என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "eachers"

    • ஜெய் சாரதா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் அச்சம் தவிர் தன்னம்பிக்கை நிகழ்ச்சி நடைபெற்றது.
    • மாணவர்கள் வாழ்க்கையில் உயர்வதற்குரிய வழிவகைகளை எடுத்து கூறி உரையாற்றினார்.

    திருப்பூர் :

    திருப்பூர் 15 வேலம்பாளையம் ஜெய் சாரதா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் அச்சம் தவிர் தன்னம்பிக்கை நிகழ்ச்சி நடைபெற்றது.

    பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் எதிர்கால திட்டம் தொடர்பான அச்சத்தையும் பொதுத்தேர்வு தொடர்பான அச்சத்தையும் போக்குவதற்காக பள்ளி நிர்வாகம் சார்பாக அச்சம் தவிர் நிகழ்வு -1 நடத்தப்பட்டதுபள்ளி தாளாளர் நிக்கான்ஸ் வேலுச்சாமி தலைமை தாங்கி மாணவர்கள் வாழ்க்கையில் உயர்வதற்குரிய வழிவகைகளை எடுத்துக் கூறி உரையாற்றினார்.

    பிரபல பட்டிமன்ற பேச்சாளரும்எழுத்தாளரும் சென்னை உயர்நீதிமன்றத்தின் வழக்கறிஞருமான சுமதி கலந்துகொண்டு பேசினார். அவர் பேசுகையில், மாணவர்கள் துணிவும் உண்மையும் மிக்கவர்களாக இருக்க வேண்டும். பெற்றோர்கள் முதல் ஆசிரியர்கள் . ஆசிரியர்கள் இரண்டாவது பெற்றோர் .ஆசிரியர்களையும் பெற்றோர்களையும் மதித்து நடக்க வேண்டும். இலக்கணப் பிழையின்றி பேச வேண்டும். ஆங்கிலத்தை தன் வசப்படுத்திக் கொள்ள வேண்டும். எத்தனை முறை விழுகிறாயோ அத்தனை முறையும் எழுந்து நில் .அதுவே உனக்கு வெற்றி. ஒவ்வொரு மாணவனும் ஒழுக்கத்துடனும் நாட்டுப்பற்றுடனும் இருக்க வேண்டும் .பெற்றோர்களே முதல் கதாநாயகர்கள், எனவே அவர்களை போற்றி நடக்க வேண்டும் என்றார். நிகழ்ச்சியில் பள்ளியின் செயலாளர் கீர்த்திகா வாணி சதீஷ் , பொருளாளர் சுருதி , ஆசிரியர்கள், அலுவலக பணியாளர்கள் மற்றும் மாணவர்கள் கலந்துகொண்டனர். முடிவில் பள்ளி முதல்வர் ஏ.எஸ். மணிமலர் நன்றி கூறினார். 

    ×