search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Eastern Indonesia"

    இந்தோனேசியாவின் கிழக்கு பகுதியில் உள்ள டிமோர் தீவில் இன்று 6.2 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. #magnitudequake #Indonesiaquake
    ஜகர்தா:

    நிலநடுக்கம் மற்றும் பூகம்பங்களை அடிக்கடி சந்தித்துவரும் பூமியின் நெருப்பு வளையம் பகுதியில் அமைந்துள்ள தீவுநாடான இந்தோனேசியாவில் ஆண்டுதோறும் பலநூறு நிலநடுக்கங்கள் ஏற்படுகின்றன.

    கடந்த 2004-ம் ஆண்டு சுனாமியுடன் ஏற்பட்ட நிலநடுக்கத்துக்கு இந்தோனேசியாவில் ஒரு லட்சத்து 68 ஆயிரம் மக்கள் உயிரிழந்தனர். சமீபத்தில் இங்குள்ள லோம்போக் தீவில் ஏற்பட்ட நிலநடுக்கத்துக்கு 555 பேர் பலியாகினர்.



    இந்நிலையில், இந்தோனேசியாவின் டிமோர் தீவில் குபாங் நகரின் தென்கிழக்கே சுமார் 100 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள கடற்கரை பகுதியில் இன்று மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. பூமிக்குள் 8 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுக்கோலில் 6.2 அலகுகளாக பதிவானது.

    இன்றைய நிலநடுக்கத்தின் எதிரொலியாக சுனாமி எச்சரிக்கை ஏதும் வெளியிடப்படவில்லை. சேத விபரங்கள் தொடர்பாக உடனடி தகவலும் வெளியாகவில்லை.  #magnitudequake  #Indonesiaquake 
    ×