search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Durgapur bound"

    டெல்லியில் இருந்து புறப்பட்டுச் சென்ற ஏர் இந்தியா விமானத்தில் ஹைட்ராலிக் பிரச்சினை ஏற்பட்டதால் டெல்லி விமான நிலைத்திற்கே திருப்பி விடப்பட்டு தரையிறக்கப்பட்டது. #AirIndia #HydraulicProblem
    புதுடெல்லி:

    ஏர் இந்தியா விமான நிறுவனத்தின் பயணிகள் விமானம் இன்று டெல்லியில் இருந்து மேற்கு வங்க மாநிலம் துர்காபூர் நோக்கி புறப்பட்டது. அதில், 128 பயணிகள் பயணம் செய்தனர். புறப்பட்ட சிறிது நேரத்தில் விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது.  இதனால் விமானத்தை மீண்டும் டெல்லிக்கே திருப்பினார் விமானி.

    டெல்லியில் உள்ள தரைக்கட்டுப்பாட்டு நிலையத்தை தொடர்பு கொண்டு நிலைமையை எடுத்துக் கூறினார். இதையடுத்து டெல்லியில் விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்டது. தொழில்நுட்ப கோளாறு குறித்த நேரத்தில் கண்டறியப்பட்டு விமானம் தரையிறக்கப்பட்டதால் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது.

    விமானம் புறப்பட்ட 40 நிமிடத்தில் ஹைட்ராலிக் பிரச்சினை ஏற்பட்டதால் டெல்லிக்கே திருப்பி விடப்பட்டது. அந்த விமானத்தில் பயணித்த பயணிகள் கீழே இறக்கப்பட்டு மாற்று விமானத்தில் அனுப்பி வைக்கப்பட்டனர் என விமான நிறுவன செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். #AirIndia #HydraulicProblem  #tamilnews
    ×