைப்பொருளை யாருக்கு கொடுக்க இருந்தார்? இவருக்கும், சர்வதேச கடத்தல் கும்பலுக்கும் தொடர்பு உள்ளதா? என்றும் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.