என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Dutee Chand"
- ஒரே பாலின திருமணத்திற்கு சட்ட அங்கீகாரம் வழங்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு
- இல்லாத சட்டத்தை நீதிமன்றத்தால் உருவாக்க முடியாது என மூன்று நீதிபதிகள் தீர்ப்பு
ஒரே பாலின திருமணம் தொடர்பான வழக்கில் ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு நேற்று தீர்ப்பு வழங்கியது. அப்போது 3 நீதிபதிகள் (பெரும்பாலான நீதிபதிகள்) ''ஒரே பாலின திருமண சட்டம் தொடர்பாக பாராளுமன்றம்தான் முடிவ செய்ய வேண்டும்.
இல்லாத சட்டத்தை நீதிமன்றத்தால் உருவாக்க முடியாது. எனவே ஒரே பாலின திருமணத்திற்கு சட்ட அங்கீகாரம் இல்லை'' எனத் தீர்ப்பு அளித்தனர்.
இதனால் இந்தியாவில் ஒரே பாலினத்தினர் திருமணம் செல்லத்தக்கது அல்ல நிலை அப்படியே தொடர்கிறது. இந்த தீர்ப்பை வரவேற்றும், எதிர்ப்பு தெரிவித்தும் கருத்து வெளியாகி வருகின்றன.
இந்த நிலையில் இந்தியாவின் முன்னணி தடகள வீராங்கனையும், அதிவேக ஓட்டப் பந்தய வீராங்கனையுமான டூட்டி சந்த், ஒரே பாலின திருமணம் குறித்து கூறியதாவது:-
ஒரே பாலினத்தினர் சேர்ந்து வாழ்வதை உச்சநீதிமன்றம் தடுக்கவில்லை. அரசியல் சட்டம் அதற்காக இல்லை. இதனால் உச்சநீதிமன்றம் அதில் தலையிடவில்லை. எதிர்காலத்தில் ஒரே பாலினத்தினர் திருமணம் செய்யும் வகையில், முறையான சட்டத்தை கொண்டுவர மத்திய அரசும், பாராளுமன்றமும் உறுதியாக ஆலோசனை செய்யும் என நாங்கள் நம்புகிறோம்.
இது மனித குலத்தின் பிரச்சினை. வாழ்வில் அனைவருக்கும் சரியான உரிமைகள் கிடைக்க வேண்டும். இந்தியாவில் விதவை பெண்கள் திருமணம் செய்து கொள்வதற்காக ஏதும் வழங்கப்பட்டதா?. ஒரே பாலின திருமணம் ஒருநாள் நம் நாட்டில் அனுமதிக்கப்படும்'' என்றார்.
கடந்த ஐந்து வருடங்களாக ஒரே பாலின வாழ்க்கை வாழ்ந்து வரும் டூட்டி சந்த், நானும் எனது பார்ட்னரும் ஒருவருக்கொருவர் அன்பு செலுத்துகிறோம். இணைந்து வாழ முடிவு செய்து திருமணம் செய்து கொண்டோம் என்பது தயக்கமின்றி வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.
- ஊக்க மருந்து விவகாரத்தில் டூட்டி சந்த்துக்கு போட்டிகளில் பங்கேற்க 4 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டு உள்ளது.
- தடை உத்தரவை எதிர்த்து மேல் முறையீடு செய்ய டூட்டி சந்த்துக்கு 21 நாட்கள் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
இந்திய ஓட்டப்பந்தய வீராங்கனை டூட்டி சந்த். 100 மீட்டர் ஓட்டத்தில் தேசிய சாதனையாளரான அவர் ஊக்க மருந்து சோதனையில் தோல்வி அடைந்தார். கடந்தஆண்டு டிசம்பர் 5-ந்தேதி அவரிடம் இருந்து சேகரிக்கப்பட்ட மாதிரியை சோதனை செய்ததில் தடை செய்யப்பட்ட ஊக்க மருந்தை பயன்படுத்தி இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அவருக்கு கடந்த ஜனவரி மாதம் இடைக்கால தடை விதித்து சர்வதேச ஊக்க மருந்து தடுப்பு முகமை உத்தரவிட்டது. இதை எதிர்த்து அவர் மேல் முறையீடு செய்தார்.
இந்த நிலையில் ஊக்க மருந்து விவகாரத்தில் டூட்டி சந்த்துக்கு போட்டிகளில் பங்கேற்க 4 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டு உள்ளது. இந்த தடை கடந்த ஜனவரி 3-ந்தேதி முதல் தொடங்குகிறது.
மாதிரி சேகரிப்பு தேதியில் இருந்து அவர் பெற்ற அனைத்து போட்டி முடிவுகளும் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளது. அவர் விதி மீறலை வேண்டுமென்றே செய்யவில்லை என்பதை நிரூபிக்க தவறிவிட்டதாக தேசிய ஊக்க மருந்து எதிர்ப்பு ஒழுங்கு முறை குழு தெரிவித்துள்ளது. இந்த தடை உத்தரவை எதிர்த்து மேல் முறையீடு செய்ய டூட்டி சந்த்துக்கு 21 நாட்கள் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இவ்விவகாரம் தொடர்பாக ஒடிசா தலைநகர் புவனேஸ்வரில் இன்று பேட்டியளித்த டுட்டீ சந்த், எனது சகோதரி சரஸ்வதி 25 லட்சம் ரூபாய் கேட்டு என்னை மிரட்டி வருகிறார். இதற்காக ஒருமுறை என்னை அவர் அடித்தார். இதுதொடர்பாக நான் காவல் நிலையத்திலும் புகார் அளித்திருக்கிறேன்.
அவரது மிரட்டல் காரணமாகவே நான் காதலித்துவரும் பெண்ணைப்பற்றி நான் பகிரங்கமாக தெரிவிக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டது என குறிப்பிட்டுள்ளார்.
இந்திய ஓட்டப்பந்தய வீராங்கனை டுட்டீ சந்த் ஆவார். இவர் தனக்கு சில வருடங்களுக்கு முன் அறிமுகமாகிய பெண்ணை, காதலிப்பதாக சமீபத்தில் தெரிவித்திருந்தார். மேலும் அந்த பெண்ணுடன் இணைந்து எதிர்காலத்தில் வாழப்போவதாகவும் அறிவித்தார்.
மேலும் தனது இந்த முடிவிற்கு பெற்றோர்களே தடை விதிக்காத நிலையில், சகோதரி கடுமையாக எதிர்ப்பதாகவும் கூறினார். இந்நிலையில் டுட்டீயின் சகோதரி சரஸ்வதி சந்த் இந்த விவகாரம் குறித்து கூறியிருப்பதாவது:
இவர்களால் டுட்டீயின் வாழ்க்கையும், சொத்துக்களும் ஆபத்தில் உள்ளது. எனவே டுட்டீக்கு பாதுகாப்பு வழங்க வேண்டுமென அரசிடம் வலியுறுத்தியுள்ளேன். மேலும் டுட்டீ சிறு பிள்ளை அல்ல. ஒரு ஆணை திருமணம் செய்ய வேண்டுமா, பெண்ணை திருமணம் செய்ய வேண்டுமா என்பது குறித்து அவள் தான் தீர்மானிக்க வேண்டும்.
ஆனால், டுட்டீ இவ்வாறு பேச வேண்டும் என்கிற நிலைக்கு ஆளாக்கப்பட்டுள்ளார். அவளது திருமணம் குறித்த முடிவுகள் பின்னர் ஆலோசிக்கப்படும். டுட்டீயின் வெற்றிக்கு யார் தங்களை காரணம் என கூறுகிறார்களோ, அவர்கள் குற்றவாளிகள்.
சர்வதேச போட்டிகளில் இருந்து நீக்கி, அவளை பிரச்சனைகளில் சிக்க வைக்க ஏற்படுத்தப்பட்ட சதி. இந்த விவகாரத்தால் வரும் 2020ம் ஆண்டு நடைபெறும் ஒலிம்பிக் மற்றும் உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில் கவனம் செலுத்த முடியாது. அரசின் அனைத்து துறைகளும் அவளது வெற்றிக்காக ஊக்கப்படுத்தி வருகின்றன.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்தியாவின் அதிவேக ஓட்டப்பந்தய வீராங்கனை டுட்டீ சந்த். 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் 11.24 வினாடிகளில் இலக்கை கடந்து தேசிய சாதனையாளராக வலம் வருகிறார். கடந்த ஆண்டு நடந்த ஆசிய விளையாட்டில் 100 மீட்டர் மற்றும் 200 மீட்டர் ஓட்டம் இரண்டிலும் வெள்ளிப்பதக்கம் வென்று அசத்தினார். ஒடிசாவைச் சேர்ந்த 23 வயதான டுட்டீ சந்த், சில ஆண்டுகளுக்கு முன்பு பாலின பிரச்சினையில் சிக்கினார். அதாவது அவரிடம் ஆண் தன்மைக்குரிய ஹார்மோன் அதிகம் இருப்பதாக கூறி தடகளத்தில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டது. அதன் பிறகு விளையாட்டுக்கான கோர்ட்டில் அப்பீல் செய்து சாதகமான தீர்ப்பை பெற்றார்.
இந்த நிலையில் அவர், தான் ஒரு ஓரினசேர்க்கையாளர் என்ற தகவலை வெளியிட்டு இப்போது புதிய சர்ச்சையில் சிக்கி இருக்கிறார். ‘ஒரே பாலினத்தை விரும்புகிறவர்கள்’ என்று ஒரு சில விளையாட்டு பிரபலங்களே தைரியமாக வெளிஉலகுக்கு சொல்லி இருக்கிறார்கள். அந்த பட்டியலில் டுட்டீ சந்தும் இணைந்துள்ளார்.
இது குறித்து டுட்டீ சந்த் நேற்று கூறியதாவது:-
கடந்த 5 ஆண்டுகளாக எனது கிராமத்தை சேர்ந்த 19 வயது பெண்ணுடன் தொடர்பில் இருக்கிறேன். அந்த பெண் புவனேசுவரத்தில் உள்ள கல்லூரி ஒன்றில் பி.ஏ. 2-ம் ஆண்டு படித்து வருகிறார். அவர் எனக்கு சொந்தக்காரர் தான். அவரது வீட்டிற்கு செல்லும் போதெல்லாம் நிறைய நேரத்தை செலவிடுவேன். அவர் தான் எனது உயிர் மூச்சு. எதிர்காலத்தில் அவருடன் ஒரே வீட்டில் சேர்ந்து வாழ விரும்புகிறேன்.
எனது வீட்டை மூத்த சகோதரி கவனித்து வருகிறார். வீட்டில் அவரது ஆதிக்கம் தான் எப்போதும் இருக்கும். தனக்கு பிடிக்கவில்லை என்பதற்காக சகோதரனின் மனைவியை எனது அக்கா வீட்டை விட்டே விரட்டி விட்டு விட்டார். இப்போது அவர் என்னையும் குடும்பத்தில் சேர்க்கமாட்டேன், இங்கிருந்து போய் விடு என்று மிரட்டுகிறார். ஆனால் எனக்கு 18 வயது தாண்டி விட்டது. சட்டப்படி எனது வாழ்க்கையை தீர்மானிக்க எனக்கு முழு உரிமை உண்டு. அதனால் அந்த பெண்ணுடன் வாழப்போவதை வெளிப்படையாக சொல்கிறேன்.
எனது சகோதரி, நான் தேர்ந்தெடுத்துள்ள வாழ்க்கை துணைக்கு எனது சொத்து மீது தான் ஆசை இருப்பதாக சொல்கிறார். அது மட்டுமின்றி இந்த உறவு நீடிக்கும் பட்சத்தில் என்னை ஜெயிலுக்கு அனுப்பி விடுவேன் என்றும் மிரட்டுகிறார். என்னை பொறுத்தவரை இறுதியாக அவருடன் இருக்கவே விரும்புகிறேன். தற்போது ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறுவதே எனது லட்சியம். அதற்காக கடின பயிற்சி மேற்கொண்டுள்ளேன்.
இவ்வாறு டுட்டீ சந்த் கூறினார்.
தனது பார்ட்னரின் ஒப்புதலுடன் இந்த விஷயத்தை வெளிப்படுத்திய டுட்டீ சந்த் அவரது பெயரை வெளியிட மறுத்து விட்டார்.
புவனேஸ்வர்:
இந்தோனேசியாவில் நடைபெறும் ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியா தனது பதக்க வேட்டையை நடத்தி வருகிறது. இந்திய வீரர்களின் அபார திறைமையால் தங்கம், வெள்ளி, வெங்கலம் என இந்தியாவுக்கு பதக்கங்கள் குவிகின்றன.
ஆசிய போட்டியில் பதக்கம் வெல்லும் வீரர், வீராங்கனைகளுக்கு அவர்களது சொந்த மாநில அரசுகளால் ஊக்கத்தொகை அளிக்கப்படுகிறது. அதன்படி, ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த வீராங்கனை டுடீ சந்த், பெண்களுக்கான 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தனது அபார திறமை மூலம் வெள்ளிப்பதக்கம் வென்றார். அதற்கு ஊக்கத்தொகையாக ஒடிசா மாநில முதல்மந்திரி நவீன் பட்னாயக் 1.5 கோடி ரூபாய் வழங்கப்படும் என அறிவித்து இருந்தார்.
இதைத்தொடர்ந்து, டுடீ சந்த் பெண்களுக்கான 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்திலும் வெள்ளி பதக்கம் வென்று தனது திறமையை உலகுக்கு நிரூபித்தார். இவரது இந்த திறமையை பாராட்டும் வகையில், முதல்மந்திரி நவீன் பட்னாயக் கூடுதலாக 1.5 கோடி ரூபாயை ஊக்கத்தொகையாக வழங்கப்படும் என அறிவித்தார்.
இந்நிலையில், இந்தோனேஷியாவில் இருந்து இந்தியா திரும்பிய டுடீ சந்துக்கு ஒடிசா முதல்வர் நவீன் பட்னாயக் ரூ.3 கோடிக்கான காசோலையை இன்று வழங்கினார் #AsianGames2018 #Odisha #DuteeChand #NaveenPatnaik
இந்தோனேசியாவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் இன்று தடகளப் போட்டிகள் நடைபெற்றன. இதில், ஆடவர்களுக்கான 1,500 மீட்டர் ஓட்டத்தில் இந்தியாவின் ஜின்சன் ஜான்சன் முதலிடம் பிடித்து தங்கப்பதக்கம் வென்றார்.
இவர், நிர்ணயிக்கப்பட்ட 1,500 மீட்டர் தூரத்தை 3 நிமிடம் 44.72 வினாடிகளில் கடந்து முதலிடம் பிடித்தார். இவருக்கு அடுத்தபடியாக ஈரான் வீரர் அமிர் மொராடி(3 நிமிடம் 45.62 வினாடி) 2-வது இடத்தையும், பக்ரைன் வீரர் முகமது(3 நிமிடம் 45.88 வினாடி) மூன்றாவது இடத்தையும் பிடித்தனர்.
இதைத்தொடர்ந்து, ஹிமா தாஸ், பூவம்மா உள்ளிட்டோரை உள்ளடக்கிய இந்திய மகளிர் அணி, 400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் முதலிடம் பிடித்து 13-வது தங்கப் பதக்கத்தை வென்றனர்.
இன்று மட்டும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியா 2 தங்கப் பதக்கங்களை கைப்பற்றியுள்ளது. இதனால், 13 தங்கம், 20 வெள்ளி, 22 வென்கலப் பதக்கங்களுடன் இந்தியா 8-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
இந்தோனேசியாவில் நடைபெறும் ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியா தனது பதக்க வேட்டையை நடத்தி வருகிறது. இந்திய வீரர்களின் அபார திறைமையால் தங்கம், வெள்ளி, வெங்கலம் என இந்தியாவுக்கு பதக்கங்கள் குவிகின்றன.
ஆசிய போட்டியில் பதக்கம் வெல்லும் வீரர், வீராங்கனைகளுக்கு அவர்களது சொந்த மாநில அரசுகளால் ஊக்கத்தொகை அளிக்கப்படுகிறது. அதன்படி, ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த வீராங்கனை டுடீ சந்த், பெண்களுக்கான 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தனது அபார திறமை மூலம் வெள்ளிப்பதக்கம் வென்றார். அதற்கு ஊக்கத்தொகையாக ஒடிசா மாநில முதல்மந்திரி நவீன் பட்னாயக் 1.5 கோடி ரூபாய் வழங்கப்படும் என அறிவித்து இருந்தார்.
பெண்கள் ஹாக்கிப்போட்டியில் இந்திய அணி அரை இறுதியில் சீனாவை எதிர்கொண்டது. இதில் இந்தியா 1-0 என்ற கோல் கணக்கில் வென்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. இதன்மூலம் வெள்ளிப்பதக்கம் உறுதியானது. இந்திய அணி இறுதிப்போட்டியில் ஜப்பானை எதிர்கொள்கிறது.
ஸ்குவாஷ் போட்டியில் தீபிகா பல்லிகல், ஜோஸ்னா சின்னப்பா, சுனையா குருவல்லா தன்விகன்னா ஆகியோர் அடங்கிய இந்திய பெண்கள் அணியும், ஹரிந்தர்பாலசாந்து, ரம்ஜித் தண்டன், மகேஷ் மன்கோகர், சவுரவ் கோஷல் ஆகியோர் அடங்கிய இந்திய ஆண்கள் அணியும் அரை இறுதிக்கு தகுதி பெற்றது.
இதன்மூலம் ஸ்குவாஷ் போட்டியில் 2 வெண்கலம் உறுதியானது. ஏற்கனவே ஸ்குவாஷ் ஒற்றையர் பிரிவில் 3 வெண்கலம் கிடைத்து இருந்தது. அரை இறுதியில் பெண்கள் அணி ஆங்காங்கையும், ஆண்கள் அணி மலேசியாவையும் இன்று சந்திக்கின்றன.
குத்துச்சண்டை போட்டியில் 4 இந்தியர்கள் கால்இறுதிக்கு தகுதி பெற்று இருந்தனர். இதில் அமித் பன்ஹால், விகாஸ் கிருஷ்ணன் ஆகியோர் வெற்றி பெற்று அரைஇறுதிக்கு நுழைந்தனர். இதனால் 2 வெண்கல பதக்கம் உறுதியானது. தீரஜ், சர்ஜூபாலா ஆகியோர் கால்இறுதியில் தோற்றனர்.
18-வது ஆசிய விளையாட்டு போட்டி இந்தோனேஷியாவின் ஜகார்தா மற்றும் பாலெம்யெங் நகரங்களில் நடந்து வருகிறது.
10-ம் நாளான இன்று காலை பெண்களுக்கான 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தின் தகுதி சுற்று நடந்தது. இதில் இந்திய வீராங்கனைகள் டூட்டி சந்த், ஹிமா தாஸ் பங்கேற்றனர்.
இதில் 4-வது தகுதி சுற்றில் ஓடிய டூட்டி சந்த் 23.37 வினாடியில் கடந்து முதல் இடத்தை பிடித்தார். ஒட்டுமொத்தமாக அவர் 2-வது இடத்தை பிடித்து அரை இறுதிக்கு தகுதி பெற்றார்.
2-வது தகுதி சுற்றில் ஓடிய ஹிமாதாஸ் 23.47 வினாடியில் கடந்து 4-வது இடத்தை பிடித்தார். ஆனால் அவர் நேரத்தின் அடிப்படை யில் 7-வது இடத்தை பிடித்து அரைஇறுதிக்கு முன்னேறினார்.
இதன் அரைஇறுதி போட்டி மாலை 5.20 மணிக்கு நடக்கிறது. ஹமாதாஸ் 400 மீட்டர் ஓட்டத்திலும், டூட்டி சந்த் 100 மீட்டர் ஓட்டத்திலும் வெள்ளிப்பதக்கம் வென்று இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தடகளத்தில் இன்று மாலை நடக்கும் பெண்களுக்கான 5ஆயிரம் மீட்டர் ஓட்டத்தில் இந்தியாவின் சூர்யா பங்கேற்கிறார். பெண் களுக்கான ஈட்டி எறிதலில் போட்டியில் அன்னுராணியும் கலந்து கொள்கிறார்.
இரவு 7.15 மணிக்கு நடக்கும் கலப்பு 400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் முகமது, ஆரோக்ய ராஜீவ், ஹிமாதாஸ், பூவம்மா ஆகியோரை கொண்ட இந்திய அணி பங்கேற்கிறது. இப்போட்டியில் இந்திய அணி மீது அதிக எதிர்பார்ப்பு இருக்கிறது.
ஸ்குவாஷ் போட்டியில் இந்திய பெண்கள் அணி இன்று ‘லீக்’ போட்டியில் தாய்லாந்துடன் மோதியது. ஜோஷ்னா சின்னப்பா, தீபிகா பல்லிக்கல், குருவில்லா, தன்விகன்னா ஆகிய கொண்ட இந்திய அணி 3-0 என்ற தளத்தில் வெற்றி பெற்றது. #AsianGames2018
இறுதிப் போட்டியில் சீனா (2), பஹ்ரைன் (2), கஜகஸ்தான், உஸ்பெகிஸ்தான், மலேசியா ஆகிய வீராங்கனைகளுடன் டுட்டீ சந்த் பதக்கத்திற்கு மல்லு கட்டினார். விசில் ஊதியதும் டுட்டீ சந்த் சிட்டாக பறந்தார். இதனால் தங்கம் வெல்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 11.32 வினாடிகளில் பந்தய தூரத்தை கடந்த 2-வது இடம் பிடித்தார்.
பஹ்ரைன் வீராங்கனை எடிடியோங் ஓடியோங் 11.30 வினாடிகளில் பந்தய தூரத்தை கடந்த தங்கப்பதக்கம் வென்றார். டுட்டீ சந்த் 0.2 வினாடியில் தங்கத்தை பறிகொடுத்தார்.
இந்நிலையில் வெள்ளி பதக்கம் வென்ற டுட்டீ சந்த்-விற்கு 1.5 கோடி ரூபாய் பரிசுத் தொகையாக வழங்கப்படும் என்று ஒடிசா முதல் நவீன் பட்நாயக் அறிவித்துள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்