search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Earache"

    • ரணகள்ளி ஓர் செடி வகையை சார்ந்த தாவரம்.
    • இலைகளின் விளிம்புகள் வளைவுகளாக காணப்படும்.

    ரணகள்ளி ஓர் செடி வகையை சார்ந்த தாவரம், இலைகள் நீள் வட்ட வடிவில் நீர் பற்று அதிகமாக காணப்படும். இலைகளின் விளிம்புகள் வளைவுகளாக காணப்படும். இது ஓர்விதையற்ற தாவரம், இதன் இலைகளின் விளிம்புகளில் இருந்து புதிய கன்றுகள் வளர்வதை காணலாம்.

    ரணகள்ளி மூலிகையின் இலைகளை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால், சர்க்கரை நோய் பாதிப்புக்கள் எந்த அளவில் இருந்தாலும், நோயின் வீரிய தன்மையை கட்டுக்குள் கொண்டுவரும் ஆற்றல் இரணகள்ளி மூலிகைக்கு உள்ளது.

    காதுவலிக்கு ரணகள்ளி மூலிகையின் இலைகளை கசக்கி காதில் இரண்டு சொட்டுகள் விட, காது வலி உடனே குணமாகும். ரணகள்ளி மூலிகை இலைகளை நன்றாக மைய அரைத்து வெற்றிலையோடு சேர்த்து, புண்கள் காயங்கள் கட்டிகள் உள்ள இடத்தில் பற்று போட, வலி உடனடியாக குறைந்து, காயம் விரைவில் குணமடையும்.

    சிறுநீரக கற்களை கரைக்க இந்த மூலிகை செடியின் இலை பயன்படுத்தப்படுகிறது. சிறுநீரகத்தில் உருவகும் எவ்வளவு பெரிய கற்களையும் மிக எளிதில் கரைத்து துகள்கலாக சிறுநீர் கழிக்கும் போது எவ்வித வலியும்மின்றி வெளியேற்றுகிறது.

    ரணகள்ளி இலைகளை 7 நாட்கள் மட்டும் சாப்பிட்டு வர நோய் பூரண குணம் அடையும். முதல் நாள் மிகச்சிறிய இலையில் இருந்து தான் சாபிட ஆரம்பிக்க வேண்டும். அடுத்த நாள் சற்று பெரிய இலை, அதற்க்கு அடுத்த நாள் அதைவிட சற்று பெரியது இப்படி படி படியாகதான் சாப்பிட வேண்டும்.

    குறிப்பாக பாலும் பால் சார்ந்த பொருட்களையும், இறைச்சி, மீன், முட்டையையும் இந்த இலைகளை உட்கொள்ளும் போது கண்டிப்பாக தவிர்த்துவிட வேண்டும்.

    • காதுகளில் உண்டாகும் தொற்று சிலசமயங்களில் வலியை உண்டுபண்ணலாம்.
    • பெரியவர்களுக்கு காதுவலி தொற்று காரணமாக ஏற்படுகிறது.

    காதுகளில் உண்டாகும் தொற்று சிலசமயங்களில் வலியை உண்டுபண்ணலாம். சில நேரங்களில் மந்தமான வலியையும், மற்ற நேரங்களில் ஊசியை வைத்து குத்துவது போன்ற வலியையும் ஏற்படுத்தலாம். காதில் உள்ள குழாய் திரவத்தால் நிரப்பப்பட்டு தடுக்கப்படும் போது அவை செவிப்பறை அல்லது காது தொற்றுக்கு பின்னால் அழுத்தம் அதிகரிக்க செய்கிறது. இதனால் காது வலி உண்டாகலாம். பெரியவர்களுக்கு காதுவலி தொற்று காரணமாக ஏற்படுகிறது. இவை பற்கள், தாடை அல்லது தொண்டை போன்ற வேறு சில பகுதிகளின் வலியாலும் உண்டாகிறது.

    காதுவலியை ஏற்படுத்தும் காரணங்கள்:

    தொண்டை வலி

    சைனஸ் தொற்று

    பல் தொற்று

    குறுகிய கால அல்லது நீண்ட கால காது தொற்று

    தாடையின் கீல்வாதம்

    ஜாயிண்ட் சிண்ட்ரோம்

    காதில் காயம்

    மெழுகு அல்லது சில பொருள் காதில் மாட்டிகொள்வது

    நீச்சல் காது (காதுகால்வாயின் தொற்று)

    மண்டை ஓட்டின் எலும்புகளில் தொற்று மற்றும் சேதம்

    குழந்தைகளுக்கு குளிக்கும் போது சோப்பு உள்ளே செல்வது, ஷாம்பு உள்ளே சென்று விடுவது மற்றும் குளியலுக்கு பிறகு காது சுத்தம் செய்கிறேன் என்று பருத்தி நுனி கொண்ட துணியால் காதினுள் விடுவது போன்ற காரணங்களால் காதுவலி உண்டாகலாம்.

    வீட்டு வைத்தியம்:

    * காதுவலி இருக்கும் போது எளிமையான வீட்டு சிகிச்சை முறையே முக்கியமானது. சுத்தமான துணி அல்லது துண்டை வெதுவெதுப்பான நீரில் நனைத்து நீரை பிழிந்து துணியை கையடக்கமாக மடித்து காதுக்கு எதிராக சூடான அழுத்தத்தை ஒற்றி எடுங்கள். இப்படி 15 நிமிடங்கள் வரை செய்தால் காது வலி, வீக்கம் குறையும்.

    * காதுவலி சமயங்களில் சைனஸ் அல்லது நாசி நெரிசலால் வந்தால் நீராவியை உள்ளிழுப்பது நிவாரணம் அளிக்கும். தண்ணீரை கொதிக்க வைத்து இறக்கி உடல் முழுவதும் கனமான போர்வை கொண்டு போர்த்தி முகம் நன்றாக பானையின் மீது இருக்கும்படி சாய்ந்து கொள்ளவும். மூக்கு வழியாக நீராவியை மெதுவாக உள்ளிழுக்க வேண்டும் சில நிமிடங்கள் வரை வைத்திருந்து மீண்டும் உள்ளிழுக்கவும். இது காதுகளுக்கு அழுத்தம் குறைத்து நெரிசலை குறைக்கும்.

    * இது பெரும்பாலும் நீச்சல் பயில்பவர்களுக்கு வரக்கூடிய காதுவலிக்கு உதவும். அதேபோன்று காற்று மற்றும் மழை நாட்களில் வெளியில் இருப்பதும் தொற்றுநோயை உண்டு செய்யலாம். காதுக்கு அருகில் குறைந்த வெப்பத்தில் ப்ளோ- ட்ரையரை காட்டுவது காதில் எஞ்சியிருக்கும் ஈரப்பதத்தை உலர வைக்க உதவும். நீங்கள் மழையில் நீச்சல் பழகிய பிறகு காதில் ஈரப்பதம் இருந்தால் இம்முறை உங்களுக்கு காதுவலியை தவிர்க்கும்.

    * காது வலியை குணப்படுத்த வெங்காயசாறு உதவும் என்பது 1800-களில் இருந்ததாக சொல்லப்படுகிறது. வெங்காயத்தில் உள்ள குர்செடின் என்னும் ஃப்ளவனாய்டு அழற்சி எதிர்ப்பு பண்புகளை கொண்டுள்ளது. ஒரு முறை வெங்காயத்தை 450 டிகிரி ஃபாரன்ஹீட்டில் வைத்து 15 நிமிடங்கள் சூடாக்க வேண்டும். பிறகு அது ஆறியதும் வெங்காயத்தை இரண்டாக வெட்டி, பாத்திரத்தில் சாற்றை பிழிந்து சில துளிகள் காதுகளில் விட வேண்டும் அல்லது பாதிக்கப்பட்ட இடத்தில் வெங்காயத்தை நேரடியாகவும் வைக்கலாம். எனினும் மூன்று நாட்கள் கடந்தும் வலி உணர்வு குறையாத நிலையில் நீங்கள் மருத்துவரை பார்ப்பது பாதுகாப்பானது.

    * காதில் ஆலிவ் எண்ணெய் விடுவது வலியை ஆற்றும் என்பதற்கு ஆதாரம் இல்லை. ஆலிவ் எண்ணெய் மெழுகு திரட்டி அல்லது இலேசான காது தொற்று வலிகளுக்கு நிவாரணம் அளிக்கும். சிறிது ஆலிவ் எண்ணெயை சூடாக்கி வெதுவெதுப்பான நிலையில் ஒரு துளியை காதில் விடலாம். சூடான எண்ணெய் காதை பாதிக்கலாம். அதனால் கவனம் வேண்டும். இந்த ஆலிவ் எண்ணெய் காதில் விட்டு அப்படியே எதிர்புறமாக படுத்தபடி இருந்தால் அது வலியை குறைத்து அசவுகரியத்தை குறைக்கும் காதில் இருக்கும் மெழுகை மென்மையாக்கும்.

    * இஞ்சியில் இயற்கையான அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இஞ்சி சாறு அல்லது இஞ்சி சேர்த்து சூடுபடுத்தப்பட்ட எண்ணெயை இளஞ்சூட்டில் காதை சுற்றி தடவ வேண்டும். இப்படி செய்தால் வலி ஓரளவு கட்டுப்படும். வெளிப்புறமாக காது பகுதியை சுற்றி தடவ வேண்டும். இதனை காதுகளின் உள்ளே விடக்கூடாது.

    * பூண்டு ஆண்டிபயாடிக் மற்றும் வலி நிவாரணி பண்புகள் கொண்டவை. பூண்டை சூடான ஆலிவ் அல்லது நல்லெண்ணெயில் ௩௦ நிமிடங்கள் ஊறவைக்கவும். பிறகு இதை வடிகட்டி காது பகுதியில் தடவி விடவும். இதை காதுக்குள் விட வேண்டாம். இது எரிச்சலை உண்டு செய்துவிடலாம்.

    * ஹைட்ரஹன் பெராக்சைடு காதுவலிக்கு இயற்கையான தீர்வாக பயன்படுத்தலாம். காதுவலிக்கு காரணம் மெழுகு கட்டியாக இருந்தால் சிகிச்சையில் இந்த முறை சிறப்பாக உதவும். காதுவலி இருக்கும் பகுதியில் ஹைட்ரஜன் பெராக்ஸைடு சொட்டுகள் வைத்து சில நிமிடங்கள் உட்காரவும். பிறகு சுத்தமான காய்ச்சி வடிகட்டிய நீரில் காதை சுத்தம் செய்யவும். இது மெழுகு கட்டியை பாதுகாப்பாக வெளியேற்ற செய்யும்.

    இதனை எல்லாம் செய்தும் காதுவலி சரியாக வில்லை என்றால் தாமதிக்காமல் மருத்துவரை அணுகலாம்.

    ×